சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Socialist Party government bows to business demands for social cuts

பிரான்ஸ்: வணிகத்தின் சமூகநல வெட்டுக்கள் குறித்த கோரிக்கைக்கு சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் தலைவணங்குகிறது

By Antoine Lerougetel
1 November 2012
use this version to print | Send feedback

பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி Jean-Marc Ayrault, Le Parisien வாசகர்களுடன் திங்களன்று நடந்த ஒரு விவாதத்தில் அவரைப் பொறுத்தவரை 35 மணி நேர வேலை வாரம் என்பது தொடக் கூடாதது அல்ல என்று உறுதிபடக் கூறினார். அவருடைய அரசாங்கம் 39 மணிநேர வாரத்திற்கு திரும்புமா என்று கேட்கப்பட்டதற்கு அவர் விடையிறுத்தார்: ஏன் கூடாது? நான் ஒன்றும் பிடிவாதக்காரன் அல்ல.

அரசாங்கத்தின் ஆலோசகர்கள் செவ்வாயன்று இது குறித்த தகவல் வெளியிடப்பட்டபோது இத்தகைய தவறாகக் கூறியிருப்பது அரசாங்கம் பற்றி ஒப்புதல் தரத்தில் சேதத்தை விளைவிக்கும் என்று அஞ்சினர்; ஏற்கனவே அது 40 சதவிகித ஆதரவுதான் எனச் சரிந்துள்ளது. ஆயினும்கூட, அவர்களுடைய இழிந்த கருத்துக்கள் அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகளைக் குறைப்பது குறித்துக் கொண்டுள்ள உறுதிப்பாட்டைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன.

தொழிலாளர் துறை மந்திரி மிசேல் சபன் மற்றும் வெளியுறவு மந்திரி லோரன்ட் ஃபாபியுஸ் இருவரும் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பேசுகையில் 35 மணி நேரத்தைக் கைவிடும் நோக்கம் ஏதும் இல்லை என்று கூறினர். 35 மணி நேர வாரச் சட்டம் அகற்றப்படும் என்று உலவிவரும் வதந்திகளைப் பற்றிப் பேசுகையில், சபன், அது பறக்கு முன் அந்த வாத்தின் தலையை நாம் வெட்டிவிட வேண்டும் என்று அறிவித்தார்.

ஆனால், சபன் உடனடியாக தொழிற்சங்கங்களுடன் ஒத்துழைத்து நிறுவனங்கள் வேலை நேரங்களைக் குறைக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்; ஏற்ற இறக்கங்களுக்குத் தகுந்தாற்போல் அது இருக்க வேண்டும் என. ஆனால் நிறுவனங்களுடன் உரையாடலும் தேவை, 35 மணி நேரம் என்பது ஒரு குறிப்பு, ஆனால் அனைத்தும் நன்கு செயல்படும்போது நீங்கள் இன்னும் அதிகம் உழைக்கலாம், அதிகம் ஊதியம் பெறலாம்; மேலும் அவை நன்கு செயல்படவில்லை என்றால்....நீங்கள் வேலை நேரத்தைக் குறைக்கலாம் என்றார்.

PS  உடன் உடன்பாடு கொண்டுள்ள CFDT (பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டணி) சங்கத்தின் பிரான்சுவா செரேக்கும் தலையிட்டு 35 மணி நேர வாரச் சட்டத்திற்கு ஆதரவு எனக் காட்டும் வகையில் பேசினார். 35 மணிநேர வாரம் என்பது பிரச்சினையானால், பரவாயில்லை. இந்தக் கருத்து வேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பிரதம மந்திரிக்கு உரிய நேரம் வந்துவிட்டது என்றார் அவர்.

ஆனால் சான்று அளவில் செரேக் PS அரசாங்கத்துடன் உழைக்கும் நிறுவனங்கள் தொழிலாளர் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்று கோரினார்அதாவது ஊதியங்களையும், சமூக நலன்களையும்; அதையொட்டி பிரெஞ்சு நிறுவனங்கள் உலகளவில் இன்னும் போட்டித்தன்மையை அடையவேண்டும். (See: “French trade unions urge spending cuts, labour market deregulation”)

மறு நாள், தேசிய சட்ட மன்றத்தில் வலதுசாரி பிரதிநிதிகளின் ஏளனத்திற்கு உட்பட்ட வகையில் ஏய்ரோ 35 மணி நேரம் இடது, அதாவது PS அதிகாரத்தில் இருக்கும் வரை தக்க வைக்கப்படும் என்றார்.

PS  மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளின் அறிக்கைகள் ஏய்ரோவின் திட்டமான வேலைநேரத்தை பிரான்ஸில் விரிவாக்குவது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பெரு வணிகத்திடம் இருந்து போட்டித்தன்மையை முன்னேற்றுவிக்க வேண்டும் என்னும் அழுத்தத்தைத்தான் அவர் எதிர்கொள்ளுகிறார்; அதையொட்டி தொழிலாளர்களுக்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளையும் விரைவுபடுத்துகிறார்.

ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டிற்கு 98 பெரிய பிரெஞ்சு நிறுவனங்களைப் பிரதிபலிக்கும் Afep அமைப்பிடம் இருந்து முந்தைய நாள் அளிக்கப்பட்ட பகிரங்கக் கடிதம் வலியுறுத்தியது: அரசாங்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60 பில்லியன் யூரோக்களுக்கு மேல் சேமிக்க வேண்டும்... நிறுவனங்களுக்கு உதவுவதற்கு அது தொழிலாளர் செலவினங்களை குறைந்தப்பட்சம் 30 பில்லியன் என்று இரண்டு ஆண்டுகளுக்குக் குறைக்க வேண்டும்.” Afep ஆனது பெருநிறுவனங்கள் சமூகநலச் செலவுகளுக்கு அளிக்கும் நன்கொடைகளில் வெட்டுக்கள் வேண்டும் என்று கூறியுள்ளது; கொள்வனவு வரி 19.6 சதவிகிதம் என்பதில் இருந்து 21 சதவிகிதம் என்று உயர்த்தப்பட வேண்டும் (ஐரோப்பிய சராசரி); மற்றும் மீதிப்பாதி பொதுச் செலவைக் குறைக்கும் வகையில் எழுப்பப்பட வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தை இன்னும் வறிய நிலையில் தள்ளும் இந்த நடவடிக்கைகள் அரசாங்கம் ஆணையிட்டு வந்துள்ள அறிக்கை ஒன்றுடன் இயைந்த நிலையில் உள்ளது; அந்த அறிக்கை பெருவணிகத்தின் போட்டித்தன்மை இலாபத் திறன் ஆகியவற்றை அதிகரிப்பதற்கு லூயி கலுவாவினால் தயாரிக்கப்பட்டுள்ளது; அவர் தேசிய இரயில் நிறுவனம் (SNCF),  மற்றும் ஏயர்பஸ் ஆகியவற்றின் முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்தார். \அவருடைய அறிக்கை ஏய்ரோவிற்கு நவம்பர் 5ம் தேதி அளிக்கப்பட உள்ளது.

ஏய்ரோ திடீரென முடிவெடுத்து 35 மணி நேர வேலைச் சட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்ற உறுதிகளை அளித்தால், இதற்குக் காரணம் சட்டமே மிகச் சிக்கல் வாய்ந்தது, அதில் உள்ள ஓட்டைகளினால் தொழிலாளர் தொகுப்பை அதிகம் சுரண்டுவதற்குப் பல முறை திருத்தப்பட்டது.

PS அரசாங்கத்தின் பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பனால் 2000ல் ஏற்கப்பட்ட இச்சட்டம், வேலைநிலைமைகளில் பிற்போக்குத்தனத்தை மறைக்கும் வடிவமைப்பைக் கொண்டது; இதில் முதலாளிகள் வேலை நேரங்களை ஆண்டுக் கணக்கில் காட்ட முடியும் என்று அனுமதித்து, அதையொட்டி தொழிலாளர் தொகுப்பைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்த முடியும். தொழிலாளர்களின் நிலைமைகளுக்கு உள்ள சட்டபூர்வப் பாதுகாப்புக்களை அகற்றும் வழிவகையையும் அது தொடங்கியது: இது பின்னர் வந்த UMP அரசாங்கங்களால் விரைவுபடுத்தப்பட்டது.

2008ல் 35 மணிநேர வாரச் சட்டத்திற்கு ஒரு சீர்திருத்தம்ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியால் செய்யப்பட்டது, வெளிப்படையாக அது அகற்றப்பட்டது என்றுதான் கொண்டாடப்பட்டது. (See: “End of the 35-hour week in France”)

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியினால் பிரெஞ்சு முதலாளித்துவதின் வெளிப்பாடானது, தொழிலாள வர்க்கத்தின் சமூக தேட்டங்களை அழிப்பதற்கு நியாயப்படுத்தப்படுகின்றது. அக்டோபர் 25ம் திகதி சமீபத்திய தாக்குதல்களை ஹாலண்ட் பட்டியலிட்டு, 2000 தொழில்துறைத் தலைவர்களுக்கு உரைத்தார். 2008ல் இருந்து தொழில்துறையில் 750,000 வேலைகள் இழக்கப்பட்டுவிட்டன; அன்றாடம் ஆலை மூடல்கள் அறிவிக்கப்படுகின்றன; மிகப் பெரிய, இன்னும் வளரும் ஆண்டு வணிகப் பற்றாக்குறை 70 பில்லியன் யூரோவை எட்டிவிட்டது.

ஒரு பிரெஞ்சு பொருளாதார அவதானிப்புப் பொருளாதார வல்லுனர் Henri Sterdyniak என்பவர் ஹாலண்ட் நிர்வாகத்தின் தற்போதைய திட்டங்களுக்கு நெருக்கமான ஒரு தீர்வை முன்வைத்துள்ளார் என The Nouvel Observateur மேற்கோளிட்டுள்ளது. ஜேர்மனியில் அவர்கள் தொழிற்சங்கங்களுடன் ஊதிய உயர்விற்குத் தடை பற்றிய உடன்பாட்டைக் கண்டுள்ளனர். அதன்பின், அரசு அவர்களுக்கு [நிறுவனங்களுக்கு] கூடுதல் ஏற்றம் தரும் வகையில் கொள்வனவு வரிகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது.

பிரான்சிலுள்ள தொழிற்சங்கங்கள் நிறுவனங்களுடன் ஊதியக்குறைப்பு, வேலைநீக்கங்கள் குறித்த உடன்பாடுகளுக்கு பேச்சுக்களை நடத்துகின்றன; இதையொட்டி பிரான்சின் தொழிலாளர்கள் அவர்கள் வெளிநாட்டில் இருக்கும் அவர்களுடைய வர்க்க சகோதரர்களுடன் வேலைகளைக் காப்பாற்றுவதற்காக போட்டியில் நிறுத்தப்படுவர். ஹாலண்டுடன் இந்த இலக்கை அடைவதற்கு தொழிற்ச்சங்கங்கள் வேலை செய்கின்றன; இப்படித்தான் முன்னாள் சார்க்கோசியுடனும் அவைகள் வேலை செய்தன.

உற்பத்தி நிறுவனங்களான ரெனோல்ட் போன்ற கார்த்தயாரிப்பு நிறுவனங்கள் தொழிலாளர் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைக் கோருகின்றன.

இந்நிறுவனம் மொரோக்கோவிலுள்ள டாஞ்சியிர்ஸில் ஓர் ஆலையைக் கட்டமைக்க 1 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது. அங்கு 2013 ஐ ஒட்டி 340,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். அங்கு அடிப்படைத் தொழிலாளருக்கு ஊதியம் மாதம் ஒன்றிற்கு 250 யூரோக்கள்; இது ருமேனியாவில் மாதம் ஒன்றிற்கு 450 யூரோக்கள் என்பதுடன் ஒப்பிடத்தக்கது. மேலும் ஐந்து ஆண்டு காலத்திற்கு இது வரிவிலக்கையும் பெறும்; அதற்குப்பின் அடுத்த 20 ஆண்டுகள் குறைந்த வரிகளைத்தான் செலுத்தும். ரெனோல்ட் இப்பொழுது பிரான்சில் அதன் மொத்தத் தயாரிப்பில் கால்வாசியைத்தான் தயாரிக்கிறது; 2007ல் 1 மில்லியன் என்று இருந்தது, 2011ல் 634,000 எனக் குறைந்துவிட்டது.

ரெனோல்ட் நிர்வாகி Carlos Tavares சமீபத்தில் ஒரு கிளியோ கார் துருக்கியிலுள்ள பர்சாவில் தயாரிப்பதைவிட பிரான்ஸிலுள்ள பிளானில் தயாரிக்கப்படுவதற்குக் கூடதலாக 1,300 யூரோக்கள் ஆகிறது என்று குறிப்பிட்டார்பாதிக்கும் மேலான வித்தியாசம் பிரான்ஸில் உள்ள ஊதியச் செலவுகள், மற்ற பாதி உள்ளூரில் இருந்து கிடைக்கப்படும் உதிரிப்பாகங்களினால் ஏற்படும் செலவு. Tavares, தொழிற்சங்கங்களுடன் பிளானில் மற்றும் பர்சா ஆலைகளுக்கு இடையே உள்ள செலவு வேறுபாடுகளைக் குறைப்பதற்குப் பேச்சுக்களைத் தொடக்கியுள்ளதாகக் கூறினார்.