சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek elections reflect mass opposition to austerity

சிக்கன நடவடிக்கைகளுக்கான எதிர்ப்பை கிரேக்கத் தேர்தல்கள் பிரதிபலிக்கின்றன

By Christoph Dreier
7 May 2012

use this version to print | Send feedback

ஞாயிறன்று நடைபெற்ற கிரேக்கப் பாராளுமன்றத் தேர்தல்கள் இரு முக்கிய ஆளும் கட்சிகளான PASOK, New Democracy ஆகியவை அதிர்ச்சி தரும் வகையில் வீழ்ச்சியுற்ற முடிவை பெற்றுள்ளன. இவை தமக்கிடையே மொத்தமாக பதிவான வாக்குகளில் 35%ஐத்தான் பெற்றன.

ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச வங்கிகள் மற்றும் கிரேக்க ஆளும் வர்க்கம் ஆகியவை ஆணையிட்ட சிக்கனக் கொள்கைகளை மக்கள் நிராகரித்துள்ளதைத்தான் இத்தேர்வு முடிவுகள் தெளிவாக்குகின்றன. ஆனால் மக்கள் உணர்வில் ஏற்பட்டுள்ள இம்மாற்றத்தில் முக்கிய இலாபமடைந்தவர்கள் உண்மையான மாற்றீட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

2009இல் இருந்து அரசாங்கத்தை வழிநடத்தியுள்ள சமூக ஜனநாயக PASOK கட்சி அது பெற்ற வாக்குகள் கடந்த தேர்தலில் 43.9% என்பதில் இருந்து தற்பொழுது 15.5% எனச் சரிந்துள்ளதைக் காண்கிறது. கடந்த டிசம்பரில் PASOK உடன் கூட்டணி அமைத்த பழைமைவாத புதிய ஜனநாயகக் கட்சி 2009இல் அதன் வாக்குகள்  33.5% என்பதில் இருந்து இப்பொழுது 20% எனச் சரிந்துள்ளதைக் காண்கிறது. இராணுவ சர்வாதிகாரம் முடிவுற்றதில் இருந்து நடைமுறையில் இருந்து வந்த இருகட்சி முறை இப்பொழுது கிட்டத்தட்ட முடிவிற்குவந்துவிட்டது.

ஞாயிறு பிற்பகுதியில் PASOK உம், புதிய ஜனநாயக கட்சியும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெறுவதற்கு ஒரு இடம் குறைவாக வாக்குகளைப் பெறும் என்று உத்தியோகபூர்வ கணிப்புக்கள் இருந்தன. தேவையான ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அருகில் அவை இருப்பதற்குக் காரணமே ஜனநாயக விரோத விதியான அதிக சதவிகித வாக்குகளைப் பெறும் கட்சிக்கு, இப்பொழுது புதிய ஜனநாயகக் கட்சிக்கு உடனடியாக 50இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று இருப்பதுதான்.

அரசியல் அமைப்புமுறையில் பொதுமக்கள் வெறுப்பிற்கு மற்றொரு அடையாளமாக, வாக்குப் போடாத விகிதம் மிக அதிகமான முறையில் கிட்டத்தட்ட 40% என்று உள்ளது. உள்துறை அமைச்சரகத்தின் மதிப்பீடுகள் இதைத் தெரிவிக்கின்றன. இது மூன்று முந்தைய தேர்தல்களைவிட மிக அதிகமாகும். அவற்றில் வாக்குப் பதிவு செய்யாமை விகிதம் 25% முதல் 30% என இருந்தது

சமீபத்திய ஆண்டுகளில் அரசாங்கம் வரலாற்றிலேயே முன்னோடியில்லாத அளவிற்கு சமூகநலச் செலவுக் குறைப்புக்களைச் செயல்படுத்தியுள்ளது. இவை உண்மையான ஊதிய இழப்புக்களைக் கிட்டத்தட்ட மூன்றில் இரு பகுதிக்கு தள்ளியுள்ளன. இளைஞர் வேலையின்மை விகிதம் 50%க்கும் மேலாகிவிட்டது. வெகுஜன வறுமை மற்றும் வீடின்மையும் பெருகிவிட்டன.

பேச்சளவில் இக்கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த கட்சிகள் வலுவான தேர்தல் ஆதாயங்களைப் பெற்றன. SYRIZA எனப்படும் முற்போக்கு இடது கூட்டணி அதன் வாக்குகளை 4.5% என்பதில் இருந்து 17% என மும்மடங்காக ஆக்கிக் கொண்டுள்ளது. இது பாராளுமன்றத்தில் இரண்டாம் பெரிய கட்சி என்று PASOK ஐ விட முந்திக் கொண்ட நிலையில் உள்ளது. அதன் பிரச்சாரத்தின்போது SYRIZA மீண்டும் சிக்கன நடவடிக்கைகள் குறித்து மறு பேச்சுக்கள் நடத்தும் அதன் விருப்பத்தை அறிவித்திருந்தது. உள்கட்டுமானம், கல்வி மற்றும் பிற சமூகநலத் திட்டங்களில் கணிசமான முதலீட்டு உறுதிமொழியும் வழங்கியிருந்தது.

இன்னும் கூடுதலான PASOK சார்பினை கொள்வதற்காக SYRIZA இல் இருந்து 2010ல் பிரிந்து வந்த ஜனநாயக இடது (Democratic Left) கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தின்போது சிக்கன நடவடிக்கைகளைக் குறை கூறியிருந்தது. அதன் முதல் தேர்தலில் அது 5% வாக்குகளைப் பெற்றுள்ளது.

மத்தியதர வர்க்கத்தின் வசதி படைத்த பிரிவுகளுக்குக் குரல் கொடுக்கும் SYRIZAஉம் ஜனநாயக இடதும் வெகுஜன அதிருப்தியை தொழிற்சங்கங்கள் PASOK ஆகியவற்றுடன் பிணைத்துவிடும் தன்மையைத் தக்க வைக்கும் நோக்கத்தைக் கொண்ட அரசியலில் நன்கு பயிற்றுவிக்கப்பெற்றவையாகும்.

KKE எனப்படும் கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி அது பெற்ற வாக்கை 7.5%ல் இருந்து 8.5%த்திற்குத்தான் அதிகரித்துக்கொள்ள முடிந்தது. கிரேக்கத் தேர்தல் களம் ஸ்ராலினிச கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி சந்தர்ப்பவாதத்துடன் நீண்டகால அனுபவத்தைக் கொண்டது. அரசியல் நடைமுறைக்கு எவ்வகையிலும் சவால் விடுவதற்கு இக்கட்சியை அது நம்பவில்லை. கிரேக்கப் பசுமைவாதிகளும் ஜனநாயகக் கூட்டணியும் தலா 3% வாக்குகளைத்தான் பெற்றன.

சமீப வாரங்களில் செய்தி ஊடகங்களில் முறையாகப் பெரும் ஆதரவு திரட்டிக் கொடுக்கப்பட்டவையான வலதுசாரிக் கட்சிகள் ஒப்புமையில் வாக்குகளின் மொத்தத்தில் குறைந்த பங்கைத்தான் பெற்றன. அரசாங்கத்தில் குறுகிய காலத்தில் பங்கு பெற்றிருந்த லாவோஸ் கட்சி (LAOS) வாக்குகளை இழந்துவிட்டது. நவ பாசிச கோல்டன் டான் கட்சி-Golden Dawn- 5% வாக்குகள் பெற்று இப்பொழுது புதிய பாராளுமன்றத்தில் நுழையும்.

வலதுசாரி ஜனரஞ்சகவாத Independent Greeks கட்சி வாக்குகளில் 10%ஐப் பெற்றது. இக்கட்சி இந்த ஆண்டு பெப்ருவரி மாதம், கடைசிச் சிக்கனப் பொதிக்கு ஆதரவு கொடுக்காததற்காக New Democracy யினால் வெளியேற்றப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு பானோஸ் காம்மெனோஸால் நிறுவப்பட்டது. வெளிநாட்டாரை தீவிரமாக வெறுப்பதைத் தன் தேர்தல் பிரச்சினையில் மையமாகக் கொண்டு, சமூக கோரிக்கையான வெட்டுக்களை அகற்றுதல் மற்றும் தீவிர தேசியவாத முன்னோக்கு ஆகியவற்றையும் இது இணைந்த வகையில் கொண்டிருந்தது.

இத்தேர்தல் பிரச்சாரத்தில் PASOK, New Democracy ஆகியவற்றால் இக்கட்சிகள் பாரிய ஏற்றத்தை பெற்றன. இரு ஆளும் கட்சிகளும் ஒன்றோடொன்று போட்டியிட்டு வெளிநாட்டாரை வெறுக்கும் தன்மை, தீவிர தேசியவாதத்திற்கு ஆதரவுதரும் ஜனரஞ்சக வனப்புரை இவற்றில் ஈடுபட்டதுடன் வெட்டுக்களுக்கு எதிரான மக்கள் சீற்றத்தை வலதுசாரித் திசைகளில் திருப்பவும் முயன்றன. இவ்வகையில் இவை தீவிர வலதிற்குப் பாதையிட்டுக் கொடுத்துள்ளன.

தன்னுடைய பங்கிற்கு SYRIZA இனவெறி Independent Greeks உடன் தேர்தல் வெற்றி பெற்றால் உடன்பாடு கொள்ளத்தயார் என்று அறிவித்திருந்தது.

தேர்தல் முடிவுகள் கிரேக்கத்தில் அரசியல் நிலைமையை இன்னும் சீர்குலைக்கும். PASOK, New Democracy இரண்டுமே முன்பு வசதியான பாராளுமன்ற பெரும்பான்மை நலனுடன் ஆளமுடிந்தது. இப்பொழுது அவை ஆளும் பெரும்பான்மையை பெறமுடியாது. ஐரோப்பிய செய்தி ஊடகம் ஏற்கனவே ஒரு புதிய அரசாங்கம் திட்டமிட்ட வெட்டுக்களை செயல்படுத்தும் உறுதியைக் கொண்டிருக்குமா, அல்லது புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமா என்று விவாதிக்கத் தொடங்கிவிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகளை தொடரும் விருப்பத்தைக் கொண்டுள்ள எந்தப் புதிய கிரேக்க அரசாங்கமும் இப்பொழுது மக்களிடம் இருந்து மிகப் பெரிய எதிர்ப்பை எதிர்கொள்ளும். இந்நிலைமையில், ஆளும் உயரடுக்கு வலது மற்றும் தீவிர வலதுசாரிக் கட்சிகளை ஒருங்கிணைத்து அரசாங்கத்தை அமைக்கும் வகையில் செயல்படும் தீவிர ஆபத்து உள்ளது. இதனால் நாட்டில் சர்வாதிகார வகை ஆட்சி நிறுவப்படலாம், அது மக்கள் எதிர்ப்புக்கள் அனைத்தையும் மிருகத்தனமாக அடக்கும்.

அதே நேரத்தில் பெயரளவிற்கு இடதுசாரிக் கட்சிகள் தொடர்பு கொண்ட ஒரு கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதில் எந்த வித முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாது. சிக்கன நடவடிக்கைகள் மீண்டும் பேச்சுக்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மட்டுமே கூறும் SYRIZA ஜனநாயக இடதும் பலமுறை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் உறுதிப்பாட்டைத் தெளிவாக்கியுள்ளன. அத்தகைய அரசாங்கம் PASOK ன் உதாரணத்தைப் பின்பற்றி தொழிற்சங்கங்கள் மற்றும் பல குட்டி முதலாளித்துவக் குழுக்களுடன் ஒன்றாகச் செயல்பட்டு தொழிலாளர்களுக்கு எதிராக வெட்டுக்களைச் சுமத்தும்.

அத்தகைய அமைப்பு கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவையும் பெறும். கிரேக்கக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்புக்களை முன்னெடுத்து அதேநேரத்தில் கட்டுப்படுத்தவும் செய்யும். இதனால் எதிர்ப்புக்கள் புதிய அரசாங்கத்திற்கு தீமை எதையும் இழைக்காமல் பார்த்துக் கொள்ளும். இவ்வகையில் அதற்கு ஏற்கனவே வெளியேறிவிட்ட அரசாங்கத்துடன் இயங்கிய அத்தகைய சான்றுகள்தான் உள்ளன.

கிரேக்கத் தேர்தல் முடிவு வாக்காளர்கள், உழைக்கும் மக்களின் பரந்த பிரிவுகளில் இடதிற்கான மாற்றத்தைக் குறிக்கிறது. அதே நேரத்தில், இந்த மாற்றத்தால் பலன் அடைந்துள்ள போலி இடது அமைப்புக்கள் இருக்கும் ஒழுங்கைத் தக்க வைத்து பாதுகாப்பதுதான் தங்கள் நோக்கம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. தேர்தல் முடிவு புதிய சுற்று கடுமையான சமூகமோதல்களுக்கு ஒரு முன்னோடிதான். இது கிரேக்கத்தில் ஒரு புதிய புரட்சிகர சோசலிசத் தலைமையை கட்டமைப்பதின் மூலம்தான் தீர்வு காணப்படமுடியும்.