சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Sharp divisions on eve of EU summit

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கடுமையான பிளவுகள்

By Stefan Steinberg
23 May 2012

use this version to print | Send feedback

புதன் அன்று ஐரோப்பிய தலைவர்கள் ஆழமடையும் ஐரோப்பிய நெருக்கடி குறித்து விவாதிக்கக் கூடுகின்றனர். உச்சிமாநாட்டிற்கு முன்பு, பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (OECD) மந்தநிலைப் போக்குகள் தீவிரமடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பலவீனமான, மிகச் சீரற்ற சர்வதேச மீட்பு நிலை யூரோப்பகுதியிலுள்ள நெருக்கடியினால் முற்றிலும் கவிழ்க்கப்படலாம் என்று செவ்வாயன்று வெளியிடப்பட்ட OECD பொருளாதார அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

தன்னுடைய 34 அங்கத்துவ நாடுகளின் வளர்ச்சி பற்றிய முன்கணிப்பான ஆண்டு விகிதத்தை 2011இன் 1.8% என்பதில் இருந்து 2012 இல் 1.6% என OECD குறைத்துள்ளதாக குறிப்பிட்டது. உலக வளர்ச்சியை கீழே இழுப்பதில் முக்கிய குற்றவாளி ஐரோப்பாதான் என்பதை அறிக்கை தெளிவாக்கியுள்ளது. யூரோப்பகுதியிலுள்ள நெருக்கடி, உலகப்பொருளாதாரம் எதிர்கொள்ளும் தனித்த மிகப்பெரிய கீழ்நோக்கிய அபாயமாக உள்ளது என்று OECD தலைமைப் பொருளாதார வல்லுனர் பியர் கார்லோ படோவன் செவ்வாயன்று கூறினார்.

முக்கூட்டு எனப்படும் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவை சுமத்தியுள்ள சிக்கனக் கொள்கைகளை பெரும் குறைகூறலுக்கு உள்ளாக்கும் வகையில் அறிக்கை கண்டம் முழுவதும் இப்பொழுது வங்கி நெருக்கடி புதுப்பிக்கப்படும் அபாயத்தை எடுத்துக்காட்டியுள்ளது. யூரோப் பகுதியில் செய்யப்படும் திருத்தங்கள் இப்பொழுது குறைந்த அல்லது எதிர்மறை வளர்ச்சி மற்றும் கடன்குறைத்தல் என்ற பின்னணியில் நடைபெறுகின்றன. இது உயர்ந்த அரசாங்கங்க கடன் அதிகரிப்பு, பலவீனமான வங்கி முறைகள், மிக அதிக நிதிய உறுதிப்படுத்தல், குறைந்த வளர்ச்சி ஆகியவை உள்ளடங்கியுள்ள ஒரு தீய வட்டத்தின் அபாயங்களை தூண்டியுள்ளது என்று அறிக்கை கூறியுள்ளது.  

இம்மாதம் முன்னதாக Eurostat குறிப்பிட்டுள்ளபடி, ஐரோப்பாவில் பெரும் பகுதிகளில் மந்தநிலை ஆழமடையும் போக்கு பற்றி இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. யூரோ பகுதியில் உள்ள 17 நாடுகளில் 7 நாடுகள் உத்தியோகபூர்வமாக மந்தநிலையில் உள்ளன என்று Eurostat அறிவித்துள்ளது. முழுமையாக ஐரோப்பா மந்தநிலையைத் தவிர்த்துள்ள ஒரே காரணம் ஜேர்மனியப் பொருளாதாரத்தின் வலுவான வளர்ச்சிதான். இது ஐரோப்பாவில் உள்ள நலிந்த சந்தைகளுக்கு ஈடுகொடுத்து நிரப்பும் திறனைக் கொண்டுள்ளதுடன், தன்னுடைய ஏற்றுமதிகளை உலகின் மற்ற பகுதிகளுக்கு, குறிப்பாக சீனா, அமெரிக்கா மற்றும் ஆசியாவிற்கு அதிகரித்துள்ளது.

தனித்தனி ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பெருகும் பொருளாதாரப் பிளவுகளுக்கு சமாந்தரமாக, பொருளாதார நெருக்கடி கட்டுப்பாட்டை விட்டு மீறாமல் எவ்வாறு தடுக்கப்படமுடியும் என்பது குறித்த அரசியல் வேறுபாடுகளும் பெருகியுள்ளன.

கடந்த வார இறுதியில் காம்ப் டேவிட்டில் நடைபெற்ற G8 உச்சிமாநாட்டின்போது, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, ஜேர்மனிக்கு எதிராக பிரான்ஸ் பக்கம் சேர்ந்து கொண்டார். திங்களன்று சிக்காகோவில் நேட்டோ உச்சிமாநாட்டின் முடிவிற்குப் பின், ஒபாமா ஐரோப்பிய நெருக்கடி பற்றி மீண்டும் கூறத் தலைப்பட்டு, கிரேக்கப் பொருளாதாரத்தின் சரிவைத் தடுக்கவும் ஸ்பெயின், இத்தாலியில் வங்கித் துறையில் நெருக்கடி பரவுவதைத் தடுப்பதற்குமான பிரான்ஸ் முன்வைத்துள்ள பல திட்டங்களுக்கு வெளிப்படையான ஆதரவைக் கொடுத்தார்.

பிரான்சின் முன்மொழிவுகளில் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு நிதிகளில் பெரும் அதிகரிப்பு, ஒரு புதிய ஐரோப்பா தழுவிய நிதிய பொறிமுறை  (யூரோப் பத்திரங்கள் எனப்படுபவை) அறிமுகப்படுத்தப்படுத்துதல், குறைந்த வட்டி விகிதங்கள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு வளர்ச்சி மூலோபாயம் மற்றும் வங்கிகளுக்கு பாரிய நிதிகள் வழங்குதல் ஆகியவை உள்ளன.

ஜேர்மனியின் பெயரைச் சொல்லவில்லை என்றாலும், ஒபாமாவின் கருத்துக்கள் பரந்த அளவில் ஐரோப்பாவில் மிகப் பெரிய பொருளாதாரமும் உலகின் நான்காம் மிகப் பெரிய பொருளாதாரமுமான ஜேர்மனி, வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்கவும், குறிப்பிட்ட உள்கட்டுமானத்துறைகள் வளர்ச்சிக்கு கணிசமாக கூடுதல் பணம் வழங்க முன்வரச்செய்ய அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சி எனக் கருதப்பட்டது. பிரெஞ்சுத் திட்டம் பிரித்தானிய அரசாங்கம் மற்றும் இத்தாலியப் பிரதம மந்திரி மரியோ மோன்டி ஆகியோரின் ஆதரவையும் கொண்டுள்ளது.

தன் நாட்டின் வங்கிகளில் சேமிப்பாளர்கள் பணத்தைத் திரும்பப் பெற வேகம் காட்டக்கூடும் என்ற அச்சத்தால் கவலையுற்ற ஸ்பெயினின் பிரதம மந்திரி மரியனோ ராஜோய் யூரோப் பத்திரங்கள் செயல்படுத்தப்படுவது தாமதம் ஆகும் என்றும் தான் உடனடியான நிதிய ஆதரவை நாடுவதற்கு முயற்சி செய்வதாக தெளிவுபடுத்தினார்.

திங்களன்று, பிரெஞ்சு நிதி மந்திரி பியர் மொஸ்கோவிச்சி செய்தியாளர்களிடம் பிரெஞ்சு அரசாங்கம் யூரோப் பத்திரங்களை மற்ற நடவடிக்கைகளுடன் சேர்த்து புதன் உச்சிமாநாட்டு செயற்பட்டியலில் வைக்க இருப்பதாகக் கூறினார்.

அன்றே பேர்லினில் இருந்து பிரதிபலிப்பு வந்தது, அது அப்பட்டமாகவும் இருந்தது. ஜேர்மனிய நிதிய அமைச்சரகத்தின் சார்பில் பேசிய ஸ்ரெபான் கெம்பீட்டர் ஜேர்மன் பொது வானொலியில் பின்வருமாறு கூறினார்: ஐரோப்பிய நிதியக் கொள்கை ஒருங்கிணைக்கப்படாதவரை, யூரோப்பகுதிப் பத்திரங்கள் பொதுவாக வெளியிடுவதற்கு நிதியளிப்பதை நாங்கள் முற்றிலும் நிராகரிக்கிறோம் என்று பல முறை தெளிவாக்கியுள்ளோம்.

ஜேர்மன் முதலாளித்துவத்தின் செல்வாக்கு மிகுந்த பிரிவுகள் ஜேர்மனிய அரசாங்கத்திற்கும் நிதிய அமைச்சரகத்திற்கும் தங்கள் ஆதரவை வலியுறுத்தின. செவ்வாய் பதிப்பில் Handelsblatt செய்தித்தாள் முழுவதும் முக்கிய வணிகர்கள் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் யூரோப் பத்திரங்கள் அல்லது எந்த புதிய முக்கிய நிதிய உட்செலுத்துதல்களும் ஜேர்மனியினால் பலவீனமுற்று இருக்கும் ஐரோப்பியப் பொருளாதாரங்களுக்கு பிணை கொடுப்பதற்குக் கூடாது எனக் கடுமையாக வாதிட்ட கட்டுரைகள் வந்தன.

உச்சிமாநாட்டிற்கு முன்னதான விவாதத்தில் பங்கு பெற்ற முக்கிய நபர் ஒருவர் ஜோர்க் அஸ்முசென் ஆவார். இவர் ஐரோப்பிய மத்திய வங்கியின் குழுவில் ஜேர்மனியின் சார்பில் உள்ளவர். திங்களன்று ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைமையகமான பிராங்க்பேர்ட் நகரில் ஆற்றிய உரையில் அஸ்முசென் யூரோப்பகுதிக்கு உறுதியாக நிதிய ஆட்சிமுறை தேவை என்று அழைப்புவிடுத்து, இருக்கும் நிதிய உடன்பாட்டில் எந்த மறுபேச்சுவார்த்தைகளுக்கும் இடம் இல்லை என்றார். ஒரு வளர்ச்சிக் கூறுபாட்டில் மையமாக தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்கள் இருக்க வேண்டும் என்றும் அவர் தெளிவாகக் கூறிவிட்டார்.

யூரோப்பத்திரத் தீர்வு ஒன்றையும் அஸ்முசென் நிராகரித்து, தன்னுடைய திட்டம் ஒரு இரு அடுக்கு உடைய ஐரோப்பா, அதற்கு நிதிகள் ஐரோப்பிய வரவுசெலவுத்திட்டம் மற்றும் நிதியச் செயற்பாட்டு வரிகள் அல்லது ரொபின் வரி -Tobin tax- மூலம் எழுப்பப்பட வேண்டும் என்றார். அஸ்மூசென் ஐரோப்பிய ஒற்றியத்தை பால்கன் பிரதேசத்திற்கு விரிவாக்குவதற்கு எதிராகவும் வாதாடி, துருக்கியை இணைத்துக்கொள்வதும் நீண்டகாலத்திற்கு கைவிடப்படவேண்டும் என்றும் கூறினார்.

வளர்ச்சிக் கூறுபாட்டில் என்ன உள்ளடங்கியிருக்க வேண்டும், அதற்கு எவர் நிதியளிக்க வேண்டும் என்பதில் ஐரோப்பாவிற்குள் கணிசமான பிளவுகள் இருந்தாலும், எல்லா ஐரோப்பிய அரசாங்கங்கள், அமெரிக்கா மற்றும் OECD இன் பிரிவுகளுக்குள் சிக்கன நடவடிக்கைகள் தொடரப்படவேண்டும் என்பதில் பரந்த ஒற்றுமை இருந்தது. இத்துடன் ஜேர்மனிய முன்மாதிரியிலான தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும், ஒவ்வொறு நாட்டிலும் ஒரு பெரிய குறைவூதிய தொகுப்பினை நிறுவதலை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதிலும் பரந்த உடன்பாடு இருந்தது.