சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government bails out automaker PSA

கார்த்தயாரிப்பு நிறுவனமான PSA க்கு பிரெஞ்சு அரசாங்கம் பிணையளிக்கிறது

By Antoine Lerougetel and Alex Lantier
27 October 2012
use this version to print | Send feedback

வியாழனன்று பிரெஞ்சு அரசாங்கம் 5 முதல் 7 பில்லியன் யூரோக்கள் (அமெரிக்க டொலர் 6.5 முதல் 9.1 பில்லியன்) பிணை நிதியைக் கார்த்தயாரிப்பு நிறுவனமான PSA Peugeot-Citroen க்கு  அதனுடைய கடன் வங்கியான Banque PSA Finance (BPF) மூலம் அளிப்பதாக PSA  நிர்வாகத்துடனும் தொழிற்சங்க அமைப்புக்களுடனும் பேச்சுக்கள் நடத்தியபின் அறிவித்தது.

2012 ல் முதல் அரையாண்டில் PSA கிட்டத்தட்ட 1 பில்லியன் யூரோக்கள் நஷ்டம் அடைந்தது; அதனுடைய பங்குகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 15.21 யூரோவில் இருந்து வியாழனன்று 5.21 யூரோக்கள் எனச் சரிந்தன. அதன் கடன்தர மதிப்பு இந்த மாதம் Moody நிறுவனத்தால் Ba2  ல் இருந்து Ba3 எனக் குறைக்கப்பட்டது; இது முதலீட்டுத் தர அளவை விட மூன்று படிகள் குறைவு ஆகும்; ஆனால் இது ஒரு “junk” தகுதிக்குத் தவிர்க்க முடியாமல் தள்ளப்படும் என்ற எதிர்பார்ப்புக்களுக்கு இடையே இது வந்துள்ளது.

PSA உடைய நெருக்கடி ஐரோப்பிய கார்ச் சந்தை மற்றும் பரந்த அளவில் ஐரோப்பியப் பொருளாதாரச் சரிவின் ஒரு பகுதியாகும். ஐரோப்பாவில் கார் விற்பனை 2009 மந்தநிலைக்கு முன்பு இருந்த 16 முதல் 17 மில்லியனில் இருந்து 2013ல் 13 மில்லியனுக்குக் குறைந்துவிட்டது; ஐரோப்பிய கார்த் தயாரிப்புத் துறையானது 35 சதவிகிதம் கூடுதல் உற்பத்தியைக் கொண்டுள்ளது என்ற நிலையில் இப்பொழுது இது உள்ளது.

PSA குறிப்பாக தெற்கு ஐரோப்பிய நாடுகளில் விற்பனைச் சரிவினால் இடருற்றுள்ளது; இந்நாடுகளில் பெரும்பாலானவை 2012ன் ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியம் சுமத்திய ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளைச் செயல்படுத்தின; PSA உடைய உலகம் முழுவதுமான விற்பனையும் 13 சதவிகிதம் சரிந்து 1.6 மில்லியன் வாகனங்கள் என ஆயிற்று; அதன் முக்கிய தேசிய சந்தைகள் அனைத்திலும் விற்பனைகள் குறைந்தன: இத்தாலி (-21.5%), பிரான்ஸ் (-13.3%), மற்றும் ஸ்பெயின் (-10.2%).

பிரெஞ்சு வரி செலுத்துவோரிடம் இருந்து பெரும் நிதி பெற்றாலும், PSA அதன் 1 பில்லியன் யூரோ செலவுக் குறைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக 8,000 வேலைகளை அகற்றும் முடிவை மாற்ற மறுத்துவிட்டது. அதன் திட்டத்தில் வடக்கு பாரிஸில் ஒல்னே ஆலையை அதன் 3,300 தொழிலாளர் தொகுப்பை வேலைநீக்கம் செய்து மூடுதல், ரென் ஆலையில 1,400 வேலைகளை தகர்க்கப்படுதல் ஆகியவையும் அடங்கியுள்ளன.

தொழில்துறை புத்துயிர்ப்பு மந்திரி Arnaud Montebourg இன் அற்ப திட்டமான சில நூறு வேலைகளையாவது காப்பாற்றுங்கள்என்று PSA  இடம் கூறியது செவிடர் காதில் விழுந்த ஒலிபோல் ஆயிற்று.

PSA ஒல்னே ஆலையில் இருக்கும் தொழிலாளர்களில் பாதிப் பேருக்காவது உள் அமைப்பு மறு வேலைகள்  Poissy ஆலையிலும் இன்னும் பிற இடங்களில் கொடுப்பதாக உறுதியளித்துள்ளது. ஆனால் இதற்காக மற்ற ஆலைகளில் தற்பொழுது வேலையில் இருக்கும் தற்காலிகத் தொழிலாளர்கள் அகற்றப்பட வேண்டியிருக்கும்.

தன்னுடைய பங்கிற்கு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் அரசாங்கம் (PS) PSA  க்குள் தனக்கு இருக்கும் வெளிப்படையான செல்வாக்கைக் குறைக்க முற்படுகிறது; இதற்கு ஈடாக அது வரிப்பணத்தில் ஏராளமான அளவை ஒதுக்கத் தயாராக உள்ளது. PSA   உடைய தலைமை நிர்வாக அதிகாரி பிலிப் வாரன் தன் நிர்வாகம் ஒரு கூடுதல் அதிகாரியை நிறுவனத்தின் நிர்வாக அதிகாரம் இல்லாத மேற்பார்வைக் குழுவில் நியமிக்கப் போவதாகக் கூறியுள்ளார். வாரன் கூற்றுப்படி, இந்த அதிகாரி சுதந்திரமாக இருப்பார், அரசாங்கத்துடன் சிறப்பு உறவைக் கொண்டிருப்பார்.

ஆனால், நடைமுறையில் ஹாலண்ட் நிர்வாகமானது PSA நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் நெருக்கமாக வேலைசெய்து, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு திட்டமிடும்; இது கொடுக்கும் பிணை எடுப்புச் செலவு PSA நிர்வாகத்தின் மீது கணிசமான செல்வாக்கைக் கொடுக்கிறது.

பாரிசானது 7 பில்லியன் யூரோக்களை PSA  மீது செலவழிக்கத் தயாராக இருக்கும் நிலையில் நிறுவனத்தின் முழு மூலோபாயக் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும் போதுமானது ஆகும்; இதையொட்டி அது பங்குச் சந்தையிலுள்ள நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடியும்ஒரு முறை அல்ல, மூன்று முறைகள். PSA  உடைய சந்தை மூலதனம் வியாழனையொட்டி 1.9 பில்லியன் யூரோக்கள்தான்; இதற்குக் காரணம் அதன் பங்கு விலைச் சரிவுதான்.

ஆனால் ஹாலண்ட் நிர்வாகம் இந்த மூலோபாயத்தைத் தொடரவில்லை. அதிக ஊதியங்கள், உற்பத்தி மற்றும் வேலைகள் என்று அரச உடைமையானால் PSA  மீது வரக்கூடிய தேவைகளைக் கண்டு அது அஞ்சுவதும் எதிர்ப்பதும் மட்டும் இல்லாமல், PSA தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட இருக்கும் வெட்டுக்களையொட்டி மக்கள் முன்பு அது பொறுப்பை ஏற்கவும் தயாராக இல்லை.

ஆளும் வர்க்கம் ஐரோப்பிய கார்ச் சந்தைச் சரிவிற்கு விடையிறுக்கும் வகையில் வரலாற்று வகையிலான தாக்குதல்களை தொழில்துறை தொழிலாளர்கள் மீது ஏற்படுத்துவதற்கு திட்டங்களைக் கொண்டுள்ளது; ஐரோப்பா முழுவதும் வர்க்க உறவுகளில் ஓர் ஆழ்ந்த மாற்றம் வரவுள்ளது.

இவ்வர்க்கத்தினர் தங்கள் திட்டங்களை முழு நனவுடன் அமெரிக்காவில் 2009ம் ஆண்டு கார்த் தயாரிப்புத் துறை பிணை எடுப்பில் கொண்டுவந்த மாற்றங்களின் மாதிரியில் ஐரோப்பாவிலும் கொண்டுவர முற்படுகின்றனர்; அப்பொழுது ஒபாமா நிர்வாகம் அமெரிக்கக் கார்த் தயாரிப்புத் துறையில்  GM மற்றும் Chrysler  ஆகியவற்றில் ஊதியங்களையும் வேலைகளையும் வெட்டியது; இவை 2008 வோல் ஸ்ட்ரீட் சரிவினால் பாதிக்கப்பட்டவை ஆகும். அமெரிக்காவில் கார்த் தொழிலில் புதிதாக வேலைக்குச் சேருபவர்களின் ஊதியங்கள் பாதியாக, மணிக்கு $10 டொலர் முதல் $14 டொலர்என்று குறைக்கப்பட்டன.

அரச தலையீடு Peugeot ஐ அபாய இடருக்கு உட்படுத்துகிறதுஎன்ற தலைப்பில் பைனான்சியல் டைம்ஸ் சமீபத்தில் ஒரு தலையங்கத்தில் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஆலோசனை தெரிவித்தது: ஒரு நாட்டின் பெருமிதமான நிறுவனம் என்று காணப்படும் தொழில்துறையில் வேலை இழப்புக்களைக் காண்பது அரசாங்கத்திற்கு வேதனை தரும். மந்திரிகள் இதையொட்டி ஆதரவிற்கு அட்லான்டிக்கை கடந்து காணவேண்டும். 2009ம் ஆண்டு அமெரிக்க மற்றும் கனேடிய அரசாங்கங்கள் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் கிறைஸ்லருக்குப் பிணை எடுப்புக் கொடுத்தன. தங்கள் ஈடுபாட்டை நிறுவனத்தை திவால்தன்மை மூலம் கடந்து, வேலைகள் குறைப்பு, நஷ்டம் தரும் பிரிவுகளை அகற்றுதல் மற்றும் அரை டஜன் ஆலைகளுக்கும் மேலாக மூடுதல் என்ற வகையில் வழிநடத்தின. நிர்வாகத்தில் இருந்து வாஷிங்டன் சிறிய தொடர்பும் கொண்டிருக்கவில்லை. இன்று இரு நிறுவனங்களும் ஆரோக்கியமாகிவிட்டன.

இது இதுவரை ஹாலண்ட் தொடர்ந்துவரும் கொள்கைகளை விளக்குவது மட்டும் இல்லாமல், அவருடைய நிர்வாகம் கார்த் தொழிலுக்காக கோரிய ஸர்டோரியஸ் அறிக்கையில் அவர் பெற்ற ஆலோசனைகளுடனும் இணைந்துள்ளது. அந்த அறிக்கை வேலைகள் மற்றும் உற்பத்தி அளவுகளில் கணிசமான வெட்டுக்களுக்கு அழைப்பு விடுத்தது.

அமெரிக்கக் கார்த் தயாரிப்புத் துறையில் வந்த பிணை எடுப்பு வகை மாதிரிகள் போல் ஐரோப்பாவிலுள்ள நிலைமைகளைச் சமாளிக்கவும் முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. PSA இல் முழுநேரப் பணியாளர்களுக்குக் கொடுக்கப்படும் சராசரி 1,600 யூரோக்களுடன் ஒப்பிடுகையில் தற்காலிக தொழிலாளர்களுக்கு 1,000 யூரோக்கள் மாதத்திற்கு என்பதை ஒட்டித்தான் ஊதியம் கொடுக்கப்படுகின்றது. அவர்களுடைய குறைந்த ஊதியங்கள் தொழிலாளர் செலவுகளைக் குறைக்கும் PSA உடைய உந்துதலில் ஒரு வெளிப்படையான அடையாளமாக விளங்கும்.

ஹாலண்டும் PSA  உம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் உதவியை பிரான்ஸிலும் சர்வதேச அளவிலும் நம்ப வேண்டியிருக்கும். 2009ல் அமெரிக்கப் பிணை எடுப்பின்போது UAW  எனப்படும் ஐக்கியக் கார்த் தொழிலாளர்கள் சங்கம் தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள், சுகாதார மற்றும் ஓய்வூதிய நலன்களில் ஆழ்ந்த வெட்டுக்களை மேற்பார்வையிட்டது; இதற்கு ஈடாக இது ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் சுகாதாரப் பாதுகாப்பு நிதியின் மீதான பெரும்பான்மை கொடுக்கும் பங்குகள் மீது கட்டுப்பாட்டைப் பெற்றது. இதையொட்டி அது அமெரிக்கக் கார் நிறுவனங்களில் பெரிய பங்குதாரராக மாறியது: இதனால் தன் உறுப்பினர்களையே சுரண்டுவதில் அதற்கு நேரடி நிதிய நலன் ஏற்பட்டது.

ஐரோப்பிய கார்த்துறை எஜமானர்களும் தொழிற்சங்க அதிகாரிகளும் இப்பொழுது அமெரிக்க எஜமானர்கள், சங்கத் தலைவர்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகின்றனர்; பிந்தையவர்கள் அமெரிக்கப் பிணை எடுப்பிற்கு வழிவகுத்தனர். PSA மூலோபாயத்தின் ஒரு பகுதி GM உடன் பங்காளியாக வேண்டும் என்பதாகும்; ஏனெனில் அந்நிறுவனம் இப்பொழுது அதன் ஜேர்மனியில் Bochum இல் இருக்கும் ஓப்பல் ஆலை மற்றும் பிரித்தானியாவில் எல்ஸ்மியரில் இருக்கும் வாக்ஸ்ஹால் ஆலை ஆகியவற்றை மூட உள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ், PSA ல் 7சதவிகித பங்குகளை வாங்கியுள்ளது; இரு நிறுவனங்களும் இயைந்து செயல்படும் முறையை வேலைகளை வெட்டவும், உற்பத்தி அளவைக் குறைக்கவும் இணைந்து செயல்படுகின்றன. இவை ஆண்டுச் செலவுகளை 2 பில்லியன் டாலர் குறைப்பதற்காக தளவாடங்கள், வாங்குதல், வாகனத் திட்டம் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கின்றன.

உயர்மட்ட UAW அதிகாரி பொப் கிங், ஓப்பல் நிர்வாகம் மற்றும் ஜேர்மனியின் IG Metall தொழிற்சங்கம்ஆகியவற்றுடன் செயல்படுகிறார்; பிந்தையது பிரான்சின் ஸ்ராலினிச ஆதிக்கத்திற்கு உட்பட்ட CGT எனப்படும் தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பின் ஒரு பங்காளியாகும்.