சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

What way forward for workers in Greece?

கிரேக்கத் தொழிலாளர்களுக்கு முன்னே உள்ள பாதை எது

Christoph Dreier
9 November 2012

use this version to print | Send feedback

இந்த வார வேலை நிறுத்தங்களும் வெகுஜன எதிர்ப்புக்களும் கிரேக்கத் தொழிலாள வர்க்கத்திடம் உள்ள சாத்தியமான பலம் பற்றிய தாக்கம்மிக்க நிரூபணத்தை வழங்கியுள்ளன. தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 48 மணி நேரம் நாடு முழுவதையும் இயங்காது செய்தனர். அநேகமாக அனைத்து அரசாங்க நிறுவனங்களும் பல தனியார் நிறுவனங்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. நூறாயிரக்கணக்கான மக்கள் தெருக்களுக்கு வந்து, நாட்டை அழிவிற்கு இட்டுச் செல்வதுடன் வேலையின்மையை இதுவரை இல்லாத உயர்ந்த மட்டத்திற்கு இட்டுச்செல்லும் அன்டோனிஸ் சமரஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவு, அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிடும் சமூகத் தாக்குதல்களை தோற்கடிக்கும் திறனுடைய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கமே என்பதைக் காட்டுவதுடன் மற்றும் சமீபவாரங்களில் அச்சுறுத்தப்படும் வேறுநாடுகளில் இருந்து குடியேறியிருப்போரை தாக்கும் பாசிச கும்பல்களையும் தோற்கடிக்கும் எனக் காட்டுகிறது. இது கிரேக்கத்திற்கு மட்டுமில்லாமல், சமீப வாரங்களில் வெகுஜன எதிர்ப்புக்களை கண்ட ஸ்பெயின், போர்த்துக்கல்லுக்கும் மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும்.

எவ்வாறாயினும், கிரேக்க தொழிலாளர்கள் நலன்கள், விருப்புங்களுக்கும், தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் அரசியல் கூட்டுக்களின் கொள்கைகளுக்கும் இடையே ஆழ்ந்த பிளவு உண்டு. இவை தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்தை தடைக்கு உட்படுத்த முயல்கின்றன. பாரிய வேலைநிறுத்தங்களை குறுகிய கால எதிர்ப்பு நடவடிக்கைகளாக வரம்புக்குட்படுத்த முயன்று, அவை கிரேக்க மற்றும் வெளிநாட்டு மூலதனங்களின் அடிப்படை நலன்களை இயன்ற அளவு பாதிக்கப்படாமல் உறுதிப்படுத்த முற்படுகின்றன.

தொழிற்சங்கங்களின் அரசியல் நட்பு அமைப்புக்களான சிரிசா மற்றும் பிற போலி இடது சக்திகள் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை தோற்கடிக்கும் எந்த உண்மையான போராட்டத்தையும் எதிர்க்கின்றன. சமரஸ் அரசாங்கத்தை அகற்றும் எந்த முயற்சியையும் அவை எதிர்ப்பதுடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் முறிவு என்பதையும் நிராகரிக்கின்றன. ஆனால் அம்முறிவு நடக்கவில்லை என்றால் தொழிலாளர்கள் நலன்களை பாதுகாப்பதற்கான உண்மையான போராட்டம் இருக்கமுடியாது.

எதிர்ப்புக்களின் முன்னணியில் அவை தம்மை இருத்திக் கொண்டு அவை அரசாங்கம் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் நாட்டின் அங்கத்துவத்தன்மைக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்கின்றன. தொழிற்சங்கத் தலைவர்களும் சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸும் பலமுறை அவர்கள் கிரேக்கத்தின் ஐரோப்பிய அங்கத்துவத்தன்மையை எந்த விளைவுகள் வந்தாலும் பாதுகாப்பதாக வலியுறுத்தி உள்ளதுடன், கிரேக்க அரசாங்கம் சர்வதேச வங்கிகளுக்குக் கொடுக்க வேண்டிய கடன்கள் திருப்பியளிக்கப்படும் என்றும் உத்தரவாதம் கொடுக்கின்றன.

1930 களில் இருந்த ஐரோப்பாவிற்கும் கிரேக்கம் மற்றும் இன்னும் பரந்த முறையில் ஐரோப்பா முழுவதும் இன்றுள்ள நிலைக்கும் இடையே வரலாற்றுத்தன்மை உடைய வேறுபாடுகள் இருந்தாலும்கூட, அக்காலத்திய படிப்பினைகள், குறிப்பாக தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன எதிர்ப்புக்கள் காட்டிக் கொடுக்கப்பட்டன என்பது, அதுவும் ஸ்ராலினிச மக்கள் முன்னணியினால் என்பது மிகவும் முக்கியமானவை. தொழிலாளர் இயக்கங்களைஜனநாயக அரசாங்கங்களின் கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றிற்கு அடிபணியவைத்தல், அவை சேவை செய்யும் வர்க்க நலன்களுக்கு அடிபணியவைத்தல் என்பது தொழிலாள வர்க்கம் முதலாளித்துவம் தோற்றுவித்துள்ள நெருக்கடிக்கு தன் சொந்த, சோசலிசத் தீர்வை முன்வைப்பதை தடுக்கிறது. தொழிலாள வர்க்கத்திடம் இருந்து உறுதியான தலைமை இல்லாத நிலையில், தீவிர வலது மற்றும் பாசிஸ்ட்டுக்களுக்கு பாதை திறக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு முதலாளித்துவம் மற்றும் அரசாங்க அமைப்புகள் உதவுவதுடன், உடந்தையாக இருக்கின்றன.

தொழிற்சங்கங்களாலும் மற்றும் அவற்றின் அரசியல் நட்பு அமைப்புக்களும் தொழிலாளர்கள் மீது கொண்டிருக்கும் அரசியல் ஒடுக்குதல் என்பது வலதுசாரிச் சக்திகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஆபத்து மீண்டும் இன்றும் வந்துவிட்டது.

கிரேக்கத் தெருக்களில் பொலிசாரின் உதவியுடன் தெருக்களில் தீய தாக்குதல்களை நடத்த முடிகின்ற பாசிசக் கும்பலான கோல்டன் டௌன் (Golden Dawn) போன்றவை தொழிலாள வர்க்கத்தால் அணிதிரட்டப்படும் மக்கள் திரளுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கையில் குறைந்தவை.

ஆனால் வரலாற்றுத் தன்மை வாய்ந்த உலக முதலாளித்துவ நெருக்கடி மற்றும் சிக்கன நடவடிக்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் சுமத்துவது ஆகியவை கிரேக்க சமூகத்தின் சரிவை விரைவுபடுத்தியுள்ளன. தொழிலாள வர்க்கம் மற்றும் மத்திதர வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் வறுமையில் ஆழ்த்தப்பட்டுள்ளன. வர்க்க மோதல் தீவிரமடைந்து வருகிறது. தொழிலாள வர்க்கம் நெருக்கடியில் இருந்து வெளியே வர வழிகாட்டவில்லை என்றால், மத்தியதர வர்க்கத்தின் அவநம்பிக்கைகொண்ட பிரிவுகள் வலதிற்கு சார்ந்துகொள்ளும்  ஆபத்து உள்ளது. ஏற்கனவே பாராளுமன்றத்தில் 18 இடங்களைக் கொண்டுள்ள கோல்டன் டௌனின் பெருகிய வாக்களார் தளம், இந்த ஆபத்து ஒன்றும் கற்பனையானதல்ல என்பதைக் காட்டுகிறது.

கிரேக்கத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடத்தப்படும் மிருகத்தனமான தாக்குதல்கள் மற்றும் பாசிச, சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தல்கள் ஆகியவை ஏதென்ஸில் மட்டுமில்லாமல், இன்னும் அடிப்படையாக முழு ஐரோப்பிய முதலாளித்துவமும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒழுங்கமைக்கும் கொள்கைகளின் வெளிப்பாடாகும்.

கிரேக்கத் தொழிலாளர்கள் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் நெருக்கடி முழுவதற்கும் விலைகொடுக்கும் நிலைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடைய சமூக, அரசியல் உரிமைகளை பாதுகாத்தல் என்பது ஓர் ஐரோப்பா முழுவதும் பரந்த பிரச்சினை ஆகும். இதற்கு கிரேக்கத் தொழிலாள வர்க்கம் மட்டும் இல்லாமல், ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் முழுக்கண்டத்தில் இருக்கும் தொழிலாளர்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு ஐக்கியப்பட்ட போராடத்திற்கு  அணிதிரட்டப்படுவது அவசியமாகும்.

கிரேக்கம் மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள நிலைமைக்குத் திறவுகோல் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சி ஆகும். இதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் போலி இடது நட்பு அமைப்புக்களுடன் முறித்துக் கொள்வது முக்கியமாகும். ஏனெனில் அவை தங்களால் முடிந்த மட்டும் அத்தகைய தொழிலாளர் இயக்கத்தை நசுக்கவும், தொழிலாளர்களை ஆளும் வர்க்கத்துடனும் அதன் அமைப்புளுடன் பிணைக்கவும் அனைத்தையும் செய்யும்.

கிரேக்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் அவற்றின் அரசியல் நட்பு அமைப்புகளிடம் இருந்து தங்களைச் சுயாதீனமாக ஒழுங்கமைத்துக்கொள்ள வேண்டும். வேலைகளையும் சமூக உரிமைகளையும் பாதுகாத்திட அவர்கள் செயற்குழுக்களை கட்டமைக்க வேண்டும். பாசிசத் தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பை நிறுவி, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் ஐக்கியப்படுத்த வேண்டும். ஒரு தொழிலாளர்கள் அரசாங்கத்திற்குப் போராடவேண்டும்.  அது பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் சொத்துக்களை எடுத்துக் கொண்டு, சர்வதேச, உள்நாட்டு நிதியப் பிரபுத்துவத்தின் இலாப உந்துதலுக்கு முற்றிலும் மாறாக பொருளாதாரத்தை மக்களுடைய சமூகத் தேவைகளுக்கு சேவை செய்ய மறு ஒழுங்கமைக்க வேண்டும்.

இத்தகைய ஒரு வேலைத்திட்டத்தைச் செயல்படுத்த ஒரு புதிய புரட்சிக் கட்சியாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கிரேக்கப் பிரிவு நிறுவப்பட வேண்டும். அனைத்துலக் குழு மார்க்சிச, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியை  உள்ளடக்கியுள்ளது. அது ஐரோப்பிய ஒன்றியத்தை தூக்கிவீசுவதற்கும் ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளை  அமைக்கவும் போராடுகின்றது.