சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Australian political crisis exposes acute US-China tensions

ஆஸ்திரேலிய அரசியல் நெருக்கடி தீவிர அமெரிக்கச் சீன அழுத்தங்களின் வெளிப்படுத்துகிறது

Peter Symonds
8 March 2012

use this version to print | Send feedback

கடந்த வெள்ளியன்று பாப் கார் ஐ ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரியாக்கியமை ஜூன் 2010ல் கெவின் ரூட் பிரதம மந்திரிப் பதவியில் இருந்து அகற்றப்பட்டபின் தொழிற்கட்சி அரசாங்கத்தில் நீடித்த நெருக்கடியில் இருக்கும் அடிப்படைப் பிரச்சினைகளை வெளியே கொண்டுவந்துள்ளது.

கடந்த இரு வாரங்களாக நடைபெற்ற உயர் அரசியல் நாடகத்தில், ரூட் வெளியுறவு மந்திரி பதவியை இராஜிநாமா செய்தல், பிரதம மந்திரி ஜூலியா கில்லார்டின் தொழிற்கட்சி தலைமைக்கு அவர் விடுத்த சவாலின் தோல்வி, கார் நியமனத்தில் அசாதாரணமான திருப்பங்கள் ஆகியவற்றை தனிநபர்களுக்கிடையிலான போட்டியைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்று செய்தி ஊடக வர்ணனைகள் தெரிவிக்கின்றன.

உண்மையில், 2010 அரசியல் மோதலின் மையத்தானத்தில் இருந்த ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தை எதிர்கொண்டிருக்கும் தீர்க்கமுடியாத சங்கடமான எவ்வாறு சீனாவிடம் அதன் பொருளாதார ரீதியாக தங்கியுள்ள நிலைமையையும் அமெரிக்காவுடனான அதன் இராணுவத்திற்கான நம்பிக்கையுடன் சமப்படுத்துவது என்பது மீண்டும் 2012ல் எழுந்துள்ளது.

ஆசியா மற்றும் சர்வதேச ரீதியாகவும் இத்தகைய நிலைப்பாடுதான் அரசாங்கங்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவின் பூகோள அரசியல் நிலையின் சிறப்பியல்புகள் காரணமாக கான்பெர்ராவில் இது குறிப்பிட்ட வகையில் வெடிக்கும் சக்தியுடன் எழுந்துள்ளது. வேறு எந்த G20 நாடும் சீனாவிற்கு ஏற்றுமதிகள் செய்வதில்  இந்த அளவிற்குப் பொருளாதாரத்தில் நம்பியிருக்கவில்லை; குறிப்பாக தாதுப் பொருட்கள்  மற்றும் விசைத் துறைகளில். அதேபோல் இதன் மூலோபாய நலன்களைக் குறிப்பாக தென்மேற்கு பசிபிக்கில் ஆஸ்திரேலிய நிலைப்பாட்டைக் பாதுகாப்பதற்கு எந்த ஒரு நாடும் இது அமெரிக்க ஆதரவை நம்பியிருப்பது போன்ற நிலையில் இல்லை.

2010ம் ஆண்டு ருட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு கில்லார்ட் இருத்தப்பட்டார். நள்ளிரவு ஒன்றில் உட்கட்சி சதியினால், அமெரிக்கத் தூதரகம் மற்றும் வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்ட கையளவு தலைவர்களினால் செய்யப்பட்ட ஆட்சி மாற்றமாகும். முக்கிய உள்நாட்டுப் பிரச்சினைகளுடன், ரூட் அகற்றப்பட்டதில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே எழுச்சி பெற்றுள்ள அழுத்தங்களை ரூட் நிதானப்படுத்த மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒபாமா நிர்வாகம் காட்டிய விரோதப் போக்கும் ஒரு முக்கிய காரணி ஆகும்.

2009ம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்தே, வெள்ளை மாளிகை ஆசியா முழுவதும் சீனாவின் செல்வாக்கு பரவியிருப்பதற்கு எதிரான இடைவிடாத இராஜதந்திர, மூலோபாயத் தாக்குதலை நடத்தி வருகிறது. ரூட் எவ்வகையிலும் ஓர் அமெரிக்க எதிர்ப்பாளர் அல்ல. ஆனால் அமெரிக்கா சீனாவின் நலன்களைக் கருத்திற்கொண்டு செயல்பட வேண்டும் என்று முறையிட்ட வகையில் அதற்குக் குறுக்கே நின்றார்.

கில்லார்டின் கீழ் ஆஸ்திரேலிய வெளியுறவுக் கொள்கை ஒபாமாவிற்கு ஆதரவாக இருக்கிறது. அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதிக்கு கடந்த நவம்பர் மாதம் ஒரு பாராளுமன்ற அரங்கம் கொடுத்தது. அதில் அவர் அமெரிக்கா ஒரு பசிபிக் பெருங்கடல் சக்தியும், இங்கு நாங்கள் தொடர்ந்தும் நீடிப்போம் என்று அப்பட்டமாக அறிவித்தார். கில்லார்டும் ஒபாமாவும் அமெரிக்க இராணுவம் ஆஸ்திரேலிய கடற்படை, விமானப்படைத் தளங்களைப் பரந்த அளவில் பயன்படுத்திக் கொள்ளவும், வடக்கு ஆஸ்திரேலியாவில் அமெரிக்க மரைன்களை நிறுத்தி வைக்கும் திட்டங்களையும் அறிவித்தனர்.

தொழிற்கட்சி அரசாங்கத்தை தாக்கியுள்ள எப்பிளவுகளும் வெளிப்படையாக விவாதிக்கப்பட முடியாது; ஏனெனில் அது அமெரிக்கா, சீனா அல்லது இருநாடுகளுடனுமே சமரசப்படும் உறவுகளை அபாயத்திற்குள்ளாக்கிவிடும். ஆனால் இப்பொழுது, கில்லார்ட்-ஒபாமா உடன்பாடு மற்றும் அமெரிக்கக் கொள்கையின் பிற கூறுபாடுகளை பற்றி கார் கூறிய முந்தைய கருத்துக்கள் இன்னும் அதிகமாக நீண்ட காலமாக நிலவும் பிளவுகள் பகிரங்கமாக வெளியே வருவதற்கு ஒரு கிரியா ஊக்கிபோல் உதவியுள்ளனஇது முழு அரசியல் நடைமுறையையுமே பாதிப்பதாகும்.

தன்னுடைய வலைத் தளக் கட்டுரைகளில் கூடுதல் வனப்புரை மொழிகளைக் குறைக்கும் கட்டாயத்திற்கு கார் உட்பட்டுள்ளார்; லிபியா பற்றிய நேட்டோ போர் குறித்த தன் குறைகூறல்களையும், அதே போல் ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் பொருளாதாரத் தடைகள் மற்றும் அமெரிக்கத் தலைமையிலான ஆப்கானிய படையெடுப்பு ஆகியவற்றைக் குறைகூறியதையும் பின்வாங்க நேர்ந்தது. ஆனால் அமெரிக்க-சீன அழுத்தங்களில் அவர் சிறிதும் விட்டுக்கொடுக்கா நிலையில்தான் உள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் ஒபாமாவின் வருகையைத் தொடர்ந்து தன் கட்டுரையில் கார் எழுதினார்: அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே சமாதான முறையில் இணக்கமான உறவுகள் பசிபிக்கில் இருப்பது நாட்டின் தேசிய நலனுக்கு உகந்தது என்பது வெளிப்படை.... அமெரிக்காவிற்கு நாம் உடன்பாட்டின் பங்காளியாக இருக்க வேண்டுமே ஒழிய, சிறிதும் வருத்தத்திற்கு  இடமின்றி அதன் விமானத் தளமாக இருந்துவிடக்கூடாது.திங்களன்று ABC வானொலியில் தன் கருத்துக்களைக் காக்கும் வகையில், அமெரிக்காவுடன் இருக்கும் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு உறவுகள், சீனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஆஸ்திரேலியா உள்ளது என்பதற்கான ஆணை என்ற கருத்து வந்துவிடக்கூடாது என்று அறிவித்தார்.

எதிர்த்தரப்பின் வெளியுறவு விவகாரங்களின் செய்தித்தொடர்பாளர் ஜூலி பிஷப், காரின் கருத்துக்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக உள்ளது என்று அறிவித்தார். ஆனால் அமெரிக்கா, சீனா பற்றிய பிளவு லிபரல் கட்சி முழுவதுமே ஊடுருவி உள்ளது என்பதை பிஷப் நன்கு அறிவார். கடந்த ஆண்டு நடத்திய உரை ஒன்றில், 2009 ம் ஆண்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட மால்கம் டர்ன்புல் சீனா குறித்த ஒபாமாவின்  நிலைப்பாட்டைக் குறைகூறினார்: அமெரிக்காவிற்கோ, ஆஸ்திரேலியாவிற்கோ ஒரு இராணுவ ஆக்கிரமிப்புடனான சீனாவுடன் ஒரு தவிர்க்கமுடியாத மோதல் போக்கிற்கு இட்டுச்செல்லும் நீண்டகால மூலோபாயக் கொள்கையை அடித்தளமாக கொள்வது அர்த்தமற்றதாகும் என்று அறிவித்தார்.

மூலோபாயப் பகுப்பாய்வாளர்கள் பொது மேடைகளிலும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். சீனாவிற்கு இணக்கமாக அமெரிக்க நடந்து கொள்ள வேண்டும் என்று வாதிடும் AGE  ல் எழுதிய ஹூஜ் வைட், நாம் வாஷிங்டனுக்கு ஆதரவைக் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை, சீனாவிடம் அது கொண்டுள்ள எந்தக் கொள்கைக்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் எனப்படும் மரபார்ந்த பார்வைக்கு கார் விடுத்த சவாலை வரவேற்றார்.

ஒபாமாவின் கடின நிலைப்பாட்டிற்கு ஆதரவு தரும் ஜோன் லீ, ஆஸ்திரேலியனில் சீனா குறித்து ரூட் செய்த பிழைகளைப் பற்றி கார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். ரூட் தன்னுடைய பிழையான உள்ளுணர்தலைக் கைவிட வேண்டும்; அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பாலம் போலவும், நடுநிலை நீதிபதி போல் செயல்படவும், புத்திசாலித்தன, கட்டுப்பாடு ஏதுமற்ற நிலைப்பாட்டைக் கொள்ள ஆஸ்திரேலியா தகுதி கொண்டுள்ளது என்ற கருத்தைக் கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்

இத்தகைய தீவிர பிளவுகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்றுரீதியான வீழ்ச்சி மற்றும் சீனா உலகின் தலையாய குறைவூதியத் தொழிலாளர் பிரிவின் அரங்கைக் கொண்டு எழுச்சியடைந்துள்ளது என்பதாலும் தோற்றுவிக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த புறநிலை சக்திகளின் விளைவு ஆகும். சீனா எரிசக்திக்காகவும் மூலப் பொருட்களுக்காகவும் உலகின் எல்லா மூலைகளிலும் அலைந்து திரியும் நிலை அமெரிக்க முக்கியத்துவம் நிறைந்த தற்போதைய உலக ஒழுங்குடன் மோதலைக் கொண்டுள்ளது. ஒபாமா நிர்வாகத்தின் பொறுப்பற்ற வகையில் ஆசியாவில் நிலைப்பாடு கொள்ள முற்படும் தன்மை இரு அணுசக்தி உடைய நாடுகளும் போரில் சரியக்கூடும் என்னும் உண்மை ஆபத்தை எழுப்பியுள்ளது.

அமெரிக்க-சீன மோதல் குறித்த கவலைகளும் வாஷிங்டனில் பிரதிபலிப்பாகின்றன. சமீபத்திய பெருமிதமான இதழான Foreign Affairs ல் முன்னாள் வெளிவிவகார செயலர் ஹென்ரி கிசிஞ்சர் அமெரிக்க சீன வர்த்தக மோதல்கள் போட்டியிடும் எதிரெதிர் சக்தி முகாம்களாகவளரும் ஆபத்தைக் கொண்டுள்ளன என்று எச்சரித்துள்ளார். பொருளாதார அரங்கில் ஒத்துழைக்கும் அணுகுமுறை இல்லாவிட்டால், நிலப்பகுதி, பாதுகாப்பு போன்ற குறைந்த சாதகமான, ஆனால் அதிக உணர்வை உந்தும் பிரச்சினைகள் முன்னேற்றத்திற்கு தடையாகிவிடும் என்று அவர் எழுதியுள்ளார்.

ஒத்துழைப்புத் தேவை என்று கிஸிஞ்சர் முறையிட்டுள்ளார். இது ரூட் மற்றும் வைட்டின் கருத்துக்களை ஒத்து உள்ளது; சீனாவும் அமெரிக்காவும் ஒரு பொது நோக்கம் குறித்த உணர்வை தோற்றுவிக்கலாம் என்ற நம்பிக்கை உடைய பசிபிக் சமூகம் தேவைஎன்ற அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங், வாஷிங்டன் இரண்டையுமே எதிர்கொள்ளும் முக்கிய தீர்மானம், உண்மையான ஒத்துழைப்பிற்கான முயற்சியை நோக்கிச் செல்லுகிறோமா அல்லது சர்வதேசப் போட்டியின் வரலாற்று வடிவத்தின் புதிய பதிப்பினுள் வீழ்ந்துவிடுவோமா என்பதுதான் என்று சேர்த்துக் கொண்டார்.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் என்னும் உலகப் பேரழிவுகளைப் பற்றி தன் மனதில் என்ன உள்ளது என்பதை கிஸிஞ்சர் குறிப்பிடவில்லை. அம்மோதல்களுக்கு உந்துதல் கொடுத்தவை சக்திவாய்ந்த பூகோள-அரசியல் போட்டிகள், மற்றும் முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடி என்பவைதான் தவிர்க்க முடியாமலப் போருக்கு வழிவகுத்தன. இன்று முதலாளித்துவம் உலகளவில் முறிந்து நிற்பதும் அதேபோன்ற மூலோபாயத் தவறு நிலைப்பாடுகளைத் திறக்கிறது; இதுதான் கான்பெர்ராவில் வெடித்துள்ள அரசிசயல் நெருக்கடியின் குறிப்பிடத்தக்க தீவிரமான வெளிப்பாடு ஆகும்.

யுத்தத்தை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரேயொரு சமூகசக்தி  இலாபமுறையையும், உலகை பிற்போக்குத்தனமான போட்டி தேசிய அரசுகளாக அது பிரித்துவைத்திருப்பதற்கும் எதிராகப் போராடுவதும் ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை நிறுவுவதற்கு போராடக்கூடியது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட புரட்சிகர இயக்கமாகும்.