சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Three weeks to the US elections: The issues facing working people

அமெரிக்கத் தேர்தல்களுக்கு இன்னும் மூன்று வாரங்கள்: உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

By Patrick Martin
15 October 2012

use this version to print | Send feedback

நவம்பர் 6ம் திகதி ஜனாதிபதித் தேர்தல்களுக்கு மூன்று வாரங்கள்தான் இருக்கையில், ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கும் அவருடைய குடியரசுக் கட்சி எதிர்ப்பாளர் மிட் ரோம்னிக்கும் இடையே உள்ள போட்டி மிக நெருக்கமாக உள்ளது; பல கருத்துக் கணிப்புக்களின்படி, தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் வாக்காளர் தொகுப்புடைய அரை டஜன் மாநிலங்களில் ஒபாமா குறைந்த முறையில் முன்னணியில் உள்ளார்.

தேர்தலில் நெருக்கமான போட்டி என்பது இரு ஒன்றோடொன்று தொடர்புடைய நிகழ்வுப்போக்கை பிரதிபலிக்கிறது. மக்கள் தொகையில் பெரும்பாலான உழைக்கும் மக்கள், அவர்கள் பெருகியமுறையில் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இரு கட்சிகள் மற்றும் அவற்றின் பல மில்லியன் மதிப்புடைய வேட்பாளர்களிடம் இருந்து அந்நியப்பட்ட நிலையில், இருவரில் ஒருவர் மீதும் விருப்பு காட்டுவதற்குக் காரணம் ஏதும் இன்றி உள்ளனர்.

அதே நேரத்தில், ஆளும் உயரடுக்கு பேராசைக்கும் எச்சரிக்கைக்கும் இடையே என கவனமாக வகைப்படுத்தக்கூடிய வழிகளில் என்று கூறக்கூடிய பிளவு நிலைப்பாட்டில் உள்ளது. ரோம்னியை ஆதரிக்கும் பிரிவுகள் ஒரு முற்றிலும், சிறிதும் மறைக்கப்படாத நிதியப் பிரபுத்துவத்தின் சுய செழிப்புத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என விரும்புகின்றன. ஒபாமவிற்கு ஆதரவு கொடுக்கும் பிரிவுகள் சற்று எச்சரிக்கையுடன் விளங்கி, நியாயத்தன்மை, சம தியாகம் என்ற போலித் தனம் இல்லாவிட்டால்அவை முற்றிலும் வெற்றுத்தனம், பொய் என்றாலும்கூடமுதலாளித்துவ முறை கீழிருந்து சமூக எதிர்ப்பு கட்டுக்கடங்கா இயக்கமாக மாறும் என்ற நிலையை முகங்கொடுக்கின்றன.

2012 தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் குறிப்பிட்டத்தக்க அம்சம் இரு பெரிய கட்சிகளில் எதுவுமே நாட்கு ஆண்டுகளுக்கு முன்பு வெடித்த பொருளாதார நெருக்கடியை தீவிரமாக முயன்று தீர்க்க இயலாது என்பதுதான்.

மில்லியன் கணக்கான மக்கள் முகங்கொடுக்கும் மோசமான நிலைமைகளுக்கு ரோம்னி ஒபாமாவைக் குறைகூறுகிறார்; அதே நேரத்தில் அவர் முக்கிய பிரதிநிதியாக இருக்கும் நிதிய ஒட்டுண்ணிகளின் மையப் பங்கு எப்படி நெருக்கடியை தோற்றுவிக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளவில்லை. ஒபாமா உழைக்கும் மக்களின் நிலைமை குறித்துப் பொருட்படுத்துவதில்லை, ஆனால் அதே நேரத்தில் பொருளாதார மீட்சி நடந்து கொண்டிருக்கிறது எனக் கூறுகிறார்.

இரு கட்சிகளில் எதுவுமோ நெருக்கடிக்கான விளக்கமும் கொடுக்கவில்லை, அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய கொள்கைகளையும் முன்வைக்கவில்லை. 23 மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர், பல மில்லியன்கள் குறைந்த தகுதி வேலையில் உள்ளனர், பல பத்து மில்லியன் கணக்கானவர்கள் வறுமை, மிக அதிக அளவு முன்கூட்டிய வீட்டுக் கடன் மூடல்கள், வெளியேற்றங்கள், பயன்பாடுகள் இல்லா நிலை ஆகியவற்றில் தள்ளப்பட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் இத்தகைய நிதியக் கரைப்பைத் தூண்டிவிடப் பொறுப்புக் கொண்டிருந்த வங்கியாளர்கள் எவரும் இதற்கு கணக்குக் கூறுமாறு வலியுறுத்தப்படவில்லை. ஒரு வரலாற்று முன்னோக்கைக் கொடுக்க வேண்டும் என்றால்,1929 வோல் ஸ்ட்ரீட் சரிவு பற்றிக் குறிப்பிடாமல் 1932 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் நடந்ததைப் போல் கற்பனை செய்து பார்க்க வேண்டும்.

இத்தோல்வி ஒபாமாவின் சனிக்கிழமை வானொலி உரையில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது; அதில் அமெரிக்கக் கார்த்தயாரிப்புத் தொழிலுக்குக் கொடுக்கப்பட்ட பிணை எடுப்பு ஒரு மில்லியன் வேலைகளைக் காப்பாற்றியதாகக் கூறப்பட்டது. டெட்ரோயிட் திவாலாக நாங்கள் அனுமதித்துவிடவில்லை. அமெரிக்கத் தொழிலாளர்கள், அமெரிக்க சாதுர்யம் ஆகியவற்றின் மீது பந்தயம் வைத்தோம், அது இப்பொழுது பெரிய அளவில் ஆதாயத்தைக் கொடுக்கிறது. என்றார் ஒபாமா.

இப்பிணை எடுப்பு, கார்த்துறைத் தொழிலாளர்களின் சுரண்டலைத் தீவிரப்படுத்தியது மற்றும் ஊதியங்கள், நலன்கள் ஆகியவற்றை பெருமளவு குறைத்தது என்பது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதுபுதிதாக நியமிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் 50% குறைக்கப்பட்டது, ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதிய நலன்கள் குறைக்கப்பட்டன.

இரண்டு முதலாளித்துவ கட்சிகளின் பிரச்சாரங்களுக்கும் அமெரிக்க மக்களுடைய பெரும்பான்மையினரின் தேவைகளுக்கும் இடையே உள்ள பிளவு மிகப் பெரியதாக உள்ளது; அதனால் பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகப் பிரிவுகள்கூட இரு கட்சி அரசியல் முறை குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது என்ற கவலையை வெளியிடத் தொடங்கியுள்ளன.

நியூ யோர்க் டைம்ஸ்  அதன் ஞாயிறுப் பதிப்பில் இத்தகைய அச்சங்களைக்காட்டும் மூன்று தனித்தனி விமர்சனங்களை வெளியிட்டது. அதன் ஞாயிறு இதழில் ஒபாம்னிக்கு வாக்களியுங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது; இதில் பெருநிறுவனப் பொருளாதார ஒருமித்த உணர்வு இரு கட்சிகளுக்கும் இடையே எப்படி உள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோம்னி உயர்மட்ட பெருநிறுவன வரிவிதிப்பு 25% ஆக இருக்க வேண்டும் என்கிறார், ஒபாமா 28% ஐ முன்வைக்கிறார். ரோம்னி சாதாரண முதலீட்டாளரின் மூலதன ஆதாயத்திற்கான வரிகள் அகற்றப்பட வேண்டும் என்கிறார், அது அதிகம் ஈட்டுவோருக்கு 15% என விட்டுவிடப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஒபாமா இதை 20% த்திற்கு உயர்த்த வேண்டும் என்கிறார். இருவரும் மிக உயர்ந்த வருமானங்கள்மீது எத்தகைய வரிவிதிப்பு தேவை என்பதில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு, இந்த வேறுபாடுகள் ஒரு பிழையை சரி செய்வது போல்தான் தவறான உணர்வைக் கொடுக்கும்.

தலையங்கத்திற்கு எதிர்ப்பக்க கட்டுரை ஒன்று, எந்த மில்லியனருக்கு நீங்கள் வாக்களிக்க உள்ளீர்கள் என்ற தலைப்பில் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள இயல்பான சமூகத் தன்மையைக் குறிப்பிடுகிறது: நாம் குடியரசுக் கட்சியினர் அல்லது ஜனநாயகக் கட்சியினரை தேர்ந்தெடுக்கலாம். நாம் பழைமைவாத கொள்கைகளையோ, முற்போக்கு கொள்கைகளையோ விரும்பித் தேர்ந்தெடுக்கலாம். ஆனால் பெரும்பாலான தேர்தல்களில் நாம் மிக முக்கியமானது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் வாய்ப்பு இல்லைஅதாவது நாம் செல்வந்தர்களினால்தான் ஆளப்படவேண்டுமா என்பது பற்றி.

அமெரிக்க அரசாங்கத்தில் மிக உயர்மட்ட பதவிகளில் இருக்கும் நபர்களின் சமூகப் பொருளாதார நிலையைக் குறித்த ஆய்வைச் சுருக்கிக் கூறும் இக்கட்டுரை முடிவுரையாகக் கூறுகிறது: மில்லியனர்கள் ஒரு அரசியல் கட்சியாக இருந்தால், அக்கட்சி கிட்டத்தட்ட அமெரிக்கக் குடும்பங்களில் 3% என இருக்கும்; ஆனால் அதற்கு செனட்டில் மிகப் பெரிய பெரும்பான்மை இருக்கும், பிரதிநிதிகள் மன்றத்தில் பெரும்பான்மை இருக்கும், தலைமை நீதிமன்றத்தில் பெரும்பான்மை இருக்கும், வெள்ளைமாளிகையில் அதன் நபர்தான் வசிப்பார்.

தொழிலாள வர்க்க அமெரிக்கர்கள் ஒரு அரசியல் கட்சியைக் கொண்டிருந்தால், அக்கட்சியில் இருந்து சட்டமன்றப் பிரதிநிதிகள் காங்கிரசில் 2%க்கும் மேலான இடங்களைக் கொள்ள மாட்டார்கள் என்று விமர்சனம் முடிவுரையாகக் கூறியுள்ளது.

மூன்றாம் கட்டுரை, 1% சுய அழிப்பு என்ற தலைப்பில் மிகப் பெரிய செல்வந்தர்கள் மிக அதிகம் பெறுவதற்கு விரும்ப வேண்டாம் என்ற நேரடி எச்சரிக்கையைக் கொடுக்கிறது. Thomson Reuterds உடைய Chrystia Freeland  என்னும் இக்கட்டுரை ஆசிரியர் அறிவார்ந்த சோசலிசத்தின் நிறுவனரை மேற்கோளிடும் அளவிற்குச் சென்று, ஆளும் உயரடுக்கின் பேராசை மற்றும் சுயதிருப்தி நாட்டம் ஆகியவை இறுதியில் மக்களின் மனங்களில் இலாபமுறையை இழிவிற்கு உட்படுத்தி விடும் என்று எச்சரித்துள்ளார்.

அந்த வருங்காலம்தான் கார்ல் மார்க்சால் கணிக்கப்பட்டது; அவர்தான் முதலாளித்துவம் தன்னிடமே அதன் அழிவிற்கான விதைகளைக் கொண்டுள்ளது என எழுதினார்.இந்த ஆபத்தைத்தான் அமெரிக்கா இன்று எதிர்கொள்கிறது; ஏனெனில் 1% மற்ற அனைவரிடம் இருந்து தனித்து ஒதுங்கி, இடைவெளியை இன்னும் அதிகமாக்கும் பொருளாதார, அரசியல், சமூகச் செயற்பட்டியலைத் தொடர்கிறதுஇறுதியில் அமெரிக்காவைச் செல்வம் தழைத்தோங்கும் நாடாக ஆக்கும் வெளிப்படை முறையை அழித்துவிடும், முதற்கண் 1% உயரடுக்கு தப்பிப்பிழைக்க வகை செய்தது அதுதான்.

இத்தகைய கருத்துக்கள் அமெரிக்காவின் முக்கிய செய்தித்தாட்களில் தோன்றுகின்றன என்பது தேர்தலுக்குப் பின் என்ன நேரிடும் என்ற கவலை குறித்து ஆளும் வட்டங்களுள் இருக்கும் அமைதியின்மைக்கு சான்றுகள் ஆகும். அடுத்த ஜனாதிபதி, அடுத்த காங்கிரஸ் என்று ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சி என்று எதைச் சார்ந்திருத்தாலும், அல்லது இரண்டின் கூட்டாக இருந்தாலும், அது செய்யவேண்டியது குறித்து நிதிய தன்னலக்குழு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டுக் கொள்கையில் மத்திய பணி, மருத்துவப் பாதுகாப்பு, மருத்துவ உதவி, சமூகப் பாதுகாப்பு போன்ற உரிமைத் திட்டங்களை வெட்டுவது, அதையொட்டி தொழிலாளர்கள் நிதிய நெருக்கடி என்று பொருளாதாரச் சரிவு கொண்டுவந்த நிலைமைக்கு விலை கொடுக்க வேண்டும்; மேலும் வங்கியாளர்கள் மற்றும் நிதிய ஊக வணிகர்களை பிணை எடுக்க அமெரிக்க கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டதற்கும் விலை கொடுக்க வேண்டும்.

வெளியுறவு கொள்கையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் போட்டியாளர்களான சீனா ரஷ்யா போன்றவற்றிடம் இருந்து எண்ணெய், எரிவாயு மற்றும் பிற மூலப்பொருட்களுக்கான முக்கிய ஆதாரங்களை அடைய முயல்வதில், அதன் ஆக்கிரோஷ இராணுவ வாதத் தலையீட்டை மத்திய கிழக்கிலும், மத்திய ஆசியாவிலும் இன்னும் அதிகரிக்க வேண்டும். சிரியாவில் இராணுவரீதியான தலையீடு, ஈரானுடனான போர் ஆகியவை இரண்டுமே செயற்பட்டியலில் உள்ளன.

ஒபாமாவிற்கும் ரோம்னிக்கும் இடையே இந்த பெரிய உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கை முன்முயற்சிகளில் அதிகமாகக் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் ஏதும் கிடையாது. ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியனருக்கும் இடையே உள்ள மோதல் ஒரு கொள்கையளவு வேறுபாடு என்று இல்லாமல், தந்திரோபாயமாகத்தான் உள்ளது.

ரோம்னி இழிந்த முறையில் 47% அமெரிக்க மக்கள் அரசாங்க உதவியை நாடுவது குறித்து ஒபாமா முதல் விவாதத்தில் விளக்க இயலாத முறையில் மௌனம் சாதித்தாலும், துணை ஜனாதிபதி பைடென் இப்பொருளை பலமுறையும் தன் அக்டோபர் 11 விவாதத்தில் குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் போல் ரையனுடன் கொண்டுவந்தார்.

ஆனால் ஜனநாயகக் கட்சியினரோ, செய்தி ஊடகமோ ரோம்னியின் கருத்துக்களில் மிக முக்கியமானவை குறித்து கவனக் குறிப்பு கொள்ளவில்லை; உணவு, இருப்பிடம், கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை சமூக அத்தியாவசியங்களுக்கு எவரொருவருக்கும் உரிமை உண்டு என்று மக்கள் நம்புவதை அவர் கண்டித்துள்ளதை. இதற்குக் காரணம் ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினர் மக்களுக்கு அடிப்படை வாழ்க்கைத் தேவைகளுக்கான உரிமை இல்லை என்பதைத்தான் ரோம்னி மற்றும் குடியரசுக் கட்சியினருடன் இணைந்து ஒப்புக் கொள்கின்றனர்.

உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் மத்திய பிரச்சினை, தொழிற்சங்கங்கள், அவற்றின் தாராளவாத போலி இடது நட்பு அமைப்புக்கள் கூறுவதை, அதாவது பிற்போக்குத் தனக் கொள்கைகள் இருந்தபோதிலும் ஜனநாயகக் கட்சி, ரோம்னி மற்றும் குடியரசுக் கட்சியினர் ஆகியோரை விடக் குறைந்த தீமையைத்தான் பிரதிபலிக்கின்றது என்ற கூற்றை நிராகரிக்க வேண்டும். ஒபாமா ஒரு "குறைந்த தீமை," யை பிரதிபலிக்கவில்லை ஆனால் அவரிடம் இருப்பது சமூகப் பிற்போக்குத்தனம், இராணுவவாதம் மற்றும் ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதல்களுக்கான ஒரு மாற்றுத்திட்டமாகும்.

தொழிலாள வர்க்கத்தின் முன் இருக்கும் விருப்பத் தேர்வு, ஒபாமாவா ரோம்னியா என்பது அல்ல; அது தொடர்ந்து முதலாளித்துவ அரசியல் அமைப்பு முறைக்கு தாழ்ந்து நிற்க வேண்டுமா அல்லது உழைக்கும் மக்களின் சுயாதீன அரசியல் இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டுமா என்பதுதான். சோசலிச சமத்துவக் கட்சியும் 2012 தேர்தல்களில் அதன் வேட்பாளர்களான ஜனாதிபதிப் பதவிக்கு ஜெரி வைட், துணை ஜனாதிபதிப் பதிவிக்கு பிலிஸ் ஷேரர் ஆகியோர் பெருவணிகத்தின் இரு கட்சிமுறையில் இருந்து முறித்துக் கொண்டு, ஒரு பரந்த தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன சோசலிச இயக்கத்தை கட்டமைக்க போராடுகின்றனர்.

இன்னும் கூடுதலான தகவல்களுக்கு, SEP அழைப்பு விடுத்துள்ள பிராந்திய மாநாடுகளில் பங்கு பெறுவதற்கும் நம் கட்சியில் சேருவதற்கும் www.socialequality.com என்னும் இணைய தளத்தை அணுகவும்.