சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French police in armed standoff with alleged Toulouse gunman

துலூசில் துப்பாக்கிதாரியுடன் பிரெஞ்சுப் பொலிஸ் மோதல்

By Alex Lantier
22 March 2012


use this version to print | Send feedback

நேற்று மாலை, தெற்கு பிரான்ஸிலுள்ள துலூசில் துப்பாக்கியால் சுட்டுப் பல கொலைகளை நிகழ்த்தியதாக கூறப்படும் முஹமட் மேராவிற்கும், கோமாண்டோ பொலிஸ் பிரிவுகளுக்கும் இடையே ஆயுதமோதல்கள் ஏற்பட்டன. மேராதான் மார்ச் 11 முதல் மூன்று தாக்குதல்களில் 7 பேர் இறந்ததற்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இவற்றில் துலூஸ் மற்றும் மொந்தோபானுக்கு அருகேயும் இரண்டு தாக்குதல்களில் மூன்று பாரசூட் துருப்பினரும், நான்கு குடிமக்கள் துலூஸிலுள்ள ஓசார் ஹதோரா யூதப் பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் இறந்தனர்.

RAID பிரிவினர் (சோதனையிடுதல், உதவுதல், தலையிடுதல் மற்றும் தடுத்து வைத்தலுக்கான பிரிவினர்) மேராவை நேற்று அதிகாலை 3 மணியளவில் தாக்கினர். அவர் பதிலுக்குச் சுட்டதில் இரு அதிகாரிகள் காயமுற்றனர். நாள் முழுவதும் நீடித்த இந்நடவடிக்கையில், பின்னர் பொலிசார் நள்ளிரவில் வீட்டைத் தாக்கி, ஒரு கதவை தகர்த்து சுவரில் ஒரு துவாரத்தையும் இட்டனர்.

23 வயதான மேரா அல் குவைடா ஆதரவாளர் என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். இவர் தன்னந்தனியாகவே கொலைகளைச் செய்துள்ளதாகவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். செய்தி ஊடகத்தில் பெரும் முரண்பாடாக காணப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த அறிக்கைகள் ஏதாவது உண்மையானதா என்பது தெளிவில்லை.

மொந்தோபானில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரைப் பற்றி நேரில் சாட்சியம் அளித்தவர் கொடுத்த விபரங்களிலிருந்த உடலமைப்பு தொடர்பாக மேரா வேறுபட்டுள்ளார். அச்சாட்சிகள் துப்பாக்கியேந்தியவர் பருமனானவர் என்று கூறினார்கள். ஒரு பச்சைகுத்தல் மற்றும் இடது கன்னத்தில் தழும்பு ஆகியவையும் இருந்தன என்று அவர்கள் கூறினர்; தலைக்கவசத்தின்  முன்திரை அகற்றப்பட்டபோது இதைக் கண்டதாக அவர்கள் கூறியிருந்தனர். ஆனால் செய்தி ஊடகத்திற்கு வெளியிடப்பட்டுள்ள படங்கள் ஒரு ஒல்லியான நபரை, முகத்தில் முடி ஏதும் இல்லாமல், அடையாளங்களும் இல்லாமல்தான் காட்டுகின்றன.

அதேபோல் மேரா அல் குவைடாவுடன் தொடர்புகள் பற்றிய தகவல்களும் நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. அவைகள் முரண்பாடான கருத்துக்களை நம்பியுள்ளன; அதேபோல் France24  தொலைக்காட்சி ஆசிரியர் Ebba Kalondo விற்கு பொதுத் தொலைபேசிக் கூண்டில் இருந்து ஒப்புதலளித்து வந்ததாக கூறப்படும் தகவலை ஆதாரமாக கொண்டுள்ளன. பிரெஞ்சு அதிகாரிகள் இவ்வாறு அழைத்தது மேராதான் என்று 98% உறுதியாக இருப்பாதகத் தெரிவிக்கின்றனர். கலோண்டா கூறிய நிகழ்வு உண்மையென்று பிரெஞ்சுச் செய்தி ஊடகத்திலும் தொலைக்காட்சி அமைப்புகளிலும் பரந்த முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேரா பல ஆண்டுகளாக DCRI ஆல் (உள்துறை உளவுத்துறையின் மத்திய இயக்குனரகம்) கண்காணிக்கப்பட்டதாக உள்துறை மந்திரி குளோட் கெயோன் (Claude Guéant) கூறினார். இது அவர் 2007ல் ஆப்கானிஸ்தானிற்கு பயணித்தபின் நடந்துள்ளது. காந்தகாரின் சிறைத் தலைமைக் காப்பாளர் குலாம் பருக், மேரா ஆப்கானியப் படைகளால் டிசம்பர் 19, 2007ல் காந்தகாரில் குண்டுத் தாக்குதல் வைத்ததற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார் எனத் தெரிவித்துள்ளார். பாக்கிஸ்தானின் அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் மேரா காந்தஹாரில் கைது செய்யப்படவே இல்லை என்று கூறி, அவரைப் பற்றி தகவல் ஏதும் தெரியாது என்றும் கூறிவிட்டனர். ஆப்கானிய அதிகாரிகள் BBC யிடம் காந்தாகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் இதே பெயரைக் கொண்ட வேறு ஒரு நபராக இருக்கலாம் என்றனர்.

பிரான்சில் பயங்கரவாத-எதிர்ப்புப் பிரிவின் அதிகாரி பிரான்சுவா மொலான், மேரா மீண்டும் ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு கைதுசெய்யப்பட்டு அமெரிக்காவினால் பிரான்சிற்கு அனுப்பப்பட்டார் என்று கூறினார். பெயரிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் இந்நிகழ்வை மறுத்து, பிபிசியிடம் பிரெஞ்சுப் படைகள் மேராவை மீண்டும் பிரான்சிற்குக் கொண்டு சென்றன என்றனர்.

ஆனால் Le Figaro பத்திரிகையினால் பேட்டி காணப்பட்ட மேராவின் நண்பர் ஒருவர் அவர் துலூசில் முக்கியமாக கார் திருத்துபவராக வேலைபார்த்தார் என்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன் சில மாதங்கள் அவர் சிறையில் சிறிய திருட்டிற்காக அடைக்கப்பட்டார்; இதற்குப்பின் பொலிஸ் அவரைத் தொடர்ந்து கண்காணித்தது. பிரெஞ்சு இராணுவத்தில் அவர் சேரும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. மேராவின் வக்கீல் Christian Etelin, மேரா ஒருபொழுதும் வன்முறைத் தவறுகளில் தொடர்பு கொண்டிருந்தது இல்லை என்றார்.

இறுதியாக, மேராவிடமுள்ள பொருட்களைப் பற்றிய விசாரணைகளின் அறிக்கை அவர் தனியாகச் செயல்பட்டார் என்னும் கூற்றை வினாவிற்கு உட்படுத்துகிறது. அதிகாரிகள் தாங்கள் ஒரு Renault Mégane கார், அவருடையது மற்றும் கைத்துப்பாக்கிகள், UZI தானியங்கி ஆயுதங்கள், வேட்டைத் துப்பாக்கிகள் ஆகியவைகள் இருந்ததை தேடுவதாகத் தெரிவித்தனர். அவரிடம் ஒரு Renault Clio காரும் ஆயுதங்கள் நிறைந்து இருந்தது என்றும் துலூஸ் பகுதியில் மூன்று பாதுகாப்பான வீடுகள் இருந்தன என்றும் கூறுகின்றனர். Le Figaro விடம் விசாரணையாளர்கள் அவருடைய வருமானம் பொதுநலக் கொடுப்பனவு அளவினதாகவே இருந்தது என்று தெரிவித்திருக்கையில் இவ்வளவையும் வைத்திருக்க அவருக்கு எவ்வாறு சாத்தியமாயிற்று என்பது தெளிவாக இல்லை என்றனர்.

ஆனால், இவை அனைத்தும் நம்பப்பட்டால், பிரெஞ்சு உளவுத்துறை மற்றும் பொலிசால் நெருக்கமாகக் கண்காணிக்கப்படும் நபர் 10 நாட்களுக்கும் மேலாக துலூசில், மற்றும் அருகேயுள்ள மொன்தோபானில், ஒரு கொலைகாரச் செயல்களை தடையின்றி நடத்த எப்படியோ அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓசார் ஹதோரா பள்ளியில் நடந்த தாக்குதலுக்கு முன் அவர் பொலிஸ் பிரிவினருடன்கூட தொடர்பில் இருந்ததாகத் தெரிகிறது.

மேராவை செவ்வாயன்று பொலிசார் அடையாளம் கண்டுபிடித்தனர் என்று கூறப்படுகிறது. இது T Max ஸ்கூட்டரைக் கவனித்த ஒரு யமாகா விற்பனையாளர் திடீரென மேரா அவருடைய கடைக்கு வந்து தன் ஸ்கூட்டருக்கு புது வண்ணம் தீட்டும்படியும் அதன் திருட்டுக்கு எதிராகத் தேடக்கூடிய கருவியை பயனற்றதாகவும் செய்யுமாறு கூறியதை நினைவுகூர்ந்தார். இந்த விற்பனையாளர் Christian Dellacherie, Le Figaro விடம் அவர் மார்ச் 15 அன்று நடைபெற்ற மொன்தோபான் துப்பாக்கிச் சூடுகளுக்குப் பின்  பொலிசாருடன் இணைந்து செயல்படுவதாகக் கூறினார்.

துலூஸ் துப்பாக்கிதாரி ஒரு யமாகா T Max ஸ்கூட்டரைப் பயன்படுத்தினார் என்பது குறித்து பரந்த அளவில் தகவல் கொடுக்கப்பட்டிருந்தாலும், விற்பனையாளர் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பொலிசிடம் எதையும் தெரிவிக்கவில்லை என்று கூறினார். திங்களன்று பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு பின், செய்தி ஊடகத் தகவல்கள் ஸ்கூட்டரின் நிறம் மாறியுள்ளது என்பதைக் குறிப்பிட்டவுடன், அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

அறிக்கைகள் முன்பு நவ நாஜிச முன்னாள் பாரசூட் துருப்பினர்கள் மேல் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்திருக்கையில் மற்றைய சந்தேகத்திற்கு உரியவர்களை ஒதுக்கிய வகையில் பொலிசார் மேரா மீது கவனம்காட்டியிருப்பது ஆளும் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் UMP கட்சி, நவ பாசிச தேசிய முன்னணி (FN) ஆகியவற்றை எதிர்நிலையில் நிறுத்தியுள்ளன. முன்பு அவர்கள் ஒரு நவ பாசிசம் நடத்திய கொலை என்று காணப்பட்டால் குடியேற்றத்திற்கு எதிரான இனவெறி என்று தேர்தல் பிரச்சாரங்களில் மையமாக இருப்பதற்கு எதிரான மக்கள் வெறுப்பு அலையை அது தூண்டும் என்று கவலைப்பட்டனர். குடியேறுவோர்-எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் பிரச்சாரத்தில் மற்ற கட்சிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டன; இதில் சோசலிச கட்சியும் அடங்கும். (See: பிரான்ஸ், துலூசில் துப்பாக்கிதாரி யூதப்பாடசாலையில் நால்வரை கொன்றார்)

தற்போதைய தாக்குதல்களை, கடந்த ஆண்டு நோர்வேயில் நடந்த நவ பாசிச Anders Behring Breivik உடைய பரந்த கொலைகளுடன் ஒருவேளை ஒப்பிடமுடியும் என்று முன்னதாக விமர்சகர்கள் கருத்துக் கூறியிருந்தனர்.

இப்பொழுது செய்தி ஊடகம் மேரா மீது குற்றத்தைக் குவிப்புக்காட்டுகிறது; முக்கிய கட்சிகள் முஸ்லிம்-எதிர்ப்பு இனவெறியைத் தூண்டத் திரும்பியதுடன், பயங்கரவாத எதிர்ப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ற மறைப்பில் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல்களை ஊக்குவிக்கின்றனர். எனவே இப்பெரும் துன்பியல் பிரான்சிலும் ஐரோப்பாவிலுமுள்ள குடியேற்ற எதிர்ப்பு அரசியல், நவ பாசிசத்திற்கான நிலைப்பாடு ஆகியவற்றை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. இது நடக்கும் ஜனாதிபதி போட்டியில் ஒரு முக்கிய காரணியாக வளர்கிறது. அத்தேர்தலின் முதல் சுற்று அடுத்த மாதம் நடக்க இருக்கிறது.

துலூஸ் துன்பியலை தேசிய முன்னணிக்கு எதிராகப் பயன்படுத்த முற்படும் இழிந்த முயற்சிகளைக் குறைகூறி தேசிய முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேசிய முன்னணியின் ஜனாதிபதி  வேட்பாளர் மரி லு பென் அறிவித்தார்: அடிப்படைவாத ஆபத்து நம் நாட்டில் பெரிதும் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது. அரசியல்-மதக் குழுக்கள் சற்றே தளர்ச்சியாகவுள்ள மனப்பான்மையினால் பெருகியுள்ளன. இப்பொழுது நாம் அரசியல்-மத அடிப்படைவாதக் குழுக்களுக்கு எதிரான போரை தொடக்க வேண்டும்; அவைதான் நம் கிறிஸ்துவக் குழந்தைகளை கொல்கின்றன, நம் முஸ்லிம் இளைஞர்களைக் கொல்கின்றன, இரண்டு நாட்கள் முன்பு யூதக் குழந்தைகளைக் கொன்றன.

UMP இன் அதிகாரி Valérie Rosso-Debord அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தேர்தலில் சார்க்கோசியின் தற்போதைய முக்கிய போட்டியார்களான Le Pen  மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்டையும் கண்டித்தார். Rosso Debord ஹோலண்டின் பாதுகாப்பு குறித்த கருத்துக்களின் நம்பகத் தன்மையை வினாவிற்கு உட்படுத்தி லுபென்னை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் போராட்டத்தில் மேற்கொண்டிருக்கும் அடிக்கடியும், நிரந்தரமானதுமான செயல்களை, மிக விரைவில் மறப்பதற்காக தாக்கினார்.  

சார்க்கோசியின் சட்டம் மற்றும் ஒழுங்கு, குடியேறுவோர் எதிர்ப்புப் பிரச்சாரங்களை சமீப காலத்தில் நடப்பவற்றை தீவிரமாக ஆதரிக்கும் சோசலிஸ்ட் கட்சியானது சார்க்கோசி பற்றிக் குறைகள் ஏதும் கூறப்படவில்லை என்று நொண்டித்தனமாக விடையிறுத்தனர். பிரான்சுவா ரெப்சமென் அறிக்கை ஒன்றை வெளியிட்டு துலூஸ் நிகழ்வுகளின்போது  ஹோலண்ட் பெரும் கௌரவத்துடன் நடந்து கொண்டுள்ளார் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பங்கிற்கு ஜனாதிபதி சார்க்கோசி நிகழ்வுகளில் தீவிர பங்கு கொண்டதின் மூலம் தலைப்புச் செய்தியாகினார். RAID  படைகளை அந்த இடத்திலேயே பார்ப்பதற்கு அவர் துலூஸுக்கு பயணித்தார்; பின் மொன்தோபானுக்கும் சென்று கடந்தவாரத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாரசூட் துருப்பினர்களின் இறுதிச் சடங்கிலும் உரையாற்றினார்.

Le Pen, Hollande, மற்றும் பசுமைக் கட்சியின் வேட்பாளரான Eva Joly ஆகியோர் ஒரே விமானத்தில் சார்க்கோசியின் உரையைக் கேட்பதற்காகப் பயணித்தனர்.