சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French trade unions urge spending cuts, labour market deregulation

பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் செலவு வெட்டுக்களுக்கும், தொழிலாளர் சந்தையின் மீதான கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கும் வலியுறுத்துகின்றன

By Kumaran Ira
7 September 2012
use this version to print | Send feedback

பிரான்ஸின் CFDT (பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு) சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தின் ஜனாதிதி பிரான்சுவா ஹாலண்டை அரசாங்கத்தின் சமூகநலச் செலவுக் குறைப்புக்களை விரைவுபடுத்துமாறு அழுத்தம் கொடுக்கிறது.

ஹாலண்ட் விரைவில் தொழில்துறைச் சீர்திருத்தங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றும் இது கோருகிறது; தொழிலாளர் செலவினங்களைக் குறைத்தல், தொழிலாளர்களைப் பணியில் அமர்த்த, நீக்க இருக்கும் தடைகளை அகற்றுதல். இதுதான் பிரெஞ்சு நிறுவனங்களின் போட்டித்தன்மையை மீட்க,  கடுமையான சிக்கன நடவடிக்கைகளை சுமத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதிய உடன்பாட்டை முறையாக ஏற்க வேண்டும். ஞாயிறன்று Le Journal de Dimache க்குக் கொடுத்த பேட்டியில் CDFT இன் தலைவர் François Chérèque தற்பொழுதுள்ள அட்டவணைக்கு அப்பால் அரசாங்கம் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டும் என்றார். நம் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமில்லை; ஏனெனில் உலகளாவிய தன்மையின் சவாலுக்கு பிரான்ஸ் நன்கு இயைந்து செயல்படுகிறது.... தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்கள் குறித்து இயன்றளவு விரைவில் பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும், விரைவிலும் அவற்றை முடிக்க வேண்டும்.

சிரேக் ஜேர்மனியில் ஒரு தசாப்தத்திற்கு முன்பு, குறைவூதியத் தொகுப்பை உருவாக்கியது, பணிநீக்கம் செய்வதை எளிதாக்கியது, தொழிலாளர் செலவுகளைக் குறைத்தது, மற்றும் ஜேர்மனியின் ஏற்றுமதிக்கு ஏற்றம் கொடுத்தது ஆகியவற்றை சான்ஸ்லர் ஷ்ரோடரின் சமூக ஜனநாயக அரசாங்கம் செய்த தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்களைப் புகழ்ந்தார். பிரெஞ்சு நிறுவனங்களின் போட்டித்தன்மையை வளர்ப்பதற்கு தொழிலாளர்கள் செலவுகள் குறைக்கப்பட வேண்டும்: இதை நான் தெளிவாகக் கூறுகிறேன்தொழிலாளர் செலவுகள் கூட போட்டித்தன்மையில் ஓர் இழப்புக் காரணிதான்.

வளைந்து கொடுக்கும் பணி நேரம் மற்றும் குறுகிய காலப் பணி என்னும் ஜேர்மனியக் கொள்கைகளை பிரெஞ்சு தொழிலாளர் சந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக பாராட்டிய CFDT, நிர்வாகத்துடன் ஒத்துழைத்து ஆலைகளிலும் பணியிடங்களிலும் கூட்டுப் பேச்சு வார்த்தை உடன்படிக்கைகளை இயற்றுகிறது. தொழிற்சங்கங்கள் சமீபத்தில் கார்த்தயாரிப்பு நிறுவனம் PSA ன் வடகிழக்கு பிரான்ஸில் உள்ள Sevelnord ஆலையிலும், ஏயர் பிரான்ஸிலும் ஊதியத் தேக்கங்கள் மற்றும் இன்னும் வளைந்து கொடுக்கும் பணி நேரங்கள் சுமத்தப்படுவதற்கு உடன்பாடுகளில் கையெழுத்திட்டன.

சிரேக் இன் கருத்துக்கள் ஹாலண்டின் அரசாங்கம் சமூகச் செலவு வெட்டுக்களை கடுமையாக செயல்படுத்த இருக்கையில் வந்துள்ளன; இம்மாதம் 2013க்கான வரவு-செலவுத் திட்டம் அளிக்கப்பட இருக்கையில், 30 பில்லியன் யூரோக்களுக்கும் மேலாக செலவுக் குறைப்புக்கள் வரவுள்ளன; இது சந்தையின் நம்பிக்கையை மீட்கும் எனக் கருதப்படுகிறது. கிரேக்கம், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகியவற்றை தொடர்ந்து தேவையான சமூகநல செலவுகளை வெட்டாவிட்டால் அதன் கடன் குறித்து பிரான்ஸ் அடுத்த சந்தை ஊகச் செயல்களின் இலக்காக இருக்கலாம் என்று காணப்படுகிறது.

சிரேக் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிய உடன்படிக்கைக்கும் ஒப்புதல் கொடுத்தார்இது ஐரோப்பிய ஒன்றியம் (EU), சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) என்னும் முக்கூட்டுடன்  இணைந்த செயலாகும்; இதன் சிக்கனக் கொள்கைகள் கிரேக்கத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன. இந்த உடன்படிக்கை மிகச் சரியானது அல்ல, பல பிழைகள் இருக்கலாம் என்று சிரேக் இழிந்த முறையில் குறிப்பிட்டார். ஆயினும்கூட அவர் அதை ஏற்று அதற்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

அவர் விளக்கினார்: பொது நிதிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும், அதை ஒட்டி அரசுக்கு மீண்டும் அதிகாரம் கிடைக்கும். சிக்கனக் கொள்கைகளுக்கு அப்பட்டமாக ஒப்புதல் கொடுத்தார்; பிரான்ஸ் அவ்வாறு செய்யாவிடின், இதை ஏற்காவிடின், வட்டி விகிதங்களில் பெரும் வெடிப்பு என்னும் இடர் உள்ளது; அது பிரான்சிற்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தும். என்றும் எச்சரித்தார். (See: “EU, IMF demand lower wages, longer hours in Greece”)

சிரேக்கும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் இழப்பில் பெருநிறுவனங்களின் போட்டித் தன்மையை பாதுகாப்பதற்கு பிரான்சிலும் இதே போன்ற நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கின்றனர். இது பூகோளமயமான சகாப்தத்தில், பிரெஞ்சுத் தொழிற்சங்கங்களின் பங்கைசர்வதேச அளவில் இருக்கும் தொழிற்சங்கங்களை போலவே பெருநிறுவன நலன்களைக் காப்பவை என்றும், தொழிலாளர்கள் மீது மேற்பார்வையிடுவதற்கும் ஊதியத் தேக்க நிலை மற்றும் நலன்கள் வெட்டிற்கு துணை நிற்பதையும் உயர்த்திக் காட்டுகிறது.

சிரேக் இன் சிக்கன நடவடிக்கைகள் குறித்த ஒப்புதலுக்குப் பின், பிரெஞ்சுச் செய்தி ஊடகம் CFDT உடைய தற்போதைய பங்கை இது முன்னாள் PS ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோனின் கீழ் கொண்டிருந்த பங்குடன் ஒப்பிட்டன; அப்பொழுது தொழிற்சங்கங்கள் மித்திரோனின் 1982-83 சிக்கனத்திற்குத் திரும்புதல் என்பதுடன் ஒத்துழைத்து, செலவு வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுத்து ஏராளமான பணி நீக்கங்களுக்கு இடையே சுரங்கத் தொழில், உற்பத்தித் தொழில் ஆகியவற்றின் அழிவிற்கும் துணை நின்றன.

Le Monde யின் கட்டுரையாளர் Francoise Fressoz எழுதினார்: அதிகாரத்தில் இடது இருந்த வரலாற்றில், CFDT எப்பொழுதும் ஒரு கண்காணிக்கும் பணியையும் எச்சரிக்கை கொடுக்கும் பங்கையும் கொண்டது.... ஜனவரி 1983ல் தொழிற்சங்கத்தின் தலைமைச் செயலாளர் எட்மோண்ட் மேய்ர், எலிசே [ஜனாதிபதி அரண்மனை]  பலகணியில் இருந்து, சிக்கனத் திருப்பம் குறித்த அறிவிப்பை செய்தார்.

அவர் மேலும் கூறியது: 29 ஆண்டுகளுக்குப் பின், பிரான்சுவா சிரேக் எட்மோண்ட் மேய்ர் செய்த பங்கைச் செய்கிறார். தற்பொழுதுள்ள ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கிறார்இந்தமுறை சிக்கன நடவடிக்கைகளுக்காக அல்ல, அவை ஏற்கனவே நல்லமுறையில் தொடக்கப்பட்டுவிட்டனஆனால் பிரெஞ்சு சமூக மாதிரியை தக்கவாறு தகவமைக்கஇதுவும் ஆபத்தான பகுதிதான்.

இத்தகைய கருத்துக்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களின் பங்கு பற்றி உயர்த்திக் காட்டுகின்றன: பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் நலன்களை ஆக்கிரோஷத்துடன் பாதுகாத்தல் மற்றும் தங்கள் வர்க்க நலன்களைக் காப்பாற்றுவதற்கு வலதுசாரிக் கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுத்தல் ஆகியவற்றை. இதையொட்டி ஒரு சமூக அடுக்கு என்னும் முறையில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பொருள்சார் நலன்கள் பிரதிபலிப்பாகின்றன; இது தொழிலாள வர்க்கத்திற்கு முற்றிலும் விரோதத்  தன்மையைத்தான் கொண்டுள்ளது.

இதன் வருமானம் மிகப்பெருமளவில், பெருவணிகம் மற்றும் அரசிடம் இருந்து கிடைக்கும் மானியங்களில் இருந்து பெறப்படுகிறது. சட்டமன்றப் பிரதிநிதி Nicolas Perruchot கொடுத்துள்ள அறிக்கை ஒன்றின்படி இது முதலில் தணிக்கைக்கு உட்பட்டு, பின்னர் மார்ச் மாதம் செய்தி ஊடகத்திற்கு கசிய விடப்பட்டது கிட்டத்தட்ட 4 பில்லியன் யூரோக்கள் (அமெரிக்க$5.3 பில்லியன்) என்று தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியத்தில் கிட்டத்தட்ட 90% தனியார், பொதுத்துறை நிறுவனத் தலைமைகளில் இருந்து உதவித் தொகைகளாக வருகின்றன. (See: “Perruchot report exposes French unions’ ties to the ruling class”)

இந்த அறிக்கை பிரான்சுவா சிரேக் CFDT  இன் தலைவர் என்னும் முறையில் தன்னுடைய சேமிப்பான 350 மில்லியன் யூரோக்களை மறைப்பதில் இடர்ப்படுவதையும், இதில் 34.7 மில்லியன் கிடைக்கும் நிதிகளாகவும் உள்ளன என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) யிடம் 42 மில்லியன் யூரோக்கள் உள்ளன.

CFDT தன் வணிக சார்பு சிக்கனக் கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கையில், மற்ற தொழிற்சங்கங்களான CGT மற்றும் FO (தொழிலாளர் சக்தி) போன்றவை வெட்டுக்களுக்கு விரோதிகள் போல் காட்டிக் கொள்ள முற்படுகின்றன. CGT இன் தலைவர் பேர்னார்ட் தீபோ சிரேக்கை மெடெப் வணிக அமைப்பின் வழிவகையையே கொண்டிருப்பதற்காக தாக்கினார்.

CGT இன் குறைகூறல்கள் முற்றிலும் சிடுமூஞ்சித்தனமானவை ஆகும். CFDT ஐ போல் இதுவும் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ச்சியான அரசாங்கங்கள் சமூகநல வெட்டுக்களுக்காக நடத்திய பேச்சுக்கள் அனைத்திலும் கலந்து கொண்டது, ஹாலண்டின் தேர்தலுக்கு ஆதரவையும் கொடுத்தது— CGT விடயத்தில், அது ஹாலண்டின் அரசியல் நட்பு அமைப்பான இடது முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் Jean-Luc Mélenchon க்கு ஆதரவு கொடுத்த வகையில்.

CFDT பாராட்டியுள்ள சிக்கன நடவடிக்கைகள் ஜூலை மாதம் நடைபெற்ற சமூக மாநாட்டில் விவாதிக்கப்பட்டு அனைத்து தொழிற்சங்கங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. மேலும், அனைத்து தொழிற்சங்கங்களும் பெருவணிக நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளை திட்டமிடப்பட்டுள்ள சந்தைச் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்கு அடுத்த வாரம் சந்திக்கின்றன.

சமூக மாநாட்டிற்குப் பின், CGT அதைப் புகழ்ந்ததுடன், ஹாலண்ட் அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகளை செயல்படுத்துவதில் தன் பங்கையும் உறுதி செய்து கொண்டது. அது எழுதியது: சமூக உரையாடல் மற்றும் சமூக பேரம்பேச்சாளர்களின் முக்கியத்துவம் உறுதி செய்யப்படுகின்றன என்ற உண்மை, அரசியலில் தன்னார்வத்துடன் தொழிலாளர் அமைப்புக்கள் செல்படுவதைக் காட்டுகிறது. .... அனைத்து வகைச் செயல்பாடுகளிலும் எங்கள் புதிய ஆதரவுக் குரல்கள் கேட்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.”