சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

European Union demands further cuts in Greece

ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்கத்தில் மேலும் வெட்டுக்களை கோருகிறது

By Christoph Dreier
5 October 2012
use this version to print | Send feedback

கடந்த வார இறுதியில் முக்கூட்டின் (ஐரோப்பிய மத்திய வங்கி ECB, ஐரோப்பிய ஆணையம் EC, சர்வதேச நாணய நிதியம் IMF—பிரதிநிதிகள் ஏதென்ஸுக்கு கிரேக்க அரசாங்கத்துடன் வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களின் மூன்றாம் தொகுப்பு பற்றி விவாதிக்க மீண்டும் வந்தனர்.

உத்தியோகபூர்வமாக, முக்கூட்டு கிரேக்கத்தின் வரவு-செலவுத் திட்ட நிலைமை பற்றிய அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் IMF க்கும் தயாரிக்கும் பணியை,கிரேக்கத்திற்குக் கடன் கொடுத்தவர்களுக்கான வங்கிப் பிணை எடுப்பிற்கு உடன்படுவதற்கு அடிப்படையாகக் கொண்டுள்ளது; இது மொத்தம் 31.5 பில்லியன் யூரோக்கள் (அமெரிக்க $41.6 பில்லியன்).

உண்மையில் முக்கூட்டின் பணி ஏற்கனவே ஏற்கப்பட்டுவிட்ட சிக்கன நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரிப்பதைவிட, அடுத்த சமூகநல வெட்டுக்களுக்கான பொதிக்கு ஆணைகளை இடுவது என்றுதான் உள்ளது. கடந்த ஜூன்மாதம் முக்கூட்டு உறுதிமொழி அளித்திருந்த கடன்கள், 2013 வரவு-செலவுத் திட்டம் முற்றிலும் ஐரோப்பிய ஒன்றியக் கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரை நிறுத்திவைக்கப்படும்.

பல வாரங்கள் முக்கூட்டுடன் பேச்சுக்கள் நடத்திய பின்னர், ஏதென்ஸ் திங்களன்று ஒரு ஆரம்ப வரைவு வரவு-செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் அளித்தது. இந்தப் வரவு-செலவுத் திட்டத்தில் அடுத்த ஆண்டு 7 பில்லியன் யூரோக்களுக்கும் மேலான சமூகநலச் செலவு குறைப்புக்கள் அடங்கும். பொது ஊழியர்களின் ஊதியங்கள் (1.1 பில்லியன் யூரோக்கள்), ஓய்வூதியங்கள் (3.8 பில்லியன் யூரோக்கள்) ஆகியவற்றில் மிக அதிக நிதிகள் குறைக்கப்படும். கூடுதல் வெட்டுக்கள் சமூகநலச் செலவுகள், சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பொதுப்பணிகளில் செய்யப்படும்.

இச்சிக்கன நடவடிக்கைகள் ஆரம்பத்தில் 11.5 பில்லியன் யூரோக்கள் என்றும் இப்பொழுது மொத்தம் 13.5 அல்லது 14.5 பில்லியன் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டுள்ள இரண்டு ஆண்டுத் திட்டத்தின் பகுதியாகும்.

திங்களன்று கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகக் கட்சியின் பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரஸ் மற்றும் முக்கூட்டின் பிரதிநிதிகள் நடத்தி பேச்சு 35 நிமிடங்கள்தான் நீடித்தது.  பேச்சுக்களைத் தொடர்வதற்கு முன், அரசாங்கம் அதன் புதிய வரவு-செலவுத் திட்டத்தை தொழிலாளர் துறை சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் சந்தைத் தாராளமயமாக்கலுடன் இணைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இத்தகைய சீர்திருத்தங்களுக்கான திட்டங்கள் சில வாரங்கள் முன் முக்கூட்டினால் அளிக்கப்பட்ன. அவற்றில் பணிநேர நீடிப்பு, ஆறுநாள் பணி வாரம் அறிமுகப்படுத்தப்படல், பணிநீக்கங்களை எளிதுபடுத்துதல் ஆகியவை உள்ளனஇந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்கனவே மோசமாகியுள்ள வேலையின்மை விகிதங்களை கிரேக்கத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி இன்னும் அதிகப்படுத்தும். கிரேக்கத் தொழிலாளர்களில் கால்வாசிப்பேரும், கிரேக்க இளைஞர்களில் பாதிக்கு மேலானவர்களும் வேலையின்மையில் உள்ளனர்.

இதைத்தவிர, முக்கூட்டு 7பில்லியன் யூரோக்களில் 2பில்லியன் யூரோக்களைத் திட்டமிடப்பட்டுள்ள வெட்டுக்களில் நிராகரித்துள்ளது; இதற்குக் காரணம் அவை தெளிவற்று உள்ளன என்பதால். இதற்குப் பதிலாக முக்கூட்டு அரசாங்கத்தை இன்னும் கூடுதலான ஊதிய, ஓய்வூதிய வெட்டுக்களைச் செயல்படுத்த வலியுறுத்தியுள்ளது: மேலும் பொதுப்பணித் துறையில் 15,000 ஊழியர்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

கிரேக்க அரசாங்கம் ஏற்கனவே சமூக தேட்டங்களில் கணிசமான தாக்குதல்களை நடத்தி, சிக்கன நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள்மீது குவிப்புக் காட்டும் வகையில் உத்தரவாதம் செய்துள்ளது; ஆனால் அது பொதுத்துறையில் ஏராளமான பணிநீக்கங்கள் செய்வதில் தயக்கம் காட்டியுள்ளது. ஓரளவிற்கு கிரேக்க அரசியலமைப்பு அத்தகைய பணிநீக்கங்களை தடுப்பதால் எனலாம்; ஆனால் கிரேக்கத்தின் கூட்டணி அரசாங்கம் உள்ளூர் அதிகாரங்களின் ஒத்துழைபை இனி நம்புவதற்கு இல்லை என்பதுதான் முக்கிய காரணம் ஆகும்.

நிர்வாக ஊழியர்கள் பலமுறையும் அரசாங்கம் ஆணையிடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த மறுக்கின்றனர்.

பல தகவல்களின்படி, கிரேக்க நிதி மந்திரி யானிஸ் ஸ்டௌமரஸ் கடந்த வார இறுதியில் முக்கூட்டுப் பிரதிநிதிகளிடம் தன் பொறுமையை இழந்தார். வினா எழுப்பியவர்களைப் பார்த்து அவர் கூச்சலிட்டார்: நீங்கள் உண்மையில் அரசாங்கத்தைக் கவிழ்க்க விரும்புகிறீர்களா?” IMF தலைமை ஆய்வாளர் போல் தோம்ஸன் கூட்டணி அரசாங்கம் நீடிக்கிறதா இல்லையா என்பது தன் கவலை இல்லை என்று பதிலளித்தார் எனக் கூறப்படுகிறது.

கிரேக்கத்தின் மிகச் சமீபத்திய சிக்கன நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னோடியில்லாத அளவிற்கு சமூகப் பேரழிவிற்கு வகை செய்துள்ளன. வரவு-செலவுத் திட்டப்படி, நாட்டின் பொருளாதாரம் 2013ல் தொடர்ச்சியாக ஆறாம் ஆண்டில் சுருக்கம் அடையும். 2013 ல் மந்த நிலை 3.8% இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; இது இந்த ஆண்டு இருக்கும் 6.6%ல் இருந்து குறைகிறது. இதன் பொருள் நாட்டின் பொருளாதாரம் மேலும் கால் பகுதி, நெருக்கடி தொடங்கியதில் இருந்து, குறைந்துவிட்டது என்பதாகும்.

ஏற்கனவே அரசாங்கம் ஊதியங்கள், ஓய்வூதியங்கள், சமூகநலச் செலவுகள் ஆகியவற்றில் 49 பில்லியன் யூரோக்களை 2010ல் இருந்து குறைத்துவிட்டது. இதன் விளைவாக வேலையின்மையில் வெடிப்பு, ஊதியங்களில் கிட்டத்தட்ட 60% வெட்டுக்கள், ஓய்வூதியங்களில் பெரும் குறைப்புக்கள் மற்றும் ஒரு கல்வி நெருக்கடி ஆகியவை தோன்றியுள்ளன. ஏதென்ஸில் இப்பொழுது இருக்கும் சமூக சூப் சமையலறைகள் 8,000 பேருக்கு ஒவ்வொரு நாளும் உணவளிக்கிறது. நோயாளிகள் மருந்துகள், டாக்டர்கள் வருகை ஆகியவற்றிற்கு தாங்களே பணம் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறதுஇது மில்லியன் கணக்கான கிரேக்கர்களைச் சுகாதாரப் பாதுகாப்பில் இருந்து ஒதுக்கிவிடுகிறது.

இந்த வெட்டுக்கள் பொதுக் கடன் குறைப்பிற்கு ஒன்றும் வழிசெய்துவிடவில்லை. மாறாக, கிரேக்க நிதி அமைச்சரகத்தின் கருத்துப்படி கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 179.3% என உயரும் எனத் தெரிகிறது. 2008ம் ஆண்டு, கடன் நெருக்கடி தொடங்கிய போதும், பிணை எடுப்புக்களுக்கு முன்னரும் இந்த எண்ணிக்கை 110.7% என்றுதான் இருந்தது.

அவசரகாலக் கடன்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்தால் கொடுக்கப்பட்டதில் ஒரே நலம் அடைந்தவை வங்கிகளும் ஊக வணிகர்களும்தான். வங்கிகள் தாங்கள் கொடுத்த கடன்களைத் திரும்பப் பெற்றன; இதில் மிகப் பெரிய வட்டி விகதங்களும் அடங்கும்; அதே நேரத்தில் யூரோப்பகுதி நாடுகளும் ECB யும் கிரேக்கத்தின் அரசாங்கக் கடன் திரும்பிவருவது தாமதப்படக்கூடும் என்ற இடர்களையும் கருத்திற்கொண்டுள்ளன. இவ்வகையில் மூலதனம் நேரடியாக யூரோப்பகுதி நாடுகளின் வரவு-செலவுத் திட்டங்களில் இருந்து மாற்றப்பட்டன; குறிப்பாக கிரேக்கத் தொழிலாளர்களிடம் இருந்து வங்கிகளின் சேமிப்பு அறைகளுக்கு.

மிகச் சமீபத்திய சிக்கனப் பொதி கிரேக்க மக்களை இன்னும் வறுமையில் தள்ளும்; நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஏதும் செய்யமலேயே. முக்கூட்டின் இரக்கமற்ற தன்மை, கிரேக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், முதலாளித்துவ நெருக்கடியில் இருந்து விளையும் வர்க்க விரோதங்கள் மிகப் பெரிய அளில் தீவிரமாகும் என்பதின் வெளிப்பாடுதான்.