சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s New Anti-capitalist Party conceals plans for historic attack on European auto workers

பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி ஐரோப்பியக் கார்த் தொழிலாளர்கள் மீதான வரலாற்றுத் தன்மை நிறைந்த தாக்குதல் திட்டங்களை மறைக்கிறது

By Alex Lantier
30 October 2012
use this version to print | Send feedback

ஐரோப்பிய கார்த் தொழிலாளர்கள் மீதான வரலாற்றுத் தாக்குதலை எதிர்கொள்ளும்  திட்டங்கள் தொடர்பான புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக்கட்சியின் (NPA) பிரதிபலிப்பு, அது தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான பக்கத்தில்தான் நிற்கிறது என்பதைத்தான் காட்டுகின்றது. ஐரோப்பிய கார்த்தயாரிப்பாளர்களும் தொழிற்சங்கங்களும் வேலை வெட்டுக்கள், ஊதியக் குறைப்புக்கள், ஆலை முடல்கள ஆகியவற்றிற்குத் தயாரிப்புக்கள் செய்கையில், NPA அவர்களுக்கு அரசியல் மறைப்பைக் கொடுத்து, அவர்களுடைய தொழிலாளர் விரோதக் கொள்கைகளை நியாயப்படுத்தும் வாதங்களை முன்வைக்கிறது.

வியாழன் அன்று பிரெஞ்சு அரசாங்கம் PSA Peugeot-Citroën க்குப் பிணையெடுப்பு நிதியாக 7 பில்லியன் யூரோக்களை (அமெரிக்க $9பில்லியன்) கொடுத்த அறிவிப்பைத் தொடர்ந்து NPA  ஒரு சுருக்கமான கட்டுரையை எழுதியது. ஐரோப்பியக் கார்ச்சந்தையின் ஆண்டு விற்பனை 17 மில்லியனில் இருந்து 13 மில்லியன் அலகுகள் எனச் சரிந்த நிலையில்  PSA  பெரும்பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற அதன் பல முக்கிய சந்தைகள் ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளினால் பெரும் பிரச்சனைக்கு உட்பட்டுள்ளன. PSA சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்துடனும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடனும் Aulnay-sous-Bois ஆலை மூடுதல், 8,000 பணிநீக்கங்கள் திட்டம் குறித்து பேச்சுக்களை நடத்துகிறது.

பிரெஞ்சுப் பிணையெடுப்பை நேரடியாகப் பெற்ற PSA இன் நிதிப்பிரிவை பற்றி விபரித்தபின் NPA முடிவுரையாக பின்வருமாறு கூறியது: பொது நிதிகள் PSA  இன் தனி வங்கிக்குப் பிணை கொடுக்கப் பயன்படுத்தக்கூடாது. அதே நேரத்தில் நிறுவனமோ ஆலைகள் மூடல் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தல் ஆகியவற்றிற்கு தயாரிப்புக்களை நடத்துகிறது.... ஊதிய வெட்டுக்கள், ஆலைகள் மூடல் மற்றும் இப்பொழுது அவர்களுடைய வங்கி ஒருவேளை திவாலாகலாம் என்ற நிலையில், Peugeot குடும்பத்தின் சொத்தை பறித்தல் என்ற வினா எழுகிறது.

PSA இன் சொத்துக்களை பறித்தல் முற்றிலும் நியாயம் என்றாலும், NPA முன்வைத்துள்ள அதற்கான காரணங்கள் வெற்றுத்தனமானதும் தவறனாதுமாகும். ஒபாமா நிர்வாகம் பல பில்லியன் டாலர்களை டெட்ரோயிட்டில் GM, Chrysler நிறுவனங்களுக்குப் பிணையெடுக்க 2009ல் கொடுக்கையில், அல்லது ஜேர்மனிய அரசநிதிகள் ஓப்பலில் குறுகியகாலப் பணிக்காக வழங்கப்பட்டபோது, அரசாங்கத்தினதும் மற்றும் தொழிற்சங்கங்களினதும் நோக்கம் குறைந்த விற்பனைக் காலத்திலும் தொழிலாளர்களை தாக்குவதின் மூலம் PSA க்கு இலாபத்தை உருவாக்குவதாகும். ஐரோப்பாவின் மத்திய பகுதிகிளைப் போல், வட அமெரிக்கப் பகுதிகளைப் போல், பிரான்சிலும் தொழிலாள வர்க்கம் அரசாங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு எதிரான சோசலிசக் கொள்கைகளுக்கான அரசியல் போராட்டத்தின் மூலம் நடத்துவதின் மூலம்தான் வேலைகளை பாதுகாக்க முடியும்.

தொழிலாள வர்க்கம் குட்டி முதலாளித்துவ இடது குழுக்களான NPA போன்றவற்றுடனும் போராடவேண்டும் என்பதுதான் இதன் பொருள். இக்கட்சி தொழிற்சங்கங்களையும் மற்றும் சோசலிஸ்ட் கட்சியையும் ஆதரிப்பதுடன், இந்த ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது NPA நிபந்தனை ஏதும் இன்றி சோசலிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவை அளித்தது.

பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் முழு நனவுடன் டெட்ரோயின் கார்த்துறைப் பிணையெடுப்பு போல்தான் செய்து கொண்டிருக்கின்றன. PSA இதற்காக GM உடனான பெருநிறுவனப் பிணைப்பை ஏற்பாடு செய்கிறது. அமெரிக்கப் பிணையெடுப்பு டஜன் கணக்கான ஆலைகள் மூடப்படுதல், 35,000 வேலை வெட்டுக்கள், புதிதாகச் சேர்க்கப்படும் தொழிலாளர்களுக்கு மணி நேர ஊதியம் 23 டாலரில் இருந்து 10-14 டாலர் எனக் குறைக்கப்படல் மற்றும் நலன்களை வெட்டுதல் ஆகியவற்றை கொண்டிருந்தது. இதற்கு ஈடாக UAW எனப்படும் ஐக்கிய கார் தொழிலாளர் சங்கம் ஆறு ஆண்டுக் காலத்திற்கு வேலைநிறுத்தம் செய்யப்படமாட்டாது என்ற உறுதிமொழியில் கையெழுத்திட்டதுடன், பில்லியன் கணக்கான டாலர்களை கார் நிறுவனங்களின் பங்குகளில் இருந்து பெற்றது. மேலும் ஓய்வு பெற்றோரின் சுகாதாதார நிதி மீது கட்டுப்பாட்டையும் கொண்டது. இது அவர்களுக்கு அதன் உறுப்பினர்கள் இழப்பில் கார்த்தயாரிப்புப் பிரிவில் இலாபங்கள் பெறுவதற்கான நேரடி நிதிய ஊக்கத்தைக் கொடுத்தது.

Le Bien Public  ல் வந்துள்ள ஒரு தகவலின்படி, ஜேர்மனியின் IG Metall  மற்றும் பிரான்சின் CGT எனப்படும் பொதுத்தொழிலாளர் கூட்டமைப்பு இரண்டின் பிரதிநிதிகளும் கடந்தமாதம் டெட்ரோயிட்டிற்குச் சென்று அங்கு உள்ள UAP, GM நிர்வாகிகளைச் சந்தித்தனர். இதை தொழிற்சங்கங்களின் இரகசிய பேச்சுக்கள் என்று கூறிய Le Bien Public,  CGT  அதிகாரி Bruno Lemerle ஐ மேற்கோளிட்டது: “PSA-GM உடன்பாடு என்பது நாங்கள் தனியாகச் செய்து வந்ததைக் கூட்டாகச் செய்வோம் என்ற பொருளைக் கொடுக்கிறது. இதையொட்டி சேமிக்ககூடியதாக இருக்கும். CGT  இன் படி,  GM  உடனான கூட்டு பிரான்சில் உள்ள நம் ஆலைகளில் அதிக திட்டங்களை தோற்றுவிக்கும் என நம்புகிறோம்.

அதாவது CGT அமெரிக்கப் பிணையெடுப்பில் இருந்து படிப்பினைகளைப் பெறுகையில், அது இரக்கமற்ற முறையில் IG Metall, UAW ஆகியவற்றுடன் போட்டியிட்டு தன் உறுப்பினர்கள் மீது தாக்குதலை நடத்தும். இதனால் பிரெஞ்சு ஆலைகள் ஜேர்மனிய அல்லது அமெரிக்க ஆலைகளை விடக் கூடுதல் இலாபம் அடையும் நிலையில் இருக்கும். இதனால் அவற்றின் செயற்பாடுகள் GM-PSA வெட்டுக்களில் இருந்து தப்பும் என நம்புகின்றது.

NPA உடைய பங்கு, தொழிற்சங்கத்தின் இழிந்த தந்திரோபாயங்களுக்கு இடது சாயம் பூசுவதாகும். ஜூலை 2012 கட்டுரையான “Peugeot குடும்பச் சொத்தை பறிக்க தைரியம் உண்டா என்பதில் அது சமரசத்திற்கு இடமில்லாத முறையில் அச்சுறுத்தப்படும் அனைத்து வேலைகளைக் காப்பாற்ற முயலும் தொழிற்சங்கங்களை பாராட்டுகிறது; அத்துடன் ஒரு முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்திற்கும் அழைப்பு விடுகிறது.

சுற்றுச் சூழல் கொள்கைகள் மற்றும் வரையறுக்கப்படாத சமூக உடமையாக்கப்படுதலின் புதிய வடிவங்கள் என்னும் அழைப்புக்களின் பின்புலத்தில் அது மறைந்து கொண்டாலும்கூட, NPA  உடைய நிலைப்பாடுகள் அதன் முதலாளித்துவ சார்பு கட்சித் தன்மையைத்தான் தெளிவாக்குகின்றன. இதன் வாதங்கள் தொழிற்சங்கங்களின் கொள்கைகளுடன் இணைந்து வாழ்க்கத்தரங்கள் மீதான தாக்குதல்களுக்கு இழிவாக சரண்டைதலை நியாயப்படுத்துகின்றன.

உற்பத்தி வெட்டுக்களுக்கும் NPA வாதிட்டு, அப்பட்டமாக எழுதுகிறது: கார் உற்பத்தியில் ஏற்றம் என்பதைக் கணிப்பது அர்த்தமற்றது. அதைக் கோருவதும் இன்னும் அர்த்தமற்றதாகும். கார்ச் சந்தை நிரம்பியுள்ளது என்று கூறும் அது, காலையிலும் மாலையிலும் போக்குவரத்து நெருக்கடியில் அகப்பட்டுக் கொள்ளுகையில் நாம் அனைத்தும் கார்களுக்கு, அனைத்தும் பாரவாகனங்களுக்கு என்னும் மனப்பாங்கு மிகைஉற்பத்திக்குத்தான் வழிவகுக்கும் என்பதை உணரவேண்டும். என்றும் கூறியுள்ளது.

இந்த வாதங்கள் பிற்போக்குத்தனமானவை, நேர்மையற்றவை. அதுவும் பொருளாதார நெருக்கடி தொடங்குவதற்கு முன்னிருந்ததைவிட ஐரோப்பிய மக்களுக்கு குறைவான கார்கள் போதும் என்பதால் சந்தை ஒன்றும் நிரம்பி வழியவில்லை. (4 மில்லியன் கார்கள் குறைவாக இருப்பது ஒருபுறம் இருக்கட்டும்) இது நிரம்பி வழிவதின் காரணம் நான்கு ஆண்டுக்காலமாக இருக்கும் பொருளாதார நெருக்கடி, சமூகச் சிக்கனத் திட்டங்கள், டிரில்லியன் யூரோக்கள் வங்கிப் பிணையெடுப்பிற்குக் கொடுக்கப்பட்டிருப்பது, மற்றும் பெருகும் சமூக சமத்துவமின்மை; இவைகள் தொழிலாளர்கள் மற்றும் மத்தியதர வர்க்க மக்களின் பரந்த அடுக்குகளை வறிய நிலைக்குத் தள்ளிவிட்டது; அவர்கள் கார் வாங்க இயலாத நிலை வந்து விட்டது.

அதாவது NPA சமூகத் தேவையை ஒட்டி உற்பத்தி வெட்டுக்களுக்காக வாதிடாமல், கார்த்தயாரிப்பு நிறுவனங்களின் இலாபக் கணக்கீடுகளை ஒட்டி வாதிடுகிறது. NPA தன்னை முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி என்று கூறிக்கொள்ளும் கருத்துக்கள் பொய்க்கட்டுகதைக்கள் ஆகும்.

ஒரு உண்மையான முதலாளித்துவ எதிர்ப்பு, அதாவது சோசலிச நிலைப்பாட்டில் கார்த்தயாரிப்பு இன்னும் பிற தொழில்துறைகளில் ஐரோப்பா, வட அமெரிக்கா முழுவதும் பல மில்லியன் வேலைகள் தோற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருக்கும். அச்சந்தைகள் தற்பொழுது நிரம்பி வழிகிறது என்றால், தொழிலாளர்கள் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை வாங்க இயலாது என்று பொருளாகும். தொழிலாள வர்க்கம் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க வங்கிப் பிணையெடுப்பில் பொருளாதாரத்தை அழிக்க செலவழிக்கும் டிரில்லியன் கணக்கான நிதியை கைப்பற்றி எடுத்துக்கொள்ள வேண்டும். இது ஒரு சர்வதேச திட்டமிட்ட பொருளாதாரத்திற்குத் அடித்தளம் அமைப்பதுடன், அது ஜனநாயக முறையில் தொழிலாள வர்க்கத்தினால் கட்டுப்படுத்தப்படும்.

இத்தகைய கோரிக்கைகளை பொருளற்றவை என்று NPA உதறித் தள்ளுகிறது. ஏனெனில் தொழிலாளர்கள் இவற்றிற்காக, NPA ஆதரவு கொடுக்கும் ஏகாதிபத்திய அரசாங்கங்கள் மற்றும் பிற்போக்குத்தன தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான புரட்சிகர எதிர்ப்பின் மூலம்தான் போராட முடியும்.

அது இன்னும் வெளிப்படையாக ஈரான் மீதான நேட்டோ பொருளாதாரத்தடை PSAஇல் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் உதறித்தள்ளுவதன் மூலம் மத்திய கிழக்குப் போர்களுக்கு மக்கள் எதிர்ப்பை கட்டுப்படுத்த முயல்கிறது. அது எழுதுவதாவது: “Peugeot  விற்பனை மேற்குநாடுகளின் பொருளாதாரத் தடைகளினால் ஈரானுக்கு தடுக்கப்பட்டிருப்பது  Peugeot  பிரச்சனைகளின் ஒரு கட்டுமான காரணம் அல்ல. இந்த விற்பனைகள் தற்காலிகமானவைதான் என்பது வெளிப்படை. அதுவும் ஈரான் போன்ற நாடுகளில் மாற்றிக் கொள்ள முடியாத போக்கின் காரணமாக தங்கள் சொந்த ஒருங்கிணைந்த கார்த்தொழிற்துறையை அபிவிருத்தி செய்ய இட்டுச்செல்லும்.

இது அபத்தமானது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரெஞ்சு ஏகாதிபத்தியம் வாஷிங்டனுக்கு லிபியாவையும் சிரியாவையும் அழிக்க உதவியுள்ளதுடன், ஈரானைப் பொருளாதார ரீதியில் நெரிக்க உதவியுள்ளது. மத்திய கிழக்கில் பிராந்திய அல்லது உலகப்போர் மையம் கொள்ளுவதற்குக் கூட உதவியுள்ளது. இவை அனைத்துமே தொழிலாள வர்க்கத்தைப் பேரழிவில் தள்ளும் அச்சுறுத்தலைக் கொண்டவை. லிபியா, சிரியப் போர்களுக்கு ஆர்வத்துடன் ஆதரவளித்த NPA ஈரானுக்கான PSAஇன் விற்பனை இழப்பு கொடுக்கும் பாதிப்பை உதறித்தள்ளி, ஐரோப்பாவினதும் மற்றும் மத்திய கிழக்கினதும் தொழிலாளர்ளுடைய இழப்பில் இகழ்வுற்ற ஏகாதிபத்தியக் கொள்கைகளுக்குத் தொடர்ந்த ஆதரவைக் கொடுக்கிறது.

ஐரோப்பாவில் தொழிலாளர்கள் தங்கள் வேலைகள், வாழ்க்கைத் தரங்களுக்கு எதிரான தாக்குதலை எதிர்த்துப் போராடுகையில் அவர்கள் இப்பொழுது NPA  ஐ ஒரு உறுதியான விரோதி, சிக்கனத்திற்கும், முதலாளித்துவ அடக்குமுறைக்கும் ஆதரவளிக்கும், ஏகாதிபத்தியப் போருக்கு ஆதரவளிக்கும் அமைப்பு என்றுதான்  முகங்கொடுக்கின்றனர்.