சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

The future of art in an age of crisis—Part 1

நெருக்கடி காலகட்டத்தில் கலையின் எதிர்காலம் – பகுதி 1

By David Walsh
21 April 2009

use this version to print | Send feedback

இது உலக சோசலிச வலைத்தளத்தின் கலைத்துறை ஆசிரியர் டேவிட் வால்ஷ் சமீபத்தில் அன் ஆர்பரிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் ரிச்மாண்ட்டிலுள்ள வெர்ஜினியா காமன் வெல்த் பல்கலைக்கழகத்தில் பார்வையாளர்களுக்கு அளித்த உரையின் திருத்தப்பட்ட பதிப்பின் முதல் பகுதியாகும். இரண்டாம் பகுதியைக் காண இங்கே சொடுக்கவும். பெப்ரவரியில், கலிஃபோர்னியா சண்டா மோனிகாவிலும் மற்றும் சேன் டிகோ மாநில பல்கலைக்கழகத்திலும் ஒரு சொற்பொழிவு அளிக்கப்பட்டது.

David Walsh
David Walsh

மக்கள் தங்களுடைய தினசரி வாழ்வில் ஈடுபடுவதையும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கலாச்சார வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதையும் ஒரு விதி போன்று செய்கின்றனர் என்பதை ஆரம்ப அறிமுகத்திலேயே நான் குறிப்பிட விரும்புகிறேன். பொதுவாக ஆழ்ந்த விமர்சனத்திற்கு உட்படாத பல்வேறு புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் விஷயங்கள் “வழக்கமான நிகழ்வுகளாக” ஆகிவிடுகின்றன.

தற்போதைய பொருளாதார மற்றும் சமுதாய நெருக்கடி, இன்று நாம் பொழுதுபோக்காக பார்க்கின்ற மற்றும் கேட்கின்ற பலவற்றின் பற்றாக்குறையை தூக்கி காட்டுகின்றன. இங்கே சில சிக்கல்களின் வேர்களைக் கண்டுபிடிக்க நாம் முயற்சிக்க இருக்கிறோம். எமது பார்வையில், பிரச்சினைகளை வரலாற்று ரீதியாக காண்பதென்பது மிக இன்றியமையாததாக உள்ளது.

இங்கே நாம் ஒன்றோடொன்று பிணைந்த இரண்டு கேள்விகளை எடுத்துக் கொள்கிறோம்: ஒன்று, கலையின் எதிர்காலம்; மற்றொன்று, தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம். இரண்டாவதிலிருந்து தொடங்குவோம்.

பங்குச் சந்தையின் உடனடி ஏற்ற இறக்கங்கள் எதுவாயினும், 2008 பொருளாதார வீழ்ச்சியின் பரிமாணங்கள் பெரிதாகவும் முழுமையாகவும் இருக்கின்றன. முதலாளித்துவ ஆதரவாளர்களோடு முரண்பட்ட விதத்தில், தற்போதைய நெருக்கடியானது ஏதோவொரு கொள்கையின் தோல்வியோ அல்லது வெறுமனே நேர்மையற்ற, பேராசையுள்ள தனிநபர்களின் விளைபொருளோ அல்ல. அது பொருளாதார மற்றும் சமுதாய அமைப்புமுறையின் ஒரு நெருக்கடியாகும், ஒரு முறிவாகும். எமது அமைப்பு விளங்கப்படுத்தி உள்ளதைப் போல, நிதியியல் செயல்பாடுகளின் அடிப்படையில் உலக மூலதன திரட்சியின் ஓர் ஒட்டுமொத்த நிலையானது, மலை போன்ற கடன் அதிகரிப்பால் தூண்டப்பட்டு, பொறிந்து போயுள்ளது.

கடந்த 12 மாதங்களில் சுமார் 50 ட்ரில்லியன் டாலர் செல்வவளம் அழிக்கப்பட்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இது ஓராண்டு உலக பொருளாதார உற்பத்திக்கு சமமாகும். மார்ச் மாத மத்தியில், பங்குச் சந்தைகள் 30 ட்ரில்லியன் டாலர்களை இழந்திருந்தன. உலக தொழிற்துறை உற்பத்தி 30 சதவீதமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டங்களின் விலைகள் 40 சதவீதம் அளவிற்கு வீழ்ந்துள்ளன.

நாளொன்றுக்கு 1.25 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்ற கிட்டத்தட்ட 400 மில்லியன் ஆப்பிரிக்கர்கள், இந்த வீழ்ச்சியின் காரணமாக அவர்களின் வருமானத்தில் 20 சதவீத சரிவைப் பெற்று பாதிக்கப்படுவார்கள் என்றும், அது ஆண்டுக்கு 200,000 குழந்தைகள் இறப்பை 400,000ஆக அதிகரிக்கும் என்றும் சமீபத்தில் ஐ.நா. மேம்பாட்டு துறையின் ஒரு மூத்த அதிகாரி எச்சரித்தார்.

பொருளாதார சீரழிவு தொடர்ந்தால் 2009இல் உலகளவில் 50 மில்லியன் தொழிலாளர்கள் அவர்களின் வேலைகளை இழக்க நேரிடும் என்று ஐ.நா. அமைப்பின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) இவ்வாண்டின் தொடக்கத்தில் எச்சரித்தது. பெரும்பாலும் வளர்ந்து வரும் நாடுகளில், சுமார் 200 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள்.

பிப்ரவரியின் தொடக்கத்தில், கம்யூனிஸ்டு அறிக்கையைக் குறிப்பிட்டு காட்டி, வலதுசாரி Weekly Standard இதழ் "மற்றொரு பூதம் ஐரோப்பாவை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது" என்ற தலைப்பில் எழுதியது. கட்டவிழ்ந்துவரும் நெருக்கடிக்கு முதலாளித்துவம் குற்றஞ்சாட்டப்படுவதாக குறிப்பிட்ட அந்த கட்டுரை, பொருளாதாரங்கள் இதே போன்று சரிவை நோக்கி செல்வது தொடர்ந்தால், அதன் விளைவாக எழும் கோபம் "தீர்க்கமான சித்தாந்த வடிவங்களை" (அதாவது இடதுசாரி வடிவங்களை) எடுக்கக்கூடும் என்றும், “அது நல்லதல்ல” என்றும் எச்சரித்தது.

அமெரிக்காவில் 25 மில்லியன் மக்கள் (கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்கு தொழிலாளர்கள்) வேலையின்றி உள்ளனர் அல்லது விருப்பமில்லாத குறைந்த-நேர வேலையில் உள்ளனர். மார்ச்சில் நாளொன்றுக்கு 30 ஆயிரம் வேலையிழப்புகள் ஏற்பட்டன. டிசம்பர் 2007இல் இருந்து 5 மில்லியன் வேலைகள் அழிக்கப்பட்டுள்ளன. வீட்டு விலைகள் 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. வாகனத்துறையை மையமாகக் கொண்டு, கூலிகள், நலன்கள், ஓய்வூதியங்கள் மீதான தாக்குதல்கள் எல்லா நாடுகளிலும் பரவி வருகின்றன.

அதிருப்தியைத் தடுக்கும் வேலையில் அமெரிக்க ஆளும் மேற்தட்டு பாரக் ஒபாமாவை முன்னிறுத்தியது; அத்துடன் அது அதன் உலகளாவிய மற்றும் உள்நாட்டு தந்திரோபாயங்களில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. எட்டு ஆண்டுகால புஷ்ஷின் ஆட்சி வெளிநாடுகளில் அமெரிக்காவின் நலன்களை பாதித்திருந்தது; அந்த நிர்வாகத்தின் வெளிப்படையான அலட்சியமும், காட்டுமிராண்டித்தனமும் அமெரிக்க மக்களை கொந்தளிக்க செய்து வந்தது.

ஓர் ஆப்ரிக்க-அமெரிக்க ஜனாதிபதியை (இதுவொரு எரிச்சலூட்டும் சிந்தனையாக இருந்தது) பதவியில் நிறுத்துவதென்பது மக்களைத் திருப்தி படுத்தவும், கதறி கொண்டிருக்கும் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளிலிருந்து அதன் கவனத்தைத் திசைதிருப்பவும் போதுமானதாக கருதப்பட்டது. மாயைகளும் குழப்பங்களும் நிலவினாலும் கூட, கடுமையான பொருளாதார எதார்த்தம் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தும்.

நிதியியல்-பெருநிறுவன பிரபுத்துவத்தின் ஒரு பிரதிநிதியாக அதன் குணாம்சத்தை எடுத்துக்காட்டுவதற்கு ஒபாமா ஆட்சிக்கு முதல் 100 நாட்களே தேவைக்கும் அதிகமாக இருந்தது. உலகளவில் ஆளும் மேற்தட்டின் செல்வத்தைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுப்பதற்கும் அதன் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. வங்கிகளுக்கு ட்ரில்லியன் கணக்கான பணங்கள், ஆனால் உழைக்கும் மக்களுக்கு சிக்கன நடவடிக்கையும், “சுமைகளும்” அளிக்கப்படுகின்றன.

அமெரிக்க வாழ் ஐரோப்பியரும் சமீபத்திய ஒரு சிறப்பு விமர்சகருமான ஒருவர், Financial Timesஇல் இந்நாட்டின் நிலைமை குறித்து எழுதினார்: “பிரெஞ்சு புரட்சி காலக்கட்டத்தில் இருந்ததைப் போன்ற பயம், கோபம், பழைய அநியாயங்கள் மீதான ஆழ்ந்த உணர்வுகளை நான் உணர்கிறேன். ரொட்டிகளின் பற்றாக்குறைகளை ஆலைமூடல்களுடனும், பிரபுத்துவத்தினரை வங்கியாளர்களைக் கொண்டும், வரிச்சலுகை உரிமை போன்ற தனிச்சலுகைகளை பங்குப்பத்திர வாய்ப்புகளைக் கொண்டும் பிரதியீடு செய்தால் போதுமானது.”

ஈராக்கை சீரழித்துள்ள மற்றும் ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவித்து நாசகரமாக ஆக்கியுள்ள ஈராக் பேரழிவிற்குப் பின்னர், ஒபாமா அரசாங்கம் அதன் கவனத்தை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிற்குத் திருப்பி வருகிறது. அது அங்கிருக்கும் மக்களுக்கும் மற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் புதிய பேரழிவுகளைத் தயாரித்து வருகிறது. இவை அனைத்தும் அப்பிராந்தியத்தின் எரிசக்தி வளங்களுக்காகவும் மற்றும் வீழ்ந்துபோன அமெரிக்காவின் பொருளாதார செல்வாக்கை இராணுவத்தின் மூலமாக உலகெங்கிலும் மீள்-ஸ்தாபிதம் செய்வதற்காகவும் ஆகும்.

எமது மாணவர்கள் அமைப்பான, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் இயக்கமும், எமது கட்சியான சோசலிச சமத்துவ கட்சியும் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியலமைப்புக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களை முன்னெடுக்கிறது. தங்களின் வாழ்க்கைப் போக்கினூடாக ஜனநாயகவாதிகளின் அனுதாபிகளாக இருக்கும் தாராள இடதுகள் உட்பட பெருந்திரளான மக்கள் தங்கள் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பாதுகாக்க போராட்டத்தில் இறங்குவார்கள் என்றும், ஒபாமா ஆட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களோடு அவர்கள் கூர்மையான முரண்பாட்டிற்கு வருவார்கள் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது போன்ற போராட்டங்களை நாங்கள் எதிர்பார்ப்பது மட்டுமில்லாமல், அவர்களை ஊக்கப்படுத்தி, முன்னெடுத்துச் செல்லவும் முயல்கிறோம். எமது இயக்கத்தின் ஒரு பாகமாக தொழிலாளர் வர்க்கத்தை நோக்கி திரும்ப மாணவர்களுக்கு நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்.

தொழிலாளர்களின் ஓர் அரசாங்கத்திற்கான தேவையினை மையமாகக் கொண்டும், வங்கிகள் மற்றும் ஏனைய நிதியியல் அமைப்புகள், பெரிய தொழிற்சாலைகள், போக்குவரத்து மற்றும் சுகாதாரத்துறை பெருநிறுவனங்கள் போன்றவற்றை ஜனநாயகரீதியில் செயல்பாடுகளைக் கொண்டிருக்கும் பொதுத்துறைக்கு சொந்தமானவைகளாக மாற்றுவதை மையமாக கொண்டும் நாங்கள் இந்த நெருக்கடிக்கு ஒரு சோசலிச வேலைதிட்டத்தை முன்வைக்கிறோம். ஒரு சிறிய மேற்தட்டின் மற்றும் செல்வாக்கு பெற்ற ஏதோவொரு அடுக்கின் நலன்களோடு மிகப் பெரும்பான்மையினரின் தேவை ஒவ்வொரு மட்டத்திலும் முரண்படுகிறது. 

இருபது ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்டாலினிச ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர், “சோசலிசம் இறந்துவிட்டது; எல்லா வரலாற்றுப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன; உலகம் அமைதி மற்றும் செல்வசெழிப்பின் புதிய காலத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது” என்று உரக்கவும் ஆணித்தரமாகவும் நமக்கு சொல்லப்பட்டது. அப்போது அந்த கருத்துப்போக்கை நிராகரித்த எமது கட்சி, உலகளவில் ஒருங்கிணைந்த முதலாளித்துவத்தின் தவிர்க்கவியலாத வெடிப்புகளை நோக்கி தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொண்டது.

இந்த நெருக்கடி வெடித்து வந்திருப்பதன் மூலமாக மார்க்ஸிசமும், விஞ்ஞான சோசலிசமும் நிரூபணமாகி உள்ளன. மூலதனத்தில் மார்க் பின்வருமாறு எழுதினார்: “மாற்றத்தின் இந்த நிகழ்முறையின் அனைத்து ஆதாயங்களைக் கைப்பற்றவும், ஏகபோகமாக்கவும் விரும்பும் மூலதனத்தைக் குவித்து வைத்துள்ள பல பெருஞ்செல்வந்தர்கள் தொடர்ந்து சுருங்குவதோடு சேர்ந்து, மக்களின் மீது வறுமை, ஒடுக்குமுறை, அடிமைத்தனம், அவமதிப்பு, சுரண்டல் ஆகியவை வளர்கின்றன; ஆனால் இதனூடாக முதலாளித்துவ உற்பத்தி நிகழ்முறையின் சிறந்த இயங்குமுறையினாலேயே ஒழுங்கமைந்த, ஒருங்கிணைந்த, நெறிப்பட்ட எண்ணிக்கையில் அதிகரித்துவரும் ஒரு வர்க்கமான தொழிலாளர் வர்க்கத்தின் கிளர்ச்சியும் வளர்கிறது.”

இதிலிருந்து தான் சோசலிசப் புரட்சியின் புறநிலையான தேவை எழுகிறது.

இந்த நெருக்கடிக்கு கலைஞர்கள் தயாராக இருக்கின்றனரா?

இந்த மாலையில் நாம் முதலாவதாக வரலாற்றுரீதியாக கலைஞர்கள் எதிர்கொண்ட குறிப்பிடத்தக்க பிரச்சினைகளைக் குறித்தும் அல்லது கலைத்துவ உண்மைக்கான போராட்டம் இன்றைய காலக்கட்டத்தில் எடுக்கும் வரலாற்றுரீதியிலான குறிப்பிடத்தக்க வடிவத்தைக் குறித்தும் நாம் காண்போம்.

Aleksandr Voronsky
Aleksandr Voronsky

சோவியத் விமர்சகரும் ஸ்ராலினின் போட்டியாளருமான அலெக்சாண்டர் வொரான்ஸ்கி 70 வருடங்களுக்கு முன் தமது “The Art of Seeing the World (1928)” என்ற கட்டுரையில், “உள்ளார்ந்து சிக்கலாகவும், அழகாகவும் உள்ள உலகை, அதன் அனைத்து புத்துணர்வோடும், விரைவோடும் சேர்ந்து, நம்மிலிருந்து சுயாதீனப்பட்டு, உள்ளது உள்ளபடியே அதை காண்பதும், அதை நேர்மையோடு ஏற்றுக் கொள்வதும், அதைக் கண்டு உணரும் தேடலும் கலைஞர்களுக்கு மிகவும் சிக்கலானதாகும்,” என்று எழுதினார்.

"புலனுணர்வு மற்றும் ஒருமுனைப்பின் கூர்மை மற்றும் புத்துணர்வைக்" கொன்றுவிட்டு, “ஒரு வழக்கத்திற்கு மாறான மங்கி போன, துன்பகரமான, பரிதாபகரமான வர்ணத்தை எதார்த்தத்திற்கு அளிக்கும்", நம்முடைய தினசரி வாழ்வில் நம்மை கீழ் நோக்கி அழுத்தும் பழக்கங்கள், தீய எண்ணங்கள், மனச்சோர்வுகள், மற்றும் இன்னும் ஏனைய அழுத்தங்களை அவர் குறிப்பிட்டுக்காட்டினார்.

இவை எல்லாவற்றிற்கும் எதிராக, "வீணக்கப்படாத மற்றும் உண்மையான உலகின் பிம்பங்களைக் கலைஞன் தேடுகிறான்,” என்று வொரான்ஸ்கி எழுதினார். அதுவே "முதன்மையான அர்த்தம், அதுவே கலையின் நோக்கம்" என்று அவர் அதை சித்தரித்தார்.

வொரான்ஸ்கி கூறியது சரியென்றால், கலையில் நிஜத்தை கூறுவதென்பது எப்போதும் ஒரு பெரும் போராட்டமாக இருந்திருக்கிறது என்பதே எனது நம்பிக்கை. அதை மேலோட்டமாக எடுத்துக்கொள்ள முடியாது, அது கடினமான உடலுழைப்பையும், மூளை உழைப்பையும் கோருகிறது.

ஆனால் இன்று குறிப்பிட்ட சிக்கல்கள் ஏதும் இல்லையா? குறிப்பிட்ட தோல்விகளும் இல்லாமல் இருக்கிறதா என்ன? உலக மக்களின் உயிர்வாழ்வதற்கான அன்றாட போராட்டங்களை உள்ளடக்கி இருக்கும் இன்றைய நிகழ்கால வாழ்க்கையின் கதாபாத்திரங்களுக்கும் கலைத்துவ முயற்சிகளுக்கும் இடையில் ஏன் இந்தளவிற்கு இடைவெளி இருப்பதாகத் தோன்றுகிறது? கலை ஏன் பெரும்பாலும், அதுவும் பொதுவாக முக்கியமான வரலாற்று மற்றும் சமூக பிரச்சினைகளில், அலட்சியமானதாக அல்லது மனித சமூக நெருக்கடிகளுக்கு கண்மூடி குருடாக இருப்பது போல தோன்றுகிறது?

கலையின் பிரதான நோக்கு கலைஞரையோ அல்லது அவரது அனுபவங்களையோ சுற்றி இருக்க வேண்டுமென்பதில் நாங்கள் உடன்படவில்லை, மாறாக சுயாதீனமாக இயங்கும் உலகத்தையும் மற்றும் அதன் சமூக சிக்கல்கள் உட்பட அதன் சிக்கலான தன்மைகளையும் சுற்றி இருக்க வேண்டுமென்பதில் உடன்படுகிறோம்.

நாம் வேறுபட்ட ஒன்றிற்காக போராட அழைக்கிறோம். முதலாவதாக, புற நிலைமைகள் ஒரு மாற்றத்தை நிர்பந்திக்கும். ஒருவரின் வியாபாரத்தைத் ஒரே விதத்தில் தொடர்வது சாத்தியமில்லை. கடந்த ஆண்டில் உலக நிலைமை ஒரு திடீர் திருப்பத்தை எடுத்துள்ளதோடு, யாருமே, எந்த வகையிலும் அக்கறையோடு பார்க்க விரும்பும் எவருமே, அதை பார்க்க விரும்பாமல் அவருடைய கண்களை மூடிக்கொள்ள முடியாது.

தற்போதைய நெருக்கடிக்கு அமெரிக்க சமுதாயத்தின் எல்லா அடுக்குகளும் இன்னும் தயாராகவில்லை என்று எண்ணற்ற சந்தர்ப்பங்களில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.

மக்கள்தொகையின் பரந்த அடுக்குகள், தங்கள் வாழ்வை மாற்றும் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் அதிர்ச்சியும், திகைப்பும் அடைகின்றன. தாமதமின்றி வெகு விரைவிலேயே அந்த அதிர்ச்சி அரசியல் நனவில் மாற்றங்களைக் கொண்டு வரும்.

கலைஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் குறித்து என்ன கூறுவது—அவர்கள் எவ்விதத்தில் தயாராக உள்ளார்கள்? நிலைமைகளின் எதார்த்தத்திற்கு அவர்கள் எந்தளவிற்கு இணக்கமாக உள்ளனர்?

மிக தீர்க்கமாக கூறுவதென்றால், வரவிருக்கின்ற பாதிப்புகள் குறித்து மக்களை ஏதோவொரு விதத்தில் எச்சரித்த ஒரு படைப்பு, அல்லது ஒரேயொரு முக்கிய நாவல், திரைப்படம், நாடகம் அல்லது வேறு ஏதேனும் கலை படைப்பு உள்ளதா? அநேகமாக ஒரு குறிப்பிட்ட பொருளாதார எச்சரிக்கை சமிக்ஞை அளிக்கும் விதமாக அல்லாமல், மாறாக ஆழ்ந்த செயல்-பிறழ்ச்சியைக் குறிப்பிட்டு காட்டும், படைப்புகள் கூட வேண்டாம், ஒரேயொரு படைப்பாவது உண்டா … சான்றாக, ஒட்டுண்ணித்தனத்தோடும், திரைமறை குற்றங்கள் மூலமாகவும் பெரும் செல்வ திரட்சியை எப்போதும் தொடர முடியாது என்ற அடிப்படை உண்மையை குறிப்பிட்டு காட்டிய ஒருவர் உண்டா?

சான்றாக, சமீபத்திய தசாப்தங்களில் அமெரிக்க வாழ்வின் மைய சமூக பிரச்சினையாக உள்ள சமூக சமத்துவமின்மையின் மையக்கரு சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதா அல்லது பிரதான படைப்புகளுக்கான பின்னணியின் பாகமாகவாவது உள்ளதா?

மில்லியன் கணக்கானவர்களின் மந்தமாகி உள்ள அல்லது சரிந்து வருகிற வாழ்க்கைத் தரங்கள் குறித்த உண்மைகளுக்கு எத்தகைய நனவுப்பூர்வமான கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது? அமெரிக்க வரலாற்றை எடுத்தால், ”அமெரிக்க கனவின்” விடாபிடி, அமெரிக்காவினுடையது என்று கூறப்படும் “தனித்தன்மைவாதம்” (exceptionalism) ஆகியவற்றில் இருக்கும் மாபெரும் சவால்களால் துளைக்கப்படும் நிலைமைகளுக்குள் பார்ப்பது மதிப்புடையதாக தோன்றும். அமெரிக்க வாழ்க்கை குறித்த புராணங்கள் உயிரோட்டமுடனும், சிறப்பாகவும் இருந்தனவா?

வழக்கமான முடிவுகளைக் கடந்து பரந்த மற்றும் வரலாற்றுரீதியில் மிகவும் ஆழ்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட முடிவுகளோடு வோல் ஸ்ட்ரீட் ஜாம்பவானை, ஹெட்ஜ் நிதி நிறுவன மேலாளரை, நிதியியல் ஊக வணிகரைக் குறித்த சிறந்த நாவலோ அல்லது நாடகமோ அல்லது திரைப்படமோ இருக்கிறதா?

இன்னும் கூட என்னால் கூற முடியும். இந்த கேள்விகள் ஓர் வாய்ஜால உட்கூறைக் கொண்டவை. பொதுவாக அவற்றிற்கான பதில் நமக்குத் தெரியும். அமெரிக்க வாழ்க்கை குறித்த ஓர் ஆழ்ந்த உலகளாவிய விமர்சனத்தை அளித்த மற்றும் விஷயங்கள் மிக மிக மோசமாக போய் கொண்டிருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு காட்டும் ஒரேயொரு முக்கிய படைப்பைக் கூட குறிப்பிட்டு காட்டுவது சிரமம். வாழ்க்கையைக் குறித்த விமர்சனரீதியிலான படங்கள், பெரியதோ சிறியதோ, ஆனால் நடைமுறையை எதிர்த்து கிளம்பிய ஒரு தொடக்கமாக இருக்கும் மற்றும் பெருந்திரளான மக்களின் தலைவிதியைக் குறித்த  கவலைக்கு பொறுப்பேற்ற திரைப்படங்களைக் காட்டுவது சிரமமாக இருக்கும்.

கலையின் அடித்தளம் வறண்ட ஒன்றாக இருந்ததில்லை என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். மனித மேதைமையின் பொறி நிச்சயமாக மறைந்துவிடவில்லை. ஆனால் அதிலிருந்து தூரத்தில் இருக்கிறது. ஒரு பணக்கார விதத்தில் வாழ்க்கையை எதிர்க்கொள்ளும் வழக்கத்திற்கு எதிராக குறிப்பிடத்தக்க தனிநபர்களின் திரைப்படங்களை (அல்லது காட்சிகளை), நாவல்களை (அல்லது பத்திகளை), தனிப்பட்ட ஒருவரின் ஓவியங்களை இன்னும் இதுபோல எவ்வளவோ விஷயங்களை ஒருவரால் குறிப்பிட்டுக்காட்ட முடியும். பிரபல கலாச்சாரத்திலும் கூட மேதமையான, திறமையான மற்றும் ஆக்கப்பூர்வமான மக்கள் படைப்புகளைக் கொண்டு வருவதில் நிச்சயமாக இருக்கின்றனர். வியப்பான மற்றும் திகைப்பான உருவங்களையும் சப்தங்களையும் உருவாக்கும் திறமை எண்ணிக்கையளவில் புதிய உயரங்களை எட்டியுள்ளன; சமகாலத்திய கலைஞர்களுக்கு தொழில்நுட்பத்தை எட்டுவதில் எதுவும் எல்லைக்கு அப்பாற்பட்டு இருப்பதாக தோன்றவில்லை. பல வகையான புதிய ஊடங்கள் தொலைதொடர்பிற்கு பெரும்பாலும் எண்ணற்ற சாத்தியக்கூறுகளை வழங்குகின்றன.

எவ்வாறாயினும், ஆழ்ந்த சிக்கல்கள் இருக்கின்றன. சான்றாக, ஈராக் மற்றும் மத்திய கிழக்கு குறித்து எடுக்கப்பட்ட நேர்மையான போருக்கு-எதிரான பல திரைப்படங்கள் (Stop-Loss, In the Valley of Elah, Rendition, Battle for Haditha, Grace is Gone, The Situation and others) இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் இத்தகைய திரைப்படங்கள் ஒரளவிற்கு செல்கின்றன; அதை தாண்டி செல்வதில்லை அல்லது அல்லது அவை ஓர் இடதுசாரி கலவையையும், முற்றிலும் வலதுசாரி தேசாபிமான கருத்துரைகளையும் கொண்டிருக்கின்றன.

இந்த காலத்தில் மற்றும் இடத்தில், வாழ்வின் அனைத்து முக்கியமான பரிமாணங்களிலும் எவ்வாறு வெளிச்சத்தைப் பாய்ச்சும் மைய சவாலோடு, முழு கவனத்தோடு இறுதிவரையில் முழு திறமையையும் அர்பணித்து மனிதயினம் அதனைஅதுவே புரிந்துகொள்வதற்கு ஒரு கணிசமான பங்களிப்பை அளிப்பதற்காக, வேலை செய்யப்பட்ட எந்தவொரு கலைஞரின் உண்மையான ஒரு படைப்பை, அல்லது படைப்பின் கூறை குறிப்பிட்டு காட்டுவது மிகவும் சிரமமாகும்.

அதற்காக ஒருவர் வாழ்க்கை மற்றும் சமூகத்தைக் குறித்த மிகுந்த அக்கறையையும், ஆழ்ந்த கண்ணோட்டத்தையும் கொண்டிருக்க வேண்டும். அது மிகவும் வலி நிறைந்ததும், ஆழ்ந்த தகவல்களைச் சேகரிப்பதுமாகும். நேர்மையான குறிப்பிடத்தக்க கலைஞர்கள் ஏதோவொரு திடீர் புறத்தூண்டுதல்களுக்கு, ஒரு கருத்துபோக்கோடோ அல்லது பல கருத்துபோக்குகளோடோ, எந்தளவிற்கு ஆழமாக இருக்கிறோம் என்பதைக் குறித்து கவலைப்படாமல், எதிர்வினை ஆற்றுவதில்லை, மாறாக அவர் ஒட்டுமொத்தமாக ஒரு புரிதலை மற்றும் ஒரு உணர்வை எட்டியுள்ளார் என்று ஒருவர் உணர்கிறார். இத்தகைய உட்பார்வையின் ஒரு சிறப்பு கொடையை எளிதில் எட்டிவிட முடியாது. ஆனால் அதுவே படைப்பின் ஒவ்வொரு அம்சத்திலும், அதனுடைய இழையிலும், அதனுடைய அடுக்கிலும், அதனுடைய தவிர்க்க முடியாத உண்மையிலும் வெளிப்படுகிறது. சான்றாக, நாம் அதை வெல்லஸ், ஃபோர்ட் மற்றும் சாப்பிள் ஆகியோரின் சிறந்த திரைப்படங்களில் உணரலாம்.

பொழுதுபோக்காக இருந்தாலும் கூட மனிதயினம் அதனைஅதுவே புரிந்துகொள்வதற்கு பங்களிக்க வேண்டுமென்ற விருப்பம் பயனற்றதாகவும், செய்யக்கூடாத ஒன்றாகவும் காணப்படுகிறது என்ற உண்மையானது ஒரு சிக்கலான கலைத்துவ காலக்கட்டத்தின் ஓர் அறிகுறியாகும்.

நாவல் எழுதுவதில் தீவிர முயற்சிகள் இருந்திருக்கின்றன, ஆனால் அவை பெரும்பாலும் ஒரே கருத்துருக்களின் மறுவேலைப்பாடுகளாக, அதாவது நடுத்தர வர்க்கத்தின் அதிருப்தி மற்றும் கவலை, தொழில்வல்லுனர் வர்க்கத்தின் சுய-ஆய்வுகள் மற்றும் சிலநேர சுய-வெறுப்பு, அதில்லையென்றால் வேதனையான மற்றும் சுய-திருப்தியடைந்தவர்களைக் குறித்த வேலைப்பாடுகளாக இருந்திருக்கின்றனவே ஒழிய, அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் பரண்களைக் கடந்து உற்று நோக்கும் வேலைப்பாடுகள் மிக அரிதாகவே உள்ளன.

செப்டம்பர் 11 மற்றும் அதற்குபின்னர் நடந்த சம்பவங்கள் பல நாவல்களையும் (by Updike, DeLillo, Roth et al) ஏனைய படைப்புகளையும் உருவாக்கின; அந்தளவிற்கு புரிந்து கொள்ளத்தக்க வகையில், அதுவொரு முக்கிய நிகழ்வாக இருந்தது. ஆனால் 9/11 சம்பவத்திற்குள் வரலாற்றுரீதியிலான உட்பார்வை இல்லாதது, உள்நாட்டின் பரந்த மக்கள்தொகையின் நிலைமைகள் உட்பட முக்கிய வரலாற்று மற்றும் சமூக கேள்விகளின் மீது பொதுவான ஆர்வமில்லாததோடு பிணைந்துள்ளது. நியூ யோர்க் மற்றும் வடகிழக்கில் வசிக்கிற எழுத்தாளர்களுள் பலர் பயங்கரவாதிகளின் தாக்குதல்களால் பெருமளவுக்கு அதிர்ச்சியடைந்தார்கள், ஆனால் ஆழமாக அவை குறித்து சிந்திக்கவில்லை.

பேசுமளவிற்கு சற்று ஆழமாக இருந்த புதிய நாடங்களும், கவிதைகளும் பெரும்பாலும் உயிரற்றும், கல்விசார் விஷயங்களாகவும் உள்ளன.

செல்வ வழிபாடு மற்றும் சுயநலம், மத வெறி, இராணுவவாதம் மற்றும் குறுநலவாதம், சட்ட-ஒழுங்கு பிரச்சாரம், ஏழைகளைக் குற்றஞ்சாட்டுதல் இன்னும் இதுபோல பல அருவருக்கத்தக்க கருத்துக்களால் நிரம்பிய உத்தியோகப்பூர்வ வாழ்க்கையோடு நாம் பல தசாப்தங்கள் வாழ்ந்திருக்கிறோம். 1970களின் பிற்பகுதியில் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக தொடங்கிய எதிர்தாக்குதல் முக்கியமாக இதுவரையில் குறையவே இல்லை.

அதன் போக்கில், பல்வேறு தாராளவாத மற்றும் இடது புத்திஜீவிகள், பல விஷயங்களில் பெரும் எதிர்ப்பின்றி, உள்நுழைந்தனர். அவர்கள் செழிப்பாக இருப்பதையும், விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவராக இருப்பதையும் சௌகரியமானதாக கண்டனர்.

புத்திஜீவிகளின் சுய-மறுப்பும், ஒப்பீட்டளவில் அதன் நவீன பொருளாதார அந்தஸ்தும் கடந்த கால விஷமயாக ஆகியிருந்தது. அவர்களுக்கு சிறந்த உணவகங்களும், விஸ்தாரமான தங்கும் மனைகளும், விலை உயர்ந்த கார்களும், இருக்கைகளும் மற்றும் தெற்கு பிரான்சில் வீடுகளும் தேவைப்பட்டன. அவர்களுக்குரிய கலைகளை உருவாக்குவதும், அதை தேடுவதும் அவர்களுக்கு தேவைப்பட்டது.

திரண்ட செல்வத்தின் பெரும்பான்மை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, பங்குச்சந்தை மற்றும் இலாபங்களின் உயர்வின் அடிப்படையில் இருந்தன. இவையனைத்தும் தொழிலாளர் வர்க்கத்தை அதிகப்படியாக சுரண்டியதாலும், கூலிகள் மற்றும் வாழ்க்கை தரங்களைக் கீழிறக்கியதாலும் உண்டான பங்கு விலைகளின் உயர்வால் சாத்தியப்பட்டது.

அவற்றில் எதன்மீதும் எவரும் அதிக கவனம் செலுத்தவில்லை. செல்வவளம் பாய்ச்சப்பட்டது. கலை அருங்காட்சியகங்கள் ஓவியங்களுக்காக மிகவுயர்ந்த விலையைப் அளித்து, அதிகளவு போலியான விலைகளின் மூலமாக முதலீடுகளை உள் கொண்டு வந்தன. கடந்த செப்டம்பரின் முறிவு வரையில், ஏலத்தில் ஒரே ஒரு படைப்புக்காக ஒரு மில்லியன் டாலர்கள் அல்லது அதற்கு மேலாக விலைபெற்ற இப்போது வாழும் சுமார் 100 அமெரிக்க கலைஞர்கள் இருந்தனர். முறிவு தொடங்கும் வரையில் "சாதாரண ஒரு அருங்காட்சியகத்தில் முதன்முறையாக தனது படைப்பைக் கொண்டு வந்த ஒரு புதிய ஓவியர் கூட ஒரு படத்திற்கு 10,000 முதல் 20,000 டாலர் வரையில் கேட்டு பெற்றார்" என்று Newsweekஇல் வெளியான ஒரு கட்டுரை எடுத்துக்காட்டி இருந்தது.

ஹெட்ஜ் நிதி மேலாளர் எஜ்ரா மெர்கின், பெர்னார்ட் மடோஃபின் போன்ஜி திட்டத்திற்குள் 2.4 பில்லியன் டாலரை செலுத்தி, கட்டணமாக சுமார் அரை பில்லியனைச் சுருட்டியதற்காக நியூயார்க் மாநில தலைமை நீதிபதி அவர்மீது சமீபத்தில் குற்றப்பதிவு செய்தார். மார்க் ரோத்கவின் ஓவியங்களைச் சேகரிக்கும் உலகின் மிகப்பெரிய ஓவியர்களில் மெர்கினும் ஒருவராவார். இந்த சேமிப்பின் மொத்த மதிப்பு 150 மில்லியனில் இருந்து 200 மில்லியன் டாலராக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது தான் நியூ யோர்க் கலை உலகம்.

முறிவிற்கு சற்று முன்னர், ஹெட்ஜ் நிதிகள் திரைப்பட தயாரிப்பிற்குள் வந்தன. முன்னணி நடிகர்கள் கடன் அட்டை நிறுவனங்களுக்காகவும், விமான சேவை மற்றும் கார் உற்பத்தியாளர்களுக்காகவும் குரல் கொடுப்பவர்களாக, முகங்காட்டுபவர்களாக ஆயினர். ஒரு மோசமான மற்றும் சிற்றின்ப சூழல் நிலவியது, அதில் ஒவ்வொருவரும் லாபமீட்டுபவர்களாக இருக்க முடிந்தது. இது ஒரு அழுகிய அனைத்திற்கும் மேலாக அழிந்து போகக்கூடிய சூழல் என்பது யாருக்காவது தெரிந்ததா?

பெரும் செல்வம், அகமகிழ்வு, ஒப்பீட்டளவில் மிகச் சிறியளவில் இருந்த ஆழ்ந்த சிந்தனை. Madoffs, Allen Stanfords மற்றும் அவர்களுடைய மிகக் குறைந்தளவே நியாயமான உரிமையுடைய வாரிதாரர்கள் பிரதான வங்கிகளில் கட்டுப்பாட்டை கொண்டிருந்ததைக் குறித்து ஒருபோதும் சிந்திக்காமல், இந்த மலைப்பூட்டும் பணம்-செய்யும் இயந்திரத்தை யாரால் தடுக்க முடியும்?

சமூக ஏற்றத்தாழ்வுகள், வானளாவிய அளவிற்கு கலையை வியாபாரமாக்கியமை, கலாச்சார வாழ்வை அதிகப்படியாக அற்பமானதாக ஆக்கியமை ஆகியவற்றை கணக்கெடுக்காத வரையில் கலைத்துவ-கலாச்சார சூழலை சுத்தப்படுத்த முடியாது. இது எவ்வாறு நடந்தது? உலகில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை ஏன் யாரும் கவனிக்கவில்லை? கலைத்துவ தனிமனிதவியல்பின் உள்ளார்ந்து இருக்கக்கூடிய மற்றவர்களின் அவலநிலையைக் கண்டதும் ஆரம்பநிலை அனுதாபத்தையேனும் அளிக்கும் தன்மையெல்லாம் எங்கே போயின?

வாகனத்துறை பெருநிறுவனங்களால் வீணடிக்கப்பட்ட டெட்ராய்ட் நகரமே ஒரு சிறந்த சான்றாக உள்ளது. அங்கிருந்த மக்கள் காயப்படுத்தப்பட்டனர். ஏனைய அமெரிக்க மக்களின் மற்றும் உலகளாவிய மக்களின் கருத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்முறையின் எந்தவொரு கலைத்து பிரதிபலிப்பும் இதுவரையில் தோற்றப்பாட்டளவில் இல்லை. உண்மையில் அமெரிக்க வாழ்வின் எதார்த்தங்களை மூடி மறைப்பதற்கே புத்திஜீவிகள் உதவியிருக்கிறார்கள்; அமெரிக்கா அடிப்படையில் ஒரு வளமான தன்னிறைவடைந்த நாடாக இருக்கிறது என்று தற்போதைய நிலைமைக்கு ஒரு மாயையை புனைந்துரைக்கவே அவர்கள் உதவியுள்ளனர்.

தற்போது அவையெல்லாம் மக்களின் தலையைச் சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடி ஏதோவொரு வழியில் அதனைஅதுவே உணர வைக்கும். எல்லா வகையான தனிநபர்களும் தேவையானவற்றை சரிசெய்ய ஆயத்தமாவார்கள். அங்கே தான் அபாயம் இருக்கிறது, இதற்கு முன்னர் அதிகமாக சிந்திக்காத மக்கள் நிறைய சிந்திக்காமல் இருப்பதை நோக்கியே போவார்கள், அவர்கள் புதிய சூழ்நிலைகு அவர்களை அவர்களே பொறுத்திக்கொள்ள இடதிற்கு இரண்டு படிகள் எடுத்துவைப்பார்கள்.

கடந்த காலகட்டத்தின் அமெரிக்க கலைஞர்கள் நாட்டின் பொதுவான நிலையையும், உளவியலையும் குறித்த உள்ளார்ந்த பார்வைகளைக் அளித்தனர்.

 
F. Scott Fitzgerald
F. Scott Fitzgerald

முதலாம் உலக யுத்தத்திற்குப் பிந்தைய காலக்கட்டம் The Great Gatsby, An American Tragedy, ஹெமிங்வேயின் முதல் நாவல்களையும், Dos Passos, the Harlem Renaissance போன்ற படைப்புகளை உருவாக்கியது.

அமெரிக்க கனவு குறித்த பொய்மை, வெற்றிக்காக அளிக்கப்பட்ட விலை, அமெரிக்க ஜடவாதம், வர்த்தகமயமாக்கம் (commercialism) மற்றும் இணக்கவாதம் (conformism) ஆகியவற்றின் பயங்கரம் மீது சமூகம் ஒரு சிதைவை நோக்கி சென்று கொண்டிருப்பதை இந்த கலைஞர்கள் கண்டுணர்ந்தார்கள். கலைஞர்கள் இந்த பிரச்சினைகளைப் பின்தொடர்ந்து, அவற்றினூடாகப் வேலை செய்தனர்.

சோசலிச இயக்கம் எங்கும் வியாபித்திருந்தது. சமூகத்தைக் குறித்த மார்க்ஸிச பகுத்தாய்வால் அளிக்கப்பட்ட தூண்டுதலும், அதன் பாதிப்பும் இல்லாமல் பொதுவாக நவீன கலாச்சாரத்தையும், குறிப்பாக நவீன அமெரிக்க கலாச்சாரத்தையும் நினைத்து பார்க்கவே முடியாததாய் உள்ளது. கலைஞர்கள் முற்றிலும் அந்த பகுத்தாய்வை பகிந்து கொண்டார்கள் என்றில்லை, ஆனால் அவர்களுடைய கலைத்துவ மற்றும் புத்திஜீவிய அணுகுமுறையில் அதனுடைய தாக்கம் ஒரு குறிப்பிட்ட அம்சமாக இருந்தது.

உங்களுக்கு இதில் சந்தேகமிருந்தால், சான்றாக ஃபிட்ஸ்ஜெரால்டின் கடிதங்களைப் படியுங்கள். 1930களில் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட அபிவிருத்திகளை அவர் பின்தொடர்ந்தார். அத்தோடு அவர் சச்சரவிற்கு இடமின்றி தன்னை “மார்க்சிஸ்ட்” என்றும் அழைத்து கொண்டார். சோவியத் ஒன்றியம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ராலினிச சீரழிவு அதிகரித்த அவரிடையே அதிகரித்த நிலைகுலைவிற்கு ஒரு காரணியாக இருந்தது.

அது ஒட்டுமொத்த அமெரிக்க புத்திஜீவிகளுக்கும் ஏற்பட்டதைப் போன்று இருந்தது.

ஸ்ராலினிச குற்றங்களின் எதார்த்தங்கள் தெளிவானதும், (பிரான்சில், ஸ்பெயினில் மற்றும் ஏனைய இடங்களில்) பல்வேறு புரட்சிகர சந்தர்ப்பவாதங்கள் குரல்வளையை நசுக்கி காட்டிக்கொடுத்ததும், 1930களின் இறுதியில் ஏற்பட்ட 'பெரும் ஏமாற்றம்' ஒரு கட்டமைப்பை உருவாக்குவதில் ஓர் ஆழ்ந்த பாத்திரம் வகித்தது. அதற்குள்ளிருந்து தான் வெறுப்பு மனப்பான்மையும், சமூக ஏற்றத்தாழ்வுகளும் மற்றும் சந்தர்ப்பவாதமும் மலர்ந்தன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் வாழ்க்கையை ஆழ்ந்தும், நேர்மையான முறையிலும் கையாள்வதில் கலைஞர்களுக்கு இன்னும் கூடுதலாக அவநம்பிக்கை ஏற்படுத்திய, யுத்தத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் ஒரு பாத்திரம் வகித்த சில போக்குகளையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

தொடரும்...