சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek SYRIZA leader Tsipras pledges to repay banks in European tour

ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின்போது வங்கிகளுக்குக் கடனைத் திருப்பியளிப்பதாக கிரேக்க சிரிசா தலைவர் சிப்ரஸ் உறுதியளிக்கிறார்

By Alex Lantier
22 May 2012
use this version to print | Send feedback

தீவிரவாத இடது கூட்டணி (SYRIZA) என்னும் கிரேக்கத்தின் சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ் நேற்று பாரிஸுக்கு வருகை தந்து இடது முன்னணி (Left Front) பிரதிநிதிகளுடன் பேச்சுக்கள் நடத்தினார். இன்று அவர் பேர்லினுக்குப் பயணிக்கிறார். பேர்லினில் சிப்ரஸ் ஜேர்மனியின் இடது கட்சி (Left Party) தலைவர்கள் கிரிகோர் கீஸி, கிளவ்ஸ் ஏர்ன்ஸ்ட் ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.

பாரிஸில் சிப்ரஸ் ஸ்ராலினிச பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) தலைவரான Pierre Laurent ஐச் சந்தித்தார். மேலும் இடது முன்னணியின் இந்த வசந்தகால ஜனாதிபதித் தேர்தல்களின் வேட்பாளராக நின்ற Jean-Luc Melenchon ஐயும் சந்தித்தார். Laurent, Melenchon  ஆகியோருடன் இணைந்து செய்தியாளர் கூட்டத்தில் பேசியதைத் தவிர, சிப்ரஸ் தேசிய சட்டமன்றக் கட்டிடத்திற்கு முன் கூடியிருந்த 300 இடது முன்னணி உறுப்பினர்களுக்கும் உரையாற்றினார்.

அடுத்த மாதம் நடக்க இருக்கும் கிரேக்கத் தேர்தல்கள் பற்றிய கருத்துக் கணிப்பில் சிரிசா முன்னணியில் உள்ளது. இதற்குக் காரணம் அது 2009ல் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்தின்மீது சுமத்தி வரும் சிக்கன நடவடிக்கைகளைப் பற்றிக் விமர்சித்ததுதான். ஞாயிறன்று Kathemerini பத்திரிகை வெளியிட்ட கருத்துக் கணிப்பு சிரிசா பெரும்பான்மை வெற்றி பெறக்கூடும், ஜூன் 17 தேர்தல்களுக்குப் பின் அரசாங்கத்தை அமைக்கலாம் எனக் காட்டுகிறது. மே 6 தேர்தல்களுக்குப்பின் கிரேக்கத்தின் கட்சிகள் எதுவும் அரசாங்கம் அமைக்க முடியாத நிலையில் இத்தேர்தல்கள் நடக்க உள்ளன. மொத்தப் பதிவில் 28% கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சிரிசா கிரேக்கத்தின் முக்கிய வலதுசாரிக் கட்சியான 24% வாக்குகள் புதிய ஜனநாயகத்தை (New Democracy) விடவும் மற்றும் சமூக ஜனநாயக கட்சியை (PASOK) விடவும் முன்னணியில் இருக்கும்.

சிப்ரஸின் பயணத்தின் நோக்கம் பிணை எடுப்புக்கள் பற்றிய அவரது விமர்சனங்கள் இருந்தாலும், சிரிசா தேர்தல்களில் வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்தால் அவருடைய கரங்களில் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் என்று வங்கிகளுக்கும் பெரிய ஏகாதிபத்திய சக்திகளுக்கும் உத்தரவாதம் அளிப்பதுதான். Guardian இலும் பிரான்ஸின் வணிக ஏடான Les Echos இலும் சுருக்கமாக வந்துள்ள ராயட்டர்ஸுக்கு ஞாயிறன்று கொடுத்த நீண்ட பேட்டியில் சிப்ரஸ் தான் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு தருவதாகவும், வங்கிகளுக்குக் கடன்களை திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும், PASOK இனால் ஆரம்பிக்கப்பட்ட சீர்திருத்தங்களை தொடர இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

 முக்கியமான ஐரோப்பிய நாடுகள், பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவை நாம் என்ன நிலைப்பாடு கொண்டுள்ளோம் என்பதைக் காணவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் எதைப் பிரதிபலிக்கிறோம், எதை விரும்புகிறோம் என்பது பற்றி ஐரோப்பாவில் கொடுக்கப்படும் தகவல் சரியானதல்ல என்று சிப்ரஸ் ராய்ட்டர்ஸிடன் கூறினார். அதனால்தான் பயணத்தை மேற்கொண்டிருப்பாதகவும் கூறினார். நாங்கள் ஒன்றும் ஐரோப்பிய எதிர்ப்பு சக்திகள் அல்ல.

முந்தைய இரு பல பில்லியன் யூரோ வங்கிப் பிணையெடுப்புக்களில் கிரேக்கத்திற்கு வழங்கப்பட்ட ஐரோப்பிய வரி செலுத்துவோரின் நிதிகள் வீணடிக்கப்பட்டுவிட்டன என்று குறிப்பிட்ட சிப்ரஸ் வங்கிகளுக்கு திருப்பியளித்தலில் நல்ல நிலைமை உருவாக்கத் தான் விரும்புவதாகக் கூறினார்.

 ஐரோப்பிய ஒருமைப்பாடு, நிதியளிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம்; இது எங்கள் நீண்டக்கால சீர்திருத்தங்களுக்கு அடித்தளத்தை ஏற்படுத்தும். ஆனால் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்த கீழ்நோக்குப் போக்கில் இருந்து நாங்கள் தப்பிவிடமுடியும் என்பதை அறியவேண்டும். எங்களுக்கு வளர்ச்சி இருக்கும், அவர்கள் கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்கும் திறன் இருக்கும் என்று நாங்கள் அறியவேண்டும். தற்போதைய விதிகளின்படி பிணையெடுப்புக்கள் தொடர்ந்தால், பணத்தை நாங்கள் திருப்பிக் கொடுக்க முடியாது என்றார் அவர்.

ஒபாமா நிர்வாகத்தின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி ராய்ட்டர்ஸுடன் சிப்ரஸ் விவாதித்து, ஐரோப்பாவை விட கடுமை குறைவான மந்தநிலையை அங்கு வைத்திருப்பதற்கு நிர்வாகத்தினரையும் பாராட்டினார். ஒபாமாவும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும் கிரேக்கம் குறித்து அநேகமாக ஒரே மாதிரிகருத்துக்களைக் கொண்டுள்ளனர் என்பது இந்த வார இறுதியில் நடைபெற்ற காம்ப் டேவிட் G8உச்சிமாநாட்டில் இருந்து தெரிய வந்துள்ளது என்றும் கூறினார்.

பலமுறை அவர் முன்வைத்துள்ள நிலைப்பாட்டிற்கு சிப்ரஸ் மீண்டும் வந்துள்ளார். அதாவது பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள ஒபாமா நிர்வாகம் ஏற்றுள்ள கொள்கைகளை ஐரோப்பாவும் ஏற்க வேண்டும் என. மே 18 அன்று நியூ யோர்க் டைம்ஸிற்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் G8 இற்கு தான் வழங்கும் செய்தி [ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா] மேர்க்கலுக்கு அமெரிக்காவின் உதாரணத்தைப் பின்பற்ற வேண்டும் என்னும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அங்கு கடன் நெருக்கடி சின்ன நடவடிக்கைகள் மூலம் சமாளிக்கப்படவில்லை, விரிவாக்க அணுகுமுறைமூலம் கையாளப்படுகிறது என்று விளக்கினார்.

நியூ யோர்க் டைம்ஸ்,  திரு. சிப்ரசின் வாதங்கள் காம்ப் டேவிட்டில் G8 குழுத் தலைவர்கள் கூடியிருப்போர் சிலருடைய வாதங்களில் இருந்து அதிகம் வேறுபடவில்லை என குறிப்பிட்டிருந்தது.

ஒபாமாவும் புதிய பிரெஞ்சு அரசாங்கமும் நட்பு கொண்டவை என சிப்ரஸ் தெளிவாகக் காண்கிறார். ராய்ட்டர்ஸிடம், அவர் ஹாலண்ட்-ஒபாமா கூட்டத்தில், முக்கிய பிரச்சினை கிரேக்கத்தில் என்ன நடத்தப்பட வேண்டும் என்பதாகும். நேற்று வரை [அதாவது, G8 அதன் அறிக்கையை வெளியிடும்வரை], கிரேக்கத்தில் என்ன நடக்கும் என்பது கருதப்பட்டது: மக்களும் தொழிலாளர்களும் நசுக்கப்படுவர், தொழிலாளர்க்ள உரிமைகள் அகற்றப்படும்.... நீண்டநாட்களுக்கு பின்னர் முதல் தடவையாக எங்களிடம் மக்களுடைய நலன்களுக்காகவும் மற்றும் வங்கிகள், மூதலனத்திற்கு எதிராகவும் பேச்சுவார்த்தை நடாத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. என்றார்.

சிப்ரஸின் இறுதி வார்த்தைஜாலங்கள் சிரிசாவின் கொள்கைகளில் உள்ள அடிப்படை நேர்மையற்ற தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சிக்கன நடவடிக்கைகளைத் தான் எதிர்ப்பதாகவும் மக்களுக்கு பாதுகாவலாக இருப்பதாகவும் வாக்களாளர்களிடையே அழைப்புவிட்ட பின் தற்போது நேர்காணல்களில்  ஏகாதிபத்திய அரசாங்கங்களையும் ஐரோப்பாவில் இருக்கும் சிரிசாவின் சகபாராளுமன்ற உறுப்பினர்களையும் இலக்கு வைக்கும் நோக்கில் இப்பொழுது அவர் வேறு ஒரு குரலில் இசைக்கிறார். அங்கு சிரிசா தன் நோக்கங்கள் கிரேக்கத்தில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீதான அடக்குமுறை குறித்த விதிகளை தான் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தும் நோக்கம் கொண்டதாகத் தெரிவிக்கிறது. அதுவும் உலக நிதிய மூலதனத்திற்கு முழுப் பணத்தையும் தொழிலாள வர்க்கத்தின் அதிருப்தி வெடிக்காமல் தவிர்க்கும் முறையில் திருப்பி கொடுத்துவிடுவதாகக் கூறுகிறது.

தன் பங்கிற்கு சிரிசா அதன் நலன்கள் சர்வதேச அளவில் இருக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களுடன் பிணைந்துள்ளது என்பது பற்றி முற்றாக உணர்ந்துள்ளது.  தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பு பெருகக்கூடும் என்றும் அது அஞ்சுகிறது. நியூயோர்க் டைம்ஸிடம் சிப்ரஸ் கூறியுள்ளதுபோல், சிரிசாவின் வெற்றிக்குப் பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்தை யூரோப்பகுதியில் இருந்து அகற்றுவது என்னும் முடிவாக இருந்தால், அது நாம் அனைவரும் உட்கார்ந்து கொண்டிருக்கும் கிளையை வெட்டிவிடுவதற்கு ஒப்பாகும் என்றார்.

சிப்ரஸ் ஒபாமாவின் கொள்கைகளுக்கு ஆதரவைக் கொடுப்பதைவிட வேறு எதுவும் சிரிசாவின் திட்டத்தைத் தெளிவாக அம்பலப்படுத்தவில்லை. வங்கிகள் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் பொது நிதியத்தை வாஷிங்டனில் இருந்தும் $7.7 டிரில்லியனை மத்திய வங்கிக்கூட்டமைப்பு அச்சடித்ததில் இருந்தும் பெற்ற நிலையில், ஒபாமா தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறார். மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துவிட்டனர், சமூக நிலைமைகள் சிதைந்து கொண்டிருக்கின்றன, கல்விச் செலவுகள் தீவிரமாக உயர்ந்துள்ளன, தொழிலாளர்கள் பெரும் ஊதியக் குறைப்புக்களை எதிர்கொள்கின்றனர். கார்த்தொழிலில் புதிதாக வேலைக்கு சேர்க்கப்படும் தொழிலாளர்களுக்கு 50% தான் ஊதியம் என்பதனால் இது எடுத்துக்காட்டப்படுகிறது.

சிரிசா மற்றும் சர்வதேசரீதியாக இருக்கும் அதன் சக சிந்தனை அமைப்புக்களான பிரெஞ்சு இடது முன்னணி மற்றும் ஜேர்மனியில் இடது கட்சி ஆகியவற்றிற்கு உலக சோசலிச வலைத் தளம்  தொடர்ந்து காட்டும் எதிர்ப்பை இந்நிலைப்பாடு சரியென நிரூபிக்கின்றது.

கிரேக்கம் மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடி பற்றிய அதன் முன்னோக்கில் உலக சோசலிச வலைத் தளம், சிரிசாவை பொருளாதார சரிவைத் தவிர்ப்பதற்கு இன்னும் விரிவாக்கப்படும் கடன் திருப்பிக் கொடுத்தல் தேவை என்று கூறும் கிரேக்க முதலாளித்துவத்தின் ஒரு பிரிவின் சார்பாக உள்ளது; அதேபோல் மக்களுடைய எதிர்ப்பிற்கு சமாதானம் கூறும் வகையில் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறைக் குறைப்புக்களில் பெயரளவிற்கு போலிமாற்றங்கள் போதும் என்றும் கூறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தையும் யூரோவையும் உறுதியாக பாதுகாக்கும் என சிரிசா வலியுறுத்துகிறது. அதே நேரத்தில் தன்னை சிக்கனத்தை எதிர்க்கும் கட்சி என்றும் காட்டிக் கொள்கிறது. இந்த வட்டம் சதுரமாக்கப்பட முடியாததாகும். சிக்கன நடவடிக்கைகளும், தொழிலாள வர்க்கத்தின் மீதும் இன்னும் ஆழ்ந்த தாக்குதல்கள் என்பதும், வங்கியாளர்களின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அது பாதுகாக்க விரும்பும் முதலாளித்துவ ஒழுங்கின் ஒருங்கிணைந்த தேவையாகும். என எழுதியது.

முதலாளித்துவத்திற்கு ஒரு சோசலிச எதிர்ப்பை சிரிசா பிரதிபலிக்கவில்லை. அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பிற்குத் தயாரிப்புசெய்யும் பாராளுமன்றவாதிகள், தமது சொந்தவாழ்விற்காக வசதி உடைய அடுக்கைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இது ஐரோப்பிய செய்தி ஊடகத்தால் நன்கு அறிந்து கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சமூக வகையினரைப் பற்றி அதற்குக் கணிசமான அனுபவம் உண்டு என்பது கூறப்படவேண்டும்.

சிப்ரஸின் உதவியாளர்களை அவர்களுடைய “Louis Vuitton நாகரீக கைப்பைகள், நாகரீக கறுப்புக் கண்ணாடிகளுக்காகப் பாராட்டும் கார்டியன், சிப்ரஸ் இன் ராய்ட்டர்ஸிற்கான நேர்காணலை கணிப்பிடும் வித்ததில் சிப்ரஸ் அதிகாரத்திற்கு தயாராவது போல் தோன்றுகிறார், தன் குரலின் நயத்தை நிதானமாக்குகிறார் என களிப்புடன் முடிக்கிறது. ஐரோப்பிய குட்டி முதலாளித்துவ இடதுகளின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் தொடர்பாக இந்த மதிப்பீட்டிற்கு அதிகமாக சேர்ப்பதற்கு எதுவுமில்லை.