சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

WSWS speaks to May Day demonstrators in France

பிரான்சில் மே தின ஆர்ப்பாட்டக்காரர்களுடன் WSWS பேசுகிறது

By our reporters
2 May 2012

use this version to print | Send feedback

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவாளர்கள் நேற்று பாரிஸ் மே தின ஊர்வலத்தில் தலையீடு செய்தனர். “பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் உள்ள அரசியல் பிரச்சினைகள்என்னும் துண்டறிக்கைகளை ஆயிரக்கணக்கில் விநியோகித்தனர். பாரிஸ் ஊர்வலம் பெருமளவில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் PS ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் நிகழ்ந்த ஒன்றாக இருந்தது, தொழிலாளர்களின் தன்னியல்பான பங்கேற்பு என்பது ஒப்பீட்டளவில் குறைவாய் இருந்தது.

குட்டி முதலாளித்துவஇடதுசக்திகள் சோசலிஸ்ட் கட்சி (PS) வேட்பாளர் பிரான்சுவா ஹாலண்டுக்கு ஆதரவாகச் செய்கின்ற பிரச்சாரத்தின் பாதிப்பு, மற்றும் ஹாலண்டுக்கு அவரது வணிக ஆதரவு அறிக்கைகளின் காரணத்தால் சொந்த வாக்கு வங்கிக்குள்ளேயும் இருக்கக் கூடிய வெகுஜன அதிருப்தி ஆகிய இரண்டுமே இந்த நிகழ்வில் காணத்தக்கதாய் இருந்தது. ஹாலண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் திரும்புவார் என்பதோடு அவரது வாக்காளர்கள் இடையே குட்டி முதலாளித்துவஇடதுகட்சிகள் உருவாக்கியிருக்கக் கூடிய சமூகக் கொள்கைகளுக்கான எதிர்பார்ப்புகளை தவிர்க்கவியலாமல் ஏமாற்றவிருக்கிறார்.


மேர்லன்

பாரிஸில் உள்ள 31 வயது வேலைவாய்ப்பற்ற தொழிலாளி மேர்லன் கருத்து தெரிவித்தார்: “நிறுவனங்களில் வேலை செய்கின்ற ஏராளமான மக்கள் வருவாய்க்கும் செலவுக்கும் சமநிலை இன்றி பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். எனக்குத் தெரிந்த பலரும் ஒருவருக்கொருவர் உதவியே சமாளித்துக் கொண்டிருக்கின்றனர். நான் இடதுக்கு வாக்களித்தேன், ஆனால் சோசலிஸ்ட் கட்சிக்கு அல்ல - ஹாலண்ட் உணர்ச்சியில்லாத மனிதர் அத்துடன் பணம் படைத்தவர்களுக்கு நெருக்கமானவேடதாரி இடது” (‘caviar left’) மனிதர். இடதுக்கும் [அதாவது PS] வலதுக்கும் இடையில் நான் எந்த வித்தியாசத்தையும் காணவில்லை, சார்க்கோசி அகற்றப்பட வேண்டும் என்பதற்காய் நான் ஹாலண்டுக்கு வாக்களிக்க இருக்கிறேன்.”

இளைஞர்கள் முகம் கொடுக்கும் நிலைமைகளை ஹாலண்ட்புரிந்து கொள்ளக் கூடும் என்று தான் கருதினாலும், ஹாலண்ட்தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லைஎன்று மேர்லன் கூறினார். எப்படியோ கன்சர்வேடிவ் கட்சியின் நடப்பு ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசி தோற்கடிக்கப்பட்டால் தனக்கு மிகவும்நிம்மதியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்

Audiovisual ஊழியரான 21 வயது மாத்யூ பாரிஸில் வசிக்கிறார். சென்ற ஆண்டில் ஸ்பெயினின்கண்ணியமற்ற ஆர்ப்பாட்டக்காரர்களாய் ஆன indignados உடன் வேலை செய்து வருகிறார். அவர் சொன்னார்: “ஹாலண்ட் அதிக வாக்குறுதிகள் அளிக்கவில்லை, ஆனால் கொடுத்தவற்றை அவர் மதிப்பார். சமூகப் பாதுகாப்பை அவர் உடைக்க மாட்டார்.”

ஆயினும், ஹாலண்ட்சர்வதேச நிதியின் வேலையைச் செய்வார்என்பதை மாத்யூ புரிந்து கொண்டிருக்கிறார். “indignados போன்ற அரசியலை மீண்டும் கண்டுபிடிப்பதுதான் இந்த நெருக்கடிக்கான தீர்வுஎன்று அவர் கூறினார்.

நோர்மொண்டியில் இருந்து வந்திருந்த 21 வயது தத்துவவயில் மாணவர் கிளமோன்ட் கூறினார்: “நடப்பு ஜனாதிபதி சார்க்கோசியைக் காட்டிலும் ஒரு PS ஜனாதிபதி மேம்பட்டவராய் இருப்பார். ஹாலண்டின் கொள்கைகள் எல்லாம் நடைமுறைப்படுத்தக் கூடியவையா என்பது எனக்குத் தெரியாது, சந்தேகமாய்த் தான் இருக்கிறது.”

வங்கிகள் கோரும் வலது சாரிக் கொள்கைகளுக்கு ஹாலண்ட் ஆதரவுச் சமிக்கைகள் காட்டியிருப்பது குறித்து மக்களின் பரந்த அடுக்குகளால் உணரப்பட்டிருக்கும் கவலைகளையும் அவர் வெளிப்படுத்தினார்: “கிரீஸ் மற்றும் ஸ்பெயின் போல் அது மாறுமானால், நான் அதை நிராகரிக்கிறேன்.”

இடது முன்னணி வேட்பாளரான ஜோன் லூக் மெலன்சோனை அவர் விமர்சனம் செய்தார்: “வரும் ஞாயிறன்று PS வேட்பாளரான ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைப்பதன் மூலமாய் மக்களிடம் பெற்றிருந்த நம்பகத்தன்மையை மெலன்சோன் இழந்து வருகிறார்என்றார் அவர்.

இச்சமயத்தில் இடைமறித்த அவரது நண்பர் சோல்விக், ”ஆனாலும் சார்க்கோசிக்கு எதிராய் வாக்குகள் என்பது தான் எல்லாவற்றிலும் முன்னிலை பெறும் விடயம் என்று கூறினார்.

இலக்கியம் கற்கும் மாணவர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாய் இல்லை என்று கிளமோன்ட் நம்புகிறார்: “எங்களுக்கான வாய்ப்புகள் அரிதாகிச் செல்கின்றன. எங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்று தெரியவில்லை.”

அவரது மாணவ நண்பராகிய நிக்கோலோ கூறுகையில், “இடதின் மீது ஏமாற்றம் கண்டிருக்கும் தொழிலாளர்கள், எதிர்ப்பு வாக்குகளாய் இடது நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பாசிச FNக்கு வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்.”

கிளமோன்ட் மேலும் கூறினார்: “சமூகத்தில் ஒரு பெரும் தளர்ச்சி இருக்கிறது. வரலாற்று ஒப்பீடுகள் அபாயமானவை, ஆனாலும் 1930 ஆம் ஆண்டுகளின் கோணத்தில் இருந்து பார்த்தால், சமூகம் எங்கே போகிறது என்பது நமக்கெல்லாம் ஆச்சரியமானதாய் இருக்கும். யாருக்கு வாக்களிப்பது என்பதே பிரெஞ்சு மக்களுக்குத் தெரியவில்லை. இடது, அது அரசாங்கத்தில் இருந்த சமயத்தில் உருவான FN வாக்குகளுக்குப் பொறுப்பு கூறத்தக்கதாகும். தொழிலாளர்களின் வாக்குகளை எவ்வாறு பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அதற்குத் தெரியவில்லை. குறைந்தபட்ச ஊதியத் தொழிலாளிகள் அரசியலுக்கும் நடைமுறை அனுபவத்திற்கும் இடையில் காணுகின்ற இடைவெளி மிகப் பெரியதாய் இருக்கிறது.”

55 வயதாகும் கணினி நிரலாளரான டிடியேர் பாரிஸில் ஒரு பெரிய நிறுவனத்திற்காக வேலை செய்கிறார்அவரது துணைவியார் சில்வி INSEE அரசு புள்ளிவிவர அலுவலகத்தில் வேலை செய்கிறார். ஹாலண்ட் PS ஐ சமூக ஜனநாயகத்தில் இருந்து மையத்தை நோக்கி அழைத்துச் சென்றிருப்பதாய் அவர் கூறினார். “இடதுகட்சிகள் ஏன் ஹாலண்டுக்கு வாக்களிக்க அழைக்க வேண்டும் என்கிற கேள்விக்கு டிடியேர் அளித்த பதில்: “நடப்பு ஜனாதிபதியை வெளியேற்றுவது தான் அவசரமான கடமை.”

ஹாலண்டுக்கு வாக்களிக்க டிடியேர் ஆதரவளித்தாலும் கூட, அவரது கருத்துகள் இடதின் பக்கத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. PSம் அதன் கூட்டாளிகளும் பிற்போக்குத்தனமான ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கின்றனர். FN இன் தலைவரான மரின் லு பென் பேச்சுத் தொனியை மாற்றியது தான் அக்கட்சியின் வாக்குகள் அதிகரித்ததற்குக் காரணம் என்று இவர் விளக்கினார்: “நீண்ட காலமாய் இடதின் வாதங்களாய் இருந்திருக்க வேண்டிய ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நிதி மீதான விமர்சனங்களில் இவர் ஏகபோகம் செலுத்தினார்.” ஆனால் “FN அரசாங்கத்தில் அமர்ந்தால் அது பெரு முதலாளிகளையே பாதுகாக்கும்.”

அவர் மேலும் கூறினார்: “பாசிசத் தலையை துண்டிப்பதற்கு நாமெல்லாம் ஒன்றுபட வேண்டும். சமூக ஜனநாயக அரசியல் பற்றித் தெரியாத வெகுளி அல்ல நான், ஆனால் நாம் சாதித்த போருக்குப் பிந்தைய சமூகப் பாதுகாப்பு அமைப்பைக் காப்பதே நமது ஆரம்பப் புள்ளியாய் இருக்க வேண்டும்.”



இடப்பக்கத்தில் இருந்து ஜெரிமி
, கியோம் மற்றும் டாவிட்

29 வயதான டாவிட் ஒரு டெக்னிக்கல் டிராப்ட்ஸ்மேனாய் பணிபுரிகிறார். அவருடன் சரக்குப் போக்குவரத்துத் துறையில் வேலை செய்யும் அவரது சக வயது நண்பர்கள் ஜெரிமி மற்றும் கியோம் ஆகியோர் இணைந்து கொண்டனர்.

டாவிட் கூறினார்: “நான் எப்போதும் இடதுக்கே வாக்களித்து வந்திருக்கிறேன். செல்வம் வசதி படைத்த பணக்காரர்களுக்கு மட்டும் உரியதாய் இருக்கக் கூடாது. ஒரு வசதியான வீடு கண்டுபிடிக்க முடியவில்லை என்னால், அந்த அளவுக்கு நெருக்கடியால் மிகவும் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். பாரிஸில் அதற்கு சாத்தியமில்லை என்றாகி விட்டது. நாங்கள் புறநகர்ப் பகுதிகளுக்குத் தான் இடம்பெயர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது, அங்கு தான் கொஞ்சம் மலிவாய் இருக்கும்.”

“2002 இல் லு பென் (FN) ஜோஸ்பனைத் தோற்கடித்து இரண்டாமிடத்திற்கு முன்னேறியதைப் போல நடந்து விடுமோ என்கிற கவலையில் தான் ஹாலண்டுக்கு தான் வாக்களித்ததாய் அவர் தெரிவித்தார். ஜெரிமியும் கியோமும் முதல் சுற்றில் மெலன்சோனுக்கு வாக்களித்தனர். கூடுதல் சிக்கன நடவடிக்கைகள்மட்டும் பிரச்சினைகளைத் தீர்த்து விடாது. வளர்ச்சி என்பது வேண்டும் என்று டாவிட் கருதினார்.

கியோம் கூறினார்: “அவர்கள் [கடனைச் செலுத்துவதற்கான] பணத்தை அது இருக்கக் கூடிய இடத்தில் தேடுவார்கள், கண்டடைவார்கள் என்று நான் நம்புகிறேன்”. அது இருக்கக் கூடிய இடம் செல்வந்தர்களிடையில் தான் என்பதை அவர் தெளிவுபடக் கூறினார். அவர் தொடர்ந்து கூறினார்: “ஸ்பெயினிலும் கிரீஸிலும் போல் அரசாங்கச் செலவினங்களை வெட்டுவதை நாம் நிறுத்த வேண்டும். இது மக்களின் அன்றாட வாழ்க்கைகளில் தான் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. நெருக்கடியைச் சொல்லி எல்லாக் கஷ்டங்களையும் விழுங்கிக் கொள்ளுமாறு நாம் தள்ளப்படுகிறோம்.”