சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Financial organisations declare Greece to be in default

நிதிய அமைப்புக்கள் கிரேக்கம் செலுத்துமதி நிலுவையில் உள்ளதாக அறிவிக்கின்றன

By Stefan Steinberg 
12 March 2012

use this version to print | Send feedback

வியாழக்கிழமை இரவு தனக்குக் கடன் கொடுத்தவர்களுடன் கிரேக்கம் ஓர் உடன்பாடு கொண்ட உடனேயே, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் உடன்பாட்டை ஐரோப்பியக் கடன் நெருக்கடியைக் குறைக்கும் ஒரு முக்கியமான படி என்று பாராட்டினார்கள். பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி கிரேக்கப் பிரச்சினை முடிந்துவிட்டது, நிதிய நெருக்கடியில் ஒரு அத்தியாயம முடிவடைகின்றது என்று அறிவித்தார்.

ஆனால் வியாழக்கிழமை அடையப்பட்ட உடன்பாட்டை சற்றே நெருக்கமாகப் பார்த்தால், அது நிதிய நெருக்கடியை பொதுமக்களின் பணத்தின் மீது மாற்றும் ஒரு செயல், அதாவது வரி செலுத்துபவர்கள்மீது என்றும், அதே நேரத்தில் கிரேக்கம் மற்றும் ஐரோப்பா முழுவதுமே மக்களின் வேதனையை அதிகப்படுத்தும் ஒரு செயல்தான் என்றும் புலப்படும்.

சர்வதேச நிதிய அமைப்புக்களுக்கும் கிரேக்க அரசாங்கத்திற்கும் இடையே பரபரப்பான பேரங்களைத் தொடர்ந்து உடன்பாடு முடிக்கப்பட்ட சிலமணி நேரங்கள் கழிந்த உடனேயே, 15 உலக வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களைக் கொண்ட ISDA  எனப்படும் சர்வதேச பரிமாற்ற மற்றும் பங்குகளுக்கான அமைப்பு அந்த உடன்பாட்டில் கடன் நிகழ்வு என அழைக்கப்படும் ஒரு தொடர்பு உள்ளது என அறிவித்தது. கிரேக்கம் அதற்குக் கடன் கொடுத்தவர்களிடம் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் அவர்கள் வைத்திருக்கும் பத்திரங்களில் கடன்வெட்டிற்கு (haircut) கட்டாயப்படுத்தியுள்ளது, கூட்டு நடவடிக்கை விதிகளைக் காட்டி என்றும் இதனால் அதன் கடன்களில் செலுத்தமதியின்மையை அடைந்துவிட்டது என்றும் அறிவித்தது.

இதன் பொருள் தனியார் முதலீட்டு நிதியங்களும் வங்கிகளும் கிரேக்கத் செலுத்துமதியினமைக்கு எதிராக CDS Credit default swaps (கடன் தவணை மாற்றங்கள்) வகையில் காப்பீடு செய்தவை நிதி பெறத் தகுதி உடையவை என ஆகின்றன என்பதாகும். யூரோ நாட்டின் தவணைத் தவறுக்கு CDS நிதியளித்தல் என்பது ஒரு முன்னோடியை ஏற்படுத்துகிறது; இது பெரிய ஐரோப்பிய பொருளாதாரங்களான ஸ்பெயின், இத்தாலி போன்ற தேசிய கடன்களின் வட்டிப் பணத்தை அதிகரிக்கும் உந்துதலைக் கொண்டுள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. ISDA அறிவிப்பைத் தொடர்ந்து Standard & Poor’s, Fitch  ஆகிய கடன்தர நிர்ணய நிறுவனங்களின் அறிக்கை கிரேக்கக் கடன் தவணை மாற்றம் என்பது ஒரு தவறைக் குறிக்கிறது என்ற அறிக்கைகள் வெளிவந்தன.

திவால்தன்மையை அகற்றுவதற்கு முற்றிலும் மாறாக, வியாழக்கிழமை உடன்பாடு கிரேக்கம் உத்தியோகபூர்வமாக திவாலை நோக்கிச் செல்லும் முக்கிய கட்டத்தைத்தான் பிரதிபலிக்கிறது.

வார இறுதியில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், Open Europe சிந்தனைக் குழுவின் தலைவர் கிரேக்கக் கடன் நிவாரண உடன்பாடு பெரும் செலவில் பெறப்பட்ட வெற்றியாகக்கூடும் என அறிவித்துள்ளது. கிரேக்கக் கடன் வரி செலுத்துபவர்கள் செலவில் சமூகமாக்கப்பட்ட வழிவகையை விவரித்து அவர் எழுதுகிறார்: இந்த ஆண்டுத் தொடக்கத்தில் கிரேக்கக் கடன்களில் 36% வரி செலுத்துபவர்கள் ஆதரவு கொடுக்கும் அமைப்புக்களிடம் (ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய நிதிய உறுதிப்பாட்டு அமைப்பு) இருந்தது. 2015க்குள் தானே முன்வந்து மறுகட்டமைப்புச் செய்தல், இரண்டாம் பிணையெடுப்பு ஆகியவற்றை தொடர்ந்து இப்பங்கு கிட்டத்தட்ட 85% கூட அதிகரிக்கலாம்; இதன் பொருள் கிரேக்கத்தின் கடன் மிகப் பெரிய அளவில் யூரோப்பகுதி வரி செலுத்தவோரிடம் சென்றுவிடும்... அவர்கள்தான் கிரேக்கம் இன்னும் செலுத்தமதியின்மைக்கு சென்றால் பணம் கட்ட நேரிடும்.

மற்றொரு செலுத்துமதியின்மை என்பது அண்மையில்தான் இருக்கிறது. சிக்கன இலக்குகள் முற்றிலும் நடைமுறைக்கு பொருந்தாதவை, வளர்ச்சி வாய்ப்புக்களை அழித்துவிடும் என்று அறிக்கை கூறுகிறது. முடிவுரையாக அது, இந்த உடன்பாடு ஐரோப்பாவின் இதயத்தானத்தில் பெரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கான விதைகளைத் தூவக்கூடும்; அது நடுத்தர, நீண்டகால அளவில் யூரோப்பகுதியின் உறுதிப்பாட்டை இன்னும் அச்சுறுத்தும் என்று கூறுகிறது.

கடன் உடன்பாட்டின் விளைவுகள் பற்றிய அச்சம் கடந்த வார இறுதியில் யூரோவின் மதிப்பில் தீவிரச் சரிவையும் ஏற்படுத்தின. பொது ஐரோப்பிய நாணயத்தின் மதிப்பு டாலருக்கு எதிராக 1.2 சதவிகிதம் குறைந்தது.

முக்கூட்டு எனப்படும் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய வங்கி (EU, IMF, ECB), ஆகியவற்றின் கோரிக்கைகளை செயல்படுத்தியபின் கிரேக்கம் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) யில் 20% சரிவைக் கண்டுள்ளது; மேலும் அது ஐந்தாம் ஆண்டு மந்த நிலையிலும் நுழைகிறது. பல முன்னாய்வுகள் சமீபத்திய அரசாங்க வெட்டுக்களின் விளவாக கிரேக்கம் இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்கு மந்தநிலையை எதிர்நோக்கலாம் என்று கூறுகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் மீண்டும் வியாழக்கிழமை உடன்பாட்டிற்குப்பின் சாட்டையை எடுத்துக் கொண்டு கிரேக்க அரசாஙக்கத்தை ஒப்புக் கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கைகளை தாமதமின்றி செயல்படுத்துமாறு உத்தரவிட்டன என்பது எதிர்பார்த்ததுதான். ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார ஆணையரான ஒல்லி ரெஹ்ன், கிரேக்க அதிகாரிகள் பொருளாதாரச் சீர்செய்யும் திட்டத்திற்குத் தங்கள் உறுதியான ஈடுபாட்டைக் கடுமையாகத் தொடர்வர், உரிய காலத்தில் கொள்கைப் பொதியையும் செயல்படுத்துவர் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று அறிவித்தார்.

அவருடைய கருத்துக்கள்தான் ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌய்பிளவினாலும் எதிரொலிக்கப்பட்டன; அவர் ஐரோப்பிய ஒன்றிய சிக்கனக்கொள்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் முக்கியப் பங்கைக் கொண்டவர். ஷௌய்பிள திமிர்த்தனமாக பின்வருமாறு  அறிவித்தார்: கிரேக்கத்திற்கு இன்று அது செய்து முடிக்க வேண்டும் என்ற வாய்ப்பைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த வாய்ப்பையே கிரேக்கம் இப்பொழுது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தன் அதிகாரிகளை ஏதென்ஸிற்கு ஐரோப்பிய ஆணையம் அனுப்பி சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கிப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கிரேக்க அரசாங்கத்தின் கொள்கையை மேற்பார்வையிட வைத்துள்ளது.

தங்கள் விருப்பப்படி, வங்கியாளர் லூக்காஸ் பாப்படெமோஸை பிரதம மந்திரியாக பதவியிருத்தியதுடன் திருப்தி அடையாமல், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இப்பொழுது வெட்டுக்களுக்கு மக்கள் எதிர்ப்பு பெருகியிருப்பதைச் சமாளிக்கும் திறனுடைய ஆட்சியை கிரேக்கத்தில் எப்படி நிறுவுவது என்று விவாதிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்தினர் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் கிரேக்கத் தேர்தல்கள் தேவையற்றவை என்று கருதுகின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை.

பிரெஞ்சு வணிகச் செய்தித்தாளான La Tribune கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் செல்வாக்குக்குழு ஒன்று தேர்தல்களை ஒத்திவைக்க, அல்லது இரத்து செய்ய ஆதரவு காட்டும் வகையில் வளர்ந்துள்ளது எனக் கூறுகிறது. சமூக ஜனநாயகக் கட்சியான PASOK க்கு இடதில் இருக்கும் மூன்று கட்சிகளும் வாக்களிக்க விருப்பம் உடையவர்களில் 39% ஆதரவைக் கொண்டுள்ள.... அத்தகைய வலுவான இடது இருக்கும்போது, தற்போதைய திட்டங்கள் வினாவிற்கு உட்படுத்தப்படும் என்னும் கணிசமான ஆபத்து உள்ளது என்று அது எழுதியுள்ளது.

செய்தித்தாள் ஐரோப்பிய ஒன்றியம் 2015ம் ஆண்டில் ஒரு தேர்தலை நடத்தலாம் என விரும்பும் என்றும் ....கட்டுக்கு அடங்காத சமூக வெடிப்பு என்பது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரச வங்குரோத்தினைப் போலவே கணிசமான அபாயத்தை கொண்டுள்ளது என்னும் எச்சரிக்கையை முடிவாகக் கூறியுள்ளது.

La Tribune குறிப்பிடும் தீவிர இடது என்பது முதலாளித்துவ PASOK  கட்சி, அத்துடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்களுக்கு தங்கள் விசுவாசத்தை பலமுறை நிரூபித்துள்ள அமைப்புக்களின் குழுவாகும். இந்த அமைப்புக்கள் கிரேக்கத்திற்கோ ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கோ எந்த ஆபத்தையும் காண்பிக்காதவை என்றாலும், La Tribue மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவம் அவற்றிற்குத் தேர்தல் வெற்றி என்பது தொழிலாள வர்க்கம் எழுச்சி பெறுவதற்கு ஊக்கம் கொடுக்கும் என்றும் அது இன்னும் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்துவதற்கு அச்சுறுத்தல் கொடுக்கும் என்றும் கவலை கொண்டுள்ளன.

ஏப்ரலில் நடக்க இருக்கும் தேர்தல்கள் இரத்து செய்யப்படுவது என்பது, கிரேக்க இராணுவத்திற்கு பெருகும் சமூக அமைதியின்மையை சமாளிக்க அதன் தயாரிப்புகளில் ஈடுபடும் நிலைக்குப் பச்சை விளக்குக் காட்டும். அத்தகைய நிலை குறித்துத் தன் கவலைகளை வெளியிட்ட  ஐரோப்பிய மக்கள் கட்சியின் வலதுசாரி துணைத்தலைவர் ஜாசெக் சர்யூஸ் வோல்ஸ்கி, தன் ஐரோப்பியச் சக ஊழியர்களிடம் இராணுவத்தின் தலையீடு ஆபத்தான பூகோள-அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். ஏதென்ஸில் வலுவிழக்கும் ஜனநாயகம், ஒழுங்கமைப்பை தக்க வைக்க ஒருவேளை இராணுவ தலையீடு வருமோ என்ற நிலை, வரக்கூடிய காட்சிகளிலேயே மிக மோசமானதாக இருக்கும். இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, அண்டைப் பகுதிகளில் அதன் தோற்றத்திற்கு பேரழிவு தரக்கூடியதாக இருக்கும்தெற்கிலும் சரி, கிழக்கிலும் சரி, உலகம் முழுவதும் சரி.

வியாழக்கிழமை ஏற்பட்டுள்ள கடன் நிவாரண உடன்பாடு ஐரோப்பிய ஒன்றியம் வங்கிகள் மற்றும் பெருநிதியங்களின் ஒரு கருவி என்னும் பங்கைத்தான் உறுதிபடுத்தியுள்ளது. கிரேக்கத்தில் சற்று அவகாசம் வாங்கியபின், பிரஸ்ஸல்ஸில் இருக்கும் ஐரோப்பிய அதிகார வர்க்கத்தின் முக்கியக் கவலை இன்னும் பெரிய பாதுகாப்பு சுவரை வங்கிகள் பாதுகாப்பிற்காகக் கட்டமைத்தல் மற்றும் போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலியில் ஆரம்பித்து ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான கூடுதல் தாக்குதலுக்கு தயாரிக்க வேண்டும் என்பதுதான்.