சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

SYRIZA deepens European Union ties as austerity intensifies in Greece

கிரேக்கத்தில் சிக்கன நடவடிக்கை தீவிரமாகையில் சிரிசா ஐரோப்பிய ஒன்றியத் தொடர்புகளை வலுப்படுத்துகிறது

By Christoph Dreier
4 October 2012
use this version to print | Send feedback

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடையே தீய கனாக்களை சில மாதங்களுக்கு முன் தூண்டியவர் மிக நிதானத்துடன் உள்ளார். பிரஸ்ஸல்ஸின் ஐரோப்பிய பாராளுமன்றக் கூட்ட அறையில் அலெக்சிஸ் சிப்ரஸ் மிக நேர்த்தியாக இடது வகிடு எடுக்கப்பட்ட முடியுடனும் நட்பு நிறைந்த சிரிப்புடனும் அமர்ந்துள்ளார். பெரும் கூக்குரல் இடுபவருடனோ அல்லது வர்க்கத்திற்காக வீரம் பேசுபவருடனோ அவர் பொதுவாக எதையும் கொண்டிருக்கவில்லை. அவர் ஒரு டை அணிந்திருந்தால், [பவேரிய வலதுசாரி அரசியல்வாதி] Markus Söder இன் கிரேக்கப் பதிப்பாக இருந்திருக்கும்.

இத்தகைய சொற்கள்தான் பெரும் கன்சர்வேடிவ் ஏடான Frankfurter Allgemeine Zeigung  கிரேக்கத்தின் மாற்று இடது கூட்டணி, சிரிசாவின் தலைவர் பற்றி விளக்கிக் கூறியவை. இது சிப்ரஸின் ஐரோப்பிய ஒன்றியம்  குறித்த நட்பு நிறைந்த நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பது மட்டும் இல்லாமல், அவருடைய அமைப்பு குறித்து ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் கொண்டுள்ள சாதகமான கருத்தையும் தெரிவிக்கிறது. ஐரோப்பாவில் வர்க்கப் போராட்டங்கள் தீவிரமடைகையில், இன்னும் அதிகமாக சிரிசா போன்ற போலி இடது அமைப்புக்கள் ஆளும் வர்க்கமே நெருக்கடியை தொழிலாளர்களுக்கு சாதகமாகத் தீர்க்கும் என்னும் போலித் தோற்றங்களை நிலைநிறுத்த அழைப்படும்.

கடந்த வாரம் சிப்ரஸ் ஐரோப்பாவில் பயணித்து முதலில் ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திப் பின்னர் பாராளுமன்றத்தின் தலைவர் ஜேர்மனிய சமூக ஜனநாயக வாதி  Martin Schulz ஐ பிரஸ்ஸல்ஸில் சந்தித்தார். அவரை தன்னுடைய விருந்தாளியாக Schulz உவகையுடன் வரவேற்றார். இதன்பின் சிப்ரஸ் சனிக்கிழமை அன்று ஹம்பேர்க்கில் ஒரு அணிவகுப்பில் பேசி, அவருடைய கட்சி ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களை எதிர்க்கவில்லை என்றும் அவற்றிடம் இருந்து ஆதரவைத்தான் எதிர்பார்க்கிறது என்றும் கூறினார். ஏற்கனவே சிப்ரஸ் சில வாரங்களுக்கு முன்பு ஐரோப்பிய ஒன்றிய கிரேக்கத்திற்கான பணிக்குழுவின் தலைவர் Horst Reichenbach  ஐ சந்தித்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியமும் கிரேக்க அரசாங்கமும் கிரேக்கத்தில் சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகையில் இப்பயணங்கள் நேர்ந்துள்ளன. திங்களன்று கிரேக்க அரசாங்கக் கூட்டணி, கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகம் ND, சமூக ஜனநாயக PASOK மற்றும் ஜனநாயக இடது DIMAr ஆகியவற்றைக கொண்டது, 2013க்கான தன் வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் அளித்தது. இந்த வரவு-செலவுத் திட்டம் இந்த ஆண்டு பொருளாதாரச் சரிவு 6.5% இருக்கும் என்றும் அடுத்த ஆண்டு 3.8 என இருக்கும் என்றும் கணிக்கிறதுஇப்புள்ளிவரங்கள் மிகவும் நம்பிக்கைத் தன்மை உடையவை என்று பல வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பரந்த வறுமை, குறைந்த ஊதியங்கள், வேலையின்மை என ஏற்கனவே கிரேக்க வாழ்வை மேலாதிக்கம் கொண்டவை, ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ள சமீபத்திய சிக்கனப் பொதியின் விளைவாக இன்னும் மோசமாகும்; இதில் கூடுதலாக 13.5 பில்லியன் யூரோ  (அமெரிக்க $17 பில்லியன்) வெட்டுக்கள் இருக்கும்.

இந்த மூன்றாம் சிக்கனப் பொதிக்குப் பெருகிய மக்கள் எதிர்ப்பு உள்ளது; இது முற்றிலும் சர்வதேச வங்கிகள், பெருநிறுவனங்களுக்கு ஆதாயங்களைக் கொடுக்கிறது. கிரேக்கத்தின் பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரஸ் (ND) வெட்டுக்களைச் சுமத்துவதில் பெரும் இடரைக் காண்கிறார்; ஏனெனில் வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும் பரவியுள்ளன, உள்ளூராட்சி நிர்வாகங்களில் தொழிலாளர்கள் அவர் இயற்றும் சட்டத்தைச் செயல்படுத்த மறுக்கின்றனர்.

இச்சூழலில் சிரிசா ஆளும் உயரடுக்கிற்குப் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. 2009ம் ஆண்டு ND  அதிகாரத்தை எதிர்க்கட்சியான PASOK  க்கு அளித்தது; தொழிற்சங்கங்களுடன் கொண்டுள்ள பிணைப்புக்கள் மூலம் PASOK வங்கிகள் கோரும் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களைச் செயல்படுத்த முடியும் என அது நம்பியது. இப்பொழுது மூன்று ஆண்டுகளுக்கு பின் சிரிசா இதே பங்கைச் செய்ய முன்வந்துள்ளது. தொழிற்சங்கங்களுடன் இது செல்வாக்கு கொண்டிருப்பதுடன், பலதரப்பட்ட கிரேக்க குட்டி முதலாளித்துவ, போலி இடது குழுக்களுடனும் நெருக்கமான தொடர்புகளைக் கொடுள்ளது; அவைதான் சமூக எதிர்ப்பைக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தும் என்று இது நம்புகிறது.

தேர்தலுக்குப்பின் சிரிசா வேலைநிறுத்தங்களோ எதிர்ப்புக்களோ அமைக்கப்பட மாட்டாது என உறுதியளித்தது. இப்பொழுது அது பயனற்ற எதிர்ப்புக்களான 24 மணி நேரப் பொது வேலைநிறுத்தங்கள் என தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்பவற்றிற்கு ஆதரவு தருகிறது.

சிரிசா ஒரு புதிய அரசாங்கத்தை நாளை முதல் வேலையாக அமைக்கத் தயார் என்று சிப்ரஸும் அறிவித்தார். ஜூன் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களின் போது சிரிசா ND க்கு அடுத்து இரண்டாம் இடத்தில் 27% மக்கள் வாக்குகளைப் பெற்று வந்தது.

ஜூன் தேர்தலுக்குப்பின், சிப்ரஸ் வெட்டுக்களுக்கு மக்கள் எதிர்ப்பை சமாதானப்படுத்தும் வகையில் பல சமூகத் தேவைகளை எழுப்பியுள்ளதுஇவற்றில் சிக்கன நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளியும் கோரப்பட்டுள்ளது. ஆனால் கவனித்துப் பார்த்தால் இந்த உறுதிமொழிகளின் வெற்றுத்தனம் என்று புலப்படும்.

தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின் அவர் தனியார்மயம் பின்வாங்கப்படல், முந்தைய சிக்கன நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படல் வேண்டும் என்று கோரியவற்றைக் கைவிட்டுவிட்டார். இக்கோரிக்கைகளைத்தான் அவர் இழிந்த முறையில் முன்வைத்து அவர் கிரேக்கம் நிதியச் சந்தைகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் வாங்கிய கடன்களைக் கொடுக்கும் என உறுதியளித்திருந்தார்.

மாறாக சிரிசா தற்போதைய சிக்கனப் பொதியைக் குறைகூறுவதில் குவிப்புக் காட்டுகிறது. இது செயல்படுத்தப்பட்டால் சர்வதேச அளவில் கடன் கொடுத்தவர்கள் தங்கள் கடன்களை மீண்டும் பெறுவது பாதிப்பிற்கு உட்படும், ஏனெனில் தேசியத் திவால்தான் இதன் தவிர்க்க முடியாத விளைவு என்று அது அறிவித்துள்ளது.

இதற்கு மாற்றீடாக சிரிசா ஐரோப்பியக் கடன் மாநாட்டிற்கு அழைப்பு கொடுத்துள்ளது; அது வட்டிப்பணம் வாங்குவது ஒத்திப் போடப்பட வேண்டும் என்றும் ஓரளவு கடன் நிவாரணம் தேவை என்றும் விவாதிக்க வேண்டும் என்று கூறுகிறது. 1953ம் ஆண்டு நடத்தப்பட்ட லண்டன் கடன் உடன்பாட்டின் உதாரணத்தைக்காட்டி (இது ஜேர்மனியின் கடன்கள் பலவற்றைத் தள்ளுபடி செய்தது) சிப்ரஸ் கிரேக்கத்திற்கு ஒரு மார்ஷல் திட்டம் தேவை, அது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றம் கொடுக்கும், உரிய நேரத்தில் கடன்களைத் திருப்ப உதவும் என்றார்.

ஆனால் இப்பொழுது கிரேக்கத் தொழிலாளர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறும் கடன்களுக்கு அவர் வெளிப்படையாகச் சவால் விட மறுக்கிறார். மாறாக வங்கிகளும் வெளிநாட்டு அரசாங்கங்களும் கடன்களைத் திரும்பிப் பெறுவதற்குத் தேவையான சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். சிரிசா பொருளாதார சமூக, புவி அரசியல் உறுதிப்பாட்டிற்கு நிற்கிறது. சிப்ரஸ் செப்டம்பர் 15 அன்று வடக்கு கிரேக்கத்தில் ஒரு வணிகச் சந்தையில் அவ்வாறு வணிகர்களுக்கு உறுதியளித்தார்.

இதே உரையை அவர் மீண்டும் பிற்போக்குத்தன ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுக்குத் தன் ஆதரவைத் வலியுறுத்துகையில் தெரிவித்தார். இன்று சிரிசாவின் பங்கு ஐரோப்பிய சீரான தன்மையைக் கலைப்பது அல்ல என்று அவர் அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான பாதையை திருத்தத்தான் முயல்கிறது தன் கட்சி என்றார்.

ஆர்ஜென்டினாவில் செய்தித்தாள் பஜீனாவிடம்  இரண்டு வாரங்களுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில், சிப்ரஸ் இன்னும் குறிப்பாகப் பேசி, கண்டத்தின் மத்திய வங்கிக்கும், அரசியல் ஒன்றியத்திற்கும் கூடுதல் அதிகாரங்கள் தேவை என்றார். அவர் கூறினார்: உலகத்திலேயே யூரோ ஒரு பிரத்தியேகமான நிகழ்வு ஆகும். எங்களிடையே ஒரு பொது நாணயம் உள்ளது; அதாவது நிதியவகை ஒன்றியம்; ஆனால் அரசியல் ஒன்றியம் இல்லை, அதேபோல் ஐரோப்பாவில் ஒவ்வொரு நாட்டிற்கும் உதவியளிக்கக் கூடிய ஐரோப்பிய மத்திய வங்கியும் இல்லை.

அத்தகைய முன்னோக்கிற்கு மாதிரிபோல், சிப்ரஸ் இத்தாலிய பிரதம மந்திரி மரியோ மொன்டியைக் குறிப்பிட்டார். கிரேக்கத்தின் வணிகச் சந்தையில் அவர் அறிவித்தார்: இத் தேர்தலில் நாம் கிரேக்க மக்ளுக்கு உரிய அனைத்தையும் பெறும் திறனுடைய அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம்; அதாவது ஜூன் 26 கடைசி உச்சிமாநாட்டில் மற்றவர்கள் பெற்ற ஆதாயங்களை. இத்தாலியின் பிரதம மந்திரி வங்கிகளுக்கு நேரடி மறு மூலதனத்தைச் சாதித்தார், நாட்டின் பொதுக் கடனுக்குச் சுமை ஏற்றாமல்.

உண்மையில், நிதிய ஆதரவு உத்தரவாதங்களுக்கு ஈடாக மொன்டியும் ஆழ்ந்த சமூகநலச் செலவு வெட்டுக்களுக்கு, கிட்டத்தட்ட 26 பில்லியன் யூரோக்கள் மதிப்பிற்கு, இந்த ஆண்டு ஒப்புக் கொள்ளும் கட்டாயத்திற்கு உட்பட்டார்.

இந்த முன்னோக்குடன் இணைந்த வகையில் சிரிசா பெருகிய முறையில் தேசியவாத முறையீடுகளைச் செய்கிறது. செப்டம்பர் 16ம் திகதி சிப்ரஸ் கிரேக்கத்தில் ஓர் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றி, எல்லா கிரேக்க மக்களுக்கும் நாட்டை மறுகட்டமைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கும் நாட்டுப்பற்று மிகுந்த, ஜனநாயகம் நிறைந்த அழைப்பைக் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அவருடைய உரையில் மற்றொரு இடத்தில் அவர், இப்பாதை சிவப்புக் கம்பளத்தைக் கொண்டிருக்காது, ரோசா இதழ்களையும் கொண்டிருக்காது என்றார்; அதாவது மக்கள் புதிய தியாகங்கள் என்னும் அலைக்குத் தயார் செய்யப்பட வேண்டும்.