சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

US SEP Presidential Candidate Jerry White to speak in Toronto

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர் ஜெரி வைட் டொரொண்டோவில் பேசுகிறார்

By our reporter
8 October 2012
use this version to print | Send feedback

அக்டோபர் 14 ஞாயிற்றுக்கிழமை அன்று டொரோண்டோவில் நடைபெறவிருக்கும் பொதுக் கூட்டம் ஒன்றில் 2102 ஆம் ஆண்டின் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளரான ஜெரி வைட் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தவிருக்கிறார்.

டொரொண்டோ வருகை தரும் காரணம் குறித்து விளக்கிய வைட், அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் தமது போராட்டங்களை சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுடன் இணைப்பதன் மூலமாக மட்டுமே தமது உரிமைகளையும் வர்க்க நலன்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று இந்தப் பிரச்சாரம் முழுவதிலும் சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தி வந்திருக்கிறது என்று கூறினார். அமெரிக்காவிலோ அல்லது கனடாவிலோ சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசியப் பாதையெதுவும் இல்லை என்றார் அவர்.

தொழிலாளர்களது வாழ்க்கைத் தரங்களை கீழிறக்குவதற்கும் தொழிலாளர்கள் பல தலைமுறைப் போராட்டங்களின் மூலமாக சாதித்தவற்றை அழிப்பதற்கும் முனைந்து வருகின்ற பகாசுர நாடுகடந்த நிறுவனங்களுக்கும் சர்வதேச வங்கிகளுக்கும் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். 

2008 இன் உலகளாவிய முதலாளித்துவ பொறிவுக்கான பதிலிறுப்பாக அமெரிக்காவில் போலவே கனடாவிலும் ஆளும் வர்க்கம் ஒரு சமூக எதிர்ப்புரட்சியை அவிழ்த்து விட்டுள்ளதை வைட் குறிப்பிட்டுக் காட்டினார்.

வணிக-ஆதரவுக் கொள்கைகளில் பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி நிர்வாகம் மற்றும் அதன் குடியரசுக் கட்சி முன்னோடிகளையும் விஞ்சுவதாக ஸ்டீவன் ஹார்பரின் கன்சர்வேடிவ் அரசாங்கம் இருக்கிறது. பெருநிறுவனங்கள் மற்றும் உலகளாவிய வங்கிகளின் இலாபங்களை கொழுக்கச் செய்யும் பொருட்டு தொழிலாளர்கள் வென்றெடுத்திருக்கக் கூடிய சமூகப் பாதுகாப்புகள் அத்தனையையும் ஒழிப்பதற்கு முனைவதில் ஒபாமா மற்றும் ரோம்னியைப் போலவே ஹார்பரும் பெருவணிகங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்.

வைட் மேலும் கூறினார்: கனடாவின் ஆளும் வர்க்கம் அமெரிக்கக் கூட்டாளிகளையும் போட்டியாளர்களையும் பின்பற்றுவது உள்நாட்டுக் கொள்கையில் மட்டுமல்ல. அமெரிக்காவின் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பிலும், லிபியா மீதான அமெரிக்க-நேட்டோ போரிலும் கனடா ஒரு முன்னணிப் பாத்திரத்தை வகித்துள்ளது என்பதோடு ஈரானுக்கு எதிரான போர் மிரட்டல்களிலும் அது கைகோர்த்துள்ளது.

சமூக ஏற்றத்தாழ்வின் வளர்ச்சியும், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலும், மற்றும் போர் மற்றும் இராணுவவாதத்தை நோக்கிய திருப்பமும், அமெரிக்காவில் போலவே, ஜனநாயக உரிமைகள் மீதான ஒரு தாக்குதலுடன் கைகோர்த்து நடந்தேறியுள்ளன. எயர் கனடா, கனடா போஸ்ட் போராட்டங்கள் மற்றும் CN ரெயில் வேலைநிறுத்தங்கள் போன்ற தொழிலாளர் போராட்டங்களை குற்றங்களாகச் சித்தரித்தது, மற்றும் அப்பாவியென்ற அனுமானத்துடன் அணுகுவது போன்ற நீண்டகால ஜனநாயக நீதிக் கோட்பாடுகளை பயங்கரவாதத்தின் மீதான போர் என்கிற மோசடிக் காரணத்தின் பேரில் கவிழ்த்தது ஆகியவை இதில் அடங்கும். சிறார்-சிப்பாயான ஓமர் காதர் சித்திரவதை செய்யப்படுவதிலும் குவாண்டனமோ வளைகுடா சிறையில் அடைக்கப்படுவதிலும் ஹார்பர் அரசாங்கமும் அதன் முன்னிருந்த லிபரல் அரசாங்கங்களும் ஒன்றுபட்டு ஒத்துழைப்பு அளித்தன.

தொழிற்சங்கங்களுக்கும் மற்றும் கனடாவின் சமூக-ஜனநாயக NDP போன்று வெளித்தோற்றத்திற்கு இடது முகம் காட்டுகின்ற ஸ்தாபகக் கட்சிகளுக்கும் எதிராக தொழிலாளர்கள் ஒரு சோசலிச-சர்வதேச முன்னோக்கினை அவசரமாகக் கையிலெடுக்க வேண்டியிருப்பதன் அவசியத்தை விளக்கினார் வைட். வாகன உற்பத்தித் துறையை பெரு வணிகங்களுக்கான ஒரு இலாபகரமான ஆதாரவளமாக மீண்டும் ஆக்குவதற்கான மறுசீரமைப்பில் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்ற UAW (ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் அமைப்பு) மற்றும் CAW (கனடா வாகனத்துறை தொழிலாளர்கள்)ஆகியவை எவ்வாறு ஒபாமா நிர்வாகம் மற்றும் ஹார்பர் அரசாங்கங்களுடன் கைகோர்த்து வேலை செய்தன என்பதை வைட் சுட்டிக் காட்டினார்UAWம் CAWம் பாரிய வேலை வெட்டுகள், ஊதிய வெட்டுகள் மற்றும் நல உதவி வெட்டுகளைத் திணித்திருப்பதோடு பாதாளத்தை நோக்கிய போட்டியில் வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராய் நிறுத்தி வருகின்றன.  

வேலைகள் அனைத்தையும் பாதுகாத்தும் ஒப்பந்த வேலைகள் அனைத்தையும் எதிர்த்தும் அத்துடன் முதலாளித்துவ ஆதரவு தொழிற்சங்கங்களுக்கு எதிராக புதிய போராட்ட அமைப்புகளைக் கட்டியெழுப்புவதற்கும் வட அமெரிக்கா முழுவதிலும் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதற்கான அவசியத்தை எனது பிரச்சாரம் வலியுத்தி வருகிறது என்றார் வைட்.

2012 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் வைட் SEP(கனடா)அழைப்பின் பேரில் கனடாவில் பேசுவதில் டொரொண்டோ கூட்டம் மூன்றாவதாகும். வைட் கூறினார்: ஜூன் மாதத்தில் கியூபெக் மாணவர் போராட்டத்தைக் காணவும் கலந்து கொள்ளவும் நான் கியூபெக் பயணம் செய்தேன். கிரீஸ் தொடங்கி, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல், இன்னும் அமெரிக்காவிற்குள்ளும் கூட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கம் வளர்வதின் பாகமாக அப்போராட்டம் அமைந்திருந்தது

பொதுச் சேவைகளை கழற்றி விடும் ஆளும் வர்க்கத்தின் முனைப்பின் பகுதியாக கல்விக்கான உரிமை என்பது எல்லா இடங்களிலுமே தாக்குதலுக்கு ஆட்பட்டுக் கொண்டிருக்கிறது.

கியூபெக்கின் இளைஞர்கள் மிகத் தீர்மானகரமாய் போராடியபோதும், இந்தப் போராட்டம் இறுதியில் ஒடுக்கப்பட்டது. போராட்டம் தொழிற்சங்கங்களால்  திட்டமிட்டு தனிமைப்படுத்தப்பட்டதும், அத்துடன் கியூபெக் தேசியவாதத்துடனும் பெரு வணிக Parti Québecois உடனும் பிணைக்கப்பட்ட அமைப்புகளால் தலைமை கொடுக்கப்பட்டதுமே இதற்குக் காரணமாகும். தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரு சோசலிச-சர்வதேசிய வேலைத்திட்டத்தினால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த அனுபவம் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

செப்டம்பரில் வைட் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகஓண்டாரியோ, விண்ட்சரில் ஃபோர்ட் கனடா தொழிலாளர்களிடம் பேசுவதற்காக இரண்டாம் முறையாக கனடா வந்தார். தொழிலாளர்கள் CAW இன் தேசியவாதக் கொள்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய வைட், பாரிய வேலைவெட்டுகள் மற்றும் ஒப்பந்த வேலைகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக அமெரிக்க வாகன உற்பத்தித் துறை தொழிற்சாலைகளில் இருக்கும் தமது வர்க்க சகோதர சகோதரிகளுடன் சேர்ந்த ஒரு பொதுவான தொழிற்துறை மற்றும் அரசியல் போராட்டத்தில் இத்தொழிலாளர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.   

SEP தேர்தல் பிரச்சாரத்தின் போது நான் எல்லா இடங்களுக்கும் சென்று வந்திருக்கிறேன். அமெரிக்காவிலும் சரி, ஜேர்மனியிலும் சரி, பிரிட்டனிலும் சரி, இலங்கை அல்லது கனடாவிலும் சரி முதலாளித்துவ கட்சிகளுக்கான ஒரு அரசியல் மாற்றுக்கு ஒரு தேடல் இருக்கிறது. அத்துடன் உழைக்கும் மக்களின் கவலைகளையும் தேவைகளையும் ஒட்டுமொத்த ஸ்தாபகமும் புறக்கணிக்கிறது என்ற வெளிப்பட்டதொரு உணர்வும் இருக்கிறது என்று வைட் கூறினார்.

சர்வதேசரீதியாக அமெரிக்கத் தொழிலாளர்களின் போராட்டம் குறித்த ஒரு மிகுந்த ஆர்வம் இருக்கிறது. அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தை மெத்தனமானதாகவும் செயலற்றதாகவும் தான் பல பத்தாண்டுகளாக வெகுஜனக் கலாச்சாரமும் விரக்தியடைந்த போலி-இடதுகளும் சித்தரித்து வந்துள்ளன. ஆனால் கடந்த காலத்தின் நிகழ்வுகள் எல்லாம் அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் இல்லை என்பதான கூற்றுகளை பொய் என நிரூபித்துக் காட்டியிருக்கின்றன. அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவால் செய்கின்றதொரு சக்தியாக தொழிலாள வர்க்கம் இருக்கின்றது. அந்த சக்திக்காக குரல் கொடுப்பதும், அதற்கு ஒரு புரட்சிகர அரசியல் வேலைத்திட்டத்தை வழங்குவதும், அத்துடன் அமெரிக்கத் தொழிலாளர்களை உலகெங்கும் இருக்கும் அவர்களது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்படுத்துவதற்குப் போராடுவதுமே எனது பிரச்சாரத்தின் நோக்கமாகும். டொரோண்டோவில் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சந்தித்து இந்தப் பிரச்சினைகளை விவாதிப்பதற்கு நான் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்.

வைட்டின் உரையைத் தொடர்ந்து கேள்விகளும் கலந்துரையாடல்களும் நடைபெறும். டொரோண்டோ பகுதியில் ஒரு சோசலிச மாற்றுக்கு எதிர்நோக்கியிருக்கும் அனைவரும் ஞாயிறன்றான கூட்டத்தில் பங்கேற்பதற்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

கூட்ட விவரம்:

ஞாயிறு, அக்டோபர் 14, மாலை 2 மணி

University of Toronto

Bahen Center, Room 2135

40 St. George Street (closest subway stop: Queens Park)