சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Vigilante mobs, right-wing protests target Roma in France

கண்காணிப்பாளர் கும்பல்கள் மற்றும் வலதுசாரி எதிர்ப்புக்களை பிரான்சின் ரோமாக்கள் இலக்கு கொள்கின்றனர்

By Antoine Lerougetel and Alex Lantier
2 October 2012
use this version to print | Send feedback

பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் ரோமாக்களைத் தொடர்ந்து துன்புறுத்துகையில், மார்சேயில் உள்ள ஒரு கண்காணிப்பாளர் கும்பலும் லீல்லில் வலதுசாரி எதிர்ப்பும் ரோமா முகாம்களை இலக்குக் கொண்டன.

செப்டம்பர் 28 வெள்ளியன்று, 30 பேர் அடங்கிய  உள்ளூர் மக்களில் ஒரு குழு மார்சேயியின் Créneaux பகுதியில் ஒரு முகாமைக் கைவிடுமாறு ரோமாக்களைக் கட்டாயப்படுத்தியதுஇது நகரின் பெரும்பாலான குடியேறிவயர்களின் வறிய பகுதிகளில் ஒன்றாகும். இம் முகாம் இதற்குப் பின் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அந்த இடத்தில் கூடிய செய்தியாளர்கள் எரிக்கப்பட்ட படுக்கைகள் பிற பயன்பாட்டுப் பொருட்களின் புகைப்படங்களை எடுத்தனர்.

கண்காணிப்பாளர் கும்பல்கள் முகாமை அழிப்பதற்கு செல்லுமுன் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டனர். இப்பகுதியின் மேயரான PS செனட்டர் Samia Ghali, வியாழன் காலை மக்கள் என்னைப் பார்க்க வந்தனர், ரோமாக்கள் தொடர்ந்து நீடிப்பதில் அவர்கள் சீற்றம் கொண்டிருந்தனர் என்றார்.

ஆயினும்கூட மார்சேய் பொலிசார் அவர்களைத் தடுக்க ஏதும் செய்யவில்லை; நிகழ்விற்குப் பின் வந்த பொலிஸ் தகவல்கள், வெளியேற்றத்தின் போது வன்முறை நடந்ததற்குச் சான்றுகள் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

வலதுசாரி, சட்டம்-மற்றும்-ஒழுங்கு அடிப்படையில் Ghali பிரச்சாரத்தை நடத்தினார். ஆகஸ்ட் 6ம் தேதி மார்சேயில் பிரெஞ்சு இராணுவம் தலையிட்டு போதைப் பொருள் வணிகத்தை அழிக்க வேண்டும் என்றும் வேலையில்லாத இளைஞர்கள், படிப்புத் தகுதி அற்றவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார். இக்கருத்துக்கள் செப்டம்பர் 6ம் திகதி எலிசே ஜனாதிபதி அரண்மனையில் PS அதிகாரிகள் ஒரு காபினெட் தர விவாதம் நடத்துவதற்கு தூண்டுதல் கொடுத்தது.

செப்டம்பர் 29ம் திகதி Cysoing ன் புறநகரான லீல்லில் கிட்டத்தட்ட 700 உள்ளூர்வாசிகள், உள்ளுர் அதிகாரிகள் தலைமையில் நகரத்திற்குள் ரோமாக்கள் வருவதை எதிர்த்து அணிவகுத்தனர். அணிவகுத்தவர்களில் ஒருவர், முன்னாள் சிப்பாய் என்று தன்னைக் கூறிக் கொண்டவர், தெரிவித்தார்: அவர்கள் நம் நகரத்திற்கு வந்தால், நாம் மார்சேயில் செய்தது போல் அவர்களை அடித்து விரட்டுவோம். மார்சேய் ஒரு முன்னோடியைக் கொடுத்துள்ளது.

ஒரு சிறிய எதிர் ஆர்ப்பாட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது; ஆனால் வழிப்போக்கர்கள் இந்த எதிர்ப்பை இனவாத, பாசிச வாதிகளுடையது என்றனர்.

Cysoing அணிவகுப்பு லீல்லில் PS அதிகாரிகள் அப்பிராந்தியத்தில் மற்ற முகாம்களில் இருந்து நூற்றுக்கணக்கான ரோமாக்களுக்குப் புதிய இட வசதிக்கு ஏற்பாடு செய்கையில் வந்தது. வியாழன் அன்று இரண்டு ரோமா முகாம்கள் லீல்லுக்கு அருகே தகர்க்கப்பட்டன. 150 முதல் 200 மக்கள் வசிக்கும் Hellemmes முகாம், அதிகாலையில் பொலிஸ் வாகன வரிசை ஒன்றினால் வெளியேற்றத்திற்கு உட்பட்டது; பொலிசாருக்குத் துணையாக 150 CRS கலகப்பிரிவுப் படையும் வந்திருந்தது. PS ன் முதல் செயலராக இருக்கும் Martine Aubry ஐத் தலைவராகக் கொண்ட LMCU எனப்படும் லீல் நகர்ப்புறச் சமூகம், இப்பகுதிகளுக்கு பிரெஞ்சு அரசுடன் கூட்டாக உரிமையைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு முகாம்களை அகற்றவதற்கு சட்டபூர்வ நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ரோமாக்களை ஒருங்கிணைப்புக் கிராமங்கள் என அழைக்கப்படுவதில் இருத்தும் திட்டத்தை அரசாங்கம் கொண்டுள்ளது; அங்கு அவர்கள் மிகவும் மலிவான முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட வீடுகளில் வசிக்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டு, அரச பாதுகாப்புப் படைகளால் கண்காணிக்கப்படுவர். Le Monde உடைய கருத்துப்படி லீல்லில் அத்தகைய கிராமங்கள் ஐந்து உள்ளன; இன்னும் மூன்று முகாம்கள் கட்டமைப்பில் உள்ளன.உட்புகு கிராமங்கள் என அழைக்கப்படுபவை உண்மையில் சேரிக்கள்தான்.

ரோமாக்களுக்கு எதிரான இனவெறி நடவடிக்கைகள் வெடிப்பு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் PS அரசாங்கம் மற்றும் மே மாதம் நடந்த தேர்திலில் அதற்கு ஆதரவு கொடுக்கக் கோரிய குட்டி முதலாளித்துவ இடது சக்திகளான இடது முன்னணி, புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி NPA ஆகியவற்றின் மீதான ஒரு அரசியல் குற்றச்சாட்டாகும். அதிகாரத்திற்கு வந்தபின், PS முந்தைய கன்சர்வேட்டிவ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் கொள்கையான ரோமாக்களை முகாம்களில் இருந்து அகற்றுதல், பரந்த நாடுகடத்தல் ஆகியவற்றைத்தான் தொடர்கிறது. இந்நிகழ்வுகளுக்கு அதுதான் அரசியல் அளவில் பொறுப்பைக் கொண்டுள்ளது.

சிக்கன நடவடிக்கைகள், உயர்ந்து செல்லும் வேலையின்மை, அலைகள் போன்ற பணிநீக்கம், ஆலைகள் மூடல் இவற்றிற்கு மக்களின் எதிர்ப்பைத் திசை திருப்ப இந்த சூனிய வேட்டையை பயன்படுத்துகிறது.

ரோமாக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமக்கள் ஆவர், பெரும்பாலும் பிரெஞ்சுக்காரர்கள். கிட்டத்தட்ட 15,000 முதல் 20,000 வரையிலான ரோமாக்கள் முக்கிய பிரெஞ்சு நகரங்களின் விளிம்பில் முகாமிட்டு வசிப்பதாக நம்பப்படுகிறது; இதில் 4,000 பேர் பாரிஸுக்கு அருகிலேயே உள்ளனர். இரண்டாம் உலகப் போரின்போது அவர்கள் பிரான்சின் பாசிச விஷி ஆட்சியால் காவலில் வைக்கப்பட்டனர். ஐரோப்பிய ஒன்றிய நீதித்துறை ஆணையர் விவியன் ரெடிங், சார்க்கோசி ரோமாக்களை வெளியேற்றியதை இரண்டாம் உலகப் போர் காலத்தில் நடத்தப்பட்ட நாடுகடத்தல்களுடன் ஒப்பிட்டு, ஐரோப்பிய நீதிமன்றத்தில் பிரான்ஸ் மீது வழக்குத் தொடரப்படும் என்று 2010ல் அறிவித்தார்; ஆனால் பின்னர் அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கிவிட்டார்.

ரோமா நிகழ்வுகளில் கண்காணிப்பாளர் கும்பல்கள் வன்முறை மற்றும் எதிர்ப்புக்கள் என்பது அவர்கள் சுகாதார நெறிகளை மீறுவதால் முகாம்கள் அழிக்கப்படுகின்றன என்று கூறும் PS கருத்துக்களின் இழிந்த தன்மையைத்தான் அம்பலப்படுத்துகிறது. மேலும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களின்போது ஹாலண்ட் ரோமாக்களின் உரிமைக் குழுக்களுக்கு தன்னுடைய அரசாங்கம் முடியும் இடங்களில் எல்லாம், தூய்மையற்ற முகாம் அகற்றப்படும்போது, மாற்றீட்டு இடங்கள் அளிக்கப்படும் என்ற உறுதிமொழியை அளித்திருந்தார்.

இது ரோமாக்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டும் இனவெறிப் பிரச்சாரத்திற்கும், மறைமுகமான உத்தியோகபூர்வ ஆதரவுடன் சட்டவிரோதமாக நடக்கும் வன்முறைக்கும் ஓர் அரசியல் மறைப்பாகும்.

மார்சேய் மற்றும் லீல்லில் நடந்த நிகழ்வுகள் அரசாங்கத்தின் இன்னும் கூடுதலான ரோமா எதிர்ப்பு அறிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளன. உள்துறை மந்திரி மானுவால் வால்ஸ் புதன் அன்று ஓர் அறிக்கையில் சட்டவிரோத முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்னும் நீதிமன்ற உத்தரவுகள் உறுதிப்பாட்டுடன் செயல்படுத்தப்படும் என்றார். தூய்மையற்ற முகாம்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்று கூறிய அவர், அவை நிறுவப்பட்டிருக்கும் தொழிலாளர் பகுதியின் சமூக வாழ்விற்குச் சவாலாக உள்ளன என்று கூறினார்.

ஜூலை 31ம் திகதி அவர் Europe1 Radio  இடம் கூறினார்: உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் எங்கு நீதிமன்றத் தீர்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் ரோமா முகாம்களை தகர்க்கும் பணியைக் கொண்டுள்ளனர். விஷயங்கள் அனைத்தும் எளியவைதான். ஆம், நீதிமன்றத் தீர்ப்புக்களை ஒட்டி முகாம்கள் கலைக்கப்பட்டுவிடும்.

செப்டம்பர் 21ம் திகதி வால்ஸ், Christiane Taubira என்ற அரசாங்க தலைமை வக்கீலுடன் மார்சேயில் Ghali இன் 15, 16வது தொகுதிகளை பகுதிகளை பார்வையிட்டார். இவர்கள் இருவரும் காலியின் மாநகரசபை அலுவலகத்தின் முன்பு சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்த உரைகளை வழங்கினர். Taubira: அரசு ஒன்றும் செயலற்று போய்விடவில்லை, அரசு மீண்டும் வந்துள்ளது என்ற கருத்தை மக்கள் கொள்ள வேண்டும் என அறிவித்தார்.

அரச அதிகாரம் மார்சேய்க்கு மீண்டும் வந்துவிட்டது என்று Taubira அறிவித்து ஒரு வாரத்திற்குப் பின் கண்காணிப்பாளர் கும்பல்கள் ஒன்று ரோமா முகாம் ஒன்றைத் தாக்கியது. ஆனால் இது அரசாங்கத்தை மக்கள் குறைகூறுவதற்கு வழிவகுத்தது. செப்டம்பர் 30ம் திகதி மார்சேய் அதிகாரிகள் Créneaux பகுதியில் இருந்து அகற்றப்பட்ட ரோமாக்கள் நிரந்தராமாக வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரினர்.

இவ்வகையில் சோசலிஸ்ட் கட்சி (PS), மார்சேயில் இயங்கும் அரச அதிகாரத்தின் வலதுசாரி கும்பலின் சட்டத்திற்கு புறம்பான வன்முறைக்கு அது இணங்கிப்போகும் தன்மையை அம்பலப்படுத்துகிறது. சார்க்கோசியிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்ற பின் PS அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அவருடைய தாக்குதல்களை விரிவாக்கிவருகிறது.

இதேவேளையில் பிரான்சில் ரோமாக்களை பொலிசார் அகற்றுவது தொடர்கிறது. வார இறுதியில் 240 ஐரோப்பிய ரோமாக்கள் லியோனில் இருந்து புக்காரஸ்ட்டிற்கு விமானத்தில் அனுப்பப்பட்டனர்; இது லியோன் பகுதியில் மூன்று முகாம்கள் மூடப்பட்டு, 200க்கும் மேற்பட்ட ரோமாக்கள் பாதிக்கப்பட்டபின் நடந்துள்ளது. ரோமா பாதுகாப்பு அமைப்புக்கள் செய்தி ஊடகத்திடம் கூறினர்: இது பல மாதங்கள் முகாம்கள் மீது வெளியேற அழுத்தம் கொடுத்தபின் வந்துள்ளது. இவை தாமே விரும்பி செய்யும் வெளியேற்றம் என்னும் மறைப்பில் நடக்கும் கட்டாய வெளியேற்றங்கள் ஆகும்.

கடந்த வாரம், லியோன் புறநகர் பகுதியான Vaulx-en-Velin இல் ஒரு 150 பேர் உள்ள முகாம் மற்றும் Villeurbanne இல் ஒரு 100 பேர் உள்ள முகாம் இரண்டும் பொலிசால் தகர்க்கப்பட்டன. Villeurbanne ரோமா முகாமிற்கு அருகே உட்கார்ந்ததாகக் கூறப்படும் 50 பேரும் வெளியேற்றப்பட்டனர். இக்குடும்பங்கள் இப்பொழுது லியோன் பெருநகர்ப்பகுதித் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது; பொலிசார் அவர்கள் ஓரிடத்தில் குடியேறவிடாமல் தடுத்து வருகின்றனர்.

புதன் கிழமை அன்று, சமீபத்தில் பாரிஸ் புறநகரங்களில் ரோமா முகாம்கள் அகற்றப்பட்டபின் 19வது தொகுதியிலும் மற்றொரு வெளியேற்றம் நடத்தப்பட்டது.