சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US deploys F-22 fighter jets in threat to Iran

ஈரானுக்கு எதிரான அச்சுறுத்தலாக அமெரிக்கா F-22 போர்விமானங்களை பயன்படுத்துகிறது

By Bill Van Auken
2 May 2012

use this version to print | Send feedback
 

அமெரிக்கப் போர்விமானங்களிலேயே மிக நவீனமான F-22 Raptors ஐ பென்டகன் ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் அச்சுறுத்தல்களை அதிகரிக்கும் ஒரு ஆத்திரமூட்டலாக ஐக்கிய அரபு எமிரேட்டுக்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

 

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அல்-தப்ரா விமானத் தளத்தில் இரகசியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தக் குண்டுவீசும் விமானங்கள் பற்றி முதலில் Aviation Week என்னும் இதழில் தகவல் கொடுக்கப்பட்டது. பென்டகனின் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு அமெரிக்க விமானப் படை F-22 கள் தென்மேற்கு ஆசியாவில் நிலைநிறுத்தியுள்ளது என்றும், இந்த நடவடிக்கை இராணுவத்திற்கும் இராணுவத்திற்கும் இடையே உள்ள உறவுகளை வலுப்படுத்தவும், இறைமை மற்றும் பிராந்தியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றும், இணைந்த வான் செயற்பாடுகளுக்கு முன்னேற்றம் கொடுக்கும் என்றும் படைகளின் இணைந்தியங்கும் தகமையை விரிவாக்கும் என்றும் கூறியது.

ஆனால், திங்களன்று பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க இராணுவ அதிகாரிகள் பிரெஞ்சு செய்தி நிறுவனமான AFP இடம் அமெரிக்கா ஐக்கியஅரபு எமிரேட்டுக்களில் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்தினர்.

இந்த முன்னேற்றமான ஆயுத அமைப்புமுறைகளை ஐக்கிய அரபு எமிரேட்டுக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது ஈரானுக்கு எதிரான போர்த் தயாரிப்புக்களில் மேலும் ஒரு படி என்பதைக் குறிக்கிறது. வாஷிங்டன் ஏற்கனவே அப்பிராந்தியத்தில் இரு விமானந்தாங்கி போர்க்கப்பல் குழுக்களை அனுப்பியுள்ள சூழ்நிலையில் இது நடந்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்டுக்களுக்கும் ஈரானுக்கும் இடையே ஹோர்முஸ் ஜலசந்தியின் வாயிலில் உள்ள மூன்று தீவுகளான அபு மூசா, பெரிய மற்றும் சிறிய துன்ப் தீவுகள் குறித்து தொடங்கிய அழுத்தங்கள் பெருகியுள்ள நிலைமைக்கு மத்தியில் இது நடந்துள்ளது. இதற்கு வாஷிங்டனின் தூண்டுதல் உள்ளது. இது இத்தீவுகள் பலமுறையும் ஈரானியச் செய்தி ஊடகத்தில் ஈரானின் விமானந்தாங்கி கப்பல்கள்என்று விவரிக்கப்படுகின்றன; இவை ஈரானுடனான போர்த் தயாரிப்புக்களில் மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டவை. வாஷிங்டனின் முக்கிய கவலைகளில் ஒன்று, ஈரான் இதை எதிர்கொள்ளும் வகையில் ஹோர்முஸ் ஜலசந்தியைத் தாக்கக்கூடும் என்பதாகும். இதன்வழியேதான் உலகின் கடல்வழிப் போக்குவரத்தில் 40% நடைபெறுகிறது; அப்படி மூடப்படுவது உலகப் பொருளாதாரத்தில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஸ்டெல்த் போர் விமானங்களை ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் நிறுத்தியிருப்பது ஈரானிய அதிகாரிகளிடம் இருந்து சீற்றமான விடையிறுப்பைக் கொடுத்துள்ளது. ஈரானின் பாதுகாப்பு மந்திரி ஜேனரலப் அஹ்மத் வகிதி இது தீமை பயக்கும் செயல், பிராந்தியத்தின் பாதுகாப்பிற்குச் சேதம் விளைவிப்பது என்றார். அமெரிக்க நடவடிக்கை உளரீதியான போர், பாதுகாப்பற்ற தன்மை, சிக்கல்கள் என்பவற்றைத் தவிர பயனுடைய பழங்களை விளைவாகத் தராது என்றும் வகித் விவரித்தார்.

அமெரிக்கப் போர்விமானங்களில் வருகை வளைகுடா ஒற்றுமைக்குழுவின் தீபகற்ப கேடயப் படைகளால் (GCC -Gulf Cooperation Council’s Peninsula Shield Force) நடத்தப்பட்ட கூட்டு இராணுவப் பயிற்சிகளுடன் இணைந்த நேரத்தில் வந்துள்ளது. இது சவுதி அரேபியா தலைமையில் உள்ள முடியாட்சிச் சர்வாதிகாரங்களில் இராணுவப் பிரிவும், பாரசீக வளைகுடாவில் ஈரானுக்கு எதிர்க்கரையில் வரிசையாக இருப்பவற்றின் பிரிவு ஆகும். GCC போர்ப் பயிற்சிகளை விசுவாசமான தீவுகள் எனப் பெயரிட்டுள்ளது. இது ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் தன்னுடையது என்று உரிமை கொண்டாடும் மூன்று ஈரானியத் தீவுகளைக் குறிப்பது ஆகும்.

தீபகற்பக் கேடயப் படை என்பது அதனுடைய இருப்பில் இதுவரை மூன்று தடவைதான் நடவடிக்கைக்காக அழைக்கப்பட்டுள்ளது. முதலாவது, 1900ம் ஆண்டில் ஈராக்கிற்கு எதிரான முதல் அமெரிக்கப் போரில் அது பங்கு பெற்றது. இரண்டாம் தடவை 2003ம் ஆண்டு குவைத்தில் ஈராக்மீது இரண்டாம் அமெரிக்கப் போருக்கு ஆதரவாகப் பங்கு பெற்றது. மூன்றாம் முறை மார்ச் 2011 ல் சவுதி அரேபியாவும் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்களும் ஷியா பெரும்பான்மை மக்கள் கோரிய சமத்துவ, ஜனநாயக உரிமைகள் இயக்கத்தை அடக்குவதற்கு உதவ 2,000 துருப்புக்களையும் டாங்குகளையும் பஹ்ரைனின் ஆளும் சுன்னி முடியரசிற்கு அனுப்பின.

வளைகுடாவில் பிற்போக்குத்தன முடியாட்சிச் சர்வாதிகார சக்திகள் முக்கிய இராணுவக் கட்டமைப்பைக் கொள்ளுவதை வாஷிங்டன் மேற்பார்வையிட்டுள்ளது. இதற்குக் கிட்டத்தட்ட $100 பில்லியன் மதிப்புடைய ஆயுதங்கள் குவிந்தன. கடந்த டிசம்பர் மாதம்தான் வாஷிங்டன் ஐக்கிய அரபு எமிரேட்டுக்களுக்கு $3.4 பில்லியன் மதிப்புடைய ஏவுகணைப் பாதுகாப்புக் கருவிகள், ராடர் ஆகியவற்றை விற்றதாக அறிவித்தது. அமெரிக்காவும் நேட்டோவும் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்களுக்குக் கணிசமான நவீன அமெரிக்க, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சுப் போர் விமானஙகளையும் அளித்துள்ளன.

மூன்று தீவுகள் குறித்த ஈரானின் வரலாற்றுரீதியான உரிமைக் கூற்றுக்கள் முற்றிலும் ஆதாரம் கொண்டவை. இவற்றை ஈரானிடம் இருந்து 1903ல் பிரித்தானியாவால், பாரசீக வளைகுடாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் அதன் கட்டுப்பாட்டை உறுதிசெய்துகொள்ளக் கைப்பற்றியபின், ஏகாதிபத்தியச் சரிவு மற்றும் பொருளாதார நெருக்கடியை ஒட்டி சூயஸிற்குக் கிழக்கே லண்டன் அதன் படைகள் அனைத்தையும் திரும்பப் பெறும் கட்டாயத்திற்கு உட்பட்டபோது இவை ஈரானால் மீண்டும் பெறப்பட்டன.

அந்த நேரத்தில், தீவுகள் மீண்டும் ஈரானின் கைகளுக்கு செல்வதை வாஷிங்டன்  திருப்தியுடன்தான் பார்த்தது. அப்பொழுது ஈரான் CIA ஆதரவு பெற்றிருந்த கொடுங்கோல் ஆட்சியான ஷாவினால் ஆளப்பட்டுவந்தது. அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொலிஸ் போல் வளைகுடாப் பகுதியில் செயல்பட்டு வந்தார். ஈரான் அபு மூசா மற்றும் இரு சிறு தீவுகளையும் மீண்டும் எடுத்துக் கொண்டு 6 ஆண்டுகளுக்குப் பின், வாஷிங்டன் கிட்டத்தட்ட $16.2 பில்லியன் மதிப்புடைய இராணுவத் தளவாடங்களை ஷாவின் ஆட்சிக்குக் கொடுத்தது. அந்த நேரத்தில் அது இரு நாடுகளுக்கும் இடையே முன்னோடியில்லாத பெரிய அளவு ஆயுத விற்பனையைக் குறித்தது.

ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் தீவுகுறித்த உரிமைக் கூற்றுக்களை ஈரான் ஆதாரமற்றது என உதறித்தள்ளிவிட்டது. இவற்றில் 80%க்கும் மேற்பட்ட மக்கள், கிட்டத்தட்ட அதன் முழுத் தொழிலாளர் தொகுப்பும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், அவர்கள் குடும்பங்கள் என்று உள்ளவர்கள்.

41 ஆண்டுகள் ஈரானியக் கட்டுப்பாட்டின் கீழ் தீவுகள் இருப்பதற்குப் பின் இம்மோதல் திடீரென மீண்டும் வெளிப்பட்டுள்ளமை வாஷிங்டன் கூட்டாகச் செயல்படுத்திய ஆத்திரமூட்டுதலின் விளைவுதான் என்பது தெளிவு.

 “எமிரேட்டுக்கள் ஒன்றும் இவ்விஷயத்தில் சுயாதீனமாகச் செயல்படவில்லை என்று அரசாங்கச் சார்புடைய ஈரானியச் செய்தித்தாளான Kayhan, இன் கட்டுரையாளர் சதோல்லா ஜரேய், நியூ யோர்க் டைம்ஸிடம்  கூறினார். பெரிய சக்திகள்தான் இதன் பின்புலத்தில் உள்ளன. இது குறித்த நேரமும் தற்செயல் நிகழ்வு அல்ல. இது ஈரானுக்கும் P5+1 (ஐந்து ஐ.நா.பாதுகாப்புக்குழுவின் நிரந்தர உறுப்பு நாடுகளான பிரித்தானியா, சீனா, பிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி) நாடுகளுக்கும் இடையே இம்மாதம் பின்னர் நடக்கவிருக்கும் இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களுக்கு முன்னதாக வந்துள்ளது.

பாரசீக வளைகுடாவில் அழுத்தங்கள் அதிகரித்துள்ளதின் மூலம் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஈரானுக்கு ஒரு தகவலை அனுப்புகின்றன. பின்வாங்கு, அல்லது மற்ற முன்னணிகளிலும் அழுத்தங்களை எதிர்கொள். என்பதாகும்.

கடந்த மாதம் இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுச் சுற்றுக்களைத் தொடர்ந்து ஈரானில் போர் ஆபத்து என்பது குறைந்து கொண்டிருக்கிறது என நம்பிக்கை தரும் செய்தி ஊடகத் தகவல்கள் வெளிவந்தன. இந்நிலையில் இப்பிராந்தியத்தில் சமீபத்திய ஆத்திரமூட்டல் தரும் மற்றும் பொறுப்பற்ற அமெரிக்க இராணுவத்தின் நிலைப்பாடு என்னும் செயல் அந்நம்பிக்கைக்கு முற்றிலும் மாறாகத்தான் உள்ளது.

வாஷிங்டனின் ஆக்கிரோஷத்திற்கு அடிப்படை உந்துதல் ஈரானிய அணுவாயுதத் திட்டம் ஒன்றும் இல்லை. அமெரிக்க உளவுத்துறைகள் பலமுறையும் அங்கு அணுவாயுதங்கள் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளன. மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் எண்ணெய் வளம் உடைய பாரசீக வளைகுடா, மத்திய ஆசியாவில் மூலோபாய முக்கியத்துவம் நிறைந்த பகுதிகள் மீது போட்டியில்லாத மேலாதிக்கத்தைச் செலுத்த வேண்டும் என்பதுதான். கடந்த ஒரு தசாப்தக்கால ஆப்கானிய, ஈராக் போரில் இந்த நோக்கத்தை அடைவதில் தோல்வி அடைந்துள்ள நிலையில், வாஷிங்டன் இப்பிராந்தியத்தின் பெரிய சக்தியான ஈரானுக்கு எதிரான ஒரு மூன்றாம் போரை நடத்துவதற்கான தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது. இந்நாடோ ஆப்கானிஸ்தானுக்கும் ஈராக்கிற்கும் இடையே உள்ளது ஆகும்.

ஈரானிய அணுத்திட்ட அச்சுறுத்தல் பற்றி அழுத்தங்கள் எந்த அளவிற்குக் குறைகின்றனவோ, புதிய போலிக்காரணங்கள் ஈரானுக்கு எதிரான இராணுவத் தயாரிப்புக்களை நீட்டிக்கக் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இவ்வகையில் மூன்று சிறு தீவுகளைப் பற்றி 41 ஆண்டுக்கால மோதல் பெரிய மோதல்மையமாக மாறுகிறது.

இன்னும் கூடுதலான அமெரிக்க இராணுவப் படைகள் பேர்சிய வளைகுடாவில் நிலைநிறுத்தப்படும்போது, ஏற்படும் மோதல் என்பது ஈரானுக்கு எதிரான ஓர் அமெரிக்கப் போருக்கு வழிசெய்யக்கூடும் அல்லது இது ஒரு போலிக்காரணமாகப் பயன்படுத்தப்படும். வியட்நாமிற்கு எதிராக ஒரு முழுஅளவு அமெரிக்கப் போருக்கு டொன்கின் வளைகுடா நிகழ்வு அரங்கு அமைத்துக் கொடுத்தது போலவே, எப்பொழுதும் போலிக்காரணங்கள் தயாரிக்கப்படலாம்.