சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Calls for European “growth” policies signal new attacks on workers

ஐரோப்பிய "வளர்ச்சி”க் கொள்கைகளுக்கான அழைப்புகள் தொழிலாளர்கள் மீதான புதிய தாக்குதல்களுக்கு சமிக்ஞை செய்கின்றன

By Johannes Stern in Paris
30 April 2012

use this version to print | Send feedback

சென்ற வாரத்தில் தொடர்ச்சியாய் பல ஐரோப்பிய நிர்வாகிகள் ஐரோப்பாவின் நிதி மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் ஒரு மாற்றம் வேண்டி அழைப்பு விடுத்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் மார்ச் 25 அன்று கையெழுத்திட்ட ஐரோப்பியநிதிய ஒப்பந்தத்தில்சில மாற்றங்கள் செய்வது உட்பட மேலதிகமான வளர்ச்சி-நோக்கிய கொள்கைகளுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். அந்த நிதிய ஒப்பந்தம் நிதிநிலைப் பற்றாக்குறைகளை துரிதமாக அகற்றும் வகையில் அரசுச் செலவினத்தையும் பொதுச் சேவைகளையும் வெட்டுவதில் கவனத்தை குவித்திருந்தது.

நெருக்கடியை எதிர்த்துப் போராட ஐரோப்பாவில் வளர்ச்சி கூடுதலாய் அவசியப்படுகிறது என புதனன்று ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான மரியோ டிராகி தெரிவித்தார். அவர் கூறினார்: “இப்போது நாம் நிதிச் சுருக்கத்தை (fiscal compact)மட்டும் தான் கொண்டிருக்கிறோம்என்று கூறிய அவர், “இப்போது என் மூளையில் வளர்ச்சிச் சுருக்கம் (growth compact)பற்றித் தான் எண்ண ஓட்டம் ஓடிக் கொண்டிருக்கிறதுஎன்றார்.

டச்சு பிரதமரான மார்க் ரட்டேயின் சிறுபான்மை அரசாங்கம் அது திட்டமிட்டிருந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு வலது-சாரி இஸ்லாமிய விரோத PVV (சுதந்திரக் கட்சி) யிடமிருந்து இருந்து ஆதரவைப் பெற முடியாமல் போனதை அடுத்து அவர் இராஜினாமா செய்த இரு நாட்களுக்கு அடுத்து இது வந்துள்ளது.

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் எஞ்சியிருக்கும் இரண்டு வேட்பாளர்களும் - இவர்கள் இருவருமே பிரெஞ்சு நிதிநிலை அறிக்கையில் ஆழமான செலவின வெட்டுகளுக்கு அழைப்பு விடுகிறார்கள் - மேலதிகமானவளர்ச்சிக் கொள்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். சோசலிஸ்ட் கட்சியின் (PS)வேட்பாளரான பிரான்சுவா ஹாலண்ட், புதனன்று பாரிஸில் நடந்த செய்தியாளர் சந்திப்பில்வளர்ச்சி ஒப்பந்தத்திற்கும்மற்றும் ஐரோப்பிய நிதிய ஒப்பந்தத்தின் மீதான மறுபேச்சுவார்த்தைக்குமான தனது அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார். மே 6 அன்று நடைபெறவிருக்கும் சுற்றில் நடப்பு ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசியை எதிர்த்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்கு ஒருவளர்ச்சி ஒப்பந்தத்தைமுன்மொழியும் ஒரு கடிதத்தை அனுப்பவிருப்பதாக அவர் கூறினார்.

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றுக்கு முன்பாக, சார்க்கோசியும் ஹாலண்டின் இந்த வாய்வீச்சின் பாதைக்கு வந்து விட்டார். இத்தனைக்கும் சார்க்கோசி ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்கெல் உடன் சேர்ந்து இந்த நிதிய ஒப்பந்தத்தின் முக்கிய வடிவமைப்பாளர்களில் ஒருவராய் இருந்தவராவார். பாரிஸில் நடந்த ஒரு பேரணியில் ஐரோப்பிய மத்திய வங்கி கூடுதல் செயல்திறனுடனான ஒரு பாத்திரத்தை எடுக்க அவர் அழைத்தார்: “மத்திய வங்கி வளர்ச்சியை ஆதரிக்கவில்லை என்றால், நமக்குப் போதுமான வளர்ச்சி கிடைக்காது.” யூரோவின் நாணய மதிப்பைக் குறைப்பதற்கு அழைப்புவிடுத்த அவர், மாறாக ஐரோப்பா பணச்சுருக்கத்தை தெரிவுசெய்யுமானால், ”அது காணாமல் போய் விடும்; 1930கள் நம் நினைவில் இருக்க வேண்டும்.”

2008 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி வெடித்ததற்குப் பின்னர் ஐரோப்பிய நிதிப் பிரபுத்துவத்தால் பின்பற்றப்பட்டு வரும் தொழிலாள விரோத சமூக வெட்டுகளின் திட்டநிரல் மீது சிலவளர்ச்சிக் கொள்கைகளின் அட்டைகளை மாட்டி விடுவதற்கான இத்தகைய அழைப்புகள் எல்லாம் பிற்போக்குத்தனமானவையாகும். வேலைகளை உருவாக்குவதற்கான மற்றும் தொழிற்துறையைக் கட்டியெழுப்புவதற்கான எந்த முக்கியமான முயற்சியையும் இவை குறித்து நிற்கவில்லை. அதற்குப் பதிலாய், வங்கிகளுக்கும் தேர்ந்தெடுத்த தொழிற்துறைகளுக்கும் மேலதிகமான பணத்தை வாரியிறைக்கின்ற அதே சமயத்தில், ஊதியங்கள் மற்றும் சமூக வேலைத்திட்டங்களின் மீது மேலதிகமான தாக்குதல்களை நடத்த அவை முனைகின்றன.

கிரீஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் சிக்கன நடவடிக்கைக் கொள்கையானது பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளியிருப்பதோடு வேலைவாய்ப்பின்மையையும் வறுமையையும் மலைக்க வைக்கும் அளவுகளுக்கு அதிகப்படுத்தியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் திணிக்கப்பட்ட நடவடிக்கைகள் எல்லாம் இறையாண்மைக் கடன் நெருக்கடியை ஆழப்படுத்தி, ஒட்டுமொத்த யூரோ வலயத்தையும் ஆழமான பொருளாதார மந்தநிலைக்குள் தூக்கிவீசும் அச்சுறுத்தலை மட்டுமே கொண்டு வந்துள்ளன

எந்த நிதி அமைப்புகளின் குற்றவியல் தன்மையுடனான பிழையான மேலாண்மை அடிப்படையாய் இந்த நெருக்கடிக்கு அழைத்துச் செல்வதாய் இருந்ததோ அதே அமைப்புகள் தான் இந்தவளர்ச்சிக் கொள்கைகளை ஆதரிக்கின்றன என்பதே இந்தக் கொள்கைகளுக்கான அழைப்புகளின் தன்மையை தெளிவுபடச் சுட்டிக்காட்டுவதாய் இருக்கிறது.

வியாழனன்று தரமதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் ஸ்பெயினுக்கான தரமதிப்பீட்டை இரு படி குறைத்தது. ஸ்பெயினின் பொருளாதாரம் மேலும் சுருங்குவதை அடுத்து ஸ்பெயினின் கடன் மேலும் அதிகரிப்பதை அது காரணம் கூறியது. ஸ்பெயின் அரசாங்கம் கொண்டுவந்திருக்கக் கூடிய கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்களை அது பாராட்டியது - இச்சீர்திருத்தங்கள் வேலைவாய்ப்பின்மையை அதிகரிப்பதிலும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீது தாக்குதல் நடத்துவதிலும் ஒரு முக்கியப் பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது. ஆயினும் ஸ்பெயினின் பொருளாதார வளர்ச்சி பற்றாக்குறையாய் உள்ளது குறித்த கவலையையும் பாராட்டைத் தொடர்ந்து அது வெளிப்படுத்தியுள்ளது. ஐரோப்பா கடன் நெருக்கடியைக் கையாளும் விதத்தையும் இந்த முகமை விமர்சனம் செய்தது. ”செயல்திறன் தொடர்ந்து பற்றாக்குறையாகவே இருப்பதாககூறிய அதுகூடுதலான நிதிய உதவிக்கு ஆலோசனைகளையும் அளித்தது.

ஸ்பெயினின் தரமதிப்பீடு கீழிறக்கப்பட்டதற்குப் பின்னர் ஸ்பெயினின் பிரதமரான மரியனோ ரஜோய் குறிப்பிட்டார்: “சிக்கன நடவடிக்கை என்பது [ஜேர்மனியின் சான்சலர்] அங்கேலா மேர்கெலின் கொள்கை அல்ல. இது நாமெல்லாம் அங்கமாக இருக்கும் ஒரு திட்டமான ஐரோப்பிய ஒன்றியத்தின், யூரோவின், கொள்கையாகும்.”

பிரான்சின் PS வேட்பாளர் ஹாலண்டைப் பொறுத்தவரை, நிதிய ஒப்பந்தத்தின்சிக்கன நடவடிக்கை அம்சத்துடன் தனக்கு முழு உடன்பாடு இருப்பதாய் அவர் கூறியிருக்கிறார். இதன்மூலம் தொழிலாளர்களின் ஊதியங்கள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீது பாரிய தாக்குதல்களை நடத்துவது தான் தனது இலக்கு என்பதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஊதியங்கள் அதிகரித்துச் செல்வதையும் பிரான்சின் போட்டித் திறன் சரிந்து செல்வதையும் கண்டித்திருக்கும் அவர் கடந்த 10 ஆண்டுகளில் PS இன் போட்டிக் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரது கொள்கைகள் தான் அதற்குக் காரணம் என்கின்ற வகையில் இந்தப் பிரச்சினைகளைக் கருதுகிறார்: “பத்து வருடங்களாய் தொழிலாளர்களுக்கு ஆகும் செலவு அதிகரித்துச் சென்றிருக்கிறது, ஆனால் அந்த பத்து வருடங்களில் யார் ஆட்சியில் இருந்தார்கள்வணிகங்கள் மீது பெரும் சுமையாக ஆகியிருக்கக் கூடிய வரிகள் இருக்கின்றன, போட்டித் திறன் சரிந்து செல்கிறது. சிறந்த ஆதாரம்: [பிரான்சின்] வர்த்தகப் பற்றாக்குறை 60 பில்லியன், இது வரலாற்றுப் பெரும் அளவு.”

2017 ஆம் ஆண்டுக்குள் ஒரு சமநிலையான நிதிநிலையைக் கொண்டுவருவதும் பிரான்ஸ் உலகளாவிய போட்டித்திறனுடன் திகழ்வதற்கு தொழிலாளர்கள் மீது ஆழமான தாக்குதல்களை நடத்துவதும் தான் ஹாலண்டின் வேலைத்திட்டத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கிறதுசென்ற தசாப்தத்தில், பிரான்ஸ், குறிப்பாக ஐரோப்பாவில் அதன் முக்கிய போட்டியான ஜேர்மனிக்கு எதிராக, தனது சமவலுவை பெருமளவில் இழந்திருக்கிறது. பிரான்சின் தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியாதாரம் அளிக்கும் விதமாக, ஐரோப்பிய கட்டமைப்பு நிதிகள் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் விதிமுறைகளைத் தளர்த்துவதற்கு கோரியிருக்கும் ஹாலண்ட் யூரோ பத்திரங்களை உருவாக்குவதற்கும் அழைப்பு விடுத்தார்.

பிரெஞ்சு முதலாளி வர்க்கத்திடம் இருந்தும் வோல் ஸ்ட்ரீட் நிதியாளர்களிடம் இருந்தும் அவர்கள் பொருளாதாரக் கொள்கைகளை மாற்ற முனைவதற்கான சமிக்கைகள் வந்திருப்பது யூரோ மண்டலத்திற்கு உள்ளாக, அதிலும் குறிப்பாக ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையில், பொருளாதாரக் கொள்கைகளின் விடயத்தில் மோதல்கள் தீவிரமடைவதற்கு மேடை அமைத்திருக்கிறது. நெருக்கடி வெடித்தது முதலாகவே, ஜேர்மனி, யூரோ பத்திரங்களுக்கான கோரிக்கைகளையும் அத்துடன் ஒரு கூடுதல் பணவீக்கத்துடனான ECB கொள்கையையும் எதிர்த்து வந்திருக்கிறது. வங்கிகளுக்கும் தனது ஐரோப்பிய போட்டியாளர்களுக்கும் மானியமளிப்பதற்கு - இந்த நாடுகளுக்கு தானே பணம் கொடுப்பதானாலும் சரி, அல்லது இவற்றுக்கு கொடுப்பதற்கு ECB கூடுதலாய் பணத்தை அச்சிடுவதற்கு அனுமதிப்பதானாலும் சரி - அது தயக்கம் காட்டுகிறது.  

கூடுதல் வளர்ச்சிக் கொள்கைகளுக்கான கோரிக்கைகளுக்கு மேர்கெல் அளித்த பதில் நிதிய ஒப்பந்தத்தை மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்துவதை அவர் எதிர்க்கிறார் என்பது தான். ”ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான மரியோ ட்ராகி கூறியிருக்கின்ற வகையில், அதாவது, கட்டமைப்பு சீர்திருத்தங்களின் வடிவில்தான் ஐரோப்பா வளர்ச்சி காண்பது அவசியம் என்றார் அவர்.

ஐரோப்பிய இறையாண்மைக் கடன் நெருக்கடியைக் கையாளுவதற்கு சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவானஇரண்டாவது தூண்என்று அவர்வளர்ச்சிக் கொள்கையை வருணித்தார். ஜேர்மனியில்தீவிரமான தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்கள்வெற்றி பெற்றுள்ளதை எடுத்துக் கூறிதொழிற்துறையை அரசு பிணையெடுக்கும் நடவடிக்கைகளைஅவர் எதிர்த்தார்.

ஆயினும், அதிகாரிகள் எல்லாம், குறுகிய கால அளவுக்கு, தங்களுக்குள் மாறுபட்ட நலன்கள் இருந்தாலும் கூட ஒரு சமரசக் கொள்கையை உருவாக்க முயற்சித்து வருவதாக சமிக்கைகளை வெளியிடுகின்றனர். ஹாலண்டின் ஒரு மூத்த ஆலோசகரான ஜோன்-மார்க் அய்ரால்ட் கூறுகையில், “பிரான்சும் ஜேர்மனியும் ஒருவரையொருவர் நோக்கி ஓரடி முன்னால் எடுத்து வைக்க வேண்டும்என்றார். ஹாலண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் உடனடியாக மேர்கெலைச் சந்தித்துஐரோப்பாவில் வளர்ச்சிக்கு மறுதொடக்கமளிக்கும் திட்டத்தைவிவாதிப்பார் என்று அவர் தெரிவித்தார்

சார்க்கோசி மற்றும் ஹாலண்ட் இருவருமேஐரோப்பா ஆதரவு வேட்பாளர்கள்தான், அதனால் மே 6 அன்று தேர்ந்தெடுக்கப்படுவது யாராக இருந்தாலும், அவருடன் தன்னால் இணைந்து வேலை செய்ய முடியும் என்று மேர்கேல் கூறினார்.

நிதிய ஒப்பந்தத்துடன் கூடவேஉறுப்பு நாடுகளின் அளவிலும் யூரோ மண்டலத்தின் அளவிலும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றயோசனையை ECB நிர்வாகக் குழுவின் ஜேர்மனிய உறுப்பினரான ஜோர்க் ஆஸ்முசென் முன்வைத்தார்.

நெருக்கடியைக் கையாளுவதற்குநிதித் திண்ணமாக்கல்” - அதாவது வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் - “அவசியம் தான்ஆனால் அவை மட்டுமேபோதுமானவையல்லஎன்பதை ஜேர்மன் நிதி அமைச்சரான Wolfgang Schäuble ம் ஒப்புக் கொண்டார்.