சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French President Sarkozy makes anti-immigrant appeal to neo-fascist vote

நவ பாசிசவாதிகளின் வாக்குகளைப் பெற பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி புலம்பெயர்ந்தோருக்கு எதிரான அழைப்பை விடுகிறார்

By Antoine Lerougetel and Olivier Laurent
16 March 2012

use this version to print | Send feedback

ஞாயிறன்று தன்னுடைய ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில், பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஷெங்கன் பகுதிக்குள் தடையற்று மக்கள் வருவதை தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்க கட்டாயப்படுத்தப்படும், ஐரோப்பாவின் கோட்டை என அழைக்கப்படும் இவற்றின் எல்லைப் பகுதிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியேயிருந்து புலம்பெயர்ந்து வருவோருக்கு எதிராக பலப்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஐரோப்பா இடப்பெயர்வினால் ஆபத்திற்கு உட்பட்டுவிடும் என்று கூறிய சார்க்கோசி, எல்லைகளில் கட்டுப்பாடு குறித்த பொது ஒழுங்குமுறை தேவை... அடுத்த 12 மாதங்களில் அதுபற்றிய தீவிர முன்னேற்றம் எதுவும் இல்லையென நான் கண்டால், இதுபற்றிய பேச்சுவார்த்தைகள் முடிவடையும்வரை ஷெங்கன் உடன்பாடுகளில் பங்கு பெறுவதை பிரான்ஸ் நிறுத்திவிடும் என்றார்.

பிரச்சாரத்தில் சார்க்கோசியின் ஆத்திரமூட்டும் தன்மை நிறைந்த அறிக்கைகள் பன்முககலாச்சாரத்தின் மீதான தாக்குதலும், அதேபோல் புலம்பெயர்வோர் வசிக்கும் உரிமை பெறுவது, இயல்பாகக் குடிமக்கள் ஆவது ஆகியவற்றை கடுமைப்படுத்த சர்வஜனவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்னும் அழைப்பும் அடங்கியிருந்தது. வேலையில்லாதவர்களுக்கு முதலில் வழங்கப்படும் வேலையை எடுத்துக்கொள்ள நிர்ப்பந்திப்பது, அதற்குக் கட்டாய பயிற்சி பெற வேண்டும் என்னும் திட்டத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.

நவ பாசிச தேசிய முன்னணியின் (FN) வேட்பாளரான Marine Le Pen இன் வாக்குகளைப் பெறும் தன் மூலோபாயத்தை சார்க்கோசி ஆழமாக்குகிறார். பிரான்ஸிலும் ஐரோப்பா முழுவதிலும் ஆளும் உயரடுக்கு இன்னும் வெளிப்படையாக பாசிசத் தன்மையை எடுக்கும்போது அவர் நவ-பாசிஸ்ட்டுக்களின் வேலைத்திட்டத்தை ஏற்கிறார்.

மார்ச் 6ம் திகதி France2 தொலைக்காட்சியில் தோன்றியபோது சார்க்கோசி வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து இது வந்துள்ளது. அப்பேட்டியில் அவர் பிரான்ஸில் மிக அதிகமான வெளிநாட்டுக்காரர்கள் உள்ளனர் என்றார். ஏற்கனவே ஒப்புமையில் ஒவ்வொரு ஆண்டும் பிரான்ஸிற்குக் குறைவாக வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை இன்னும் குறைக்கும் திட்டத்தைத்தான் அவர் முன்வைத்துள்ளார். ஐந்து ஆண்டுக் காலத்தில், நாம் இங்கு வரும் மக்களின் எண்ணிக்கையை 180,000 ல் இருந்து 100,00 என  பாதியாகக் குறைக்க வேண்டும். என்றார்.

புலம்பெயர்ந்துவருவோர் தங்கள் குடும்பங்களையும் பிரான்ஸிற்குக் கொண்டுவருவதைக் கடினமாக்கும் இலக்கு பற்றியும் அவர் அடையாளர் காட்டியுள்ளார். மற்றொரு நிர்வாக நடவடிக்கை மே 2011ல் இருந்து செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பிரான்ஸில் பணிபுரியும் வெளிநாட்டு மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்தவுடன் தொடர்ந்து வேலைபார்ப்பதற்குத் தடை விதிக்கிறது.

இக்கருத்துக்கள் எந்த அளவிற்கு பிரான்ஸின் ஆளும் வர்க்கம் FN ஐ அரசியல் விவாதத்திற்குக் குரல் கொடுக்கக் கூட்டாகப் பயன்படுத்துகிறது. இது  சார்க்கோசி மற்றும் சோசலிஸ்ட் கட்சி (PS) இன் வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்ட் இருவரும் தீவிர வலதுசாரித்தன, புலம்பெயரெந்தோருக்கு எதிரான நடவடிக்கைகளை அனுமதிக்கின்றது கடந்த மாதம் ஹோலண்ட் பிரான்ஸில் ரோமாக்கள் இருப்பதற்கு ஒரு தீர்வு தேவை என்றார்: அவர்கள் முகாம்களில் காவலில் வைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். (பார்க்கவும்: “French Socialist Party presidential candidate calls for interning the Roma”).

தொழிலாள வர்க்கத்தை அழிப்பதற்கு, போட்டி ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் கருவியாக செயல்படும் பிற்போக்குத்தன, வணிக சார்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான மக்களின் சீற்றத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சார்க்கோசி அரசியல் சூழ்நிலையைத் தீவிரமாக வலதிற்கு நகர்த்தப் பார்க்கின்றார்.

1985ம் ஆண்டு லுக்சம்பேர்க் கிராமமான ஷெங்கனில் ஒரு கூட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஷெங்கன் உடன்பாடு 25 கையெழுத்திடும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இருக்கும் கடவுச்சீட்டு, வெளிநாடு செல்லும் கட்டுப்பாடுகள் மீதான தடையை அடக்கி வைப்பதுடன், புலம்பெயர்வோரின் உரிமைகள்மீது பிற்போக்குத்தனத் தாக்குதலுக்கு தளம் அமைக்கிறது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருந்து வரும் நாடுகளில் இருந்து. ஐரோப்பாவின் எல்லைகள் புலம்பெயர்வதை தடுப்பதற்கு அதிகரித்தளவில்  இராணுவமயமாக்கப்படுவதால், கிட்டத்தட்ட 1,500 பேர் ஐரோப்பாவை அடைவதற்கு மத்தியதரைக்கடலை கடக்கும்போது மூழ்கியுள்ளனர் என்று ஐ.நா.புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

Médiapart, குடியேறுவோர் உரிமைகள் குழுவான Migreurop என்பதை மேற்கோளிட்டுள்ளது: சுற்றிவருவதற்கு வசதியளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஷெங்கன், உண்மையில் ஆயிரம் புலனாகாத எல்லைகளைத் தோற்றுவிக்கிறது. அது அவரவர் அந்தஸ்தை ஒட்டி (ஐரோப்பிய குடிமகனா, வசிக்கும் வெளிநாட்டவரா, உல்லாசபயணியா போன்ற முறையில்)....இந்தப் போலித்தனமான நாடுகளுக்கிடையே செல்லும் சுதந்திரம் என்ற பெயரினால் எல்லைப் பகுதிகளிலும் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் தேவையாகின்றன. மறைந்து போதல் என்பதற்கு முற்றிலும் மாறாக, பொலிஸ் ஒத்துழைப்பு அங்கத்துவநாடுகளுக்கு இடையே ஒரு முக்கிய ஐரோப்பிய ஒன்றிய இலக்காகிவிட்டது.

ஷெங்கன் உடன்பாடுகளை மீண்டும் எழுதவேண்டும் என்னும் சார்க்கோசியின் அழைப்புக்கள் ஐரோப்பா முழுவதும் புலம்பெயர்வுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்கி தீவிரவலதுசாரி உணர்வை வளர்க்கும் பரந்த நடவடிக்கையின் ஒரு பகுதிதான். ஒரு ஐரோப்பிய ஆணையம் மே மாதம் ஷெங்கன் குறித்த திருத்தங்களைப் பற்றிய அறிக்கை கொடுக்க உள்ளது; இந்த ஆணையம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதன் வணிகப் பங்காளிகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர நிலைமைகள் குறித்த அறிக்கை இம்மாதம் வரவிருக்கிறது.

ஷெங்கன் உடன்பாடுகள் ஏற்கனவே பலமுறை ஒருதலைப்பட்சமாக குறுகிய காலங்களுக்குத் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதம். அப்பொழுது இத்தாலியுடனான தன் எல்லையை பிரான்ஸ் மூடிவைத்தது; ஏனெனில் ஆயிரக் கணக்கான பிரெஞ்சு மொழி பேசும் துனிசிய அகதிகள் இத்தாலியில் இருந்து பிரான்ஸிலுள்ள 600,000 பேர் அடங்கிய துனிசிய சமூகத்தோடு இணைய விரும்பினர். (See also: France re-establishes border controls with Italy amid dispute over African migrants)

சார்க்கோசியின் அறிவிப்பு Fiscal Pact என்னும் நிதிய உடன்பாட்டுடன் பிணைந்துள்ளது; அதை அவர் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுடன் இணைந்து இயற்ற உதவினார். இது மார்ச் மாதம் 2ம் திகதி அன்று, 27 ஐரோப்பிய அங்கத்துவநாடுகளில் 25இனால் கையெழுத்திடப்பட்டது. இதனால் ஐரோப்பிய அரசாங்கங்கள் ஆழ்ந்த வரவு-செலவுத்திட்ட வெட்டுக்களை சுமத்த வேண்டும். இதனால் வங்கிகளுக்கு அரசாங்கங்கள் கடன்களை திருப்பிக் கொடுத்தல் என்பது தொழிலாள வர்க்கத்தின் மீதான சுமையாகிவிடும்.

இந்த உடன்பாடு பெருகிய முறையில் கிரேக்கம் மற்றும் தெற்கு ஐரோப்பாவில் பெரும் பகுதிகளின் பொருளாதாரங்களை பாதிப்பதால், ஐரோப்பாவிற்குள் எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் நிறுவுதல் என்பது கூடுதல் முக்கியத்துவத்தை பெறுகிறது. இவை ஐரோப்பிய அரசுகளை சிறைச்சாலைகளாக்கும். இப்பொழுது வட ஆபிரிக்காவில் இதே போன்ற நிலைமையில் உள்ள இளைஞர்கள், தொழிலாளர்களைப் போல் தொழிலாளர்களும் இளைஞர்களும் கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளில் தங்கள் தாய்நாடுகளை விட்டு வேலையின்மையில் இருந்தும் வறுமையில் இருந்தும் தப்பிக்க வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாமல் செய்துவிடும்.

இக்கொள்கைகளை சார்க்கோசி கடைப்பிடிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் பிரெஞ்சு முதலாளித்துவமும் குட்டி முதலாளித்துவ இடதுகளும் அவருடைய பிரச்சாரமான புலம்பெயர்ந்தோரையும், வெளிநாட்டினரையும் தீய தன்மை உடையதாகச் சித்தரிப்பதை ஆதரிப்பதுதான். சோசலிஸ்ட் கட்சியின் Jean-Christophe Cambadelis  உடன்பாடுகள் மறு பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டவை என்று காட்டும் சார்க்கோசியின் நிலைப்பாட்டை பாராட்டியுள்ளார். இது ஐரோப்பிய நிதிய உடன்பாடு மறு பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டது என்னும் ஹோலண்டின் திட்டத்தைப் பற்றிய குறிப்பு ஆகும்.

குட்டி முதலாளித்துவ இடது குழுக்களான புரட்சிகர கம்யூனிஸ்ட் லீக் என்னும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சிக்கு முன்னோடி போன்றவற்றையும் அம்பலப்படுத்துகிறது. அது 2002ல் வலதுசாரி வேட்பாளர் ஜாக் சிராக் தேசிய முன்னணி வேட்பாளர் ஜோன் மரி லு-பென்னை தோற்கடிக்க வேண்டும், பிரான்சில் நவ-பாசிச ஆதிக்கம் ஏற்படும் ஆபத்தை தடுக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

வலதுசாரிகள் அதிகாரத்திற்கு வருவதை ஆதரித்து, புலம்பெயர்ந்தோருக்கும் ஜனநாக உரிமைகளுக்கும் எதிரான ஆழ்ந்த தாக்குதல்களுக்கும் பெரிதும் ஆதரவு கொடுத்ததனூடாக முழு அரசியல் அமைப்புமுறையும் நவ-பாசிச நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு உடந்தையாக அவர்கள் உள்ளனர்.