சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

பகிரங்க விரிவுரை

லியோ டொல்ஸ்டோய் மறைந்து நூறு ஆண்டுகள்

டொல்ஸ்டோய்: ஒரு மீள்-பார்வை

ஏப்பிரல் 4 அன்று, கொழும்பு மஹாவலி கேந்திர கேட்போர் கூடத்தில், லியோ டொல்ஸ்டோய் பற்றிய ஒரு மார்க்சிச மதிப்பீட்டை முன்வைக்கும் விரிவுரையொன்று நிகழ்த்தப்படவுள்ளது. இது சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) மாணவர் அமைப்பான சமூக சமத்துவத்துக்கான மாணவர்களினால் (ISSE) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2010 நவம்பர் மாதத்துடன், ரஷ்ய மற்றும் உலக இலக்கியத்தை வலுப்படுத்திய புகழ்பூத்த கலைஞனான டொல்ஸ்டோய் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்த சிரேஷ்ட படைப்பாளியின் வாழ்நாளில் இருந்து நூற்றாண்டு கடந்த போதும் கூட, அவர் பற்றிய குழப்பமான கருத்துக்கள் மேலோங்கி இருந்தன. கலை இலக்கியத் துறையில் கல்வி கற்கின்ற/கற்றுக்கொண்டிருக்கின்ற சில முதலாளித்துவ, குட்டி-முதலாளித்துவ, ஸ்ராலினிச மற்றும் வேறு பெயர்களைக் கொண்டுள்ள ஜனரஞ்சகவாத விமர்சகர்களின் உளரல்கள் மற்றும் பொய்மைப்படுத்தல்களின் காரணங்களாலேயே இத்தகைய குளறுபடிகள் உருவாகி இருந்தன. டொல்ஸ்டோயின் நூல்களின் தரங்குறைந்த மொழிபெயர்ப்புகளும், டொல்டோய் பற்றிய லெனினின் கட்டுரைகளின் முறையற்ற மற்றும் திரிபுபடுத்தப்பட்ட மொழிபெயர்ப்புகளும் குறைந்த அல்லது அதிக பட்சங்களில் அவற்றுக்கு துணையாக இருந்துள்ளன.

இதற்கு மாறாக, லெனின் மட்டுமன்றி உலக தொழிலாள வர்க்க இயக்கத்தின் முன்னணி தலைவரான ட்ரொட்ஸ்கி, ஜோர்ஜ் பிளகானோவ், ஃபிரான்ங் மெரிங், ரோஸா லக்ஸம்பேர்க் மற்றும் அலேக்சேன்டர் வெரோன்ஸ்கி போன்ற மார்க்ஸியவாதிகளின் பங்களிப்புகளின் ஊடாக மட்டுமே, டொல்ஸ்டோயின் இலக்கிய பணிகளின் உண்மையான உள்ளர்த்தத்தையும், அவரது வாழ்க்கைப் பாதையின் உண்மையான வடிவத்தையும் புரிந்துகொள்ள முடியும்.

பல தசாப்தங்கள் பூராவும் டொல்ஸ்டோய் பற்றி பரப்பப்படுகின்ற பிழையான கருத்துக்கள் உட்பட பிற அருவருப்பான மற்றும் வஞ்சகமான முயற்சிகளை அம்பலப்படுத்தி டொல்ஸ்டோய் என்ற இலக்கிய படைப்பாளி மற்றும் சிந்தனையாளன் பற்றிய ஒரு சிறப்பான மார்க்சிச மதிப்பீட்டை ஸ்தாபிப்பதே இந்த விரிவுரையின் பிரதான நோக்கமாக இருக்கும் அதேவேளை, சகலவிதமான பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராக புரட்சிகர கட்சி உலக மட்டத்தில் முன்னெடுக்கும் போராட்டத்தின் பிரிக்க முடியாத பாகமாகவே அந்தப் பணியை இட்டு நிரப்ப முடியும்.

திகதி: 4 ஏப்பிரல் 2012, புதன் கிழமை

நேரம்: மாலை 4.00 மணி

இடம்: மஹாவலி கேந்திர கேட்போர் கூடம்

விரிவுரையாளர்: தர்ஷன மேதிஸ்

ஏற்பாட்டாளர்கள்: சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள்