சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

China’s leadership change

சீனாவின் தலைமை மாற்றம்

John Chan
5 November 2012
use this version to print | Send feedback

நாளை நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலைப் போலவே, உலகின் அரசாங்கங்கள், செய்தி ஊடகங்கள், பெருநிறுவன இயக்குனர் குழுக்கள் ஆகியவை இந்த வாரம் நடக்க இருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசியமாநாடு அடுத்த தசாப்தத்திற்கான புதிய தலைமையை வெளிப்படுத்தும் என்பதை நன்கு அறிந்துள்ளன; உலக முதலாளித்துவத்திற்கு இது ஆழ்ந்த உட்குறிப்புக்களைக் கொண்டுள்ளது.

மிகப் பெரிய நலன்கள் பணயத்தில் உள்ளன. சீனப் பொருளாதாரம் இப்பொழுது உலகின் இரண்டாம் மிகப் பெரிய பொருளாதாரம் என்பது மட்டும் அல்ல; சீனாவில் உலகிலேயே சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் மிகப் பெரிய பிரிவு உள்ளது. உலகப் பெருநிறுவனங்கள் மிக அதிகமாக 400 மில்லியன் சீனத் தொழிலாளர்களை குறைவூதியத் தொழிலாளர் தொகுப்பு, இலாபங்கள் ஆகியவற்றிற்கு நம்பியுள்ளன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பது உலக ஏகாதிபத்தியத்திற்கு ஒரு வாழ்வா-சாவா பிரச்சினையாக உள்ளது.

இரண்டு இடைத் தொடர்பு உடைய காரணிகள் CCP எனப்படும் சீனக் கம்யூனிஸ்ட் கடசிக்குள் ஆழ்ந்த நெருக்கடிக்கான உந்துதலைக் கொடுத்துள்ளன. அவை சீனப் பொருளாதாரத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் மோசமாகி வரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், ஒபாமா நிர்வாகத்தின் ஆக்கிரோஷமான “ஆசிய முன்னிலை” என்று சீனாவில் பொருளாதார, மூலோபாய நிலைப்பாட்டை பிராந்தியம் மற்றும் சர்வதேச அளவில் குறைக்கும் நோக்கம் கொண்ட கொள்கையும் ஆகும்.

பெய்ஜிங்கில் இருக்கும் அதிகாரத்துவம் உட்பூசல் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது; இது அரசியல் உறுதிப்பாடின்மைக்கு பெரிய ஆதாரமாக உள்ளது. திரைகளுக்குப் பின்னால், இளம கம்யூனிஸ்ட் லீக் பிரிவு என்று ஜனாதிபதி ஹு ஜின்டாவோ மற்றும் பிரதமர் வென் ஜியாபோ தலைமியல் இருக்கும் பிரிவிற்கும் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜேமின் உடைய “ஷாங்காய் கும்பல்” மற்றும் முன்னாள் சோங்கிங் கட்சி செயலர் போ ஜியலை உடைய சிறு குழுக்கள் ஆகியவற்றிற்கும் இடையே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பிரிவுகளும் முதலாளித்துவம் மற்றும் சந்தைக்கு ஆதரவு கொடுக்கின்ற; ஆனால் முக்கிய தந்திரோபாய வேறுபாடுகள் பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் நிலவுகின்றன.

உட்பிரிவு மோதல், ஊழல் செயற்களுக்குப் பதிலடி கொடுக்கும் வடிவத்தில் உள்ளன. ஒரு பரந்த குடும்ப வணிக இணையம் தொடர்புடைய ஊழல், கொலைக்குற்றம் செய்ததாகக் கூறப்படுதல் ஆகியவற்றிற்காக அகற்றப்பட்ட போ ஓர் “இடது’ போக்கிற்குத் தலைமை தாங்கியதாகக் கூறப்படுகிறது. அவருடைய முக்கிய எதிர்பாளரான வென், கட்சியின் “தாராளவாதப் பிரிவின்” முக்கிய குரலாக உயர்த்தப்பட்டுள்ளவரும் ஓர் ஊழலில் சிக்கியுள்ளார். அக்டோபர் 26ம் திகதி நியூ யோர்க் டைம்ஸ் அவருடைய குடும்பத்தில் 2.7 பில்லியன் டாலர் மதிப்புடைய சொத்து, பரந்த வணிக நலன்கள் குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டது.

அசாதாரண அதிகாரம் மற்றும் செல்வம் என்று இத்தகைய உயர்மட்டத் தலைவர்கள் குறித்து அம்பலப்படுத்தப்பட்டுள்ளது முழு “கம்யூனிஸ்ட்” தலைமையின் தன்னலத் தன்மை மற்றும் ஊழல் தன்மையை அப்பட்டமாகக் காட்டுகிறது. உட்கட்சிப் போராட்டத்தின் இரக்கமற்ற தன்மை ஆளும் CCP உயரடுக்கு அதன் சலுகை நிறைந்த நிலைமையைக் காப்பதற்கு எதையும் செய்யத் தயாங்காது என்பதைத்தான் தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாகக் காட்டுகிறது. எந்தப் பிரிவு வெற்றிபெற்றாலும், 1930 களுக்குப் பின் உலகின் மிகப் பெரிய பொருளாதார நிலைமுறிவினால் உந்துதல் பெற்றுள்ள அவர்கள் பெற்றுள்ள கட்டளை சீனத் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின்மீது தாக்குதல்களை நடத்த வேண்டும் என்பதாகும்.

அவருடைய ஊழல் நடவடிக்கைகளுக்காக போ அகற்றப்படவில்லை; மாறாக தொழிலாளர்களின் காவலர் என்று தன்னைக்காட்டிக் கொண்டதற்கும், செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள வருமான இடைவெளி குறைக்கப்பட வேண்டும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் “சோசலிச” தொடக்கங்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என அழைப்பு விடுத்ததற்கும்தான் அகற்றப்பட்டார். அவருடைய விரோதிகள் இந்த “இடது” வனப்புரை மக்கள் எதிர்பார்ப்புக்களை உயர்த்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மறுகட்டமைப்பு செயற்பாடு, வேலை வெட்டுக்கள் விரைவில் செய்யப்படுதல், மற்றும் அரசாங்கத்தின் சமூகநலச் செலவுகள் குறைக்கப்படுவதில் ஆழ்ந்த பாதிப்புக்கள் இவற்றுடன் இணைந்து குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும் என்று அஞ்சினர்.

போவின் ஆதரவாளர்கள் வென்னை மேலை நிதிய மூலதனத்தின் நலன்களைக் காக்கும் முதல் இலக்க அயல்நாட்டு உதவியாளர் என்று குற்றம் சாட்டியிருப்பது பொருத்தமில்லாமல் இல்லை. பிரதம மந்திரி வென் உடைய அரசாங்கக் குழு, சீனாவின் முக்கிய சிந்தனைக் குழுக்களை எஞ்சியிருக்கும் 100,000 அரசாங்க நிறுவனங்களை தனியார் மயமாக்கும் உருப்படியான திட்டங்களை, முக்கிய துறைகளை அயல்நாட்டு உடைமை ஆக்குவதற்கு திறந்துவிடுதல் மற்றும் கடன் மீதான, நில அளிப்பு தொடர்புடைய அரசாங்கக் கட்டுப்பாட்டை நிறுத்துவதற்கு தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இவை அனைத்துமே பெப்ருவரி மாதம் உலக வங்கி கொடுத்த முக்கிய அறிக்கையுடன் இயைந்தவை ஆகும்.

“ஷாங்காய் பிரிவு” வென்னின் திட்டங்களை எதிர்த்துள்ளது; ஆனால் இது காப்புவரி முறை மற்றும் பொருளாதாரத் தேசிய நிலைப்பாட்டில் இருந்து வரும் எதிர்ப்பு ஆகும். போவைப் போல் இதுவும் சீனாவில் 120 அரசுக்கு சொந்தமான மிகப் பெரிய நிறுவனங்களை “தேசிய முன்னணி நிறுவனங்கள்” என மாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. தென் கொரியாவில் யுண்டான் மற்றும் சாம்சுங் போல்; இதற்குச் சிறிதும் இரக்கமற்ற முறையில் தொழிலாளர்கள் சுரண்டப்படுவது தீவிரப்படுத்தப்பட வேண்டும். இந்த முன்னோக்கு சோசலிசத்துடன் எத்தொடர்பையும் கொள்ளவில்லை. அரசாங்கம் மிகப் பெரிய பங்குதாரராக இருக்கையில், இந்த பெருநிறுவனங்கள் இலாபம் அடையும் நிறுவனங்களாக, முதலாளித்துவச் சந்தைகளின் ஆணைகளுக்கு உட்பட்டு இயங்கும்.

CCP உடைய பிரிவுகள் அனைத்துமே 1978ல் சீனாவில் டெங் ஜியாவோபிங்கின் கீழ் தொடக்கப்பட்ட முதலாளித்துவ முறை மீட்புக்கு ஆதரவு கொடுத்து தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கம் எதற்கும் விரோதப் போக்கைத்தான் ஆழ்ந்த முறையில் காட்டுகின்ற. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோரை எப்படி நடத்துவது என்பது குறித்த தீவிர வேறுபாடுகள் இருந்தன; இத்தொகுப்பினரோ இராணுவத்தால் 1989ல் இராணுவத்தான் மிருகத்தனமாக நசுக்கப்பட்டனர். ஆனால் மறுகட்டமைப்பில் தீவிர திட்டங்களைத் தொடக்கின. தனியார்மய அலை ஒன்று 60 மில்லியன் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்யும் விளைவை ஏற்படுத்தியது. எஞ்சியிருந்த அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள், கூட்டுப் பங்கு நிறுவனங்களாக மாற்றப்பட்டன. தொழிலாள வர்க்கம் நீண்ட காலமாக நிறுவப்பட்டிருந்த வேலை, குழந்தைப் பாதுகாப்பு, கல்வி, வீடு, சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதியங்கள் ஆகியவற்றை இழந்தது.

அரச சொத்துக்களை அழிப்பதற்கு எதிரான போராளித்தன வேலைநிறுத்தங்கள் இருந்தபோதிலும்கூட, ஜியாங்கின் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்கா, ஐரோப்பாவிற்கு ஏற்றுமதிகளை அதிகரித்த தனியார்மய துறையில் வேலைகள் விரிவாக்கம் அடைந்ததை அடுத்து ஒரு சமூக வெடிப்பைத் தவிர்க்க முடிந்தது. இச்சந்தைகள் 2000 முழுவதும்தொடர்ந்து விரிவாகி, பங்குகள் மற்றும் சொத்துக்களின்மீது ஊகவணிக விலை ஏற்றத்திற்கு எரியூட்டின. சீனாவில் பெரும் சொத்துக்கள் அடையப்பட்டன; அதுவும் பல நேரமும் கம்யூனிஸ்ட்கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்புடையவர்களால். 2002ல் ஹு ஜனாதிபதியாக இருத்தப்பட்டபோது, சீனாவில் டாலர் பில்லியனர் ஒருவர் கூடக் கிடையாது. இப்பொழுது அமெரிக்காவிற்கு வெளியே மிக அதிக எண்ணிக்கை கொண்டதாக இது உள்ளது.

CCP க்குள் இருக்கும் தற்போதைய உட்பூசல், 2008ல் வெடித்த உலகப் பொருளாதார நெருக்கடியில் வேர்களைக் கொண்டுள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா விரைவில் மீட்புப் பெறும் என்ற நம்பிக்கையில் ஆட்சி மகத்தான ஊக்கத்திட்டத்தைத் தொடக்கியது. ஆனால் அப்பொருளாதாரங்களில் இருந்த தேக்க நிலை, மந்த நிலை ஆகியவை இப்பொழுது சீனாவிலும் வளர்ச்சியை குறைத்துவிட்டது. மேலும் எளிய கடன் ஏராளமாகக் கொடுக்கப்பட்டது சொத்துக்கள் பற்றிய குமிழிற்கு எரியூட்டியது: இது இப்பொழுது சரிவைச் சந்திக்கிறது.

பொருளாதாரக் கொள்கை குறித்த தந்திரோபாய வேறுபாடுகள் ஒபாமா நிர்வாகத்தின் ஆக்கிரோஷ இராஜதந்திர தாக்குதல் முறை, ஆசியா முழுவதும் சீனாவிற்கு எதிரான இராணுவக் கட்டமைப்பு ஆகியவற்றுடன் அதிகரித்துள்ளன. வென் வாதிட்டுள்ள பொருளாதார மூலோபாயம் வாஷிங்டனை திருப்தி செய்யும் நோக்கம் கொண்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இராணுவத்தின் சில பிரிவுகளால் இது எதிர்க்கப்படுகிறது; அவை சீனத் தேசிய நலன்கள் இன்னும் வலுவாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

CCP மாநாட்டின் விளைவு எப்படி இருந்தாலும், தலைமை முழுவதுமே தொழிலாள வர்க்கம் புதிய சுமைகளை ஏற்கக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பதில் உடன்பட்டுள்ளன. சீனத் தொழிலாளர்களுக்கு ஒரே மாற்றீடு அனைத்து கம்யூனிஸ்ட் கட்சி பிரிவுகளில் இருந்தும் சுயாதீனமாக ஓர் அரசியல் இயக்கத்தைக் கட்டமைத்து, பில்லியனர்கள், பல மில்லியன்கள் வைத்திருப்போரின் சொத்துக்களை பறித்தெடுத்து உலக முதலாளித்துவத்திற்கு பெரிய அடிமை உழைப்பு பட்டறையாக இருப்பதைக்காட்டிலும் பொருளாதாரத்தை சோசலிச வழிவகைகளில் மறு சீரமைப்பதுதான். 1949 புரட்சியில் இருந்து முழுச் சீன வரலாறும்  “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்னும் ஸ்ராலினிச  பிற்போக்குத்தன முன்னோக்கின் தோல்விக்குத்தான் சான்றாக உள்ளது; அதைத்தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் அடித்தளமாக கொண்டிருந்தது. சீனத் தொழிலாளர்கள் தங்கள் சர்வதேச வர்க்க சகோதர சகோதரிகள் பக்கம் திரும்ப வேண்டும்; குறிப்பாக முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் இருப்போருடன்; பின் முதலாளித்துவத்தை அகற்றவும் திட்டமிட்ட சோசலிச உலகப் பொருளாதாரத்திற்குமாக ஒரு கூட்டுப் போராட்டத்தை நடத்த வேண்டும்.

ஸ்ராலினிசம், மாவோயிசம் ஆகியவற்றிற்கு எதிரான சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் நீடித்த போராட்டத்தில் இருந்து அவசியமான படிப்பினைகளை உள்ளீர்த்துக் கொண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சீனப் பிரிவைக் கட்டமைத்து புரட்சிப் போராட்டங்களில் முன்னேற வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தமாகும்.