சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Court decision gives French employers green light for mass layoffs

நீதிமன்றத் தீர்ப்பு பிரெஞ்சு முதலாளிகளுக்கு பாரிய பணிநீக்கங்கள் செய்ய பச்சை விளக்கு காட்டுகிறது

By Pierre Mabut
10 May 2012

use this version to print | Send feedback

மே 3ம் திகதி பிரெஞ்சு நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பு ஒன்று பொருளாதார நியாயப்படுத்துதல் ஏதும் இன்றி அதிகமான பணிநீக்கங்களைச் செயல்படுத்தும் அதிகாரத்திற்கான பச்சை விளக்கை முதலாளிகளுக்கு கொடுத்துள்ளது.

பிரான்ஸின் மிக உயர்ந்த முறையீட்டு நீதிமன்றமான Court of Cassation, மென்பொருள் உற்பத்தியாளர் Viveo அதன் 180 தொழிலாளர்களில் 64 பேரைப்பணி நீக்கம் செய்ததைத் தடுத்த முந்தைய நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றை செல்லுபடியாதாக்கிவிட்டது. அதில் நிறுவனம் தன் திட்டங்களுக்கான பொருளாதார நியாயப்படுத்துதல் ஏதும் கூறப்படவில்லை என இருந்தது. விவியோ இலாபம் நிறைந்த சுவிஸ் குழு டெனமோஸின் ஒரு பகுதி ஆகும்.

முக்கிய வணிக ஏடான Les Echos முதலாளிகளின் நன்றியுணர்வை வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் முதலாளிகள் நிம்மதி அடைந்துள்ளனர். நிறுவனங்களின் மூலோபாயங்களில் நீதிமன்றங்கள் குறுக்கிடுவதை அவர்கள் கண்டித்து, மெடெப் (Medef) என்னும் முதலாளிகளின் கூட்டமைப்பு வணிகச் செயலை செய்யும் உரிமை என்னும் அரசியலமைப்புரீதியான கொள்கையை ஆதாரமாகக் கொண்டிருந்தது. என்றனர்.

முறையீட்டு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு விவியாவில் இதே போன்ற நடவடிக்கையை பணிநீக்கத்திற்கு எதிராக எடுத்துள்ள பிற தொழிலாளர்களை உடனடியாகப் பாதிக்கிறது. Reims ல் உள்ள Sodimedical  ல் 52 தொழிலாளர்கள், Johnson & Johnson Group இன் பகுதியான எதிகோனில் (Auneauவில் மருத்துவக் கருவித்தயாரிப்பு நிறுவனத்தில்) வேலைசெய்யும் 350 தொழிலாளர்கள் ஆகியோர் இப்பொழுது பணிநீக்கத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

ஸ்ராலினிச தலைமையில் உள்ள CGT (பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு) மற்றும் பிற தொழிற்சங்கங்கள், நீதிமன்றங்களில் போராடுவதின் மூலம் வேலைகளைத் தொழிலாளர்கள் பாதுகாக்க முடியும் என்று கூறியவை, முற்றிலும் அம்பலப்படுத்தப்பட்டு நிற்கின்றன. CGT, CFDT (பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு) ஆகியவற்றின் ஆதாரங்கள் கிட்டத்தட்ட 50,000 பணிகள் இப்பொழுது அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளன என மதிப்பிட்டுள்ளன.

சமீபத்திய தீர்ப்பு தொழிலாளர்களை அகற்றுவதற்கான நிறுவனங்கள் கொண்டுள்ள சட்டபூர்வ அதிகாரத்தில் இருந்த தெளிவற்ற தன்மைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. நீதிமன்றம் பின்வருமாறு எழுதுகிறது: பணிநீக்கங்களுக்கான செயல்முறை பணிநீக்கத்திற்கான பொருளாதாரக் காரணத்தை பரிசீலனை செய்து நிறுத்தப்பட முடியாது.... PSE எனப்படும் வேலைகளைக் காக்கும் திட்டம் இல்லாதது அல்லது போதுமானதாக இல்லாதது [மறு பயிற்சி அளித்தல், மறு வேலை அளித்தல், பணிநீக்க காலத்தில் பணம் கொடுத்தல்] போன்றவைதான் செயல்முறையை நிறுத்த வழிவகை செய்யலாம்.

பொருளாதாரக் காரணங்கள் பற்றிய குறிப்பு தொழில் விதிகளுக்கு அப்பால்தான் உள்ளது என்று விவியாவின் வக்கீல்கள் வாதிட்டுள்ளனர்; பணிநீக்கங்கள் சவாலுக்கு உட்படுத்துதல், அல்லது நிதிய அளவில் இழப்பீடு கொடுத்தல் ஆகியவை செயல்படுத்த பின்னர்தான் அதை செய்ய இயலும்.

CGT, CFDT அதிகாரிகள் கீழ்நீதிமன்றத் தீர்ப்பை நியாயப்படுத்தும் வகையில், பொருளாதார நோக்கங்கள் பணிநீக்கங்களுக்காக என நிறுவனங்கள் அளிப்பதற்கு தேவையான விதிகள், முதலாளிகளை தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதை உண்மையில் தடுக்கும் என்று குறிப்பிட்டு பாதுகாத்தனர். வேலைகளை பாதுகாக்க வர்க்கப் போராட்டத்தை நம்பியிராமல், நீதிமன்றங்களை தொழிலாளர்கள் நம்பலாம் என்று தொழிலாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் அவற்றின் முயற்சியில் உள்ள இழிந்த, நேர்மையற்ற தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

CGT தலைவர் பேர்னார்ட் தீபோ பொருளாதார நோக்கங்கள் இல்லாமல் நடத்தப்படுவது ஒப்புமையில் ஓர் அபூர்வ நிகழ்வு என்றார். CGT பாதுகாக்க விரும்பும் கீழ்நீதிமன்றத் தீர்ப்பு சமூக அளவில் தீமை விளைவிக்கும் தன்மையுடைய சில நிறுவனங்களைத்தான் பாதிக்கும். தீபோவின் இழிந்த, மெத்தனமான கருத்து குறிப்பாக ஆழ்ந்த, தீராத உலகப் பொருளாதார நெருக்கடியின்போது எத்தகைய பணிநீக்கங்களும் உண்மையில் ஒரு சமூகத் தீமை என்ற உண்மையை புறக்கணிக்கிறது.

தன்னுடைய பங்கிற்கு CFDT தலைவர் பிரான்சுவா செரேக், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுவனங்களை தொழிலாளர்களை நீக்குவதில் இருந்து தடை செய்யாது என்றும், மற்ற காரணங்களுக்காக பணிநீக்கங்களை அனுமதிக்கும் சட்டங்கள் உள்ளன என்றும் வலியுறுத்தினார். உதாரணமாக, போட்டித்தன்மையை நிலைநிறுத்துவதற்காக தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர் என்ற காரணம் தொடரும் என்றார் அவர்.

சர்வதேச அளவில் தொழிலாளர்கள் வேலைகளை பாதுகாக்க திரட்டப்பட வேண்டும் என்னும் கருத்திற்கு விரோதப் போக்கைக்கொண்டுள்ள தொழிற்சங்கங்கள் சட்டபூர்வத் தீர்ப்புக்கள், பேச்சுக்கள் என சமூகப் பங்காளிகளுடன் கொள்வதை அடித்தளமாக கொண்டு போராட்டங்களை தனிமைப்படுத்தி, வேலை வெட்டுக்களை ஏற்க தொழிலாளர்களுக்கு தளர்ச்சியை ஏற்படுத்தி விடுகின்றன.

மாறாக அவை முதலாளித்துவ நீதிமன்றங்களுக்கு முறையீடு செய்கின்றன அல்லது இப்பொழுது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட்டிற்கு முறையிடுகின்றன. CGT உடைய வக்கீல் Philippe Brun நீதிமன்றத் தீர்ப்பை எதிர்கொண்ட வகையாவது: குடியரசின் வருங்கால ஜனாதிபதி உள்ளடக்கத்தை விளக்கும் வகையில், பொருளாதாரக் காரணங்கள் இல்லாத நிலையில், பணிநீக்க செயற்பாடுகளில் இந்த முறை செல்லுபடியானதல்ல, முற்றாக செல்லுபடியாகாத நிலைமை உடையது எனத் தெளிவாக்க வேண்டும்.

ஏற்கனவே இதை மறுக்கும் வகையில் ஹாலண்ட், பொருளாதார உந்துதல்கள் பற்றிய தற்போதைய சட்டம், பெரும்பாலான நிலைமைகளில் பணிநீக்கங்களுக்கும் PSE க்கும் திருப்திகரமாக உள்ளது, என்று கூறியுள்ளார். ஆலை மூடல்களை செய்யத் தீவிரமாக இருக்கும் நிறுவனங்கள் வாங்குபவரைக் காண முயலவேண்டும், என்று புதிய முதலாளிகள் அனைத்து வேலைகளையும் தக்க வைக்க வேண்டும் எனக் குறிக்காமல் ஒரு சட்டத்தைத் தான் அறிமுகப்படுத்தக்கூடும் என்று ஹாலண்ட் கூறியுள்ளார்.

அமியானில் உள்ள Goodyear டயர் ஆலையில் நீண்ட காலமாக இருக்கும் பூசலுடனும் இந்நீதிமன்றத் தீர்ப்பு தாக்கங்களை கொண்டுள்ளது. அங்கு 817 தொழிலாளர்கள் கார் டயர் உற்பத்தி ஆலை மூடப்படுவதற்கு எதிராக நான்காண்டு கால சட்டமோதலை நடத்திவருகின்றனர்.

817 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டபின், இந்நிறுவனம் 537 தொழிலாளர்கள் உள்ள பண்ணை டயர் உற்பத்திப் பிரிவை அமெரிக்க டைட்டான் குழுவிற்கு விற்க முற்பட்டது. ஒவ்வொரு முறையும் மறுவேலை, மறு பயிற்சி மற்றும் சுயமாக பணிவிலகல் (PSE) ஆகியவை தொழிலாளர்கள் நீதிமன்றங்களில் CGT, அதன் வக்கீல் பியோடோர் ரிலோவ் ஆகியோர் இவற்றைச் சவாலுக்கு உட்படுத்தினர்.

பெப்ருவரி 2ம் திகதி ரிலோவ் Goodyear தொழிலாளர்களுடைய பாரிய கூட்டத்தில் பெரும் இலாபம் ஈட்டும் சர்வதேச நிறுவனம் அதன் பிரெஞ்சுத் தொழிலாளர்களை ஒரு பொருளாதார நோக்கம் இல்லாமல் சட்டபூர்வமாக பணிநீக்கம் செய்ய முடியாது, என வலியுறுத்தியிருந்தார். நாம் வெற்றியில் இருந்து ஒரு சில சென்டிமீட்டர்கள் தொலைவில்தான் உள்ளோம், ஒரு சர்வதேச நிறுவனம் பின்வாங்குதல் என்பது நடக்கக் கூடும்.

மே 4ம் திகதி, CGT ஆலைத் தலைவர் Mickaël Wamen மற்றும் ரிலோவ் ஒரு பாரிய கூட்டத்தை 400 தொழிலாளர்களுக்காக கூட்டி, நிறுவனத்துடன் நடத்தப்படும் பேச்சுக்கள் பற்றிய இருப்புநிலைக் குறிப்பைக் கொடுத்தனர். முந்தைய நாள் வந்த நீதிமன்றத் தீர்ப்பு, முதலாளிகளுக்கு தடையற்று தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் உரிமை விவாதிக்கப்படவில்லை.

CGT மற்றும் ரிலோவ் ஆகியவை இப்பொழுது சொல்லளவில் 817 வேலைகளும் மறுவேலைக்காக பண்ணை உற்பத்திப் பிரிவில் இதே ஊதியங்கள், பணிநிலைமைகளில் அமர்த்தப்பட்டால் என்ற நிபந்தனையில் கார் டயர் உற்பத்திப் பிரிவில் தக்க வைக்கப்படும் என்ற உடன்பாடு இருப்பதாகக் கூறுகின்றனர். இதற்கு ஈடாக தொழிலாளர்கள் நிறுவனத்தை விட்டு நீங்குபவர்கள் சுயமாக வெளியேற சங்கங்கள் உடன்படும். கடைசித் தொழிலாளருக்கு மறு வேலை கொடுக்கப்பட்ட  பின், கார் டயர் ஆலை மூடப்படும்.

இதன் விளைவு, நிறுவனம் அதன் இலக்கை பணியாளர் விலகுதல் மூலம் அடைகிறது. ஆனால் சுயமாக பணி விலகல்கள் மூலம் நடக்கும் அத்தகைய உடன்பாடு உள்ளூர் சமூகத்திற்கு ஒரு தோல்வி என்பதுடன், நிறுவனத்திற்கு எளிதான வெற்றி ஆகும். இது இப்பொழுது நீதிமன்றங்களின் ஆதரவைப் பெறுகிறது.

இதன் பின் ரிலோவ், ஹாலண்டிற்கு வேலைகளைக் காப்பாற்ற முறையீடு செய்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் ஹாலண்ட் சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வரும் முயற்சியின் போது வருகை புரிந்தபோது, Goodyear போல் பெரும் இலாபங்களை ஈட்டும் நிறுவனங்கள் பணிநீக்கம் செய்வதைத் தடை செய்யும் சட்டத்தை கொண்டுவருவதாக உறுதியளித்தார்.

ஆனால் இத்தகைய பிரச்சாரத்தின் போது கொடுக்கப்பட்ட உறுதிமொழி, விரைவில் கைவிடப்பட இருக்கும் ஹாலண்டின் பல உறுதிமொழிகளில் ஒன்றாகலாம் எனத் தோன்றுகிறது. ஏப்ரல் 15ம் திகதி தொழிலாளர் பிரிவு நிறுவனம் Avosial க்குப் பணிநீக்கம் குறித்த சட்டங்களை பற்றி எழுதுகையில், அவர் சட்டமுறையில் நன்கு பாதுகாப்புடன் இன்று இருக்கும் இச்சட்டப்பூர்வ வடிவமைப்பு திருத்தப்படுவது பயனுடையதாக இருக்காது என்று கூறியுள்ளார்.