சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Former German foreign minister Joschka Fischer urges dictatorial powers for the EU

ஜேர்மனியின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஜொஷ்கா பிஷ்ஷர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சர்வாதிகாரங்கள் தேவை என வலியுறுத்துகிறார்

By Christoph Dreier
9 October 2012
use this version to print | Send feedback

ஐரோப்பாவில் வர்க்கப் போராட்டம் தீவிரமாகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) என்பது ஆளும் உயரடுக்கின் ஒரு கருவி என்னும் தன்மை இன்னும் வெளிப்படையாகத் தெரிகிறது. அதை பாதுகாப்பவர்களின் சிந்தனைப் போக்கும் இதைத்தான் தெரியப்படுத்துகிறது. கடந்த வாரம் ஜேர்மனியின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஜொஷ்கா பிஷ்ஷர் (பசுமைக் கட்சி) Süddeutsche Zeitung பத்திரிகையில் ஐரோப்பிய ஒன்றியம் சர்வாதிகார வகைகளில் ஆட்சி நடத்த வேண்டும் என வாதிட்டு ஒரு கட்டுரையை வெளியிட்டார்.

 நெருக்கடியை பயன்படுத்திக்கொள்ளும் விதம்என்ற தலைப்பில் அவர் ஹெராக்ளிட்சைக் குறித்து, நெருக்கடியை வரவேற்கிறார். இது அனைத்துக்கும் தாய்என்றும் வேறுவகையில் மிகவும் சாத்தியமற்ற” “மாற்றங்களுக்கு ஒரு வாய்ப்பு என்றும் கூறுகிறார்.

நெருக்கடியை கடக்க வேண்டும் என்னும் கட்டாயத்தை நடைமுறைப்படுத்துவது ஒருபுறம் இருக்க, ஒருபோதும் கற்பனைகூட செய்யமுடியாத செயல்களைக் கோருகிறது என்று பிஷ்ஷர் எழுதியுள்ளார்.

ஐரோப்பா மீது ஜேர்மனியின் மேலாதிக்கம் மற்றும் வரவு-செலவுத் திட்ட கொள்கையில் அனைத்து ஜனநாயகரீதியான தடைகள் அகற்றப்படுதல் என்பதைத்தான் இவர் கருதுகின்றார். நெருக்கடியின் அழுத்தத்தின்கீழ் யூரோப்பகுதி ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாவலனாக உள்ளது, ஜேர்மனி தலைமை தாங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்தி என்று தத்தம் தகுதியை நிரூபித்துள்ளன. பிஷ்ஷரின் கூற்றுப்படி இந்த பாதுகாவலன் தேசிய இறைமையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பல நடவடிக்கைகளை எடுத்ததற்கும், ஓர் உண்மையான அனைத்து-ஐரோப்பியப் பொருளாதார அரசாங்கத்தை தோற்றுவித்ததற்கும் பாராட்டப்பட வேண்டும்.

ஐரோப்பாவில் அரசியல் ஒன்றியத்திற்கு இது ஒரு அடி என்று பிஷ்ஷர் வெளிப்படையாகப் பாராட்டுகிறார். பேர்லின் இதை முன்னேற்றுவிப்பதற்குப் தன்னுடைய முக்கிய பங்கைப் பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக இதன் பொருள் யூரோப்பகுதித் தனி நாடுகளில் மிருகத்தனச் சிக்கன நடவடிக்கைகள் எடுக்க ஆணைகளிடப்பட வேண்டும். ஏற்கனவே கிரேக்கம், போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்தில் இவ்வாறுதான் நடக்கிறது.

நெருக்கடி வழங்கும் வாய்ப்புக்களை இங்குதான் குறிப்பாக பிஷ்ஷர் காண்கிறார்: ஐரோப்பிய ஒன்றியம் மக்கள் எதிர்ப்பை நசுக்குவதை வலுப்படுத்த வேண்டும், ஐரோப்பா முழுவதும் கிரேக்கத்தில் இருப்பது போன்ற நிலைமையைத் தோற்றுவிக்க வேண்டும் என அவர் விரும்புகிறார். அவருடைய திட்டத்தின்கீழ் இதைச் செய்வதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு வரவு-செலவுத் திட்டத்தை நிர்ணயிப்பதற்கு தேசிய பாராளுமன்றங்கள் தங்கள் முடிவெடுக்கும் அதிகாரங்களைக் கைவிட்டு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இரண்டாம் மன்றத்திற்கு முடிவு எடுக்க கொடுக்கவேண்டும்.

நிதிய உயரடுக்கின் ஒரு நேரடிச் சர்வாதிகாரம் வேண்டும் என்றுதான் பிஷ்ஷர் கோருகிறார். குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய பங்கைக் கொண்டிருக்கும் ஜேர்மனிய முதலாளித்துவத்தின் அதிகாரம் யூரோப்பகுதி நாடுகளின் வரவு-செலவுத் திட்ட கொள்கை குறித்துச் செயல்படுத்தப்பட வேண்டும். நெருக்கடியைச் சுரண்டுதல், அரசியல் ஒருங்கிணைப்பு என்னும் அவருடைய கருத்துக்கள் இப்பிற்போக்குத்தனத் திட்டத்திற்கு மத்தியதர வகுப்பின் வசதியான அடுக்குகளின் ஆதரவைப் பெறும் நோக்கம் உடையவை. இத்தகைய திட்டங்கள் பிரஸ்ஸல்ஸில் கணிசமாக காலத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியக்குழுவின் தலைவர் ஹெர்மன் வான் ரோம்பை ஐரோப்பிய ஒன்றியத்தின் அக்டோபர் மாத நடுவில் நடக்க இருக்கும் உச்சிமாநாட்டிற்கு ஒரு அறிக்கை தயாரித்துள்ளார். இது யூரோப்பகுதி நாடுகள் அனைத்திலும் தொழிலாளர் சந்தை மற்றும் சமூகநல முறையையும் மறுகட்டமைப்பதும் எவ்வாறிருக்கவேண்டும் எனக்கூறும் உரிமை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்படும். சீர்திருத்தங்கள் குறிப்பாக ஒவ்வொரு நாட்டிலும் ஏற்கப்படும், அவை தேர்ந்தெடுக்கப்படாத ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் நிர்ணயிக்கும் முறையில் ஏற்கப்படும்.

இவ்வழியில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்தினர் நேரடியாக அங்கத்துவ நாடுகளின் பொருளாதார, சமூகக் கொள்கைகளை நிர்ணயிக்க முடியும். இதனால் தேசிய பாராளுமன்றங்களை கடந்த முறையில், எந்தவித ஜனநாயகக் கட்டுப்பாடும் இல்லாமல் கொள்கைகள் இயற்றப்படும். கிரேக்கம், போர்த்துக்கல், மற்றும் அயர்லாந்தில் உத்தரவிட்டது போன்ற சிக்கன நடவடிக்கை ஆணைகள் யூரோப்பகுதி முழுவதும் சட்டமன்றங்களுக்கு உரிய தகவல்கள் இன்றி விரிவாக்கப்படும்.

இத்தகைய சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு பிஷ்ஷரின் இசைவு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகத் தன்மை அற்ற முறையில் இருந்துதான் தோன்றியுள்ளது.

மே 2000த்தில் பேர்லினில் உள்ள Humboldt பல்கலைக் கழகத்தில் ஐரோப்பிய ஒருங்கிணைப்பின் இறுதிநிலை என்ற அதிகம் போற்றப்பட்ட உரையை வழங்கியபோது, அவர் ஏற்கனவே ஜேர்மனியின் தலைமையின்கீழ் ஐரோப்பிய ஒன்றியம் அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்பதைத்தான் வாதிட்டார். ஆனால் அந்த நேரத்தில் அவர் தன் கருத்துக்களை மனிதாபிமானச் சொற்றொடர்களில் அலங்கரித்து ஐரோப்பிய ஒன்றியம் ஜனநாயகத்தின் கோட்டை என்று விவரித்தார்.

12 ஆண்டுகளுக்கு பின்னர், பிஷ்ஷரின் வார்த்தைஜாலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் சாரத்துடன் இணைந்து விட்டது. இது இன்னும் வெளிப்படையாக 2008 நிதிய நெருக்கடி காலத்தில் இருந்து புலனாகிறது.

சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான அரண் என்ற முறையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடிகள் ஏற்கனவே பிற்போக்குத்தன வேர்களைக் கொண்டவை. ஆரம்பத்தில் இருந்தே ஐரோப்பாவை மனிதாபிமான முறையில் ஒற்றுமைப்படுத்துவது, முதலாளித்துவ அடிப்படையில் தேசிய மோதல்களைக் கடப்பது என்னும் பிரச்சாரம் ஒரு கற்பனையாயிற்று.

கிழக்கு முகாமின் சரிவிற்குப் பின் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலக்கு உலகச் சந்தையில் ஐரோப்பிய மூலதனத்திற்கு ஒரு வலுவான நிலையைத் தோற்றுவித்தல் என்று விளங்கியது. இதனால் அது அமெரிக்காவிற்கு இணையாக இருக்க முடியும் எனக் கருதப்பட்டது. ஆனால் இது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தேசிய அழுத்தங்கள் வளர்ச்சியடையத்தான் வழிவகுத்தது. ஐரோப்பிய தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டத்தையும் தீவிரப்படுத்தியது.

ஆளும் உயரடுக்கின் முக்கிய கருவியாக, ஐரோப்பாவில் சமூக எதிர்ப்புரட்சியை சுமத்தும் கருவியாக ஐரோப்பிய ஒன்றியம் மாறிவிட்டது. 1990களில் கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்த சமூகப் பாதுகாப்பு வலையை அழித்தல், தனியார்மயமாக அரசாங்க நிறுவனங்களை மாற்றுதல், ஊதியக் குறைப்புக்கள் போன்றவை சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் விரிவாக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் நிதிய உயரடுக்கின் நேரடிக் கருவியாகச் செயல்படத்தொடங்கின.

தெற்கு ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கொள்ளை, ஐரோப்பா முழுவதும் விரிவாக்கப்பட வேண்டும் என்பது ஜனநாயகத்துடன் பொருத்தமற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் இத்தாலியிலும் கிரேக்கத்திலும் மாற்றப்பட்டு தொழில்நுட்பவாதிகள் தலைமையில் அரசாங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன.

கிரேக்கத்தில் அரசாங்கம் வெளிப்படையாக பாசிஸ்ட்டுக்களுடன் ஒத்துழைத்து நாட்டில் வசிக்கும் குடியேறியவர்களை மிருகத்தன உதாரணமாக காட்ட முனைகின்றது. வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களும் கலைக்கப்படுவதுடன் பொலிசால் நசுக்கவும் படுகின்றன.

ஜேர்மனிய உயரடுக்கின் செய்தித் தொடர்பாளர் என்ற முறையில் பிஷ்ஷர் இந்த செயற்பட்டியலுக்கு சித்தாந்தரீதியான ஆதரவை அளிக்கிறார். முழு உணர்வுடன் அவர்களுடைய பிரதிநிதிகள் இவருடைய கட்சியில் (பசுமைக் கட்சியில்) உறுப்பினர்களாக உள்ள மத்தியதர வர்க்கத்தின் வசதியான அடுக்குகளுக்கு அழைப்புவிடுகிறார். வெளியுறவு மந்திரி என்னும் முறையில் அவர் தன்னுடைய மிக முக்கியமான பணி ஜேர்மனிய இராணுவாதத்திற்கும், ஹெகார்ட் ஷ்ரோடரின் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக்கட்சி கூட்டணி அரசாங்கத்தின் கீழ் வந்த பேரழிவு கொடுத்த சமூகக் கொள்கைகளுக்கு அப்பிரிவுகளின் ஆதரவைப் பெறுதலாக இருந்தது.

தன்னுடைய முயற்சியில் அவர் இச்சமூகப் பிரிவில் பரந்திருக்கும் ஜனநாயக விரோத மரபுகளைத்தான் அடித்தளமாக கொண்டுள்ளார். ஸ்பான்டிஸ்மாற்றீடு இயக்கம் என அழைக்கப்பட்ட இயக்கத்தில் பிஷ்ஷர் தீவிரமாக இருந்தபோது, அதன் ஏடான Pflasterstrand ல் எழுதுகையில் அவர் தன்னுடைய சக பிரச்சாரகர்களைப் போலவே தொழிலாளர் வர்க்கத்தை இழிவாக கருதுவதின்மூலம் சிறப்புப் பெற்றார். தொழிலாள வர்க்கத்தை அவர் முட்டாள்த்தனமானதும், நுகர்வுச் சார்புடையது என்று இழிவாகக் கூறினார். இன்று அவர் அதே சிந்தனைப்போக்கைப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வாதிகாரத்தை நியாயப்படுத்துகிறார்.

2008ம் ஆண்டு அரசியல் வாராந்த ஏடான Die Zeit இல் பிஷ்ஷர் ஏற்கனவே ஐரோப்பிய பிரச்சினைகள் குறித்து மக்கள் முடிவெடுக்க அனுமதிக்கப்படல் என்பது சந்தர்ப்பவாதம், கோழைத்தனமானது என்று விவரித்தார்.