சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Mass layoffs planned after French elections

பிரெஞ்சுத் தேர்தலுக்குப் பின்னர் பெரும் ஆட்குறைப்புகளுக்கு திட்டமிடப்படுகிறது

By Johannes Stern
30 April 2012

use this version to print | Send feedback

பிரான்சில் இருக்கும் அரசியல்வாதிகளும் தொழிற்சங்க நிர்வாகிகளும் மே 6 அன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்று முடிந்ததற்கு பின்னர் பாரிய ஆட்குறைப்புகளை அமல்படுத்த திட்டங்களை விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்

எந்தெந்தத் துறைகளில் எல்லாம் ஆலை மூடல்களும் ஆட்குறைப்புகளும் சிந்திக்கப்பட்டு வருகின்றன என்பதன் ஒரு சுருக்கமான சித்திரத்தை வெள்ளியன்று Le Monde தினசரி அளித்திருந்தது. பிரெஞ்சுத் தொழிற்துறை பொருளாதார நெருக்கடியால் மிகக் கடினமாய் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் சர்வதேசப் போட்டியாளர்களுக்கு நிகரான சமவலுவை இழந்திருக்கிறது. சென்ற ஆண்டில் பிரான்சின் வர்த்தகப் பற்றாக்குறை வரலாற்றுப் பெருமளவாய் 70 பில்லியன் யூரோக்களை (93 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டியிருந்தது. வேலைகள் மற்றும் ஊதியங்களின் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் சந்தையிலான தமது பங்கை மீட்டெடுக்க இப்போது பிரெஞ்சு நிறுவனங்கள் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.

தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல்கள், சோசலிசஸ்ட் கட்சியின் (PS) பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் பழமைவாத வேட்பாளரான நடப்பு ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசி ஆகிய இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களது பொருளாதார வேலைத்திட்டங்களுக்குமே ஏற்புடையதாகவே உள்ளன. இரு வேட்பாளர்களுமே பிரெஞ்சுத் தொழிற்துறையை போட்டித்திறன் மிகுந்ததாக்க கட்டமைப்புச் சீர்திருத்தங்களை செய்வதற்கும் அரசின் வரவுசெலவை சமனப்படுத்துவதற்கும் (சார்க்கோசிக்கு 2016க்குள்ளாக, ஹாலண்டுக்கு 2017க்குள்ளாக) உறுதி பூண்டிருக்கின்றனர்

ஆயினும், தேர்தலின் இரண்டாவதும் தீர்மானகரமானதுமான சுற்று நடைபெற ஒரே ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், சார்க்கோசி மற்றும் ஹாலண்ட் இருவருமே, பிரெஞ்சு முதலாளி வர்க்கம் தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தத் திட்டமிட்டிருக்கும் தாக்குதல்கள் குறித்து மூடிமறைக்கவும் அவற்றில் இருந்து தங்களை தள்ளி நிறுத்திக் கொள்வதற்கும் முயன்று கொண்டிருக்கின்றனர்.  

தேர்தல்கள் நடந்து முடியும் வரை ஆட்குறைப்புத் திட்டங்களை அறிவிப்பதை நிறுத்தி வையுங்கள், அதற்கு முன்பாக தொழிலாளர்களை வேலையில் இருந்து நீக்க வேண்டாம் என்று பிரெஞ்சு தொழிலாளர் அமைச்சர் சேவியர் பேர்திராண்ட் நிறுவனங்களிடம் கூறியுள்ளதாக பல்வேறு அறிக்கைகளும் கூறுகின்றன.

சனியன்று Le Parisien இல் வெளியான நேர்காணல் ஒன்றில் வெட்டுகள் திட்டமிடப்பட்டதை ஹாலண்ட் உறுதி செய்தார். தேர்தல் முடிந்தவுடன் வேலை வெட்டுகளுக்கு பிரான்சில் இருக்கும் நிறுவனங்கள் தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன என்று தொழிலாளர்களது தலைவர்கள் எச்சரித்துக் கொண்டிருப்பதாய் அவர் கூறினார்.

முடிவுகள் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, நடைமுறைப்படுத்துவது மட்டும் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டிருக்கிறதுஎன்று ஹாலண்ட் அந்த செய்தித்தாளிடம் தெரிவித்தார். அந்த வெட்டுகளில் இருந்து தன்னை தள்ளி நிறுத்திக் கொள்ளும் முகமாக அவர் அறிவித்தார்: “மே 6க்குப் பிறகான ஆட்குறைப்பு திட்டங்களை எங்களது வெற்றி தான் தூண்டியது என்று அதன் அர்த்தமல்ல.”

திட்டமிடப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல்கள் குறித்து இரண்டாம் சுற்றுக்கு ஹாலண்டை ஆதரிக்கும் தொழிற்சங்கங்களுக்கு நன்கு தெரியும். CFDT சங்கத்தின் தலைவரான பிரான்சுவா செரெக் கூறினார்: “நிறுவனத் தலைவர்களும் மற்றும் மனித வளத் துறை மேலாளர்களும் ஒவ்வொரு வாரமும் என்னிடமும் சொல்கிறார்கள், தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கும் எண்ணமேதும் இருந்தால் அந்தத் திட்டங்களை தள்ளி வைக்கச் சொல்லி [தொழிலாளர்] அமைச்சர் அவர்களை அழைத்துச் சொல்கிறார் என்று.”

செரெக்கின் கூற்று பட்டவர்த்தனப்படுத்துகிறது. திட்டமிடப்பட்டிருக்கும் ஆட்குறைப்புகள் குறித்து தொழிற்சங்க எந்திரம் ஏற்கனவே நிர்வாகத்துடன் விவாதித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர் ஒப்புக் கொள்கிறார். எப்படியிருந்த போதிலும், வரவிருக்கும் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்களை எச்சரிப்பதற்கோ தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கோ அவர்களுக்கு விருப்பமில்லை. அதற்குப் பதிலாக, ஹாலண்டின் பொருளாதார வேலைத்திட்டத்திற்கும், தொழிலாளர்களைப் பலிகொடுத்து பிரெஞ்சு தொழிற்துறையின் போட்டித்திறனைக் கூட்டும் நடவடிக்கைகளுக்கும் பின்னால் அணிவகுத்து நின்று கொண்டிருக்கின்றனர்.

மார்ச் மாதத்தில் Le Monde Economie இல் செரெக் போட்டித் திறன் தான் எல்லோருடைய கவலையும்என்கிற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளைவிவாதிக்க CFDT தயாராய் இருக்கிறதுஎன்று அதில் அவர் அறிவித்தார்.

வாகன உற்பத்தித் துறையில், பல ஆயிரம் வேலைகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றன, ஒட்டுமொத்த ஆலைகளும் பிழைப்பதே கேள்விக்குறியாக உள்ளது. பிரான்சின் மிகப்பெரும் வாகன உற்பத்தி நிறுவனமான PSA Peugeot Citroën ஐரோப்பாவில், முக்கியமாக பிரான்சில், 6,000 வேலைகளை வெட்டுவதற்குத் திட்டமிடுகிறது. பாரிஸின் வடகிழக்குப் புறநகர்ப் பகுதியில் இருக்கும் நகரமான Aulnay-sous-Bois இல், Citroën C3 இன் நடப்பு உற்பத்தி முடிந்ததும் தங்களது ஆலையே மூடப்படுமோ என்கிற அச்சத்தில் 3,300 தொழிலாளர்கள் இருக்கின்றனர். Nord மாவட்டத்தின் Valenciennes தொழிற்சாலையின் எதிர்காலமும் கேள்விக்குறியாக இருப்பதாகவே கருதப்படுகிறது.

பிரான்சின் இரண்டாம் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான ரெனால்ட்டும் கூட தொழிலாளர்களது எண்ணிக்கையைக் குறைப்பதை சிந்தித்துக் கொண்டிருக்கிறது. Scenic மற்றும் Kangoo மாடல்கள் உற்பத்தி செய்யப்படும் Nord மாவட்டத்தின் Maubeuge மற்றும் Douai ஆலைகளிலேயே இந்த ஆட்குறைப்புக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மொரோக்கோவில் இருக்கும் Tangiers இல் இரண்டு புதிய இடங்களில் ரெனால்ட் சமீபத்தில் தனது உற்பத்தியைத் தொடங்கியது. பிரான்சிலான உற்பத்தியின் பெரும் பகுதியை மலிவூதிய நாடுகளுக்கு மாற்றி விடுவதற்கு இந்த நிறுவனம் திட்டமிடுவதாய்க் கூறப்படுகிறது.

போக்குவரத்துத் துறையில் ஏர் பிரான்ஸ் நிறுவனம் ஊதிய உயர்வை நிறுத்தி வைத்திருப்பதோடு வேலை நியமனங்களையும் நிறுத்தி விட்டது. ஒப்பந்தங்களைத் திருத்துவதற்கு இப்போது அந்நிறுவனம் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரயில்வே நிறுவனமான நோவாட்ரான்ஸ்SNCF இன் துணைநிறுவனமான இது கடந்த காலத்தில் கனமான இழப்புகளைச் சந்தித்திருந்தது - 260 தொழிலாளர்களை வேலையில் இருந்து அகற்ற இருக்கிறது. Société Nationale Corse-Méditerranée (SNCM)என்கிற சரக்குப் போக்குவரத்து நிறுவனத்தின் எதிர்காலமும் கேள்விக்குறியாய் இருக்கிறது. 2006 இல் CGT தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முடிந்து இந்நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டு Veolia இன் துணைநிறுவனமாக ஆனது. இப்போது அந்நிறுவனம் தனது 2,000 ஊழியர்களில் 800 பேரைக் குறைப்பதற்கு அச்சுறுத்துகிறது.

யூரோ மண்டலத்தில் இறையாண்மைக் கடன் நெருக்கடி ஆழமடைவதற்கு மத்தியில் நிதித் துறையும் ஆயிரக்கணக்கிலான வேலைகளை அகற்றுவதற்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது. பிரான்சின் வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்களும் தங்களது மூலதனத்தை வலுப்படுத்திக் கொள்ளும் ஒரு நடவடிக்கையாக பிரான்சில் 2,500 வேலைகள் உட்பட மொத்தமாய் 7,200 வேலைகளை அகற்றுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளனCrédit Agricole, Societé Generale, மற்றும் BNP Paribas ஆகிய பெரிய பிரெஞ்சு வங்கிகள் முறையே 2,350, 1,500 மற்றும் 1,400 வேலைகளை வெட்டுவதற்குத் திட்டமிடுகின்றன. பிரான்சின் உலகளாவிய காப்பீட்டு நிறுவனமான அக்சா(Axa)தனது போட்டித் திறனை மேம்படுத்துவதற்கு ஜேர்மனியில் 1,600 வேலைகளை வெட்டுவதற்குத் திட்டமிடுகிறது.

மார்ச் மாத இறுதியில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ARCEP)தலைவரான ஜோன்-லுடோவிக் சிலிகானி, மொபைல் தொலைபேசிச் சந்தையில் Free Mobile இன் பிரவேசத்தால் அதன் போட்டி நிறுவனங்களில் 10,000 வேலைகள் தொலைந்து போகும் சாத்தியமிருப்பதாகத் தெரிவித்தார். Free Mobile நிறுவனத்தின் உரிமையாளரான பிரெஞ்சு பில்லியனர் சேவியர் நீல், பிரான்சில் இருக்கும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனக் குழுமங்களான பிரான்ஸ் டெலிகாம், விவெண்டியின் SFR மற்றும் Bouygues Telecom ஆகியவற்றுக்கு எதிராய் ஒரு மூர்க்கமான விலை யுத்தத்தை நடத்துவதற்கான திட்டங்களை அறிவித்திருக்கிறார்

அணுசக்தித் துறை, ஊடகங்கள் மற்றும் விவசாய உணவு உள்பட பொருளாதாரத்தின் மற்ற துறைகளிலும் கூட பெரும் ஆட்குறைப்புகளுக்குத் திட்டமிடப்பட்டு வருவதாய் Le Monde கூறியுள்ளது.

பிரான்சின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 10 சதவீதமாய் இருப்பதாக சென்ற புதனன்று தொழிலாளர் அமைச்சகம் அறிவித்தது. இது 1999 செப்டம்பருக்குப் பிந்தைய மிக அதிகமான அளவாகும். மார்ச் மாதத்தில் 2,884,500 பேர் குறைந்தபட்சம் ஒரு மாத காலத்திற்கேனும் தாங்கள் வேலை இன்றி இருந்து வருவதாக வேலைவாய்ப்பு மையங்களில் பதிவு செய்து கொண்டுள்ளனர். பிரான்சில் வேலைவாய்ப்பு இன்றியோ அல்லது கடுமையாக வெட்டப்பட்ட நேரங்களுக்கு வேலை செய்யும் நிலையிலோ இருப்பவர்கள் எண்ணிக்கை 4,582,000 ஆக இருந்தது.