சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

New elections called in Greece

கிரேக்கத்தில் புதிய தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன

By Christoph Dreier
17 May 2012

use this version to print | Send feedback

பாசிச Golden Dawn கட்சியை தவிர கிரேக்கப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளும், ஜூன் 17 அன்று புதிய தேர்தல்களை நடத்துவதற்கு புதன் அன்று ஒப்புக் கொண்டன. மே 6 தேர்தலை அடிப்படையாக கொண்டு செயல்படக்கூடிய பெரும்பான்மையுடன் ஒரு அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகள் உறுதியாக தோல்வியுற்றதைத்தான் இது எடுத்துக்காட்டுகின்றது.

தேர்தல்கள் வரை, கிரேக்கத்தின் நிர்வாக நீதிமன்றத்தின் தலைவர் பானஜியோடிஸ் பிக்ரமெனோஸ் ஓர் இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குவார். கிரேக்க அரசியலமைப்பின்படி, அத்தகைய இடைக்கால ஆட்சி புதிய சட்டங்கள் எதையும் இயற்ற முடியாது. அதன் முக்கிய கடமை புதிய தேர்தல்களுக்கான தயாரிப்புக்களை மேற்கொள்ளுவதாகும்.

கிரேக்க மற்றும் ஐரோப்பியப் பங்குச் சந்தைகள் சமீபத்திய நிகழ்வுகளை அடுத்து   பதட்டத்துடன் பிரதிபலித்தன. செல்வம் படைத்த கிரேக்கர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் இருந்து கணிசமான நிதியைத் திரும்பப் பெறுகின்றனர். கிரேக்க மத்திய வங்கியின் தலைவருடைய கூற்றின்படி, வங்கிகள் நிலைமை ஒரு பீதியான நிலைமையை அடையக்கூடும் என்ற கவலை உள்ளது.

கிரேக்கத்தில் நடந்த மே 6 தேர்தல்களில், பெரும்பாலான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த எழுச்சி பெற்றுள்ள உணர்வினால் முக்கிய ஆதாயம் அடைந்தது சிரிசா (SYRIZA) எனப்படும் தீவிரவாத இடது கூட்டணி ஆகும். இது தேர்தல் பிரச்சாரத்தின்போது இன்னும் அதிக சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து, தேர்தலில் இரண்டாம் அதிக வாக்குகள் பெற்ற கட்சியாக, 17% வாக்குகளைப் பெற்று வெளிப்பட்டது.

இந்த விளைவு கிரேக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் நடைமுறை முழுவதும் அதிர்ச்சி அலைகளை அனுப்பியது. ஐரோப்பிய ஒன்றிய சிக்கனக் கொள்கைகளுக்கு எதிர்ப்பை எப்படிச் சமாளிப்பது, ஆழ்ந்துள்ள யூரோ நெருக்கடியை எப்படிச் சமாளிப்பது என்பது பற்றிய கடுமையான விவாதம் வெளிவந்துள்ளது.

முந்தைய ஆளும் கட்சிகளான புதிய ஜனநாயகக் கட்சி (ND),  மற்றும் PASOK உடன் கூட்டணி அரசாங்கம் என்ற கருத்தை சிரிசா நிராகரித்துள்ளது. அதாவது தங்கள் முந்தைய சிக்கனக் கொள்கைகளில் இருந்து அவை ஒதுங்கினால் ஒழிய தனது ஆதரவில்லை எனக் கூறிவிட்டது. கிரேக்கத்தின்மீது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகள் சுமத்தியுள்ள பிணையெடுப்புக்களின் விதிகளைப் பற்றி மீள்பேச்சுவார்த்தைகள் தேவை என்ற கருத்தை அது முன்வைத்துள்ளது.

மிக அதிகம் வாக்குகள் பெற்ற கட்சி என்னும் நிலையில் இயல்பாக 50 இடங்களைக் கூடுதலாகப் பாராளுமன்றத்தில் பெற்றுள்ள ND, PASOK, சிரிசாவில் இருந்து பிரிந்துள்ள ஒரு சிறு கட்சியான DIMAR மற்றும் ஜனநாயக இடது ஆகியவை ஒரு பெரும்பான்மையைக் கொண்டிருந்திருக்கலாம். ஆனால் ND தலைவர் அன்டோனிஸ் சமரசஸ் மற்றும் DIMAR  உடைய தலைவர் போடிஸ் கௌவேலிஸ் இருவரும் சிரிசா இல்லாமல் கூட்டணி அமைக்க மறுத்துவிட்டனர். சிரிசாவின் ஆதரவு இல்லாமல் செல்வாக்கற்ற சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்த அவற்றிற்குத் தைரியம் இல்லை.

ஒரு வலதுசாரி, வெகுஜனவாத ND யில் இருந்து பிளவுற்ற கட்சியான Independent Greeks, அரசாங்கத்தில் பங்கு பெற விரும்பியதும் நிராகரிக்கப்பட்டது. அதன் தலைவர் பானோஸ் காமெனோஸ் மற்ற குழுக்களின் தலைவர்களுக்கு எழுதியதாக கூறப்படும் ஒரு கடிதத்தில் அவருடைய கட்சிக்குப் பாதுகாப்புத் துறை கொடுக்கப்பட்டால், தேசிய ஒற்றுமை நலன் கருதி வரும் ஒரு அவசரக்கால நெருக்கடி கூட்டணியில் தன் கட்சி பங்கு கொள்ளும் என அதில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் காமெனோஸ் அவ்வாறான கடிதம் எதுவும் எழுதவில்லை என நிராகரித்துவிட்டார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கூட்டணி அமைக்க முடியாததின் தோல்வியை எதிர்கொள்ளும் வகையில் கிரேக்கத்தின் மீது அழுத்தங்களை முடுக்கி விட்டுள்ளனர். ஜேர்மனியின் நிதி மந்திரி வொல்ப்காங் ஷொய்பிள ஜேர்மனிய வானொலியில் சிரிசா கோரியுள்ள நிதிய உடன்பாடு பற்றிய மறு பேச்சுக்கள் பற்றிய கோரிக்கைக்கு இணங்குவதாக இல்லை என அறிவித்துவிட்டார்.

கேக்கை உட்கொண்டுவிட்டு, அதைக் கையிலும் வைத்திருக்க முடியாது என்றார் அவர். யூரோப்பகுதியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் அது முந்தைய சிக்கன நடவடிக்கைகளுக்கு இணங்க வேண்டும் எனக்கோரிய அவர் இதற்கு அப்பாதையில் செல்ல விரும்பும் திறமையான அரசாங்கம் தேவை என்றார்.

BDI எனப்படும் ஜேர்மனியத் தொழில்துறைகள் கூட்டமைப்புக்கூட கிரேக்க மக்களுக்கு அவர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று உபதேசித்துள்ளது. இத்தேர்தலில் ஐரோப்பிய சார்புடைய கட்சிகளுக்கு, கிரேக்கத்தை இன்னும் போட்டித் தன்மை உடையதாகச் செய்யவேண்டும் என விரும்பும் கட்சிகளுக்கு கிரேக்க மக்கள் வாக்களிக்குமாறு கோரப்படுகின்றனர் என்று BDI உடைய தலைவர் ஹன்ஸ்-பீட்டர்-கிளைன்ரைல் Rheinische Post பத்திரிகையிடம் கூறினார்.

தேர்தல் முடிந்த உடன், ஐரோப்பிய அதிகாரிகள் நிதிய உடன்பாட்டில் சலுகைகள் வழங்குவதற்கு மாறாகத் தாங்கள் கிரேக்கம் யூரோப்பகுதியை விட்டு விலகுவதை விரும்புவதைத் தெளிவாக்கினர். ஜேர்மனிய வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்லே துணை நிதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அந்நாடு சிக்கன நடவடிக்கைகளில் கைவிடுவது எதையும் செய்யுமானால் கிரேக்கத்தைத் திவால் தன்மைக்கு அனுப்பிவிடுவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இந்த அச்சுறுத்தலின் தர்க்கம் மிகவும் தெளிவாக உள்ளது. ஏற்கனவே பாரிய வறுமைக்கும் வேலையின்மைக்கும் வழிவகுத்து அதன் பொருளாதாரத்தைச் சீரழித்துவிட்ட வெட்டுக்களை கிரேக்கம் ஏற்க வேண்டும் அல்லது ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்திற்குக் கடன் கொடுக்காது, கிரேக்கம் மீண்டும் தன்னுடைய ட்ராஹ்மா என்னும் நாணயத்தை அறிமுகப்படுத்தக் கட்டாயப்படுத்தும் என்பதாகும். சர்வதேச நாணயச் சந்தைகள் அதன்பின் புதிய கிரேக்க நாணயத்தின் மதிப்பைக் கட்டாயமாகக் குறைத்துவிடும். இதனால் மிகப்பெரிய பணவீக்கம் ஏற்படுவதுடன் அதையொட்டி ஊதியங்கள், ஓய்வூதியங்களில் பெரும் குறைமதிப்புக்களும் ஏற்பட்டுவிடும்.

தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த அச்சுறுத்தல்களை சமரஸ் பயன்படுத்தி, ND  ஒன்றுதான் சிக்கன நடவடிக்கைகளை தொடர்வதன் மூலம் யூரோப்பகுதியில் கிரேக்கம் தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்தும் என்று அறிவித்தார். வரவிருக்கும் தேர்தல்கள் இடது சூனியவாதிகள், சந்தர்ப்பாவத ஜனரஞ்சகவாதிகள் என்னும் சக்திகள் ஒருபுறமும், உறுதியான, வலுவான ஐரோப்பிய முன்னணி மறுபுறமும் நிற்கும் சக்திகளுக்கிடையிலான ஒரு போராட்டமாக இருக்கும் என்று அவர் அறிவித்தார்.

ஏற்கனவே கடந்த வாரம் சமரஸ் சிறு வலதுசாரிக் கட்சிகள் ஒன்றாகக் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தார். இக்கட்சிகள் பாராளுமன்றத்தில் நுழைவதற்குத் தேவையான மூன்று சதவிகித வாக்குகளைப் பெற முடியவில்லை. சிரிசா நம்ப முடியாத அளவிற்கு திமிர்த்தனத்தையும், பொறுப்பற்ற தன்மையும் கொண்டுள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதுவரை சிரிசா இந்த அச்சுறுத்தல்களில் இருந்து ஆதாயத்தைக் காண முடிந்துள்ளது. இப்பொழுது அது கருத்துக் கணிப்புக்களில் மொத்த வாக்குகளில் 27%ஐப் பெறலாம் எனத் தெரிகிறது. இதன் தலைவர் அலெக்சிஸ் டிசிப்ரஸ் தேர்தலில் அவருடைய நோக்கம் ஓர் இடது அரசாங்கத்தை அமைத்தல் என்றார். அது சிக்கன நடவடிக்கைகளை இரத்து செய்துவிட்டு, வெட்டுக்களைச் சுமத்திய கட்சிகள் விட்டுச் சென்றுள்ள அழிவில் இருந்து நாட்டை மறுகட்டமைக்கும் என்றார்.

ஆனால், டிசிப்ரஸ் மற்றும் பிற சிரிசா பிரதிநிதிகளும், அவர்கள் யூரோப்பகுதியை விட்டு நீங்குவதை எதிர்ப்பதாகக் கூறுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூரோப்பகுதியிலும் இருந்துகொண்டு ஐரோப்பிய ஒன்றிய சிக்கனத் திட்டத்தை மீறமுடியும் என்னும் நப்பாசைகளை அவர்கள் பரப்புகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய நிதிய உடன்படிக்கைக்குப் பதிலாக ஒரு வளர்ச்சி உடன்பாடு தேவை என்னும் ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு அவர்கள் ஆதரவைத் தேடுகின்றனர். இதில் புதிய பிரெஞ்சு ஜனாதிபதியான பிரான்சுவா ஹாலண்ட் உள்ளார். அவர் கிரேக்கத்திற்கு தான் ஒரு நம்பிக்கை சமிக்கை அனுப்ப விரும்புகின்றேன். அது யூரோப்பகுதியில் அம்மக்கள் தொடர்ந்து இருக்க உதவும் வகையில் வளர்ச்சிக் கொள்கைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால், இத்தகைய வளர்ச்சி உடன்பாடு என்பது ஐரோப்பிய சிக்கன நடவடிக்கைகளின் தன்மையை மாற்றாது. மாறாக அது சமூகநலச் செலவுகளின் மீதான தாக்குதல்களைத்தான் தொடரும். போட்டித்தன்மையைப் பெருக்குவதற்கு கட்டுமானச் சீர்திருத்தங்கள் என்பவற்றை அறிமுகப்படுத்தும். அவை; அதாவது ஊதியங்களைக் குறைத்து, இன்னும் வளைந்து கொடுக்கும் பணி நிலைமைகளைக் கொண்டுவந்து பலவீனமுற்றிருக்கும் ஐரோப்பிய வங்கிகளுக்கு அதிகப் பணம் கொடுக்க முழக்கமிடும்.

வளர்ச்சி உடன்பாடு குறித்து வாதிடும் ஹாலண்ட் மற்றும் பிறருக்கும் முன்மாதிரியானது, 2010 செயற்பட்டியல் என்று சமூக ஜனநாயக்கட்சி -SPD- சான்ஸ்லர் ஹெகார்ட் ஷ்ரோடர் அரசாங்கம் 1998-2005 ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய திட்டம்தான். இதுதான் ஜேர்மனியில் மிகப் பெரிய குறைவூதியத் தொகுப்புத் தொழிலாளர் துறையை தோற்றுவித்தது.