சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The European Union’s Nobel Peace Prize

ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைதிக்கான நோபல் பரிசு

Peter Schwarz
15 October 2012
use this version to print | Send feedback

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டமையானது முழுக்க முழுக்க அரசியல்ரீதியான நோக்கங்களால் உந்தப்பட்டதாகும். ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாப்பதான பேரில், 1930க்குப் பிந்தைய காலத்தின் மிக மிருகத்தனமான தாக்குதல்களை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராய் நடத்திக் கொண்டிருப்பவர்களுக்கு ஆதரவளிப்பதே இதன் நோக்கமாக உள்ளது.

அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் மற்றும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெற்றிகரமான போராட்டத்தைமேற்கோளிட்டு நோர்வே நாடாளுமன்றத்தின் ஐந்து உறுப்பினர் நோபல் குழு தனது தெரிவை நியாயப்படுத்தியது. “இரண்டாம் உலகப் போரின் மோசமான பாதிப்பையும், அத்துடன் 70 ஆண்டுகாலத்தில் ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையில் மூன்று போர்கள் நடைபெற்றதையும் நினைவுகூர்ந்த இக்குழு, “இன்று பிரான்சுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான போர் சிந்தித்துப் பார்க்கவியலாததாக ஆகியிருக்கிறதுஎன்று அறிவித்தது.

இந்த வாதத்தின் மொத்த அம்சமுமே யதார்த்தத்தை தலைகீழாகப் புரட்டிக் காண்பிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அடிப்படையை அமைத்துக் கொடுத்த மாஸ்ட்ரிச்ட் ஒப்பந்தம் இருபது வருடங்களுக்கு முன்பாய் கையெழுத்தான நாள் முதலாக, ஒவ்வொரு பெரிய ஏகாதிபத்தியப் போரிலும் மற்றும் குற்றத்திலும் (முதல் ஈராக் போர், யூகோஸ்லேவியா மீதான குண்டுவீச்சு, ஆப்கானிஸ்தான் போர், இரண்டாம் ஈராக் போர், மிக சமீபத்தில் லிபியாவுக்கு எதிரான போர் மற்றும் சிரியா மற்றும் ஈரானுக்கு எதிரான போர் தயாரிப்புகள் ஆகியவை இதில் அடங்கும்)ஐரோப்பிய ஒன்றியமோ அல்லது அதன் முன்னணி சக்திகளோ சம்பந்தப்பட்டு வந்திருக்கின்றன.

ஐரோப்பாவிற்குள்ளாகசிந்தித்துப் பார்க்க முடியாதபோர்கள் குறித்து கூறப்படுவதை பொறுத்த மட்டில், ஐரோப்பிய ஒன்றியத்தால் திணிக்கப்பட்டு வரும் இடைவிடாத சிக்கன நடவடிக்கைகள், 1914 முதல் 1945 வரையான காலத்தில் ஐரோப்பாவை இரண்டு உலகப் போர்களின் களமாகவும் வரலாற்றின் மிக மோசமான குற்றங்கள் நிகழ்த்தப்பட்ட இடமாகவும் மாற்றிய அத்தனை சமூக மற்றும் தேசியப் பதட்டங்களுக்கும் மீண்டும் உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம்ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளைஊக்குவிப்பதற்கு எல்லாம் வெகு தூரத்தில், கண்டமெங்கும் பெருகும் சமூக ஏற்றத்தாழ்விற்கும், தேசியப் பதட்டங்களுக்கும் மற்றும் ஆட்சியின் எதேச்சாதிகார வடிவங்களுக்குமான பிரதான உந்து சக்தியாக அது தான் இருக்கிறது. வாக்களித்த மக்களின் பரந்த பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு எதிராக சமூக வெட்டுகளைத் திணித்தும் மற்றும், இத்தாலி மற்றும் கிரீஸில் நடந்ததைப் போன்று தேர்ந்தெடுத்த அரசாங்கங்களால் இனியும் மக்கள் எதிர்ப்பைக் கடந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவுகளைத் திணிக்கவியலாது என்கிற நிலையில் அந்த அரசாங்கங்களை அகற்றிவிட்டு தொழில்நிபுணர்களை (Technocrats) ஆட்சியில் நிறுவியும், பொருளாதார மற்றும் சமூக வாழ்வின் அத்தனை அம்சங்களின் மீதும் மேலமர்த்தப்படுகின்ற நிதி மூலதன சர்வாதிகாரத்தின் உருவடிவமாய் ஐரோப்பிய ஒன்றியம் இருக்கிறது. இதுதவிர, அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை ஐரோப்பிய ஒன்றியம் இரக்கமின்றித் தண்டிப்பதானது அதீத வலது-சாரி அமைப்புகளுக்கு வலுவூட்டியுள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நோபல் பரிசு வழங்குவதென்பது புரூசெல்ஸிருந்தான உத்தரவுகளுக்கு எதிராக தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதெற்கெனப் போராடிக் கொண்டிருக்கின்ற மில்லியன்கணக்கான ஐரோப்பியத் தொழிலாளர்களின் மனதைக் காயப்படுத்தும் ஒன்றாகும். நோபல் குழுவின் முடிவுடன் பிணைக்கப்பட்டுள்ள மிரட்டல் தெளிவாக இருக்கிறது: “ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகளை எதிர்த்து அதன் வருங்காலத்தை நீங்கள் சிக்கலுக்குள்ளாக்குவீர்களானால், ஐரோப்பா மீண்டுமொரு முறை போருக்குள்ளும் சர்வாதிகாரத்திற்குள்ளும் மூழ்கடிக்கப்படும்.”

உண்மை நேரெதிராய் இருக்கிறது. நிதிச் சந்தைகளின் அதிகாரம் உடைக்கப்பட்டு சமூகத்தின் அசமத்துவம் வெல்லப்படும் போது தான் ஐரோப்பா ஒன்றுபட்டதாகவும் அதன் மக்களுக்கு அமைதியிலும் வளமையிலும் வாழ்வதற்கு வழிவகை செய்ததாகவும் இருக்க முடியும். ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்தும் அதனை ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்தைக் கொண்டு இடம்பெயர்ப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதும் அணிதிரட்டுவதும் இதற்கு அவசியமாக இருக்கிறது.

எண்ணிலடங்கா ஐரோப்பியத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைப் பொறுத்தவரை, ஐரோப்பிய ஒன்றியம் என்பதன் அர்த்தம் வேலைவாய்ப்பின்மை, நலன்புரி உதவி வெட்டுகள் மற்றும் அதிகாரத்துவ ஆணவம் என்றாகி விட்டது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செயலுக்கு அவர்கள் வெறுப்புடனான முகச் சுளிப்புடன் எதிர்வினையாற்றுகின்றனர்.

ஊடகங்கள் மற்றும் உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த வகைகளுக்கும் இது அதேஅளவுக்கு ஆரவாரத்தைப் பெருக்கியிருக்கிறது. இத்தகையதொரு விநோதமான முடிவுக்கு இத்தகையதொரு ஒருமனதான - மற்றும் வேடமணிந்த - புகழுரை கிட்டுவது அபூர்வம் தான்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டு முன்னணி மனிதர்களான Herman von Rompuy மற்றும் José Manuel Barroso ஆகியோர் இந்தப் பரிசு, ”போர் மற்றும் பிரிவினையை வெல்வதற்கும், அமைதி மற்றும் வளமையின் அடிப்படையிலான ஒரு கண்டத்தை ஒன்றுபட்டு உருவாக்குவதற்குமான தனித்துவமானதொரு முயற்சிக்குக் கிட்டிய மிக அதிகப்பட்ச அங்கீகாரம்என்று வர்ணித்தனர். ஐரோப்பிய ஒன்றிய சிக்கன நடவடிக்கைகளுக்கான உந்துசக்தியாகத் திகழும் ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெல் இந்தப் பரிசை மதிப்பிடுகையில், “யூரோ என்பது வெறுமனே ஒரு நாணயமதிப்பு என்பதற்கும் அதிகமானது, ஏனென்றால் இறுதியில் இது விழுமியங்கள் மற்றும் அமைதியின் ஒரு சமூகமாக ஐரோப்பா குறித்த சிந்தனையை காட்டுகிறது என்பதை இப்பரிசு உறுதிப்படுத்தியுள்ளதுஎனக் கூறினார்.

ஜேர்மன் நாடாளுமன்றத்தில் பசுமைக் கட்சியின் தலைவர்களாக இருக்கும் Renate Künast மற்றும் Jürgen Trittin கருத்து தெரிவிக்கையில், “ஐரோப்பியக் கண்டத்தின் வரலாற்றில் மிக வெற்றிகரமான அமைதித் திட்டத்திற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறதுஎன்று தெரிவித்தார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஐரோப்பிய இடதின் தலைவராக இருக்கும் Gabi Zimmer, “ஐரோப்பிய ஒன்றியத்தின் நேர்மறையான விழுமியங்களை நினைவில் நிறுத்துகின்றஒரு பரிசு என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார்.

அமைதிக்கான நோபல் பரிசு தெளிவாக அரசியல் நோக்கங்களுக்காக வழங்கப்படுவதென்பது இது முதல்முறையல்ல. சொல்லப் போனால், இந்தப் பரிசின் 111 ஆண்டு கால வரலாற்றில் அப்படி வழங்கப்படாத சந்தர்ப்பத்தைக் காண்பதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். டைனமைட்டைக் கண்டுபிடித்து வெடிகுண்டுகள், புதைவெடிகள் மற்றும் துப்பாக்கிகளின் அழிக்கும் சக்தியைப் பெருக்கிய ஆல்பிரட் நோபல் - இந்நிகழ்முறையில் அவர் பெரும் செல்வத்தை உருவாக்கிக் கொண்டார் - மூலம் ஆஸ்தியளிக்கப்பட்ட இப்பரிசு எப்போதும் இரட்டைவேட குணாதிசயத்தையே கொண்டிருந்து வந்திருக்கிறது.

ஹென்ரி கிஸ்ஸிங்கர் (1973), மெனாசெம் பெகின் (1978), மற்றும் FW de Klerk (1993), அத்துடன் தியோடர் ரூஸ்வெல்ட் (1906), உட்ரோ வில்சன் (1919), ஜிம்மி கார்ட்டர் (2002) மற்றும் பராக் ஒபாமா (2009) போன்ற அரசியல் பிற்போக்குவாதிகளும் இந்த நோபல் பரிசைப் பெற்றிருக்கின்றனர்.

குறிப்பாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக ஒபாமாவுக்கு இப்பரிசு வழங்கப்பட்டமை விநோதமாக இருந்தது. அவர் பதவிக்கு வந்து வெறும் ஒன்பது மாதங்கள் தான் ஆகியிருந்தது என்பதோடு அவரும் தனக்கு முன் அதிகாரத்தில் இருந்தவரின் போர்-வெறிக் கொள்கைகளைப் பிசிறின்றி தொடர்ந்து செய்து வந்தார். ஜோர்ஜ் W. புஷ்ஷின் பாதையில் இருந்து விலகிச் செயல்படுவதற்கு ஒபாமாவுக்கு இந்தப் பரிசுஉற்சாக டானிக்காகவும்ஊக்குவிப்பாகவும் இருக்கும் என்று அச்சமயத்தில் கருத்துகள் வெளியாயின. உண்மையில், நோபல் குழு ஒபாமாவுக்கு நிபந்தனையற்ற அதிகாரத்தையே வழங்கியிருந்தது. உலகின் மிகச் சக்தி வாய்ந்த இராணுவ எந்திரத்தின் தலைவராக இருப்பவர் அவர் விரும்பியதைச் செய்வதற்கு தாராளவாத ஐரோப்பிய பொதுக் கருத்தின் ஆதரவு இருக்கிறது என்று கூறுவதற்கான சமிக்கையாக அது இருந்தது.

அதன்பின் இது தொடர்ந்து நிரூபணமாகி வந்திருக்கிறது. ஒபாமா தனக்கு முன் அதிகாரத்தில் இருந்தவரின் கொள்கைகளையே தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறார். குவோண்டானோமோ இன்னும் மூடப்படவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிரிகளைக் கொல்வதற்கு ஜனாதிபதி ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்துகிறார். ஆப்கானிஸ்தானில் போரைத் தீவிரப்படுத்தினார், லிபியாவுக்கு எதிரான ஒரு புதிய போருக்கு அங்கீகாரமளித்தார், சிரியாவுக்கு எதிரான இராணுவத் தலையீட்டிற்கும் ஈரானுக்கு எதிரான போருக்கும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இத்தனையையும் புஷ் நிர்வாகத்தின் போர்க் கொள்கைகளை விமர்சித்த ஏறக்குறைய அத்தனை பேரது ஆதரவுடனேயே அவரால் செய்ய முடிகிறது

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டமையும் ஊடகங்கள் மற்றும் கடந்தகாலத்தில் நடுத்தர வர்க்கத்தின் தாராளவாத மற்றும் இடது அடுக்குகளாக இருந்தவை இதற்கு உற்சாகத்துடன் எதிர்வினையாற்றியுள்ளமையும் ஐரோப்பாவில் எந்த மட்டத்திற்கு சமூக மற்றும் அரசியல் துருவப்படுத்தல் நடந்தேறியுள்ளது என்பதையே விளங்கப்படுத்துகிறது. பொருளாதார நெருக்கடி ஆழமடைந்து வேலைவாய்ப்பின்மையும், வறுமையும், சமூக அசமத்துவமும் தொடர்ந்து பெருகி வரும் வேளையில், உழைக்கும் மக்கள் மேலும் மேலும் இந்த ஸ்தாபனங்களுடன் மோதலுக்குள் வரும் அதேநேரத்தில் தான் மேற்கூறிய அடுக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பின்னரும் மற்ற பிற்போக்குத் தூண்களுக்குப் பின்னேயும் தங்களை அணிவகுத்துக் கொண்டிருக்கின்றன. இந்த முரண்பாடு தவிர்க்கவியலாமல் பாரிய வர்க்கப் போராட்டங்களின் வடிவில் வெடிக்கும்