சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

UN Human Rights Council passes resolution on Sri Lanka

.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றம்

By K. Ratnayake
28 March 2012

use this version to print | Send feedback

மார்ச் 22 அன்று ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  பேரவையின் (யு.என்.எச்.ஆர்.சி) கூட்டத்தில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க அனுசரணையிலான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது வலுவற்ற, பிணைப்பற்ற இந்த தீர்மானம், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பிரச்சினைகளைத் தீர்க்க எதுவும் செய்யப் போவதில்லை. மாறாக அது தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களை முன்னெடுப்பதை இலக்காகக் கொண்டதாகும்.

இந்த தீர்மானம் நீதி, சமத்துவம், பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்ய, நடவடிக்கைகளை எடுப்பதன் பேரில், தனது சொந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த கொழும்பு அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தது. அது நடைமுறை செயற் திட்டமொன்றை வகுக்குமாறும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரேரணைகளை அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்துடன் ஆலோசித்து அதன் உடன்பாட்டுடன் செயற்பட .நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவரை அனுப்பவும் அழைப்பு விடுக்கின்றது.

வேறு வார்த்தைகளில் சொன்னால், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தில் பத்தாயிரக்கணக்கான பொதுமக்களை இராணுவம் படு கொலை செய்தமைக்கும், ஏனைய பகிரங்கமான ஜனநாயக உரிமை மீறல்களுக்கும் பொறுப்பான அதே அரசாங்கத்திடம், ஒரு  "செயல் திட்டத்தை"  வகுக்குமாறு இந்த .நா. தீர்மானம் அழைப்பு விடுக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, சர்வதேச விமர்சனங்களை தவிர்க்கவும் மற்றும் அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் வெள்ளை பூசுவதற்குமே நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தார்.

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் சம்பந்தமான வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குக் கூட அழைப்பு விடுக்கும் எந்தவொரு தீர்மானத்துக்கும் எதிராக ஆதரவு திரட்ட கடும் முயற்சி எடுத்தது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அரசு மே  2009ல் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததில் இருந்து உருவாக்கிய அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் "தெளிவான முன்னேற்றத்தை மேலும் பலப்படுத்த காலம்"  வழங்கப்பட வேண்டும் என்றார்.

சமரசிங்கவின் கருத்துக்கள் வெட்கக் கேடானவை. ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள் சிங்கள முதலாளித்துவ தட்டுக்களின் அரசியல் மற்றும் பொருளாதார மேலாதிக்கத்தை உறுதிப்படுத்த இனவாத உள்நாட்டுப் போரை முன்னெடுத்து வந்துள்ளன. தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது எதுவெனில், தமிழ் சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளை நசுக்கும் ஒரு நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பே ஆகும்.

தீர்மானம் இறுதியாக 24 ஆதரவான வாக்குகளாலும் 15 எதிரான வாக்குகளாலும் நிறைவேற்றப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா ஆதரவாக வாக்களித்ததுடன் சீனா மற்றும் ரஷ்யா எதிராக வாக்களித்தன. எட்டு நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டன.

வாக்கெடுப்பைத் தொடர்ந்து, அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன், உண்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புடைமையின் ஊடாக மட்டுமே இலங்கை நீடித்த சமாதானத்தை அடைய முடியும் என்ற வலுவான சமிக்ஞையை அமெரிக்கா சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனுப்பியுள்ளது" என்று அறிவித்தார். ஒபாமா நிர்வாகம் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் லிபியாவில் செய்த போர் குற்றங்களுக்கு பொறுப்பாளி என்ற விடயத்தை எடுத்துக்கொண்டால் இந்த கருத்துக்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை ஆகும்.

அமெரிக்கா, போர் குற்றங்கள் பற்றிய விசாரணைகளின் சாத்தியங்களுக்கு இடம் வைத்ததன் மூலம், கொழும்பு அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை திணிக்க இலங்கையில் "மனித உரிமைகள்" பிரச்சினையை சுரண்டிக்கொண்டுள்ளது. வாஷிங்டனின் பிரதான அக்கறை, யுத்தத்தின்போது இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு தீர்க்கமானதாக இருந்த இராணுவ மற்றும் பொருளாதார ஆதரவு வழங்கிய சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியடைவதை தடுப்பதே ஆகும்.

வாஷிங்டன் கொழும்புடன் இனிப்பையும் காட்டி அச்சுறுத்தும் அணுகுமுறையை பின்பற்றி வருகிறது.  .நா. தீர்மானத்தை முன் தள்ளிய அதேவேளை, கிளின்டன் இலங்கை அரசாங்கத்துடன் செயற்படுவதற்கான வாஷிங்டனின் தயார் நிலையை அறிவித்ததோடு, மே மாதம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸை சந்திக்க திட்டமிட்டுள்ளதையும் தெரிவித்தார்.

மார்ச் 23 அன்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இலங்கை இராணுவத்துக்கு கடல் மற்றும் வான்வழி கண்காணிப்பு உபகரணங்களை விற்பனை செய்வதற்கு விதித்திருந்த தடையை நீக்கியது. ஈரான் மீதான அமெரிக்க தடைகளில் இலங்கைக்கு கணிசமான விலக்களிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சண்டே டைம்ஸ் பத்திரிகை தெரிவித்திருந்தது. எண்ணெய் தேவையில் மிக அதிகளவை ஈரானிடம் இருந்து பெறும் இலங்கை, ஈரான் இறக்குமதியில் இருந்து இந்த ஆண்டு 15 சதவிகிதத்தை மட்டும் குறைக்க வேண்டும்.

.நா.  தீர்மானத்தை இந்தியா ஆதரித்தமை, 2009 ல் இருந்து ஒரு மாற்றத்தை குறிக்கிறது. அப்போது அது மனித உரிமை மீறல்கள் பற்றி ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்த தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யா மற்றும் சீனா உடன் சேர்ந்து வாக்களித்தது. புது டில்லி ஒரு நுட்பமான சமநிலைப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது. அது இராஜபக்ஷ அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை பேணுவதோடு  சீன செல்வாக்கை குறைக்க விரும்புகிறது.  அதே நேரம், இந்தியா  அமெரிக்கவுடனான தனது மூலோபாய கூட்டைப்  பலப்படுத்த முயற்சிப்பதோடு, இலங்கை தமிழர்கள் நடத்தப்பட்ட முறை சம்பந்தமாக பரவலான வெகுஜன எதிர்ப்பு நிலவும்  தென் மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை அமைதிப்படுத்த முயற்சிக்கின்றது.

வாக்கெடுப்பின் பின்னர், இராஜபக்ஷவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடிதமொன்றை எழுதினார். “தீர்மானத்தின் மொழியில் ஒரு சமநிலை தன்மையை அறிமுகப்படுத்த இந்தியாபெரும் முயற்சி எடுத்தது என்று சிங் தெரிவித்தார். அவர்ஆலோசனையுடன் மற்றும் உடன்பாட்டுடன் என்ற சொற்களைப் பற்றியே குறிப்பிடுகின்றார் என்பதில் சந்தேகம் இல்லை. இவை, யு.என்.எச்.ஆர்.சி. நடவடிக்கைகளை தடுக்க ஒரு வழியை கொழும்பு அரசாங்கத்துக்கு கொடுக்கின்றது

இலங்கையின் உள் விவகாரங்களில் தலையீடுவதாகக் கூறி சீனா மற்றும் ரஷ்யாவும் .நா. தீர்மானத்தை எதிர்த்தன. அமெரிக்கா இலங்கை மற்றும் உலகின் பிற பகுதிகளில் தனது நலன்களை தமது செலவில் முன்னேற்றுவிக்க தேர்ந்தேடுத்து மற்றும் இழிந்த முறையில் "மனித உரிமைகள்" பிரச்சினையை சுரண்டிக்கொள்கின்றது என்பதையிட்டு  இரு நாடுகளும் விழிப்புடன் உள்ளன. சீன பிரதிநிதிகள் குழு, தீர்மானத்துக்கு எதிராக யு.என்.எச்.ஆர்.சி.யில் கடுமையாக பிரச்சாரம் செய்ததாக டெய்லி மிரர் தெரிவித்தது.

இலங்கையினுள்,  தேசியவாத மற்றும்  மேற்கத்திய விரோத உணர்வுகளைத் தூண்டிவிட இந்தப் பிரச்சினையை பயன்படுத்திக்கொண்ட அரசாங்கம், நாடு சர்வதேச சதிக்கு இலக்காயுள்ளது எனக் கூறிக்கொண்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணி, சமீப வாரங்களில் தாயகத்தைக் காப்பாற்றுங்கள் என்ற கோஷத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட பல ஆர்ப்பாட்டங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தியது. மார்ச் 31ம் திகதிக்கு மற்றொரு சுற்று கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த பிற்போக்கான நாட்டுப்பற்று பிரச்சாரம், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் வறியவர்களின் வளர்ந்துவரும் போராட்டங்களுக்கு எதிராக நேரடியாக இலக்கு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தாய் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களாக குற்றஞ்சாட்டப்படுகின்றார்கள். எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணங்களில் கணிசமான அதிகரிப்பு உட்பட, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கோரிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்துவதற்கு எதிராக எதிர்ப்புக்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் வெடித்ததுள்ளன.

.நா.  தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி இராஜபக்ஷ, இலங்கை ஒரு சுதந்திரமான நாடு, அதன் விவகாரங்களில் எந்த ஒரு எதேச்சதிகாரமான குறுக்கீடும் செய்ய இடமளிக்கப்பட மாட்டாது என்றார். சிரமப்பட்டு பெற்ற சமாதானத்தை ஆட்டங்காணச்செய்ய மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் அல்லது அதற்கு ஆதரவளிப்பவர்கள் தலையெடுக்க அரசாங்கம் அனுமதிக்காது.

அது வாஷிங்டனின் நலன்களுக்கு பொருத்தமானதாக இருந்தால், தனது அரசாங்கம் விரைவில் லிபியாவில் கடாபி ஆட்சியைப் போலவே, சர்வதேச ரீதியில் தீண்டத் தகாததாகிவிடும் என்பதே இராஜபக்ஷவின் உண்மையான கவலை ஆகும். எல்லாவற்றுக்கும் மேலாக, அவரும் அவரது அமைச்சர்களும் திடீரென போர் குற்ற விசாரணையை எதிர்கொள்பவர்களாக தங்களைக் காண்பர். "சர்வதேச குறுக்கீட்டை," தடுப்பது பற்றிய அவரது வாய்ச்சவடால்கள் ஒருபுறம் இருக்க, இராஜபக்ஷ அமைதியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவை வலுப்படுத்த முயன்று வருகின்றார்.

பிரதான எதிர் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பீ) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பீ.) புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்தை முழுமையாக ஆதரித்ததுடன்  இராணுவத்தின் யுத்த குற்றங்களை மறைப்பதற்கு உதவின. அமெரிக்க சார்பை தனது திசையமைவாகக் கொண்ட யூ.என்.பீ., அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பிரேரணைகளை செயல்படுத்த உதவ முன்வந்தது. சர்வதேச தலையீட்டைத் தடுக்க அரசாங்கம் போதுமானவற்றை செய்யவில்லை என குற்றம் சாட்டிய ஜே.வி.பீ., .நா. தீர்மானம் நாட்டுக்கு பெரும் அடி என விவரித்தது.

முதலாளித்துவ தமிழ் தேசிய கூட்டமைப்பு, அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்தியாவின் ஆதரவு, இனவாத மோதல்களுக்கு அரசியல் தீர்வு என்றழைக்கப்படுவதை பெற்றுக்கொள்ள  உதவும் என்று கணக்கிட்டு, .நா. தீர்மானத்தை வரவேற்றுள்ளது.  கூட்டமைப்பு, மட்டுப்படுத்தப்பட்ட மாகாண சுயாட்சி மற்றும் , தமிழ் மேல்தட்டினருக்கு குறிப்பிடத்தக்க சிறப்புரிமைகளை வழங்கும் ஒரு அதிகார பகிர்வு ஏற்பாட்டை கொழும்பு அரசாங்கத்துடன்  ஸ்தாபித்துக்கொள்ள முயற்சிக்கின்றது.

தொழிலாள வர்க்கம், மனித உரிமைகள் பற்றிய அமெரிக்காவின் போலித் தோரணையையும் மற்றும் இராஜபக்ஷவின் தாய் நாட்டைக் காக்கும் பிற்போக்கு பிரச்சாரத்தையும் நிராகரிக்க வேண்டும். தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காவும் சோசலிச கொள்கைகளுக்காகவும் முன்னெடுக்கப்படும் ஐக்கியப்பட்ட புரட்சிகர போராட்டத்தின் பாகமாக மட்டுமே தமிழ் மற்றும் சிங்கள உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்க முடியும். சோசலிச சமத்துவக் கட்சியானது தெற்காசியாவிலும் அனைத்துலகிலும் சோசலிசத்துக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகின்றது.