சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The rise of separatist agitation in Europe 

ஐரோப்பாவில் பிரிவினைவாத கிளர்ச்சிகளின் எழுச்சி

Chris Marsden
30 October 2012
use this version to print | Send feedback

ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி, ஸ்காட்லாந்து மற்றும் ஐரோப்பாவில் பிற இடங்களில் புதிய, சிறு அரசுகளை தோற்றுவிக்க ஆதரவாக வாதிடும் கட்சிகள் சமீப மாதங்களில் ஆதரவு பெறும் உதாரணங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் காணக்கூடியதாக இருந்தது.

இத்தகைய போக்குகளுக்கான ஆதரவின் வளர்ச்சி ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய முக்கூட்டின் உத்தரவுகளின்படி மற்றும் வங்கிகள் மற்றும் உலக ஊகவணிகர்களின் வேண்டுகோளின்படியும் மத்திய அரசாங்கங்கள் சுமத்தும் மிருகத்தன வெட்டுக்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளினால் எரியூட்டப்படுகின்றன. ஆனால் இந்த சமூக துன்பங்கள் நியாயமானதாக இருந்தாலும் அதனால் அரசியல் ஆதாயம் பெறுவோர், சுரண்டப்படும் பரந்த மக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்று கருதமுடியாது.

பிரிவினைவாதத்திற்கு ஆதரவு கொடுக்கும் அனைத்துக் கட்சிகளும் முதலாளித்துவ மற்றும் மத்தியதர உயரடுக்கினரின் சார்பாக பேசுகின்றனர். அவை அவர்களுடைய பிராந்தியங்களில் இருக்கும் ஓரளவான அதிக செல்வம் அவர்களுக்கு இன்னும் அதிக சிறப்புரிமைகளுள்ள வாழ்வை அனுமதிக்கும் என்ற முடிவிற்கு வந்துள்ளனர். இதன்மூலம் அவர்களும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவத்தை பெற்று, வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் ஆணைகளை தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை நடத்த வசதியானது எனக் கருதுகின்றனர்.

மிக முக்கியமான பிரிவினைவாத இயக்கங்கள் அனைத்தும் அந்நாடுகளின் கூடுதலான செழிப்பு வாய்ந்த பிராந்தியங்களில் இருந்து வெளிப்பட்டுள்ளன. அனைத்துமே வறிய பிராந்தியங்களுக்கு மத்திய அரசின் வரிவதிப்பிலிருந்து வழங்கப்படும் மானிய உதவித்தொகைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் மதிப்பான சொத்துக்கள் உள்ளூர் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுகின்றன. இவை அனைத்தும் பெரிய தேசியவாத அமைப்புக்கள் சில ஒரு இடதுமுகத்தைக் காட்டும் முயற்சியை, அதுவும் வெளிப்படையாக காட்டிக்கொள்ளுவதை மாற்றிவிடவில்லை. அதேபோல் ஏராளமான போலி இடது போக்குகளும் இவற்றைப் பின்பற்றுகின்றன.

ஸ்பெயினில் இரு சக்தி வாய்ந்த இயக்கங்கள் பாஸ்க் மற்றும் காட்டலான் பிராந்தியங்களில் மையம் கொண்டுள்ளன. பாஸ்க் ஸ்பெயினின் செல்வம் கொழிக்கும் பிராந்தியங்களில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தலா நபர் வருமானம் ஆகியவற்றில் ஒன்றாகும். காட்டலான் இரண்டாவது செழிப்பு மிக அதிகம் உடைய பிராந்தியம் ஆகும்.

கடந்த மாதம் 1.5 மில்லியன் காட்டலானியர்கள் பார்சிலோனாவில் அணிவகுத்து சென்று ஐரோப்பாவிற்குள் ஒரு புதிய தேசம் என்ற பதாகையின் கீழ் ஒரு தனி அரசுக்கு அழைப்பு விடுத்தனர். காட்டலானிய பிராந்திய அரசாங்கம் கடமையுணர்வுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கன நடவடிக்கைக்காக கோரப்படும் ஒவ்வொரு தேவையையும் செயல்படுத்திவந்துள்ளது. ஆனால் இன்னமும் அது மிக அதிகமாக 44 பில்லியன் யூரோக்கள் கடனைக் கொண்டிருப்பதுடன், அதன் கடன் தரமும் மிகக்கீழான மட்டத்தில் ஆக்கப்பட்ட நிலையில் உள்ளது.

மேலாதிக்கம் கொண்ட Convergencia i Unio (இணைதல், ஒன்றியத்திற்கான) அமைப்பின் தலைவர் ஆர்துர் மாஸ் (Artur Mas) சுதந்திரத்திற்காக வாக்கெடுப்பு தேவை என்னும் கருத்தை முன்வைத்துள்ளார். ஸ்பெயினுக்குள் சுமைகள் பகிர்ந்து கொடுப்பது நியாயமற்றது, விசுவாசமற்றது என்றும் கூறியுள்ளார். இவர் வெளிப்படையாக அதிக வசதி உடையவர்களை பற்றிப் பேசுவதுடன், காட்டலோனியாவின் அதிருப்தியை ஜேர்மனி, பிரான்ஸ் இன்னும் பிற முக்கிய அரசுகள் தெற்கு ஐரோப்பாவின் வறிய நாடுகளான கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயினுக்கு உதவாதற்கான குற்றச்சாட்டுக்களுடன் ஒப்பிடுகின்றார்.

பேர்லின் மற்றும் பாரிஸ் ஆகியவை இந்நாடுகள் மீது சுமத்தியுள்ள பெரும் சிக்கன நடவடிக்கைகளின் பங்கு மூடி மறைக்கப்படுகிறது. ஏனெனில் Artur Mas ஐரோப்பிய ஒன்றியத்தில் நுழைய விரும்புகிறார். சுதந்திர காட்டலோனியா இதே தாக்குதல்களை தொழிலாள வர்க்கத்தின் மீது செயல்படுத்தும் என்பதற்கு இது நிரூபணம் ஆகும். ஏற்கனவே இப்படித்தான் அது தனது தன்னாட்சிப் பிராந்தியத்தில் செய்துள்ளது.

பெல்ஜியத்தில் இதே தகவல்கள் N-VA எனப்படும் புதிய பிளேமிஸ் கூட்டு (New Flemish Alliance) அமைப்பில் இருந்து வருகிறது; இதற்கு Bart De Wever தலைமை தாங்குகிறார். இது இம்மாதம் முன்னதாக உள்ளூர் தேர்தல்களில் முக்கிய வெற்றி அடைந்தது. நாட்டின் வறிய தெற்குப் பகுதிக்கு டச்சு மொழி பேசும் வடக்கு உதவி கொடுப்பது குறித்துப் புகார் கூறியே இந்த வெற்றி வந்துள்ளது. ஆன்ட்வெர்ப்பின் நகரசபை தலைவராக வந்துள்ள De Wever, பிளெமிஷ் மக்கள் பாலுக்காகவே பசுக்கள் போல் நடத்தப்படுவது போதும் என்று கருதுகின்றனர் என அறிவித்தார். பெல்ஜியம் ஒரு மாறும் ஒன்றியம், மத்திய அரசு கொடுக்கும் காசோலையை நம்பியுள்ளது என அவர் விவரித்தார். காட்டலனியத் தலைவரைப் போலவே இவரும் ஐரோப்பிய ஒன்றிய சார்பு திட்டத்தை கொண்டுள்ளார்.

இத்தாலியில் Lega Nord (வடக்குக் குழு) வெளிப்படையான ஒரு வலதுசாரி அமைப்பு ஆகும். இது ரோமா லட்ரோனா (ரோம் பெரிய திருட்டு) என்ற கோஷத்தின் கீழ் அதிக செழிப்பற்ற தெற்கிற்கு உதவிகள் கொடுப்பதை எதிர்க்கிறது. ஆனால் இத்தாலியப் பிரதம மந்திரி மரியோ மோன்டியின் கோரிக்கைகளான பிராந்தியச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்பதும் எதிர்ப்புக்களைத் தூண்டி, வெனீஷிய குடியரசிற்கான அழைப்பு முன்வைக்கப்படுகிறது. தெற்கு டிரோலில் பிரிவினைவாதிகள் செல்வம் மிக்க மாநிலத்தில் வசூலிக்கப்படும் வரி வருமானம் அப்பகுதிக்கே செலவழிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.

Royal Bank of Scotland இன் எண்ணெய் பிரிவின் முன்னாள் ஆலோசகர் அலெக்ஸ் சால்மண்டினால் நடத்தப்படும் SNP எனப்படும் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி, 2014ல் சுதந்திரத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் என்னும் உடன்பாட்டை பெற்றுள்ளார். SNP நீண்டகாலமாகவே கன்சர்வேட்டிவ்-லிபரல் டெமக்ராட் கூட்டணி மத்திய அரசாங்கம் மற்றும் அதற்கு முன்பு இருந்த தொழிற்கட்சி அரசாங்கம் ஆகியவற்றின் வெட்டுக்களுக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட சமூகநல நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கிறது. ஆனால் இதன் உண்மையான நிகழ்ச்சிநிரல் ஒரு குறைந்த பெருநிறுவன வரிகளுள்ள இடத்தை ஐரோப்பிய சந்தைகளுக்காக நிறுவுதல் ஆகும். அது நிதிய உயரடுக்கிற்கும், அதைச் சார்ந்திருப்பவர்களுக்கும் உதவும்.

லண்டன் நகருக்கு அடுத்தாற்போல் இரண்டாம் பெரிய நிதிய மையமாக எடின்பரோ உள்ளது. மேலும் ஐரோப்பாவில் இது நான்காம் இடத்தில் உள்ளது. பங்குச் சொத்துக்களைப் பொறுத்தவரை 2000க்கும் 2005க்கும் இடையே இது தொட்ந்து 30% வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருந்தது. இது உலக நிதிய மையத்தின் (Global Financial Centres) குறீயிட்டின்படி கட்டார், ஓஸ்லோ, கிளாஸ்கோ, டப்ளின், அபுதாபி, பிரஸ்ஸல்ஸ், மிலான், மாட்ரிட் மற்றும் மாஸ்கோ ஆகியவற்றை விட முன்னிலையில் உள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் தேசிய வான் பகுதி, நிலம் சார் நீர்நிலை, எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் என்று வடக்கு கண்டப்பகுதிக்குள் இருப்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் வருமானத்தின் படி ஸ்காட்லாந்து ஐந்தாம் இடத்தில் உள்ளது என்று SNP கூறுகிறது. இது எடின்பரோவினால் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது. ஸ்காட்லாந்து பிற ஐக்கிய இராச்சியத்தின் அரசுப்பகுதிகளைவிட செல்வம் உடையதுடன், இது 1980இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பொருந்தும் என்றும் இது வலியுறுத்துகிறது.

இந்த இயக்கங்களை, பல போலி இடது குழுக்கள் முற்போக்கானவை என்று காட்ட முற்படுகின்றன. ஏனெனில் அவ்வியக்கங்களின் புறநிலைப் பங்கு ஏகாதிபத்திய தேசங்களை உடைக்கவேண்டும் என்பதாகும் எனக்கூறும் அக்குழுக்கள் இவ்வாறான பிரிவினை என்பது அதுவும் தெளிவாக வரையறுக்கப்படாத எதிர்காலத்தில் ஒரு சோசலிச வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எனக் கூறுகின்றன. இவை அவற்றின் முதலாளித்துவ சார்பை மறைப்பதற்காகவும் மற்றும் ஒரு புதிய சுற்று நாடுகள் கட்டமைப்பதில்  இருந்து வரும் தமது பங்குகளை பெற்றுக்கொள்வதற்கும் ஒரு அரசியல் மோசடியை செய்கின்றன.

இந்த இயக்கங்கள் அனைத்தும் தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை நலன்களுக்கு எதிரான முன்னோக்கைத்தான் முன்வைக்கின்றன. ஐரோப்பா முழுவதும் வளர்ச்சியடையும் பிரிவினைவாத இயக்கங்கள் ஒரு பிற்போக்குத்தன நிகழ்வும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவின் கீழ் நடத்தப்படும் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான முக்கிய போராட்டத்தை சிதைப்பதுமாகும்.

இந்த இயக்கங்களின் முன்னோக்கு, ஐரோப்பாவை சிறு துண்டுகளாக்குவதற்கு வகை செய்து, போட்டியிடும் குட்டி அரசுகளின் பைத்தியக்காரத்தன இல்லமாக மாற்றுவது என்பதாகும். இத்தகைய முதலாளித்துவ குறும்பகுதிகள் முக்கூட்டு மற்றும் வங்கிகள், பெருநிறுவனங்கள் ஆணையிடும் கொள்கைகளை செயல்படுத்தும். இது இன்னும் கொடூரமான இழிந்தநிலையைத்தான் தொழிலாள வர்க்கத்தின் பெரும்பாலான மக்களுக்கு கொடுக்கும்.

இது எதிர்க்கப்படாவிட்டால், இவை ஒருநாட்டின் தொழிலாளர்களை மற்றொரு நாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராகத் தூண்டி, வேலைகள், ஊதியங்கள், பணி நிலைமைகள் ஆகியவற்றினை கீழிறக்கும் போட்டிதான் நடக்கும். இன்னும் மோசமான முறையில், யூகோஸ்லேவியா அனுபவம் காட்டவது போல், முதலாளித்துவ தேசியவாதமும் பிரிவினைவாதமும் சகோதரத்துவமோதலை தூண்டிவிட்டு போரிலேயே முடிவடையும்.

ட்ரொஸ்கி ஒருமுறை ஐரோப்பிய அரசு அமைப்புமுறையை ஏழ்மைமிக்க மாநில மிருகக் காட்சிசாலையில் காணப்படும் கூண்டுகள் என விவரித்தார். தொழிலாள வர்க்கத்தின் பணி இன்னும் சிறிய கூண்டுகளைக் கட்டமைப்பது அல்ல. மாறாக கண்டத்தை அத்தகைய பிற்போக்குத்தன தேசிய பிளவுகளில் இருந்து விடுவித்து, இலாபத்திற்காக இல்லாமல் தேவைகளுக்காக உற்பத்தி செய்யும் சுமுகமான, திட்டமிட்ட பொருளாதாரத்தை கட்டமைப்பதுதான்.

இதன் பொருள் முதலாளித்துவ மற்றும் அதன் குட்டி முதலாளித்துவ ஆதரவாளர்களின் அனைத்து பிரிவினரிலிருந்தும் சுதந்திரமாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அத்துடன் இணைந்துள்ள அராசங்கங்களுக்கு எதிரான சமரசத்திற்கு இடமில்லாத போராட்டம் ஆகும். அது ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்காகவும் தொழிலாளர்கள் அரசாங்கங்களுக்காகவும் போராடவேண்டும்.