சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Washington threatens Pakistan over proposed gas pipeline with Iran

ஈரானுடன் திட்டமிடப்பட்டுள்ள குழாய்த்திட்டம் குறித்து வாஷிங்டன் பாக்கிஸ்தானை அச்சுறுத்துகிறது

By Ali Ismail
9 March 2012

use this version to print | Send feedback

ஒபாமா நிர்வாகத்திடம் இருந்து பெருகும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள் இவற்றிற்கு இடையே, இஸ்லாமாபாத் ஈரானில் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான நீண்டகாலமாக தாமதாகிவரும் குழாய்த் திட்டத்தை தான் முடிக்க இருப்பதாக இஸ்லாமாபாத் வலியுறுத்திவருகிறது.

பாக்கிஸ்தானின் வெளியுறவு மந்திரி ஹினா ரப்பானி ஹார் திங்களன்று நாட்டின் நீடித்துவரும், மோசமாகி வரும் எரிசக்தி நெருக்கடியை தீர்ப்பதற்கு இஸ்லாமாபாத் அனைத்து கிடைக்கக்கூடிய வழிவகைகளையும் தொடர வேண்டும் என்று கூறினார். அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹில்லாரி கிளின்டன் குழாய்த்திட்டம் கைவிடப்படவில்லை என்றால் பதிலடிகள் கிடைக்கும் என்று கூறிய அச்சுறுத்தலை ஒதுக்கித் தள்ளியதுடன், ஹார் பாக்கிஸ்தானின் கிழக்குப் பகுதி அண்டை நாடான ஈரான் மீதான எத்தகைய இராணுவத் தாக்குதலும் முழுப் பிராந்தியத்திலும் பேரழிவு தரும் விளைவுகளை எற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

அமெரிக்க காங்கிரஸ் மன்றக்குழுவின் முன் பெப்ரவரி 29ம் திகதி கொடுத்த சாட்சியத்தில், கிளின்டன் பாக்கிஸ்தான் குழாய்த்திட்டத்தை தொடரும் என்றால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சட்டத்தின்படி, பல தண்டனை நடவடிக்கைகளுக்கு அது உட்படும் என்று எச்சரித்தார். அந்தச் சட்டம் எந்த வெளிநாட்டு (அமெரிக்கா அல்லாத) நிறுவனமும் 20 மில்லியன் டாலருக்கு மேல் ஈரானின் எரிசக்தித்துறையில் முதலீடு செய்யும் நாடுகள்மீது பொருளாதாரத் தடைகள் சுமத்தப்படும் என்ற அதிகாரத்தை அமெரிக்க அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளது. இந்தக் குழாய்த்திட்டம் கட்டமைத்தால் வரக்கூடிய விளைவுகளைப் பற்றி நாம் தெளிவாகவே சுட்டிக்காட்டியுள்ளோம்.என்று கிளின்டன் கூறினார். பாக்கிஸ்தானின் ஆபத்திற்குட்டபட்டுள்ள பொருளாதாரத்தைச் சுட்டிக்காட்டி அமெரிக்க அச்சுறுத்தலின் தீவிரத் தன்மையையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்: பாக்கிஸ்தானுக்கு இது குறிப்படித்தக்க வகையில் நாசத்தை ஏற்படுத்தும்; ஏனெனில் அவர்கள் பொருளாதாரம் ஏற்கனவே பெரும் பலமற்றநிலையில் உள்ளதுஎன்றார் கிளின்டன். இந்தக் கூடுதலான அழுத்தம்.... அவர்களுடைய பொருளாதார நிலையை இன்னும் தாழ்த்திவிடும்.

கிளின்டனுடைய அச்சுறுத்தல் பாக்கிஸ்தானிடமிருந்து விரைவான பிரதிபலிப்பை பெற்றது. மறுநாளே பேசிய வெளியுறவு மந்திரி ஹார் ஈரானுடனான திட்டங்கள் பாக்கிஸ்தானின் தேசிய நலன்களை ஒட்டியவை, எந்த வெளி அழுத்தங்களைப் பற்றியும் பொருட்படுத்தாமல் நிறைவேற்றப்படும் என்றார். பிரதம மந்திரி யூசப் ராஜா கிலானியும் கிளின்டனின் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை முகங்கொடுக்கையில், ஒரு தொலைக்காட்சி பேட்டியாளரிடம் கடந்த வாரம், நாங்கள் இறைமை பெற்ற நாடு, பாக்கிஸ்தானின் நலனுக்கு உகந்ததைச் செய்வோம் என்றார்.

வாஷிங்டனும் இஸ்லாமாபாத்தும் உறவினைச் சீர்திருத்துவதில் கடுமையாகப் பாடுபட்டுவருகின்றன. இதுவோ கடந்த நவம்பர் மாதம் ஒரு பாக்கிஸ்தானிய எல்லைச் சாவடியில் நிகழ்த்தப்பட்ட நேட்டோ வான்தாக்குதலை அடுத்து நெருக்கடியில் ஆழ்ந்துள்ளது. அத்தாக்குதல் இரண்டு டஜன் பாக்கிஸ்தானிய இராணுவத்தினரை கொன்று நாட்டில் வெகுஜன எதிர்ப்புக்களை தூண்டியது. இத்தகைய கருத்துக்களை பாக்கிஸ்தான் அரசாங்கமும் இராணுவமும் ஆப்கானியப் போரை நடத்தும் வாஷிங்டனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதை மீட்கும் நேரத்தில் கூறியதுஅதுவும் பாக்கிஸ்தானிய மக்கள் விருப்பத்தை மீறிஅமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானியப் பொருளாதாரத்தை நெரிக்கும் உறுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கடந்த ஓராண்டாக, ஒபாமா நிர்வாகம் தெஹ்ரானில் இருக்கும் ஆட்சியைத் தனிமைப்படுத்தி ஈரானின் உறுதியைக் குலைக்கவும், அங்குள்ள ஆட்சிக்குப் பதிலாக மேலை ஏகாதிபத்திய நலன்களுக்கு கூடுதலாக வளைந்து கொடுக்கும், வேறு ஒரு ஆட்சியைக்கொண்டு வரும் அதன் முயற்சிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. ஞாயிறன்று ஜனாதிபதி ஒபாமா ஈரானுக்கு எதிராக வெளிப்படையாக இராணுவ நடவடிக்கை குறித்து அச்சுறுத்தினார்; ஈரானின் அணுவாயுத விழைவுகள் என்னும் ஆதாரமற்ற கூற்றுக்களை மீண்டும் கூறி எண்ணெய் வளமுடைய நாட்டிற்கு எதிராக அது அணுவாயுதங்களைப் பெறுவதைத் தடுக்கத் தான் பலத்தை பயன்படுத்த தயங்கபோவதில்லை என்று அறிவித்தார்.

ஈரான்-பாக்கிஸ்தான் $7.6 பில்லியன் குழாய்த்திட்ட உடன்பாடு இருநாடுகளுக்கும் இடையே 2010 ஜூன் மாதம், ஒரு தசாப்த பேச்சுவார்த்தைகளுக்கு பின் கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்பாட்டு விதிகளின்படி, ஈரான் நாள் ஒன்றிற்கு 21.5 மில்லியன் கனமீட்டர்கள் நாள் ஒன்றிற்கு ஏற்றுமதி செய்யும். மிகவும் அவசியமாக இயற்கை எரிவாயுத் தேவை கொண்ட பாக்கிஸ்தானுக்கு இது 2014 முடிவிற்குள் வழங்கப்படும். இந்தக் குழாய்கள் 56 இஞ்சிகள் விட்டத்தைக் கொண்டு கிட்டத்தட்ட 2,000 கி.மீ. தூரமான ஈரானின் தெற்கு பர்ஸ் எண்ணெய் வயலில் இருந்து தொடங்கும்.

இத்திட்டம் பகுதிகளாகச் செயல்படுத்தப்படுகிறது. தத்தம் பகுதிகளில் கட்டமைக்கப்படும் குழாய்களுக்கு அந்தந்த நாடு பொறுப்பை ஏற்கும். ஈரான் ஏற்கனவே அசலுயேவில் இருந்து ஈரான்சகர் வரை குழாய்த்திட்டத்தில் 900 கி.மீ. நீளத்தை முடித்துவிட்டது. ஈரான்-பாக்கிஸ்தான் எல்லையில் எஞ்சியுள்ள 200 கி.மீ. கட்டமைப்பில் உள்ளது. இது இரண்டாண்டுகளில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாக்கிஸ்தான் அதன் பகுதித் திட்டத்தை 2014 இறுதிக்குள் முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திங்களன்று ஜேர்மனிய நிறுவனமான ILF Consulting Engineering பாக்கிஸ்தான் பக்கதிலுள்ள திட்டத்திற்கான ஆலோசனை ஒப்பந்தமாக $250 மில்லியனைப் பெற்றுள்ளது என்பதை உறுதிபடுத்தியது.

2014க்குள் எரிவாயு பெறுவதை பாக்கிஸ்தான் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் நாள் ஒன்றிற்கு $8 மில்லியன் அபராதமாக குழாய்த்திட்டம் தொடர்புடைய இறைமை-உத்தரவாத ஒப்பந்தத்தின் கீழ் கொடுக்க வேண்டும். கடந்த வாரம் ஈரான் $250 மில்லியனைப் பாக்கிஸ்தான் தன் பகுதித் திட்டத்தைக் கட்டமைப்பதற்கு உதவியாக அளிக்க முன்வந்தது; ஏனெனில் பாக்கிஸ்தானிய நிறுவனங்கள் திட்டத்திற்குத் தேவையான நிதிகளை கடுமையான அமெரிக்கத் தடைகள் ஈரான்மீது இந்த ஆண்டு முன்னதாக சுமத்தப்பட்ட நிலையில், கொடுக்க மறுத்துவிட்டன. இத்தடைகள் ஈரானுடன் வணிகம் செய்யும் நிறுவனங்களின் நிதிகள் மேற்கு ஆதிக்கத்திற்குட்பட்ட உலக நிதிய முறையில் இருந்து உறைய வைக்கப்பட்டுவிடும் என்ற அச்சுறுத்தலைக் கொடுத்துள்ளன. மறுப்பை விளக்குகையில் பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்குச் சொந்தமான OGDCL எண்ணெய், எரிவாயு அபிவிருத்தி நிறுவனம் ஈரானிய திட்டத்திற்கு நிதி கொடுப்பது வெளிநாட்டு பங்குதாரர்கள் பணத்தைத் திரும்பப் பெறும் நிலையை ஏற்படுத்திவிடும் என்று கூறியுள்ளது.

பாக்கிஸ்தான் ஒரு மாற்றீட்டுக் குழாய்த்திட்டத்தை துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியாவுடன் சேர்ந்து உருவாக்கலாம் என்று ஒபாமா நிர்வாகம் கூறுகிறது. இது வாஷிங்டனின் நீண்டகால மூலோபாய நோக்கமான மத்திய ஆசிய எண்ணெய், எரிவாயுப் பாய்தல்களை ரஷ்யாவிடம் இருந்து ஒதுக்கிவிடும் என்பதை முன்னேற்றும். ஆனால் ஒரு தசாப்த காலமாக அமெரிக்க நேட்டோ ஆக்கிரமிப்பு ஆப்கானிஸ்தானை அமைதிப்படுத்துவதில் தோல்வியுற்றுள்ளது; இதையொட்டி அத்தகைய குழாய்த்திட்டம் இயலாதது எனப் போய்விட்டது. மேலும் இஸ்லாமாபாத், ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு மிக மலிவான, மிக உகந்த எரிபொருளாக எரிசக்தி உற்பத்திக்கு இருக்கும் என்றும் வலியுறுத்துகிறது.

ஈரான்-பாக்கிஸ்தான் குழாய்த்திட்டத்தை சேதப்படுத்தும் உந்துதலை ஒருதசாப்தக்கால உந்துதலில் இதுவரை அமெரிக்கா வெற்றிகொண்டுள்ளது. ஆரம்பத்தில் வாஷிங்டன் இந்தியா இதில் பங்கு பெறக்கூடாது என்னும் முயற்சிகளில் குவிப்பைக்காட்டி, அதன் விலையாக இந்திய-அமெரிக்க பொது அணுச்சக்தி ஒப்பந்தத்தை அளித்தது. இதுதான் இந்திய-அமெரிக்க உலக மூலோபாய பங்காளித்துவத்தின் மையத்தானம் ஆகும்.

ஏனெனில் அது இரு நாடுகளுக்கும் ஒரு பெரிய பொருளாதார உந்துதலைத் கொடுத்து தங்கள் அழுத்தங்களைக் குறைப்பதற்கு உதவும் என்பதால் குழாய்த்திட்டம் முதலில் கருத்திலெடுக்கப்பட்டபோதே, அது இந்திய-பாக்கிஸ்தானிய சமாதான வழிவகைகளுக்கு உதவும் என்று முன்வைக்கப்பட்டது. ஆனால் வாஷிங்டன் ஈரானின் பொருளாதாரத்தை நாசப்படுத்தும் முயற்சி அதன் பூகோளஅரசியல் நோக்கத்திற்கு மிகமுக்கிய நோக்கமாகும்.

2009ல் குழாய்த்திட்டத்தில் இருந்து இந்தியா ஒதுங்கியவுடன், இஸ்லாமாபாத் பெய்ஜிங்கைச் சேருமாறு கோரியது. குழாய்த்திட்டத்தின் சீனப் பகுதி காரகோரம் நெடுஞ்சாலையை ஒட்டிக் கட்டப்படும்; அந்தச் சாலை பாக்கிஸ்தானின் வடக்கு கில்ஜித் பால்டிஸ்தானை மேற்கு சீனாவுடன் இணைக்கும். இத்திட்டத்தில் சேருவதா என்பது பற்றி பெய்ஜிங் இன்னும் முடிவெடுக்கவில்லை; ஆனால் அத்தகைய திட்டம் அதற்கு மலாக்கா ஜலசந்தி மூலம் வரும் அதன் எரிசக்தி இறக்குமதிகளின்மீது சுமையைக் குறைக்கும் வாய்ப்பைக் கொடுக்கும். மலாக்கா ஜலசந்தி அமெரிக்க கடற்படை வலிமையினால் ஆபத்திற்கு உட்படலாம்.

இத்திட்டம் பாக்கிஸ்தானிய ஈரானிய குழாய்த்திட்டத்தை தகர்க்கும் வாஷிங்டனின் தீர்மானத்தை வலியுறுத்தத்தான் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

குழாய்த்திட்டத்தைத் தொடர்தல் என்னும் பாக்கிஸ்தானின் உறுதிப்பாடு வெளிநாட்டு எரிசக்திக்கு அது கொண்டுள்ள அத்தியாவசியமான தேவையில் எழுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் ஆழ்ந்த எரிசக்தி நெருக்கடியினால் பாக்கிஸ்தான் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. அந்நெருக்கடி நாட்டின் தொழில்துறையை முடக்கி, பொதுமக்களுக்கு வாழ்க்கையை பொறுத்தக் கொள்ள முடியாதபடி செய்துள்ளது.

கடந்த மாதம், எதிர்பாரா மின்வெட்டுக்கள் கிட்டத்தட்ட 10 மணி நேரம் என்ற நிலை நாடு முழுவதும் பல வணிகங்களை மூடச் செய்துவிட்டன. அடிக்கடி மின்வெட்டு ஏற்படுதல் என்பது கராச்சி இன்னும் பல தொழில்துறை மையங்களில் உற்பத்தியை நிறுத்தச் செய்து நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களின் பணிநீக்கத்தை ஏற்படுத்தியது. எரிசக்தி வெட்டுக்கள் கடந்த ஆண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் தன்னியல்பான எதிர்ப்புக்களைத் தூண்டியுள்ளன. இவற்றை பாக்கிஸ்தானிய பொலிசார் பலமுறையும் கடுமையான வன்முறையினால் அடக்கியுள்ளனர்.

குழாய்த்திட்டத்திற்கான பொருளாதார வாதங்கள் அசைக்க முடியாதவை. ஆனால் பாக்கிஸ்தானின் உயரடுக்கு மீண்டும் அமெரிக்க அழுத்தத்தின்கீழ் மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு செயல்பட்டியலின் நலன்களுக்காகத் தான் முக்கியமெனக் கருதுவதைத் தியாகம் செய்யவேண்டிய சிக்கலில் உள்ளது. கடந்த ஒரு தசாப்தமாக பாக்கிஸ்தான் தலிபானுடன் இணைந்துள்ள போராளிகளுக்கு எதிராக மிருகத்தன எழுச்சி எதிர் நடவடிக்கைகளை வாஷிங்டனின் ஆணையின்பேரில் நடத்துகிறது. சாதாரண பாக்கிஸ்தானியர்களின் வாழ்க்கையில் போர் பேரழிவுதரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கையில், அமெரிக்கா ஆப்கானிய போர் என்னும் புதிய காலனித்துவ போரில் கூடுதலான சுமையை எடுத்துக்கொள்ள பாக்கிஸ்தானுக்கு இடைவிடாமல் அழுத்தம் கொடுத்து வருகிறது.

பாக்கிஸ்தானின் பொருளாதாரம் பாதிப்பிற்கு உட்படும் என்னும் கிளின்டனுடைய கருத்துக்கள் இஸ்லாமாபாத்தால் எளிதாக எடுத்துக் கொள்ளப்படமாட்டா. அமெரிக்கா பலமுறையும் பாக்கிஸ்தானின் சரிந்துவரும் பொருளாதார நிலையைப் பயன்படுத்தி அதன் செயற்பட்டியலுக்கு ஏற்ப நடக்குமாறு பாக்கிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்துள்ளது; இதில் சர்வதேச நாணய நிதியம் ஒரு புதிய கடனை பாக்கிஸ்தானுக்கு தருவதற்கு உதவ மறுத்ததும் அடங்கும்; தன்னுடைய வெள்ள நிவாரண நிதியையும் அற்பமாகத்தான் கொடுத்தது. இரட்டை இலக்கப் பணவீக்கம், உயரும் வேலையின்மை, கடுமையான சமுக சமத்துவிமின்மை ஆகியவை பாக்கிஸ்தானிய அரசியல் வாதிகள் மற்றும் செய்தி ஊடக வர்ணனையாளர்களிடம் இருந்து தவிர்க்க முடியாமல் வரக்கூடிய சமூக எழுச்சிகள் குறித்த எச்சரிக்கைகளைப் பலமுறை வெளிப்படுத்தியுள்ளன.