சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

The troika calls for further cuts in Greece

கிரேக்கத்தில் முக்கூட்டு மேலும் கூடுதலான வெட்டுக்களைக் கோருகிறது

By Christoph Dreier
17 November 2012
use this version to print | Send feedback

இவைதான் கடைசி வெட்டுக்களாக இருக்கும் என்று கிரேக்க பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரஸ் சமீபத்தில் அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டிருந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு பரந்த மக்கள் எதிர்ப்பைக் குறைக்க அவர் முற்பட்டிருந்ததார்.

ஆனால் கிரேக்கப் பாராளுமன்றம் 2013 ஆண்டுக்கான சிக்கன வரவு-செலவுத் திட்டத்தை ஏற்று ஒரு நாளைக்குப்பின், முக்கூட்டு (ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி) குறைந்தபட்சம் இன்னும் 17.4 பில்லியன் யூரோக்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் வெட்டப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

நவம்பர் 12ம் திகதி முக்கூட்டு அளித்த அறிக்கை கிரேக்க அரசாங்கம் “மிகவும் மூர்க்கமான” வெட்டுக்களை செயல்படுத்தியது என்பதை ஒப்புக் கொண்டு, பின் கிரேக்கத்தின் வருங்கால பொருளாதாரம் பற்றி பேரழிவு நிலைச் சித்திரத்தைக் கொடுத்துள்ளது.

மக்களுடைய எதிர்ப்பை மீறி ஊதியக்குறைப்புக்கள் மற்றும் தொழிலாளர் சந்தைச் “சீர்திருத்தங்களை” சுமத்தியதற்கு அறிக்கை அரசாங்கத்தை பாராட்டுகிறது. கிரேக்கம் மீண்டும் “போட்டித்தன்மையை” பெறப்போகிறது என்றும் அறிக்கை அறிவித்துள்ளது.

உண்மையில் தொடர்ந்து வந்த பல சிக்கனப் பொதிகள் வேலையின்மை விகிதம் 25.3 என உயர்வதற்கும், இளைஞர்களுக்கு அது 58% என உயர்வதற்கும் வழிவகுத்துள்ளது. அறிக்கையின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் ஊதியங்கள் சராசரியாக 15% குறைந்துவிட்டன; நுகர்வோர் வரிவிதிப்புக்கள் கடுமையாக அதிகரித்துள்ளன.

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் குறிப்பிடத்தக்க வகையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிரேக்க தீவிர மருத்துவப் பாதுகாப்பு (மருந்துப் பாதுகாப்பு) சங்கத்தின் தலைவர் நேற்று வெட்டுக்கள் நாட்டின் மருத்துவமனைகளில் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலைமையே ஏற்படுத்திவிட்டதாக எச்சரித்துள்ளார். தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள படுக்கை எண்ணிக்கைகள் 20% க்கும் மேல் குறைந்துவிட்டன, அவசரகால சிகிச்சைகளுக்கு தேவையான அளவைவிட மிகவும் குறைந்துவிட்டன. இதைத்தவிர, இன்னும் அதிக கிரேக்க மக்கள் எந்தவித சுகாதாரக் காப்பீடும் இன்றி உள்ளனர்.

முக்கூட்டு அறிக்கை “வெற்றி” என்று விளக்குவது நாட்டின் கடன் நெருக்கடி மோசமாகி இருப்பதற்கு வழிவகுத்துள்ளது. கிரேக்கத்தில் மந்த நிலை “எதிர்பார்த்ததைவிட ஆழ்ந்துள்ளது” என்று அறிக்கை குறிப்பிடுகிறது. பொருளதாரம் இந்த ஆண்டு 6.0% சுருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; குறைந்தப்பட்சம் 4.2% என்று அடுத்த ஆண்டு சுருங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சிக்கன நடவடிக்கைகள் இருந்தபோதிலும்கூட, அடிப்படைப் பற்றாக்குறை இந்த ஆண்டும் அதிகமாகும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

கிரேக்கத்தின் கடன் சுமை 2013ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 190% ஐ விட அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும்கூட முக்கூட்டு இப்பொழுது 17.4 பில்லியன் யூரோ வெட்டுக்கள் 2016க்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதன் விளைவுகள் கிரேக்கத் தொழிலாளர்களுக்கு பேரழிவாக இருக்கும்.

இந்த அறிக்கை முதலில் ஜுன் மாதம் வெளியிடப்படுவதாக இருந்தது; ஆனால் இதன் வெளியீட்டை பலமுறை முக்கூட்டு நிறுத்தி வைத்தது; கிரேக்க அரசாங்கத்திற்கு புதியவெட்டுக்களை செயல்படுத்த அழுத்தம் கொடுப்பதற்காக அவ்வாறு செய்தது; இல்லாவிடில் கடன்களின் அடுத்த தவணையான 31.5 பில்லியன் யூரோக்கள் நிறுத்தி வைக்கப்படும் என்றும் அச்சுறுத்தியது; அது இல்லாவிடின் கிரேக்கம் திவாலை எதிர்கொள்ளும்.

நவம்பர் 8 அன்று பாராளுமன்றம் ஒரு சிறிய பெரும்பான்மையுடன் 13.5 பில்லியன் யூரோக்கள் வெட்டுப் பொதிக்கு ஆதரவாக வாக்களித்தது; இதைத்தவிர நிறைய தொழிலாளர் சந்தை “சீர்திருத்தங்களும்” இயற்றப்பட்டன. சிக்கன நடவடிக்கைகளில் 30% வரை ஊதிய வெட்டுக்கள் மற்றும் பணி நீக்கங்கள், கல்வி, சுகாதாரத் துறைகளில் செலவுக் குறைப்புக்கள் ஆகியவையும் அடங்கும்.

இதுவரை வெளியிடப்பட்டுள்ள முக்கூட்டு அறிக்கையின் பகுதிகள் கிரேக்கக் கடன்கள் தீர்வது குறித்து அதிகம் கூறவில்லை. யூரோக் குழுவின் நிதி மந்திரிகள் திங்களன்று கிரேக்கத்திற்கு அதன் கடன் இலக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120% என்பதை அடைய 2022 வரை அவகாசம கொடுத்துள்ளதாக அறிவித்தனர். இதன் பொருள் கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியை அதுவரை நம்பியிருக்க வேண்டும், மூலதனச் சந்தைகளில் கடன் வாங்குவதை மீண்டும் தொடக்குவது அதற்குப் பின்தான் என்று ஆகும். சிக்கனத்திற்கு உறுதியளித்தல் மற்றும் முக்கூட்டு வாடிக்கையாக கணக்குகளைப் பரிசீலிக்க வருகை தருதல் ஆகியவை 2022 வரை தொடரப்படும்.

அத்தகைய சூழ்நிலையில் கூடுதல் கடனாக 32.6 பில்லியன்கள் தேவைப்படும். பல யூரோப்பகுதி அரசாங்கங்கள் கிரேக்கத்திற்குக் கொடுத்த முந்தைய கடன்களுக்கு அவற்றின் தேசியப் பாராளுமன்றத்தின் ஆதரவைப் பெறுவதில் இடர் உற்றுள்ளன. இதன் விளைவாக முக்கூட்டு, நேரடி கடன்களுக்கு பதிலாக பல மாற்றீடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒரு கருத்தின்படி கிரேக்கம் அதன் கடன்களுக்கான வட்டியை செலுத்துவதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று உள்ளது; மற்றொன்றின்படி திருப்பிக் கொடுக்க வேண்டிய கால அவகாசம் நீடிக்கப்பட வேண்டும் என்று உள்ளது. ஆனால் இரு நடவடிக்கைகளும் தேசிய வரவு-செலவுத் திட்டங்களில் நிதிய விளைவுகளை ஏற்படுத்தும்.

கடந்த வார விவாதங்களில் இத்துல்லியமான பிரச்சினைகள் குறித்து முக்கூட்டிற்குள் கடுமையான மோதல்கள் வெளிப்பட்டன. செவ்வாயன்று யூரோக் குழுவின் தலைவர் Jean-Claude Jucker உடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் மாநாட்டில், IMF தலைவர் கிறிஸ்டின் லகாரட், கிரேக்கக் கடன் இலக்கிற்கு இரண்டு ஆண்டுகள் கூடுதல் அவகாசம் கொடுத்திருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். “ஏற்கனவே நம்மிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்று கூறிய அவர், IMF இருக்கும் இலக்குகளைத்தான் தொடரும் என்று கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டங்களை Jucker விளக்க வலியுறுத்துகையில், லகார்ட் தன்னுடைய அதிருப்தியைச் சிறிதும் மறைக்கவில்லை.

2020க்குள் கடன் விகிதத்தை 120%க்குக் குறைப்பதற்காக, லகார்ட் கிரேக்கத்தின் பொதுக் கடன்கள திருப்பியளித்தல் மறுகட்டமைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறினார். ஆண்டுத் தொடக்கத்தில் தனியாகக் கடன் கொடுத்தவர்கள் தங்கள் பத்திரங்களில் பெயரளவு மதிப்பில் 53.5 சதவிகிதத்தைத் தள்ளுபடி செய்தனர்; இதற்கு ஈடாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து உத்தரவாதங்கள் வந்தன. இப்பொழுது லகார்ட் இத்திட்டத்தை கடன் கொடுத்துள்ள யூரோ நாடுகள், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச  நாணய நிதி ஆகியவற்றிற்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இத்தகைய “நடவடிக்கை” தொடர்புடைய நாடுகளின் வரவு-செலவுத் திட்டங்களை பாதிக்கும்; ஜேர்மனி 17.5 பில்லியன் யூரோக்களைத் தள்ளுபடி செய்யுமாறு கோரப்படும். ஜேர்மனிய நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌபிள உடனடியாக இதற்கு விடையிறுக்கும் வகையில் அத்தகைய தீர்வை நிராகரித்தார். இதற்கிடையில் அமெரிக்க நிதிய நலன்களின் மேலாதிக்கம் கொண்ட IMF கிரேக்கத்திற்கு தான் புதிதாக நிதி ஏதும் அளிக்காது என்று வலியுறுத்திவிட்டது. IMF ஏற்கனவே இரண்டாம் கடன் பொதியில் தன் பங்களிப்புக்களை குறைத்துவிட்டது.

வேறுபாடுகள் இருந்தபோதிலும்கூட, முக்கூட்டின் பிரதிநிதிகள் கிரேக்கம் மற்றும் ஐரோப்பா முழுவதும் சிக்கன நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு வங்கிகளுக்கும் ஊக வணிகர்களுக்கும் புதிய மூலதனத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் ஒன்றாக உள்ளனர் —இது ஐரோப்பிய தொழிலாளர்களின் இழப்பில் ஏற்படுத்தப்படும். இந்த முக்கூட்டு அறிக்கை, ஒரு தவறுக்கும் இடமில்லாத செய்தியாகும்.