சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா : கனடா

Quebec’s major parties advance rival right-wing agendas

கியூபெக்கின் முக்கிய கட்சிகள் போட்டி வலதுசாரி செயற்பட்டியலை முன்வைக்கின்றன

By Keith Jones
29 August 2012
use this version to print | Send feedback

செப்டம்பர் 4 கியூபெக் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மாநிலத்தின் முக்கிய கட்சிகள் ஊழலைப் பற்றிய பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களை பரப்பி, பல வலதுசாரிக் கொள்கைகளை முன்வைத்து, மாநிலத்தின் ஆபத்தான நிலையிலுள்ள பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு முறைக்கு யார் பொறுப்பு என்று ஒருவர்மீது ஒருவரை குற்றம்சாட்டும் வகையில் செயல்படுகின்றன.

ஆளும் லிபரல்கள் ஒரு மிகத் தீவிர வலதுசாரிப் பிரச்சாரத்தை நடத்தியுள்ளனர். இதில் அவர்கள் பல்கலைக்கழக பயிற்சிக் கட்டணத்தில் 82 சதவிகிதம் உயர்வை சுமத்தியுள்ளது மற்றும் கியூபெக் மாணவர் பகிஸ்கரிப்பை குற்றத்தன்மை ஆக்குவதற்கு இயற்றிய கடுமையான சட்டத்தையும், தாங்கள் கடுமையான, மதிப்பிழந்த முடிவுகளை எடுக்கத் தயார் என்பதற்கான நிரூபணம் என்றும் கூறினர்.

பிரதமர் Jean Charest பலமுறையும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான Parti Quebecois (PQ) உடைய தலைவர் Pauline Marois தெருக்களுக்குபணிவதாகத் தாக்கினார்: இது மாணவர் வேலைநிறுத்தத்திற்கு PQ கொடுப்பதாகக் கூறப்படும் ஆதரவு பற்றிய குறிப்பாகும்.

லிபரல்களின் மற்ற முக்கிய போட்டிக் கட்சியான Coalitiion Avenir Quebec (CAQ)  வையும் சாரேஸ்ட் கண்டித்தார். அது பொறுப்பற்றஉறுதிமொழிகளான வரிக்குறைப்புக்கள், கூடுதலான கல்விக்கான செலவுகளைச் செய்யும் என்று கூறுவதற்காக; அவை ஒரு சமச்சீரான வரவு-செலவுத் திட்டத்தை ஆபத்திற்கு உட்படுத்தும் என்றும் அவர் கூறினார். இத்தாக்குதலை கூறுகையில் சாரெஸ்ட் வெளிப்படையாக வலதுசாரி ஜனரஞ்சக ADQ விடம் அவர்களுடைய உண்மையான இல்லம் லிபரல் கட்சிதான் என்று உணர்ந்துகொள்ளுமாறு அழைப்புவிட்டார். (உத்தியோகபூர்வமாக இது ஒரு இணைப்பு எனப்பட்டது,  இந்த ஆண்டின் முற்பகுதியிலே ADQ  வை CAQ எடுத்துக் கொண்டது.)

தாராளவாதிகளின் வலதுசாரிமுறையீடுகள் அதிக மக்கள் ஆர்வத்தை ஈர்த்ததாகத் தோன்றவில்லை. பல கருத்துக் கணிப்புக்களும் ஒன்பது ஆண்டுகள் பதவியில் இருந்தபின் லிபரல்கள் அடுத்த செவ்வாய் நடக்க இருக்கும் வாக்குப்பதிவில் கால்வாசிதான் மக்கள் வாக்கை பெறுவர், முதல்தடவையாக மூன்றாம் கட்சி அந்தஸ்தைத்தான் தேசிய சட்ட மன்றத்தில் பெறுவர் என்று கூறுகின்றன.

நீண்ட காலமாக முதலாளித்துவத்தின் மாற்றீட்டு அரசாங்க கட்சியாக இருக்கும் PQ  சமீபத்திய ஆண்டுகளில் பலமுறையும் லிபரல்களை வலதில் இருந்து தாக்கி அரசாங்கச் செலவுகள் விரைவில் குறைக்காமல் இருப்பதற்காகவும், மாநிலத்தின் வரவு-செலவுத் திட்டத்தை சமச்சீர் செய்யும் அதன் உந்துதலில் சமூகநலக் குறைப்புக்களையும் விட வரிவிதிப்புக்களுக்கு ஆதரவாக இருப்பதற்காகவும் இத்தாக்குதல் நடைபெற்றது. ஆனால் கடந்த எட்டு மாதங்களில் PQ சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளில், கியூபெக் தாராளவாத மற்றும் கூட்டாட்சி கன்சர்வேடிவ் அரசாங்கங்களின் சிக்கனக் கொள்கைக்கு எதிரான பாரிய மக்கள் எதிர்ப்பை தனக்கு சாதகமாக  பயன்படுத்தும்வகையில் ஒரு சிறிய வெளிப்படையாக இழிந்த குறைந்த இடதுசார்பு நிலையை எடுத்துள்ளது.

PQ தான் அரசு அமைத்தால் லிபரல்களின் வயதுவந்தோருக்கான தலா நபருக்கு $200 சுகாதாரப் பாதுகாப்புக் கட்டணத்தை இரத்து செய்யும், லிபரலின் திட்டமான மின்வரிகளை உற்பத்திச் செலவுகளைவிட அதிகமாக உயர்த்தும் திட்டத்தை ஒதுக்கிவிடும், பல்கலைக்கழக பயிற்சிக் கட்டணத்தை பணவீக்க அளவோடு மட்டுப்படுத்தும் என்றும் கூறிவருகிறது. இத்தகைய நடவடிக்கைகளும் சில மற்ற உறுதிமொழிகளான பகல் பாதுகாப்பு (daycare) இடங்களில் ஓரளவு அதிகரித்தல் போன்றவை கூடுதலான சுரங்கத் தொழில் காப்புரிமைப் பணத்தில் இருந்தும் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் வரிகளில் சிறிய உயர்வின் மூலமும் சமாளிக்கப்படும் என அறிவித்துள்ளது. பிந்தைய நடவடிக்கைகள் ஓரளவிற்குத்தான் லிபரல் மற்றும் PQ அரசாங்கங்கள் இரண்டும் 12 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டுவந்துள்ள வரிவெட்டுக்களைச் சமன் செய்யும்.

தேர்தலை ஒரு இரண்டு மாற்றுவிருப்புக்கள், ஒரு முன்னேற்றகர” PQ க்கும் இரண்டு வலதுசாரிக் கட்சிகளுக்கும்என்று சித்தரிக்க விரும்பிய மரோய்ஸ் பெருவணிகத்திற்கு அதன் தொழிற்சங்கங்கள் ஆதரவைச் சேர்க்கும் வகையில், PQ இன்னும் திறமையுடன் பொதுப் பணிகளைக் குறைத்து தன் போட்டிக் கட்சிகளைவிடத் தனியார்மயத்தை வளர்க்கும் என உத்தரவாதம் அளிக்கச் சிரமப்பட்டார்.

தேர்தல் பிரச்சாரத் தொடக்கத்தில் மரோய்ஸ் மாணவர்களை தங்கள் பகிஸ்கரிப்பை முடித்து சட்டவரைவு 78 (சட்டம் 12) க்குக் கீழ்ப்படியுமாறு வலியுறுத்தினார். திங்களன்று அவர் மொன்ட்ரியாலில் இரண்டு முக்கிய பிரெஞ்சு மொழிப் பல்கலைக்கழகங்கள் சட்டம் 12 விதிகளுக்கு எதிராக எதிர்ப்புக்களை நடத்தியபோது,  ஒரு பல்கலைக்கழகம் அல்லது CEGEP (பல்கலைக்கழகத்திற்கு மந்தைய, தொழில்நுட்பக் கல்லூரிகள்) ஆகியவற்றிற்கு 50 மீட்டர்களுக்குள் எதிர்ப்புக்கள் நடத்துவது கூடாது என வலியுறுத்தினார். சட்டம் 12ஐக் கடைப்பிடிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தியபோது, மரோய்ஸ் மாணவர்களின் பயிற்சிக் கட்டண அதிகரிப்பு இரத்து செய்யப்பட வேண்டும் என்பதையும் கல்வி ஒரு சமூக உரிமை என அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையும் நிராகரித்தார்.

சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் PQ பிரச்சாரத்தின் குவிப்பாக இல்லை. மாறாக இது லிபரலின் ஊழல் மற்றும் கியூபெக்கின் தேசியவாதம் மற்றும் குடியேறுவோருக்கு எதிரான சோவனிசத்தையும்தான் வலியுறுத்தியது.

பெருவணிகத்தின் மிகச் சக்தி வாய்ந்த பிரிவுகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடிச் சூழ்நிலையில் கியூபெக்கின் அரசியலமைப்பு அந்தஸ்து குறித்த பிரச்சினையை மீண்டும் எடுப்பதை எதிர்த்தபோது, PQ  வின் சுதந்திரச்சார்பு, தொடர்ச்சியான ஜனநாயக விரோத நடவடிக்கைகள் என்று கியூபெக் மதிப்புக்கள், பிரெஞ்சு மொழியின் முன்னுரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்த வலுயுறுத்துகிறது.

புதிதாக வருபவர்களுக்கு கியூபெக்கில் சில அரசியல் உரிமைகள் மறுக்கப்படும் என்று PQ உறுதியளிக்கிறது. இதில் மாநில, மாநகர, தேர்தல்களில் வேட்பாளராக நிற்கும் உரிமையும்  மற்றும் மூன்று ஆண்டுகள் வசித்துள்ள நிலையில் பிரெஞ்சு மொழியில் திறமையை அவர்கள் நிரூபிப்பதும் அடங்கும். மிகவும் பாசாங்குத்தனமான மத சார்பற்ற பட்டயம்என்பதை அறிமுகப்படுத்தவும் அது உறுதியளித்துள்ளது; இதன்கீழ் பொதுத்துறை ஊழியர்கள் மத அடையாளங்களை அணிந்து கொள்வது தடைக்கு உட்படுத்தப்படும். ஆனால் அதிகம் வெளிப்படாதகிறிஸ்துவ சிலுவைக்குறிகள் விதிவிலக்கு ஆகும். மேலும் கியூபெக்கின் கலாச்சார மரபியத்தைக்காத்தல் என்னும் பெயரில் PQ தேசிய சட்டமன்றத்தில் தொங்கவிடப்பட்டுள்ள சிலுவை அப்படியே இருக்கும் என்றும் கூறியள்ளது.

இது முன்பு பதவி வகித்தபோது, இரு முறை தொழிலாள வர்க்கத்துடன் PQ வன்முறை மோதலில் ஈடுபட்டது. 1983ம் ஆண்டு, ஆசிரியர்களை பெருமளவிற்கு வெளியேற்றுவதாக அவர்கள் லெவெஸ்க் அரசாங்கத்தின் ஊதியக் குறைப்பு முயற்சிகளை பொதுத்துறை ஒப்பந்த ஆணை மூலம் கொண்டுவந்தபோது மீறியபோது அச்சுறுத்தியது. 1999ல் சட்டவரைவு 78 ஐப் போன்ற சட்டத்தை செவிலியர் வேலைநிறுத்தத்தை முறிக்கப் பயன்படுத்தியது; அப்பொழுது செவிலியர்கள் பொதுத்துறையில் வேலை வெட்டுக்களின் பாதிப்பு அவர்கள் பணிச்சுமையிலும் நோயாளிகள் பாதுகாப்பிலும் அதிகம் இருக்கும் என்று எதிர்த்திருந்தனர். மரோய்ஸ் இரு அரசாங்கங்களிலும் முக்கிய அமைச்சரவை மந்திரியாக இருந்தார்.

தொழிற்சங்கங்களும் இடதுசாரி என்று கூறிக்கொள்ளும் Québec Solidaire (QS) PQ க்குத் தேவையான முக்கிய ஆதரவை, தேர்தல்ரீதியாக சுரண்டுவதற்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவும், அரசியல்ரீதியாக சாரெஸ்ட் லிபரல் அரசாங்கத்திற்கான மக்கள் எதிர்ப்பை செயலற்றதாகச் செய்வதற்கும் கொடுக்கின்றன.

PQ விற்கு முறையாக ஒப்புதல் கொடுக்காத நிலையில், தொழிற்சங்கங்களும் அவற்றின் மாணவர் சங்க நட்பு அமைப்புக்களான FECQ, FEUQ வும் லிபரல்கள் மற்றும் CAQ தோற்கடிக்கப்பட பிரச்சாரம் செய்கின்றனர்; வேறுவிதமாகக் கூறினால், ஒரு PQ,  அல்லது PQ தலைமையிலான அரசாங்கத்திற்காக ஆதரவைக் கொடுக்கின்றனர்.

ஜூன் மாதம் Québec Solidaire ஒரு PQ  தலைமையிலான இறைமைவாதத்திற்காக, அதாவது கியூபெக் சுதந்திரத்திற்காக கட்சிகளுக்கு இடையே கூட்டமைப்பு கொண்டு வரப்பட்டு லிபரல்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தது. PQ  தலைமை தாங்குகையில், சிறிதளவு பெரும்பான்மையுடன்தான் என்றாலும், கருத்துக்கணிப்புக்களில் QS செய்தித் தொடர்பாளர்கள் தங்கள் கட்சி ஒரு சிறுபான்மை PQ அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து நிறுத்துவிடும் வாய்ப்பு கொண்டுள்ளது குறித்து பரபரப்பு அடைந்துள்ளனர். வார இறுதியில் பேசிய பிரான்சுவா சாய்லன்ட், உயர்மட்ட QS வேட்பாளர், மொன்ரியால் தொழிலாள வர்க்க ரோஸ்மன்ட் பகுதியில் எனக்கு அது தலைசிறந்த காட்சியாக தெரிகிறது என்றார்.

ஒரு பல மில்லியன் உரிமையாளரும் முன்னாள் PQ அமைச்சரவை மந்திரியுமான பிரான்சுவா லெகால்ட்டின் தலைமையில், CAQ மிக அதிகமாக பெருநிறுவனச் செய்தி ஊடத்தால் ஆதரிக்கப்படுகிறது.  அதுவும் லெகால்ட் முதலில் கூட்டாட்சி இறைமையியல் மோதலை ஒதுக்கிவைக்கும்கட்சியை தோற்றுவிக்கும் வாய்ப்பை பயன்படுத்த இருப்பதாகவும், இதனால் சமூகப் பொருளாதார மாற்றங்களில் கவனம் காட்ட முடியும் என்று கூறியதில் இருந்தது.

CAQ உடைய பழைய கட்சிகளை ஊழல் மிகுந்தவை சிறப்பு நலன்களுக்குதாழ்ந்து இருப்பவை என்று கண்டிக்கும் கருத்துக்களை CAQ பிரச்சாரங்களின் அச்சாக லெகால்ட் மாற்றிவிட்டார். கடந்த வாரம் தலைவர்களின் விவாதங்களைப் பற்றிப பேசும்போது, அவர் ஒருவேளை எக்கட்சியும் தேசிய சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெறாவிட்டால் லிபரல்கள் அல்லது PQ க்களை ஆதரித்தல் இல்லை என்றார். லிபரல்கள் கறைபடிந்த கரங்களைக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் PQ “தொழிற்சங்கங்களுடன் கைகளைக் கோர்த்துள்ளது என்றார்.

லெகால்ட் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பகுதியாக உள்ள முழு கியூபெக் அரசியல் அமைப்புமுறையும் நீண்டகாலமாக ஏலங்களில் தில்லுமுல்லு செய்தல், கட்டுமானத் தொழில்துறையில் அரசியலுக்குப் பணம் வாங்குவது போன்ற முறைகளுக்குத் தலைமை தாங்குகிறார்.

ஆனால் ஹார்ப்பரும் அவருடைய கன்சர்வேடிவ்களும் 2006 கூட்டாட்சித் தேர்தலில் பயன்படுத்தியதுபோல் ஊழல் பிரச்சினையை கையாளுகின்றனர். அதாவது தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு விரோதமாக இருக்கும் ஒரு வலதுசாரி செயற்பட்டியலில் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக. அதே நேரத்தில் பெருவணிகத்தின் ஆதரவைப் பெறவதற்காக CAQ தொடர்ச்சியான வலதுசாரி கொள்கை நிலைப்பாடுகளின் மீது குவிப்புக்காட்டியுள்ளது. இவற்றுள் சுகாதாரப் பாதுகாப்பு தனியார்மயமாக்கல், ஆசிரியர்களின் மூப்புத் தகுதி உரிமைகளை இல்லாதொழித்தல், 4,000 Hydro-Quebec வேலைகளைத் தகர்த்தல், நகரசபைகளுக்கு தங்கள் பணியாளர்களை வெளியேற்றும் உரிமையை அளித்தல் மற்றும் தொழிற்சங்கங்கள் அனுமதி பெறுவதைக் கடினமாக்குதல் ஆகியவை அடங்கும்.