சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

After the US election, Syria war threats mount

தேர்தலுக்குப் பின், சிரியப் போர் அச்சுறுத்தல்கள் அதிகமாகிவிட்டன

Bill Van Auken
13 November 2012
use this version to print | Send feedback

ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மறுதேர்தலுக்கு ஒரு வாரத்திற்குப் பின் சிரியாவிற்கு எதிரான போர் முழக்கம் தீவிரமாக அதிகரித்துவிட்டது.

கடந்த இரு நாட்களாக இராணுவ அச்சுறுத்தல்கள் சிரியாவின் வடக்கு மற்றும் தென்மேற்குஎல்லைகளில் பெருகிவிட்டன. துருக்கி தலையீடு செய்யப்போவதாக அச்சுறுத்தியுள்ளபோது, இஸ்ரேல் பலமுறையும் சிரியப் படைகள் மீது குண்டுத்தாக்குதலை நடாத்துகின்றது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ள கோலன் குன்று பகுதியில் தவறி விழுந்த குண்டுக்களுக்கு பதிலடி அவை என்றும் கூறியுள்ளது.

அதே நேரத்தில் வாஷிங்டன் “சிரிய மக்களின் ஒரே சட்டபூர்வமான பிரதிநிதி” என்னும் புது அமைப்பைக் கட்டமைப்பதில் ஈடுபட்டுள்ளது. வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டன் கடந்த மாத இறுதியில் முன்பு இவ்வாறு அழைக்கப்பட்டிருந்த அமைப்பான சிரியத் தேசியக் குழு, நாட்டில் தொடர்பற்ற வெளியேறிய ஒரு கும்பலாக மாறுகின்றது என்றும் அதற்குப் பதிலாக அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் தேர்ந்தெடுக்கப்படும் இன்னும் பிரதிநிதித்துவம் வாய்ந்த நபர்களால் பிரதியீடு செய்யப்படவேண்டும் என்றார்.

புதிய, முன்னேற்றம் வாய்ந்தது என்று கருதப்படும் அமைப்பு சிரியப் புரட்சி மற்றும் எதிர்ப்புச் சக்திகளின் தேசியக் கூட்டணி என்ற பெயரிடப்பட்டுள்ளது. வாஷிங்டன் அதிகாரிகள் இழிந்த முறையில் இதை அமெரிக்கப் புரட்சியின் காங்கிரஸுடன் ஒப்பிடுகையில், இக்கூட்டணி அச்சுறுத்தல்கள், கையூட்டல்கள் மற்றும் ஏமாற்றுக்கள் மூலம் ஒன்று திரட்டப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு முன்னணி அமைப்பாகும்.

முஸ்லிம் சகோதரத்துவத்தின் உறுப்பினர்களின் கூடிய மேலாதிக்கத்திற்கு உட்பட்ட பழைய சிரியத் தேசியக் குழுவின் தலைவர்கள், தங்கள் அமைப்பு அகௌரவமாக அகற்றப்படவதைத் தீவிரமாக எதிர்த்தனர். பல நாட்கள் கட்டாரின் தலைநகரான தோஹாவில் ஆடம்பர விடுதி ஒன்றில் மோதல்களுக்குப் பின் அவர்கள் சமாதானப்படுத்தப்பட்டு, தலைமையிடங்களில் 40% வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டனர்.

இறுதியில் ஹில்லாரி கிளின்டன் மேலும் முயன்று அதிக “பிரதிநிதித்துவத்தன்மை” உள்ள அமைப்பை ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்க ஆதரவுள்ள போருக்குப் முன்னணி அமைப்பாக உதவுவதற்கு சேர்த்திருக்கையில், புதிய கூட்டணி கிட்டத்தட்ட பழைய திருடர்கள், உளவுத்துறை முகவர்கள், இஸ்லாமிய அரசியல்வாதிகள் ஆகியோரின் கூட்டமாக உள்ளபோதும், “சில வேறுபாடுகள்” உள்ளதாக காட்டப்படுகின்றது. தலைமையிடத்தில் இருக்கும் இடங்கள் சிறுபான்மையினருக்கு ஒதுக்கப்படுகின்றன. அதில் அலாவி பிரிவும் உண்டு. அவர்கள் “கிளர்ச்சியாளர்கள்” மற்றும் மகளிருக்குப் பெரும் எதிர்ப்புக் காட்டுபவர்கள் ஆவர்.

இந்த அமைப்பிற்கு ஒரு சுன்னி மதகுரு ஷேக் மௌவஸ் அல் கதிப் என்பவர் தலைமை தாங்குகிறார். இதன் துணைத் தலைவர்களில் சிரிய வணிகரும் டமாஸ்கஸில் அமெரிக்கத் தூதரகத்தின் நம்பிக்கைக்கு உரியவருமான ரியத் சைய்ப் உள்ளார். அவர் வாஷிங்டனின் சார்பாளராக புதிய “ஐக்கியப்பட்ட” எதிர்த்தரப்பில் செயலாற்றினார். சிரிய வணிக அமைப்பின் தலைவரான இதன் பொதுச்செயலாளர் முஸ்தபா அல் சபாக் அவார். இவ்வமைப்பு நாட்டைவிட்டு வெளியேறிய சிரிய முதலாளித்துவத்தினரின் முன்னணி ஆகும். அது கட்டாருடனும் சவுதி அரேபியாவுடனும் சேர்ந்து சிரிய “கிளர்ச்சியாளர்களுக்கு” ஊதியம் கொடுப்பதில் இணைந்துகொள்வதாக கூறியுள்ளது.

இந்நபர்களில் எவருக்கும் குறுங்குழுவாத ஆயுதக்குழுக்கள், இஸ்லாமிய ஜிகாதிஸ்ட்டுக்கள், வெளிநாட்டு ஆயுதக்குழுக்கள், தற்கொலைப் படையினர் ஆகியோருடன் கட்டுப்பாடு ஒருபுறம் இருக்க, உண்மையான தொடர்புகூட உண்டா என்பது பற்றிக் குறிப்பு இல்லை. இவைதான் ஆட்சி மாற்றத்திற்காக நடத்தப்படும் உள்நாட்டுப்போரில் முக்கிய பங்கு கொண்டவர்கள். நாட்டிற்குள் பரந்து மக்கள் ஆதரவை இவர்களில் எவரேனும் கொண்டுள்ளனரா என்பதற்கும் அதிக சான்றுகள் இல்லை.

ஆயினும்கூட அவர்கள் அரபு லீக் மற்றும் வாஷிங்டன் அதன் நட்பு நாடுகளைக் கொண்ட “சிரிய நண்பர்கள் அமைப்பு” ஆகியவற்றின் அங்கீகாரம் பெற பயணிக்கின்றனர். இது இக்கூட்டணியை “விடுவிக்கப்பட்ட” சிரிய மண்ணில் இடைக்கால அரசாங்கமாக இருத்தப்படுவதற்கு முதல் படியாகும்.

புதிய கூட்டணி அமைப்பவர்களுள் ஒப்புக் கொள்ளப்பட்ட “கொள்கைகளில்” டமாஸ்கஸில் உள்ள ஆட்சியுடன் எவ்வித பேச்சுவார்த்தைகளிலோ உரையாடலிலோ பங்கு பெறுவதற்கு ஈடுபாடு கூடாது என்பது ஒன்றாகும். இது கடந்த ஜூன் மாதம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டில் வந்த உடன்பாட்டை அமெரிக்க நேரடியாக நிராகரிப்பதற்கு ஒப்பாகும். அதில் வாஷிங்டன் “சமாதான உரையாடல், பேச்சுவார்த்தைகள்” ஊடாக சிரியாவில் உள்நாட்டுப் போரை முடித்து ஒரு புதிய அரசியலமைப்பு ஒழுங்கைக் கொண்டுவருவதற்கு ஆதரவு தருவதாக ஒப்புக்கொண்டது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அத்தகைய உடன்பாட்டில் அக்கறை ஏதும் கொண்டிருக்கவில்லை. இது இராணுவ பலத்தினை பயன்படுத்தும் உறுதியைக் கொண்டுள்ளது; அதேபோல் சிரிய மக்கள் மீது இரத்தக்களரியை தீவிரமாக்கி அப்பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களுக்கு தாழ்ந்து நடக்கும் கைப்பாவை அரசாங்கத்தை இருத்தவும் முயல்கிறது. இந்த இராணுவ நடவடிக்கையின் முக்கிய அமெரிக்க நோக்கம் அரபு உலகில் தெஹ்ரானுக்கு உள்ள முக்கிய கூட்டினை அகற்றி ஈராக்கு எதிராக இன்னும் குருதி கொட்டும் போருக்குத்  தயாரிப்பதாகும்.

இஸ்ரேலிய அரசாங்கம் வாஷிங்டனுடன் இணைந்து ஈரானுக்கு எதிரான போரை கட்டியமைத்துக் கொண்டிருக்கையில், இஸ்ரேலிய செய்தி ஊடகம் சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப்போரை இருமனப்போக்குடன்தான் காண்கிறது. அதுவும் பல தசாப்தங்களாக அசாத்தின் ஆட்சி இஸ்ரேலை சவாலுக்கு இழுக்காது இருக்கும் நிலையில். ஆனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ள கோலன் குன்றுப்பகுதியில் எதிர்பாரா குண்டுகள் விழுந்ததற்கு திடீர் பதிலடி கொடுத்துள்ளமை இவ்வகையில் ஒரு மாற்றத்தைத் தெரிவிக்கிறது. அநேகமாக இது முன்கூட்டியே வாஷிங்டனின் ஒத்துழைப்புடன் நடந்திருக்கும். இஸ்ரேலிய இராணுவம் ஞாயிறன்று இஸ்ரேலுக்குள் சுயமாக திரும்பக்கடிய ஏவுகணையை வீசியதுடன், திங்கட்கிழமை பீரங்கி குண்டுகளாலும் சிரியப் படைகள்மீது “நேரடியாக தாக்கியதாக” கூறியது.

வடக்கே, துருக்கிய F16 போர் விமானங்கள் திங்களன்று சிரிய எல்லைக்கு அருகே அச்சுறுத்தும் வகையில் பறந்தன. இது சிரியப்படைகளுக்கும் மேலை ஆதரவுடைய “கிளர்ச்சியாளர்களுக்கும்” எல்லைப் பகுதியில் நடந்த மோதல்களுக்கு பதிலடி என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் அங்காரா தன் மண்ணில் ஏதேனும் சிரிய குண்டுகள் விழுந்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி கூறியது.

ஒபாமா நிர்வாகம் மற்றும் நேட்டோ இரண்டுடனுமே துருக்கி சிரியாவில் தலையீட்டை அதிகரிப்பது குறித்துப் பேச்சுக்களை நடத்துகிறது. நேட்டோவின் தலைமைச் செயலர் ஆண்டெர்ஸ் போக் ரஸ்முசென் திங்களன்று “துருக்கி நேட்டோவுடனான ஒற்றுமையை நம்பலாம்” என்று அறிவித்து, “துருக்கியைப் பாதுகாப்பதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன” என்றும் மேற்கோளிட்டார். இந்த அறிக்கை அங்காரா அமெரிக்க Patriot ஏவுகணைகளை சிரிய எல்லையில் பயன்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கைகளை அடுத்து வந்துள்ளது. இது வடக்கு சிரியாவில் மனிதாபிமான இடைத்தாங்கிப்பகுதி எனப்படுவது மீது “பறக்கக்கூடாத பகுதியை” சுமத்துவதற்கு முதல் கட்டம் ஆகும்.

இராணுவத் தலையீட்டை நோக்கிய உறுதியான முன்னெடுப்பின் மற்றொரு அடையாளமாக, பிரித்தானியப் படைகளின் தலைவர் ஜேனரல் டேவிட் ரிச்சர்ட் ஞாயிறன்று பிபிசியில் பிரித்தானியா இக்குளிர்காலத்தில் மனிதாபிமான உதவி என்ற பெயரில் சிரியாவிற்குள் துருப்புக்களை அனுப்பத் தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது என்றார். “ஏன் இதைச் செய்யக்கூடாது என்பதற்கு இராணுவக் காரணம் இல்லை; அனைத்து சாத்தியப்பாடுகள் குறித்தும் முறையாக ஆராயப்படுகின்றன” என்றார் அவர்.

அமெரிக்க மக்களும் உலகமும் மீண்டும் பொய்கள், போலிக்காரணங்களை அடித்தளமாகக் கொண்ட ஆக்கிரமிப்புப்போரில் இழுக்கப்படுகின்றன. சிரியாவிற்கு எதிரான போர் என்பது “மனிதாபிமானத்திற்காகவோ” அல்லது “ஜனநாயகத்திற்காகவோ” நடத்தப்படமாட்டாது. மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நோக்கங்கள் எண்ணெய் வளமுடைய மத்திய கிழக்கில் நிறைவேற்றப்படுவதற்கும் அமெரிக்க ஆளும் நிதிய உயரடுக்கு பெருநிறுவனத் தன்னலக்குழுவின் இலாப நலன்களுக்காகவும்தான் நடத்தப்படுகிறது.

அமெரிக்க இராணுவ வாதம் மீண்டும் வெடிப்பதற்கான திட்டங்கள் இரு கட்சிகளாலும் பொதுமக்களிடம் இருந்து ஒரு தேசியத் தேர்தல் நடவடிக்கையின் போது மறைக்கப்பட்டன. ஏனெனில் அத்தேர்தலில் போருக்கான எதிர்ப்பை தெரிவிக்கும் சந்தர்ப்பத்தை வாக்காளர்களுக்கு கொடுக்காமல் இருப்பதற்காகவாகும்.

இராணுவவாதத்திற்கு எதிரான போராட்டம் அமெரிக்காவில் தற்பொழுது இருக்கும் இரு கட்சி ஆட்சிமுறையின் வரம்பிற்குள் நடத்தப்பட இயலாது. மற்றொரு போரை நிறுத்தும் பணி தொழிலாள வர்க்கம் அதன் சுயாதீன அரசியல் பலத்தை சோசலிசத்திற்கான போராட்டத்திற்காக அணிதிரட்டுவதின் மூலம்தான் முன்னெடுக்கப்படமுடியும்.