சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Deepening economic crisis in Japan

ஜப்பானில் பொருளாதார நெருக்கடி ஆழமடைகிறது

Nick Beams
15 November 2012
use this version to print | Send feedback

ஜப்பான், 20 ஆண்டுகளுக்கு சற்று முன் ஒரு புதிய பொருளாதார மாதிரியாக விளங்கும், உலக முதலாளித்துவத்தின் எதிர்கால அலையாக விளங்கும் எனக் கூறப்பட்டது. சீனா அல்லது மற்ற பிற “எழுச்சி பெறும் சந்தைகள்” உலகப் பொருளாதாரத்தின் உறுதிப்பாட்டிற்கு அடித்தளத்தை கொடுக்கும் என்ற கூற்றிற்கு அதிர்ச்சிதரும் வகையில் மறுப்பைக் காட்டுகையில் இன்று அது பெருகிய பொருளாதார நெருக்கடியை முகங்கொடுக்கிறது.

உலகில் சீனா, அமெரிக்காவிற்கு பின்னர் உலகின் மூன்றாவது மிக பெரிய அதன் பொருளாதாரம், இந்த வாரம் 3.5% ஆண்டு சுருக்கத்தை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்பொழுது அது ஒரு மந்தநிலையில் நுழையும் தன்மையை எதிர்நோக்குகிறது. இரண்டு தொடர்ச்சியான காலாண்டுகளில் எதிர்மறை வளர்ச்சி ஏற்பட்டால் அவ்வாறு கூறப்படும். கடந்த 15 ஆண்டுகளில் இது ஐந்தாம் முறை அத்தகைய நிலைக்கு வருகிறது.

பிரதம மந்திரி நோடா நிலைமை மிகவும் “கடுமையாக” உள்ளது என்று எச்சரித்து, அரசாங்கம் இதை “நெருக்கடி உணர்வுடன்” சந்திக்கும் என்றார். ஆனால் இச்சொற்களை தொடர்ச்சியான அரசாங்கங்கள் 1990களின் ஆரம்பங்களில் சொத்துக்கள் மற்றும் நிதியக் குமிழின் சரிவிற்குப் பின் ஜப்பானிய பொருளாதாரத்தை புதுப்பிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்து வருவதை எடுத்துக்காட்டத்தான் உதவியுள்ளது.

வெள்ளியன்று தான் பாராளுமன்றத்தில் கீழ்பிரிவை கலைக்கப்போவதாக நோடா அறிவித்துள்ளார். இது டிசம்பர் 16 அன்று தேர்தலை நடத்த காரணமாகும். அது அதிகாரத்தில் இருந்து அவருடைய ஜப்பானிய ஜனநாயகக் கட்சியை அகற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய காலாண்டுச் சுருக்கம் செப்டம்பர் 2008ல் லெஹ்மன் பிரதர்ஸ் சரிவு மற்றும் உலக நிதிய நெருக்கடி ஆரம்பித்தபின் ஏழாவது சுருக்கம் ஆகும். மூன்று மாத காலத்தில் 0.9 சதவிகித சுருக்கம் என்பது ஏற்றுமதி வருவாய்களில் 0.8 சதவிகிதச் சரிவின் முக்கிய விளைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏற்றுமதி வருமானத்தில்தான் ஜப்பானிய முதலாளித்துவம் அதன் போருக்குப் பிந்தைய வரலாற்றுக் காலம் முழுவதிலும் தங்கியுள்ளது.

கடந்த இரு தசாப்தங்களில், மந்த நிலை “புதிய இயல்பாக” ஜப்பானியப் பொருளாதாரத்தில் நிலைகொண்டு விட்டது. ஆனால் சமீபத்திய சரிவு முன்பு ஏற்பட்டதைவிட இன்னும் கணிசமானது ஆகும். ஏனெனில் 1985ல் ஆவணப்படுத்தல் ஆரம்பித்ததில் இருந்து முதல் தடவையாக நாடு செப்டம்பர் காலாண்டில் நடப்புக் கணக்கில் ஒரு பற்றாக்குறையைக் கண்டது. ஜப்பானியப் பொருளாதாரத்தில் பண உள்பாய்வு மற்றும் பணம் வெளிப்பாய்வின் அளவேதான் நடப்பு கணக்கு ஆகும். கடந்த பல ஆண்டுகளாக உபரியில் இருந்த மாதாந்திர வணிக இருப்பு இப்பொழுது பற்றாக்குறைக்குச் சென்றுள்ளது.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் ஜப்பானின் ஒன்பது ஏற்றுமதி வகைகளில் எட்டு ஒன்றரை ஆண்டுச் சரிவைக் காட்டின. வணிக முதலீடும் காலாண்டில் 3.2% சரிந்தது. இது ஏப்ரல்-ஜூன் 2009ல் ஏற்பட்ட 5.5% த்தில் இருந்து தீவிரமான சரிவு ஆகும்.

இப்பொருளாதாரச் சுருக்கம் நாட்டின் முக்கிய பெருநிறுவனங்களில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அவற்றின் பெருமிதச் சின்ன வணிக அடையாளங்கள் ஒருகாலத்தில் ஆதிக்கம்மிக்க உலகநிலையை அனுபவித்தன. ஷார்ப் என்னும் மின்னணுக்கருவிகள் தயாரிக்கும் நிறுவனம் இம்மாதம் முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இரண்டாம் ஆண்டும் தொடர்ந்து மிகப் பெரிய நஷ்டங்களை அடைந்தபின் தான் வணிகத்தில் தொடரும் திறனைக் கொண்டுள்ளதா என்னும் “ஐயத்தை” அது பெற்றுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமையகக் கட்டிடத்தை அது அடைமானம் வைக்கும் கட்டாயத்தில் உள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் ஆலைகளை விற்றுக் கொண்டிருப்பதுடன், 1950இற்கு பின்னர் முதல் தடவையாக ஊதியங்களையும், வேலைகளையும் வெட்டிவிட்டது.

பனசோனிக் நிறுவனமும் சிக்கலில் உள்ளது. இரண்டாம் தொடர்ச்சியான இழப்பாக 10 பில்லியன் டாலரை கணித்துள்ளது.

இந்த இரு மிகப் பெரிய மின்னணு நிறுவனங்களைப் போல் மோசமாகச் செயல்படாவிட்டாலும்கூட, சோனியும் அதன் கடன்தரம் Moody’s இனால் குப்பை அந்தஸ்து என்று கீழிறக்கப்படுமோ எனும் சந்தேகத்தைக் கொண்டுள்ளது.

மூன்று நிறுவனங்களுமே தட்டைத் திரை தொலைக்காட்சிப் பெட்டிகளின் விலைச் சரிவினாலும் பிற இல்ல நுகர்வோர் பொருட்கள் விலைச்சரிவினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த திருப்தியற்ற நிலை மின்னணுப் பொருட்கள் தொழில்துறைக்கும் அப்பால் செல்லுகிறது. ஒரு பகுப்பாய்வாளர் கருத்துப்படி, “ஜப்பானியப் பெருநிறுவனங்கள், அப்பட்டமாகக் கூற வேண்டும் என்றால், உண்மையில் பணம் உழைக்கவில்லை.”

ஜப்பானிய நிறுவனங்கள், குறிப்பாக அதன் மின்னணுப் பெருநிறுவனங்கள், குறைந்த விலை போட்டியாளர்களால் சூழப்பட்டுள்ளன என்ற காரணத்தை கூறினாலும், உலகப் பொருளாதாரம் முழுவதுமே பிரதிபலிக்கும் பரந்த போக்குகள் இதன் பின்னணியில் உள்ளன.

1980களின் முடிவிற்குப் பின், ஜப்பானியச் சொத்துக்கள் உலகில்பெரும் மதிப்பைக் கொண்டிருந்தன. ஆனால் இது பெரும்பாலும் பாரிய சொத்து மற்றும் நிதியக் குமிழின் விளைவினால்தான். 1990ல் ஆரம்பித்த இதன் சரிவு நிக்கேய் பங்குச் சந்தைக்குறியீடு 39,000த்தில் இருந்து கிட்டத்தட்ட 9,000 என சரிவுற்றதைக் கண்டது. இந்நிலையில்தான் இது இப்பொழுது உள்ளது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் தொடர்ச்சியான ஜப்பானிய அரசாங்கங்கள், Bank of Japan உடன் இணைந்து பொருளாதாரத்தை ஊக்கப் பொதிகள் மற்றும் மிகக் குறைந்த கடன்மூலம் புதுப்பிக்க முயன்றுள்ளன. இவை அனைத்தும் எப்பலனையும் கொடுக்கவில்லை. இப்பொழுது பொருளாதாரம் ஒரு பழக்கமாகிப்போன வடிவத்தில் எந்தப் பொருளாதார வளர்ச்சியும் அதைத்தொடர்ந்து மந்தநிலைக்குச் சரிவு என்பதைக் காண்கிறது.

இதன் விளைவாக ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தேக்கம் அடைந்துள்ளது. 2011ல் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 537 டிரில்லியன் யென் ஆகும். இது 2005லும் அதே நிலையில்தான் உள்ளது. பணவீக்கத்திற்கு ஏற்ப மொத்த உள்நாட்டு உற்பத்தியை திருத்திக்கொண்டால் ஜப்பானியப் பொருளாதாரம் 1993ல் இருந்ததைப் போல்தான் உள்ளது.

ஆனால் இன்று பொருளாதார நிலைமை மிக ஆபத்தாக உள்ளது. ஏனெனில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் ஆழ்ந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இது ஜப்பானிய ஏற்றுமதிகளைத் தாக்கியுள்ளதுடன், இதனால் அரசாங்க கடனுக்குப் போதுமான நிதி இல்லாத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜப்பானிய அரசாங்கம் உலகிலேயே அதிகம் கடன்பட்டுள்ள அரசாங்கமாக உள்ளது. அமெரிக்காவின் அரசாங்கக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 100% என்று உள்ளது. இது இத்தாலியில் 120%, கிரேக்கத்தில் 150% ஆகவுள்ளது. ஆனால் ஜப்பானிலோ அது 230% என்று உள்ளது. இது யூரோப் பகுதியில் உள்ள 17 அங்கத்துவ நாடுகளின் மொத்தக் கடனைவிட அதிகம் ஆகும்.

இதுவரை உள் வளங்களில் இருந்துதான் நிதி பெரும்பாலும் இதற்கு வந்துள்ளது. ஆனால் வர்த்தக மற்றும் நடப்பு கையிருப்புக்கள் தொடர்ந்து பற்றாக்குறையைக் காட்டுமேயானால், இப்பொழுது ஆழ்ந்து போகும் உலகச் சரிவு மற்றும் சீனாவினதும் உலகின் முக்கிய ஏற்றுமதி அரங்குகளைக் கொண்ட குறைவூதிய நாடுகளினால் ஜப்பான் இன்னும் அதிகமாக அதற்குத் தேவையான நிதியத்திற்கு சர்வதேச சந்தைகளை நம்பியிருக்க வேண்டியிருக்கும். நிதிப் பாய்வில் ஏதேனும் சுருக்கம் ஏற்பட்டால், தற்போதைய மிக மிக குறைந்த தன்மையில் இருந்து வட்டி விகிதங்கள் உயர்ந்தால், அவை ஒரு நிதிய நெருக்கடியை ஏற்படுத்தும்.

ஜப்பானிய பொருளாதாரத்தில் பெருகும் நெருக்கடி உலக முக்கியத்துவம் கொண்டது. இது உலகின் மூன்றாம் பொருளாதாரம் என்பதால் மட்டும் அல்ல. “நிறைய பணத்தை அச்சடித்துப் புழக்கத்தில் விடும்” -“quantitative easing”- திட்டம் என்று அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு மற்றும் பிற முக்கிய மத்திய வங்கிகள் கொண்டுள்ள செயற்பாடு முதலில் ஜப்பானில்தான் வளர்ச்சியுற்றது. ஆனால் ஒரு பொருளாதாரப் புத்துயிர்ப்பைக் கொண்டுவராமல் அவை பெரிய நிதிய நெருக்கடிக்கான சூழலை ஏற்படுத்திவிட்டன.

ஜப்பானியப் பொருளாதார நெருக்கடி ஓர் அரசியல் பரிமாணத்தையும் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கம் போன்றே ஜப்பானிய தொழிலாள வர்க்கமும் எதிர்வரும் காலத்தில் முக்கிய சமூக, அரசியல் போராட்டங்களுக்குள் தள்ளப்படும்.