சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

No agreement at G8 summit on deepening financial crisis

தீவிரமாகும் நிதி நெருக்கடி குறித்து G8 உச்சிமாநாட்டில் உடன்பாடு ஏதும் இல்லை

By Nick Beams
21 May 2012
 

use this version to print | Send feedback
 

ஐரோப்பாவில் தீவிரமாகும் நிதிய நெருக்கடி முழு உலகப் பொருளாதாரத்தையும் அச்சுறுத்துகையில், பிரித்தானியாவின் செய்தித்தாள் இண்டிபென்டென்ட்டில் வந்த தலையங்கம் ஒன்று இதை மூன்று தசாப்தங்களில் மிக முக்கியமான G8 உச்சிமாநாடு என்று அழைத்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியின் ஓய்வு இல்லமான காம்ப் டேவிட்டில் ஒரு நாள் பேச்சுக்களுக்குப் பின் வெளியிடப்பட்ட அறிக்கை, நெருக்கடியைச் சந்திக்க வேலைத்திட்டம் ஏதும் இல்லை என்பதைத்தான் வெளிக்காட்டியுள்ளது. ஒரு மோசமான நிலைமையில் மலர்ச்சியான முகத்தைக் காட்டும் முடிவுதான் இது.

இது இரு அப்பட்டமான தவறுகளுடன் ஆரம்பித்தது. நம் நோக்கம் இப்பொழுது வளர்ச்சி மற்றும் வேலைகளுக்கு ஊக்கமளிப்பதாகும், உலகப் பொருளாதார மீட்பு முன்னேற்றத்திற்கான அடையாளத்தைக் காட்டுகிறது என்பவையே அவை.

உச்சிமாநாட்டில் இருந்து வெளிவந்த ஜனாதிபதி ஒபாமா, இதுவரை எல்லாம் சரியே எனக்கூறி, உடனடியாக பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புக்களை தோற்றுவித்தல் ஆகியவற்றிற்கு அதிகம் செய்யப்பட வேண்டும் என இப்பொழுது ஒரு ஒருமித்த உணர்வு வந்துள்ளது என்று அறிவித்தார். பின்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அவர் தன்னுடைய நிர்வாகத்தின் வரலாறு பெருமந்த நிலைக்குப் பின் சில வலுவான நீதியச் சீர்திருத்தங்களை உரிய இடத்தில் வைத்தல் என்ற வரலாற்றை சுட்டிக் காட்டுகிறது என்றார். இந்த வலியுறுத்தலை ஜேபி மோர்கன் சேஸ் சமீபத்திய $3 பில்லியனுக்கு மேலான இழப்பை பங்குவணிகங்களில் அடைந்தது தவறு எனக் காட்டுகிறது.

இந்த அறிவிப்பு இரு விடயங்களை செய்ய முயன்றது: அவை G8 தலைவர்கள் உலக நெருக்கடிக்கு விடையிறுப்பைக் கொண்டுள்ளனர் என்ற உணர்வைக் கொடுத்தல், வேறுபாடுகள் இருப்பதை மூடிமறைத்தல் என்பதாகும். ஒபாமாவும் அவருடைய ஆதரவாளர்களும் G8 ல் வளர்ச்சி பற்றிக் கூறியிருப்பது குறித்து செய்தி ஊடகத்தில் அதிக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் சிக்கன நடவடிக்கைகளை முக்கியமாக முன்வைப்பவர் எனச் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

இந்த வேறுபாடுகள் சிறியவை, பரந்த அளவில் தந்திரோபாயரீதியிலானவையாகும். அமெரிக்கா வளர்ச்சியை ஆதரிக்கிறது என்றால், அது ஐரோப்பிய நிதிய முறையில்  இன்னும் அதிக பணத்தை உட்செலுத்த விரும்பி, வங்கிகளைப் பாதுகாக்க முனைகிறது. அதையொட்டி அமெரிக்க நிதிய நலன்கள் பாதுகாக்கப்படும், ஊதியங்கள் மற்றும் பணி நிலைமைகளைச் சரிவுறச் செய்யும் வகையில் கட்டுமானச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படலாம். மேலும் அமெரிக்கா ஓரளவு குறைந்த மட்டுப்படுத்தப்பட்ட உள்கட்டுமானத் திட்டங்களையும் செயல்படுத்த விரும்புகிறது. அவை ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு ஒரு ஏற்றம் கொடுத்து, அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கும் உதவும்.

இந்த அறிக்கை ஐரோப்பாவில் எப்படி வளர்ச்சியைத் தோற்றுவிப்பது என ஏற்பட்டுள்ள விவாதத்தை வரவேற்கிறது. அதே நேரத்தில் கட்டுமான அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டிய நிதிய உறுதிப்படுத்தலில் உறுதியான ஈடுபாடு தக்க வைக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. வேறுவிதமாகக் கூறினால், சிக்கன நடவடிக்கைகள், சமூகநலத் திட்டங்களை இலக்குக் கொண்ட அரசாங்கச் செலவுகளில் வெட்டுக்கள் என்பது தொடரும்.

வலியறுத்துவதில் சிறு வேறுபாடுகள் இருந்தாலும், அனைத்து G8 தலைவர்களும் 2008-09 நிதிய ஊக்க நடவடிக்கைகளுக்கு மீண்டும் திரும்ப வேண்டாம் என்பதில் உடன்பட்டனர். எப்படிப் பார்த்தாலும், அத்தகைய நடவடிக்கைகள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் உலக நிதியச் சந்தைகளில் இருந்து கடுமையான எதிர்ப்பை முகங்கொடுக்கையில் நடத்தப்பட முடியாது.

ஸ்பெயின், போர்த்துக்கல் அல்லது பிரான்ஸ் கூட வேலைகளுக்கு ஏற்றம் வழங்கும் நோக்கமுள்ள செலவு நடவடிக்கைகளை ஆரம்பித்தால், அவற்றின் பத்திரங்கள் நிதியச் சந்தைகளில் பாரியளவில் விற்பனையாகிவிடும். இது வட்டி விகிதங்களை அதிகப்படுத்தி ஒரு நிதிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

ஜேர்மனியைப் பொறுத்தவரை, சிக்கன நடவடிக்கைகள் தளர்த்தப்பட வேண்டும் என்பதற்கு மேர்க்கெலின் எதிர்ப்பு ஜேர்மனிய நிதி மூலதனத்தின் அச்சமான அது மீட்பு செயல்களுக்கு இன்னும் அதிகப் பணம் கொடுக்கும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டால் ஆழ்ந்த சகதியில் சிக்கிக் கொள்ளக்கூடும் என்பதைத்தான் பிரதிபலிக்கிறது.

அறிக்கையில் கல்வி மற்றும் நவீன உள்கட்டமைப்பில் முதலீட்டிற்கு அழைப்பு இருப்பதற்கு மேர்க்கெல் தன் ஆதரவைத் தெரிவித்தார். ஆனால், இதன் பொருள் மரபார்ந்த வகையில் ஊக்கம் என்பது அல்ல என்று சேர்த்துக் கொண்டார். அமெரிக்க அதிகாரிகளும் இதற்கு உடன்பட்டனர், வளர்ச்சி என்பதற்கு நேரடி அரசாங்கச்செலவு தேவையில்லை, ஆனால் அரச-தனியார் பங்காளித்தனத்தின் மூலமும் கடன் விதிகளைத் தளர்த்துவதின் மூலமும் வரலாம் என்று கூறியுள்ளனர்.

முறையான கூட்டம் முடிவுற்றபின் ஒபாமாவும் மேர்க்கெலும் மட்டும் தனியே சந்தித்து உரையாடியது அடிப்படை வேறுபாடுகள் ஏதும் இல்லை என்பதைத்தான் தெளிவுபடுத்தியது. வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், விவாதத்திற்குப்பின் செய்தியாளர்களுக்குத் தகவல் கொடுக்கையில், வளர்ச்சிக்கு ஊக்கம் என்பது நிதியச் சீர்திருத்தத்தின் இடத்தைப் பெறாது, ஆனால் இரண்டும் ஒன்றாக இணைந்து செல்லும் என்றார்.

 “யூரோப்பகுதியில் வளர்ச்சியைப் பெருக்க உடனடியான நடவடிக்கைகள் தேவை என்ற உணர்வுகள் பெருகியுள்ளன.... மேலும் சான்ஸ்லர் மேர்க்கெல் மற்றும் பிறரும் முக்கியத்துவம் காட்டியுள்ள நிதிய உறுதிப்படுத்தல் தொடரப்பட வேண்டும் என்றார் அவர்.

கிரேக்கத்தின் வருங்காலம் என்னும் முக்கிய பிரச்சினை குறித்து, உச்சிமாநாட்டின் அறிவிப்பு கிரேக்கம் யூரோப்பகுதியில் இருப்பது குறித்து நம் அக்கறையை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம், அதே நேரத்தில் அது தனது கடமைப்பாடுகளை மதிக்க வேண்டும். வேறுவிதமாகக் கூறினால், நாட்டை பொருளாதார நிலைமைகளில் 1930களுக்குப் பின் இல்லாத நிலையில் தள்ளியுள்ள சிக்கன நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என்பதாகும்.

உச்சிமாநாட்டுத் தலைவர்கள், நெருக்கடியை சமாளிக்கும் திட்டம் ஏதும் தயாரிக்காமல், எவரும் எது குறித்தும் உறுதிப்பாட்டைத் தெரிவிக்காமல், மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில் காம்ப் டேவிட்டை விட்டு அகன்றனர்.

பேச்சுக்கள் தொடங்குவதற்கு முன்பு, பிரித்தானிய அரசாங்கத்தின் தலைமைப் பொருளாதாரக் கணிப்பாளர் யூரோ வீழ்ந்தால் ஐக்கிய அரசின் பொருளாதாரம் நிரந்தரச் சேதம் அடையும், மீண்டும் அதே நிலைக்குத் திரும்பாது என்று எச்சரித்தார். ஐக்கிய அரசின் சான்ஸ்லர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன், யூரோப்பகுதியின் புயல்கள் மீண்டும் சக்தி பெற்றுள்ளன என்றார்.

உச்சிமாநாடு நடந்து கொண்டிருந்தபோதே, ஸ்பெயினின் உறுதிப்பாடு குறித்த புதுக் கவலைகள் வெளிப்பட்டன. ஏனெனில் வெள்ளியன்று மாலை ஒரு தகவல், 2011இல் அந்நாட்டின் பொதுப் பற்றாக்குறை நாட்டின் பகுதிகள் மூன்றில் கணக்குகள் திருத்தப்பட்டதால் முன்பு கூறப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.

2011 பொதுப் பற்றாக்குறை என்பது இப்பொழுது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.9% என்று உள்ளது. முந்தைய மதிப்பீடு 8.5% என இருந்தது. ஸ்பெயின் அரசாங்கத்தின் மோசமான நிலைமை குறித்த செய்தி 10 ஆண்டு அரசாங்கக் கடன் பத்திரங்களின் மீதான வட்டிவிகிதங்களில் அழுத்தம் கொடுக்கும். ஏற்கனவே 6% ஐ கடந்துவிட்ட இந்நிலைமை பொறுக்கவியலாத தரங்களை அடைந்துவிடும் எனக் கருதப்படுகின்றன.

பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நடவடிக்கைகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை என்றாலும். G8 தலைவர்கள் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க அழுத்தத்திற்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி, சிரியா பற்றிய தற்போதைய ஐக்கிய நாடுகள் நடவடிக்கை குழுவை வரவேற்று இன்னும் கூடுதலான ஐ.நா. நடவடிக்கைகள் பொருத்தமானவையா என பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானித்தனர்.

ஈரான் குறித்த அமெரிக்க நிலைப்பாட்டிற்கு ஆதரவில், அறிக்கை ஈரானின் அணுச்சக்தித் திட்டம் குறித்து பெரும் கவலையை கொண்டுள்ளது என்றும் அந்நாட்டு அரசாங்கம் தாமதமின்றி நிலுவையில் உள்ள அணுவாயுதத் திட்டம் தொடர்புடைய பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.

பொருளாதாரக் கவனத்தின் குவிப்பு இப்பொழுது இந்த வாரம் ஐரோப்பாவிற்குத் திரும்பும். அங்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் முறைசாரா உச்சிமாநாட்டை புதன் அன்று நடத்துகின்றனர். விவாதிக்கப்படும் விடயங்களில் ஒன்று, யூரோப் பகுதியில் 500 பில்லியன் யூரோ மீட்பு நிதி நேரடியாக ஐரோப்பிய வங்கிகளுக்கு மறுமூலதனத்தை அளிப்பதற்கும் யூரோப்பகுதிப் பத்திரங்களை வெளியிடுவதற்கும் அனுமதி வேண்டும் என்ற திட்டம் ஆகும்.

இத்திட்டங்கள் முன்னதாகவே கூறப்பட்டன, ஆனால் ஜேர்மனிய எதிர்ப்பின் காரணமாக நிராகரிக்கப்பட்டன. ஆனால் இப்பொழுது வங்கியில் இருந்து பணம் முழுவதையும் திரும்பஎடுத்துக் கொள்ளுவது என்பது ஐரோப்பிய வங்கி முறையில் சில பகுதிகளுக்குள் ஏற்பட்டுவிட்டது. இதற்குக் காரணம் கிரேக்க, ஸ்பெயின் வங்கிகளின் உறுதிப்பாடு குறித்து கடந்த வாரம் வினாக்கள் எழுந்து விட்டன.

இன்றைய பைனான்சியில் டைம்ஸில்  இப்பிரச்சினை குறித்து இரு விமர்சனங்கள் வந்துள்ளன.

கட்டுரையாளர் Gavyn Davies  கருத்துப்படி,வங்கியில் இருந்து முழுப்பணத்தையும் திரும்பஎடுத்துக் கொள்வது என்பது யூரோப்பகுதிக்குள் இப்பொழுது நடைபெறுகிறது. இதுவரை அது ஒப்புமையில் குறைவாக இருக்கின்றபோதும், ஆனால் அது அந்நிலைதான். கடந்தவாரம், இது தீவிர அதிகரிப்பு என்ற சைகையை காட்டியது. இதற்கு கொள்கை இயற்றுபவர்களிடம் இருந்து அவசர பிரதிபலிப்பு தேவை.

ஐரோப்பியப் பொருளாதார விமர்சகர் வொல்ப்காங் முன்சௌ ஸ்பெயினில் சேமித்து வைத்தவர்கள் பிரச்சனைக்குட்பட்ட Bankia குழுமத்தில் இருந்து 1 பில்லியன் யூரோக்களை எடுத்துக் கொண்டுவிட்டனர் என்ற செய்திகளைச் சுட்டிக்காட்டி இது வங்கி இருப்பு முழுவதையும் எடுத்துக் கொள்ளும் திட்டம் அல்ல, ஆனால் அதன் ஆரம்பமாகவும் இருக்கலாம் என்றார்.