சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Sarkozy, Hollande outline right-wing policies in French presidential debate

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் விவாதத்தில் சார்க்கோசியும் ஹாலண்டும் வலது-சாரிக் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுகின்றனர்

By Alex Lantier and Johannes Stern in Paris
3 May 2012

use this version to print | Send feedback

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் மே 6 அன்று நடைபெறவிருக்கும் தீர்மானகரமான சுற்றுக்கு முந்தைய இறுதி நேரடித் தொலைக்காட்சி விவாத மோதலில், நேற்றிரவு, கன்சர்வேடிவ் கட்சி ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியும் சோசலிஸ்ட் கட்சி (PS) வேட்பாளர் பிரான்சுவா ஹாலண்டும் பங்கேற்றனர்

ஒரு குழப்பமான, வாக்குவாத வகை விவாதத்தில், ஹாலண்ட் மற்றும் சார்க்கோசி இருவருமே சமூக வெட்டுகள், புலம் பெயர்ந்த மக்களுக்கு விரோதமான இனவாதம், மற்றும் தொடரும் ஏகாதிபத்தியப் போர்கள் ஆகியவற்றின் ஒரு வேலைத்திட்டத்தில் நிதி உயரடுக்கிடம் இருந்தான ஆதரவைப் பெறுவதற்கு முனைந்தனர். அதிலும் குறிப்பாக ஹாலண்ட் ஒரு வலது சாரி, முஸ்லீம்-விரோத ஆவேசத்தைக் கக்கினார். ஏப்ரல் 22 அன்று நடந்த முதல் சுற்றில் 18 சதவீத வாக்குகளை வென்ற நவ பாசிச தேசிய முன்னணியின் (FN) வாக்காளர்களைக் கவர்வதற்கான நோக்கத்தையே அது கொண்டிருந்தது என்பது வெளிப்படை.

இதனைத் தொடர்ந்து FN தலைவரான மரின் லு பென் சார்க்கோசியை வழிமொழிவதில்லை எனவும் ஞாயிறன்று தான் ஒரு வெற்று வாக்கினையே அளிக்க முடிவெடுத்துள்ளதாகவும் அறிவித்த செய்தி வெளிவந்தது. லு பென்னின் அழைப்பு சார்க்கோசியை மேலும் பலவீனப்படுத்தியது. சார்க்கோசி சுமார் 45 சதவீத வாக்குகளைப் பெற்றுப் பின் தங்குவார் என்று அநேகக் கருத்துக்கணிப்புகளில் மதிப்பிடப்பட்டுள்ளார்.

வங்கிகளுக்கான பிரான்சின் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கும் அத்துடன் ஐரோப்பிய ஸ்திரப்படுத்தல் ஒப்பந்தத்திற்கு - இது ஐரோப்பிய நாடுகளின் நிதிப் பற்றாக்குறைகள் மீது கறாரான வரம்புகளைத் திணிக்கும் - மதிப்பளித்துச் செயல்படுவதற்கும் தான் உறுதி பூண்டுள்ளதை ஹாலண்ட் மீண்டும் வலியுறுத்தினார். வருடாந்திரம் 90 பில்லியன் யூரோ (118 பில்லியன் டாலர்)நிதிச் செலவினங்களை வெட்டுவதற்கு அழைப்பு விடுத்த அவர் ஊதிய உயர்விற்கு, பணவீக்கத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் மாறாக பிரான்சின் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்றார். இக்கொள்கை பணவீக்கத்தின் மூலமாக தொழிலாளர்களின் வாங்கும் திறனை முழுமையாக அரித்துத் தின்று விடும்

வணிகங்களுக்கு பல்வேறு முதலீட்டு மற்றும் மானிய நடவடிக்கை ஆலோசனைகளை அவர் வழங்கினார். ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவரான மரியோ மோண்டி, மற்றும் ஸ்பெயினின் வலதுசாரி அரசாங்கம் ஆகியவற்றுடன் பொருளாதாரக் கொள்கைகளின் விடயத்தில் உடன்பாடு பெருகி வருவதன் காரணத்தால்விடயங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன என்று அவர் கூறிக் கொண்டார்.

சார்க்கோசி, அவரது முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில் மிகவும் ஆழமான அவப்பெயரைச் சம்பாதித்திருக்கும் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை பாதுகாத்துப் பேசுவதற்கு இயலவில்லை. அதற்குப் பதிலாய், மற்ற ஐரோப்பிய நாடுகளின் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கங்கள் வேலைவாய்ப்பின்மையை மிகப் பெருமளவில் அதிகரித்துள்ளன என்ற எச்சரிக்கையின் மூலமாய் ஹாலண்ட் மீது அவர் தாக்குதல் தொடுத்தார். ஸ்பானியப் பிரதமர் ஜோஸ் லூயி சபதேரோவையும் அத்துடன் வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் கோரப்பட்ட ஆழமான வெட்டுகளைக் கொண்டு கிரேக்க மக்களின் வாழ்க்கைத் தரங்களைத் தரைமட்டமாக்கிய கிரேக்க பிரதமர் ஜோர்ஜ் பாப்பான்ட்ரூவையும் அவர் மேற்கோளிட்டார்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பாப்பான்ட்ரூவை பாதுகாத்து ஹாலண்ட் பதிலளித்தார். கிரீஸ் நெருக்கடிக்கான பழியை பாப்பான்ட்ரூவுக்கு முன்னிருந்த கன்சர்வேடிவ் கட்சியின் கோஸ்டாஸ் கராமன்லிஸ் மீது சுமத்தினார். உண்மையில், பாப்பான்ட்ரூ ஒப்புதலளித்த வெட்டுகளால் வேலைவாய்ப்பின்மை 22 சதவீதமாக உயர்ந்தது (இளைஞர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவாய்), ஊதியங்களை 30 சதவீதம் அல்லது அதற்கும் மேலாய் வெட்டியது, அத்துடன் கிரீஸ் முழுவதிலும் தற்கொலைகளின் ஒரு அலைக்கு அழைத்துச் சென்றது.

பாப்பான்ட்ரூ செய்ததைப் பாதுகாத்து ஹாலண்ட் பேசியது, அவரின் இடத்தில் ஹாலண்ட் இருந்திருந்தாலும் இதே வகையான தொழிலாள வர்க்க விரோதமான கொள்கையைத் தான் நடத்தியிருப்பார் என்பதையே காட்டுகிறது.

இரண்டு வேட்பாளர்களுமே சமூக வெட்டுகளை அமல்படுத்துவதில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பாத்திரத்தைப் பாராட்டினர். “வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்பது தான் தனது ஆட்சியின் சமயத்தில் தனதுமனதில் இருந்த ஒரே முக்கிய எண்ணம் என்று சார்க்கோசி தெரிவித்தார். ஆர்ப்பாட்டங்கள்மிதமிஞ்சி விடாமல் காத்ததில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பாத்திரத்தை ஹாலண்ட் பாராட்டினார். “நல்ல வேளையாக சமூக பங்காளிகள் இருந்தனர். அதனால் தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கும் வணிகக் குழுக்களும் இடையிலான பேச்சுவார்த்தைகள் சாத்தியமானதுஎன்றார் அவர்.  

சமூகப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை இந்த விவாதத்தில் குடியேற்ற மக்கள் விவகாரம் அதிக நேரத்தை பிடிக்க முடிந்தது. இரண்டு வேட்பாளர்களுமே புலம் பெயர்ந்த மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது பிற்போக்குத்தனமான தாக்குதல்களை நடத்துவதற்கு உறுதி பூண்டிருந்தனர். அளவுக்கதிகமான புலம்பெயர் மக்களை அனுமதித்தற்காக கன்சர்வேடிவ் அரசாங்கங்களைச் சாடி ஹாலண்ட் தொடக்கினார். சென்ற PS அரசாங்கத்தின் கீழ் வருடத்திற்கு வெறும் 150,000 புலம் பெயர்ந்த மக்கள் மட்டுமே பிரான்சுக்குள் நுழைவு கண்டனர் என்றும், சார்க்கோசி ஆட்சியின் கீழ் வருடத்திற்கு 200,000 பேர் நுழைவு கண்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரான்சிற்குள் நுழையும் குடியேற்றத்தினரின் எண்ணிக்கையைப் பாதியாக்க உறுதி கூறி பதிலளித்த சார்க்கோசி தனது பர்தா தடைக்கு PS ஆதரவளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அதற்கு ஆவேசமாய் மறுப்பு தெரிவித்த ஹாலண்ட், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், பர்தா மீதான தடையையும் அத்துடன் முன்னதாக பள்ளிகளில் இஸ்லாமிய முக்காடு அணிவதற்கு இருக்கின்ற தடையையும் உறுதிப்படுத்த இருப்பதாகவும், அத்துடன் நீச்சல் குளங்களில் பெண்களுக்கென்று நேரம் ஒதுக்குவதை அனுமதிக்கப் போவதில்லை என்றும், அத்துடன் பிரெஞ்சுப் பள்ளிகளில் ஹலால் உணவைச்சகிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.

மத விடயங்களில் அரசு நடுநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற கோட்பாட்டை முழுமையாய் காலில் போட்டு நசுக்குகின்ற இந்த குறிப்பிடத்தக்க அறிக்கை, இனி ஒழுங்குமுறையுடனான முஸ்லீம் மாணவர்களுக்கு பள்ளியில் மாமிசம் உண்ணும் உரிமை இருக்காது என்பதையே மறைமுகமாய்ச் சொல்கிறது. PS அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதென்பது பிரான்சில் குடியேறிய மக்கள் மீதான இனவாத அணுகுமுறை நிலையை மேம்படுத்தப் போவதில்லை மாறாக மோசமாக்கத் தான் போகிறது என்பதையே இது காட்டுகிறது.

இந்த ஒட்டுமொத்த விவாதத்திலும் ரொம்பவும் குறிப்பிடத்தகுந்த விடயமாக இருந்தது என்னவென்றால் வெளியுறவுக் கொள்கை விடயங்கள் ஏறக்குறைய விவாதத்தில் இடம்பெறவேயில்லை என்று கூட சொல்லலாம். இந்த இரண்டரை மணி நேர விவாதத்தில் அதற்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே கிட்டியது. சென்ற ஆண்டில் நடந்த லிபியாவிற்கு எதிரான போர் பற்றியோ, அல்லது சிரியா மற்றும் ஈரானுக்கு எதிராக இப்போது மேற்கத்திய சக்திகள் எல்லாம் போர்த் தயாரிப்புகள் செய்து வருவது பற்றியோ எந்தப் பேச்சும் இல்லை.

2007 இல் சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர், அவர் உடனடியாக பிரான்சை அமெரிக்க இராணுவவாதத்திற்கு மிக நெருக்கமாய் கொண்டு செல்ல முனைந்து, 2009 இல் நேட்டோவுடன் மறுஇணைப்பு செய்தார். லிபிய அரசின் தலைவரான கேர்னல் முகமது கடாபியை வெளியேற்றுவதற்கும் கொல்வதற்குமான ஒரு நேட்டோ போருக்கு அவசியமான இராஜதந்திர அழுத்தத்திற்கு அவர் தலைமை அளித்தார். ஒரு மேற்கத்திய கைப்பாவை அரசைக் கொண்டு கடாபி இடம்பெயர்க்கப்பட்டார். இந்த மோதலில் பிரான்சின் குண்டு வீசும் போர் விமானங்கள் ஒரு முக்கியமான பாத்திரத்தை வகித்தன. நேட்டோ போர் பத்தாயிரக்கணக்கிலான லிபியர்களைக் கொன்றொழித்ததோடு மொத்த நகரங்களையும் குப்பைமேடுகளாக்கியது.

சிரியாவுக்கு எதிரான மிரட்டல்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான மிரட்டல்களின் மூலம் பிரான்ஸ் இப்போது இன்னும் பெரியதொரு குற்றத்திற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறது. சிரியாவுக்கு எதிரானதொரு போர் மில்லியன்கணக்கான மக்களின் வாழ்வை அச்சுறுத்தும் என்பதோடு மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு மிகப் பெரிய மோதலைத் தூண்டும் என்பதோடு பெரிய உலக சக்திகளுக்கு இடையிலான ஒரு மோதலையும் தூண்டக் கூடும்.

சார்க்கோசி ஹாலண்ட் இருவருமே பிரெஞ்சுப் போர்களை ஆதரிக்கின்றனர். மேற்கூறிய விடயங்கள் எல்லாம் இவர்களது விவாதத்தில் இடம்பெறவேயில்லை என்கிற உண்மையானது விவாதத்தின் மோசடியான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் போர்களை பரந்த மக்கள் எதிர்க்கின்றனர் என்கிற நிலையிலும், வெளியுறவுக் கொள்கை பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் எல்லாம் ஒட்டுமொத்த தேர்தல் பிரச்சாரத்தின் நிரலுக்கு வெளியிலேயே அமர்த்தப்பட்டிருந்தன.

எப்படியிருப்பினும் வெளியுறவுக் கொள்கை விடயத்தில் இந்த வேட்பாளர்கள் உதிர்த்த வெகு சில கருத்துகளே அவர்களது இராணுவவாத ஆதரவுக் கொள்கையை வெளிப்படுத்தி விட்டன. இருவருமே ஆப்கானிஸ்தான் போரில் பிரெஞ்சு இராணுவத்தின் பாத்திரத்தைப் புகழ்பாடினர். ஹாலண்ட் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் 2012 ஆம் ஆண்டில் பிரெஞ்சுத் துருப்புகளை திரும்பிப் பெற்றுக் கொள்ள இருப்பதாக வாக்குறுதியளிக்க, சார்க்கோசியோ பிரெஞ்சுப் படையினர்கள் இன்னும் தங்கள் வேலையை முடிக்கவில்லை என்று கூறி அவர்கள் 2013 வரை அங்கே தான் இருக்க வேண்டியிருக்கும் என்கிற உண்மையை வலியுறுத்தினார்.

துணை சகாராப் பிராந்தியத்தில் ஹாலண்ட்ஸ்திரமற்ற சூழ்நிலை என்றழைத்த விடயத்தைப் பொறுத்தவரை, இந்தப் பிராந்தியத்தில் பிரான்ஸ் ஒரு முக்கிய பாத்திரம் ஆற்ற வேண்டியிருக்கிறது என்று இரண்டு வேட்பாளர்களும் தெளிவாக்கினர். “பழைய காலனித்துவ சக்தியான பிரான்ஸ் நேரடியாகத் தலையீடு செய்ய இயலாது என்றபோதிலும் பினாமி மூலம் தலையீடு செய்வதற்குபிராந்திய சக்திகளுடன் அது சேர்ந்து வேலை செய்தாக வேண்டும் என்று சார்க்கோசி தெரிவித்தார்.

ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கக் கூடிய, சிக்கன நடவடிக்கை மற்றும் போர் ஆதரவு வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தத்தக்க ஒரு பிற்போக்குத்தனமான மற்றும் மரத்துப் போன அரசியல் ஸ்தாபகத்தினால் தொழிலாள வர்க்கம் அரசியல்ரீதியாக வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில் இருக்கிறது என்பதையே இந்த தொலைக்காட்சி விவாதம் அடிக்கோடிட்டுக் காட்டியது. வரவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிராகவும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்க நலன்களுக்கு எதிராகவுமான கடுமையான போராட்டங்களுக்கு தொழிலாளர்கள் தயாரித்துக் கொள்வது கட்டாயமாகும்.