சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Anti-US protests rage across the Middle East

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கொந்தளிக்கின்றன

By Bill Van Auken
15 September 2012
use this version to print | Send feedback

அமெரிக்காவிற்கு எதிரான ஆத்திரமுற்ற எதிர்ப்பாளர்களின் போராட்டம் தூதரகங்களை முற்றுகையிடுவது உள்ளடங்கலாக வெள்ளிக்கிழமை 4வது நாளாக இந்தோனிசியாவிலிருந்து மொரோக்கோ வரை பரவிவருகின்றது. YouTube இல் முஸ்லிம்களுக்கு எதிரான ஒளிப்பதிவு படக்காட்சி ஒளிபரப்பட்டவுடன் வெடித்தெழும்பிய இந்த ஆர்ப்பாட்டங்கள் பாதுகாப்புப்படையினருடான மோதலிலிருந்து பல நாடுகளில் ஒரு டசினுக்கு அதிகமான இறப்புகள் வரை இட்டுச்சென்றுள்ளது.

வலதுசாரி கிறிஸ்தவ பிரிவுகளால் இந்த பண்பற்ற ஒளிப்பதிவு படம் வெளியிடப்பட்டதும் மற்றும் ஒரு ஆத்திரமூட்டலை வெளிப்படையான நோக்கமாக கொண்டமை எழுச்சிகளுக்கான தூண்டுதலை வழங்கியுள்ளது இப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் பல தசாப்தங்களாக திணித்த போர்கள் மற்றும் ஒடுக்குமுறை மீது ஆழமாக வேரூன்றிய கோபம் அவ்வெழுச்சிகளுக்கான அடிப்படையாக அமைந்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் செவ்வாய்க்கிழமை கெய்ரோவில் தொடங்கியது. லிபியாவின் கிழக்கிலுள்ள நகரமான பெங்காசியில் அமெரிக்க தூதரகம் முன் நடந்த எதிர்ப்புப் போராட்டமானது சில 200 மேற்பட்ட ஆயுதந்தாங்கிய நபர்களின் ஆயுததாக்குதலாக மாறியது. இதில் அமெரிக்க தூதர் மற்றும் 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலளிக்கும்  விதமாக  ஒபாமாவின் அரசு 50 நபர்கள் அடங்கிய சிறப்பு கடற்தரைப்படை பயங்கரவாத எதிர்ப்பு பாதுகாப்புக் குழுவையும்  [Fleet Antiterrorism Security Team (FAST)],  tomahawk cruise ஏவுகணை  ஆயுதங்களைத் தாங்கிய இரண்டு அமெரிக்க கடற்படைக்குரிய கப்பல்களையும் லிபியாவின் கரைக்கு அனுப்பி வைத்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகளவிளான அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் குண்டுவீசும் விமானங்கள் நகரத்தின் மேல் பறந்தன என்றும் அவை லிபியாவின் ஆயுதக்குழுக்களிடம் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணைத்தாக்குதலுக்குள்ளாகின என வந்த தகவல்களால் லிபியாவின் அதிகாரிகள் பெங்காசி விமான நிலையத்தை பல மணிநேரங்கள் இழுத்து மூடியிருந்தனர். விமான எதிர்ப்பு ஏவுகணை தாக்குதலால் பயணிகளின் விமானம் தாக்குதலுக்குள்ளாகலாம் என்று அதிகாரிகள் பயந்திருந்தனர். அமெரிக்க இராணுவம் இந்தப் பகுதியில் தாக்குதலை தொடங்கப்போகிறது என்ற வதந்தி தீப்பொறியாக பரவியது.

செவ்வாய்க்கிழமை பெங்காசியிலுள்ள அமெரிக்கா தூதரகத்தின் மீது முற்றுகை போராட்டம் யாரால் நடாத்தப்பட்டது என்பதை கண்டுபிடிப்பதற்காக பெண்டகன் மற்றும் அமெரிக்க உளவு பிரிவினர் பல வருடங்களாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், யேமன் மற்றும் எங்கும் தீட்டப்பட்ட முறைகளான உயர் தொழில்ட்பமிக்க ஆயுதங்களையும் கண்காணிப்பு சாதனங்களையும் பயன்படுத்துவதை நோக்கி அவர்களுடைய கவனம் திரும்பியிருந்ததாகவும் AFP செய்திநிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இன்னுமொரு FAST சிறப்பு கடற்படை பிரிவு யேமனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று ஜனாதிபதி பராக் ஒபாமா காங்கிரஸுக்கு முறையாக அறிவிக்கும் கடிதமொன்றை சமர்பித்திருந்தார். யுத்த அதிகாரங்கள் சட்டப்படிபோருக்கான வேட்டைகான ஒப்புதலுடன் இரண்டு நாடுகளுக்கும் துருப்புக்களை அனுப்பியிருந்தார். அவர்களது நடவடிக்கை அமெரிக்க குடிமக்களையும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு மற்றும் லிபியா மற்றும் யேமனில் அவர்கள் அங்கிருக்க தேவையில்லை என்றளவிற்கு  பாதுகாப்பு நிலைமைகள் சரியாகும் வரைக்கும் இங்கு தங்கியிருப்பர் என அவர் கூறினார்.

லிபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தூதுவர் ஜெ.கிரிஸ்டோபர் ஸ்டீவென் மற்றும் மூன்று அமெரிக்க அதிகாரிகளின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த  ஆண்ட்ரு விமானபடைத் தளத்திற்கு  வெள்ளிக்கிழமையன்று ஒபாமா அதிகாரபூர்வமாக சென்றிருந்தார். கொன்றவர்களை பழிக்கு பழிக்கு வாங்குவதான முந்தைய சபதத்தை மீண்டும் அறிவித்தார் அவர்களை எங்களிடமிருந்து பறித்தவர்களை நீதியின் முன் கொண்டுவருவோம். எங்கள் ராஜதந்திர நோக்கத்திற்கு எதிரான பலாத்காரத்திற்கு எதிராக உறுதியாக நிற்போம். அமெரிக்கர்களுக்கு துன்பமிழைத்தவர்களுக்கு தண்டணை கிடைக்கும். என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கில்லாரி கிளிண்டன் ” “ஒரு சர்வாதிகாரியின் கொடுங்கோன்மையிலிருந்து ஒரு கலகக்கும்பலின் கொடுங்கோன்மையுடன் உறவாட வேண்டாம் என மத்திய கிழக்கின் மக்களுக்கு பிரசங்கம் செய்தார். இந்த கலகக்கும்பலால் கவிழ்க்கப்பட முன்னர் இந்த அனைத்து சர்வாதிகாரிகளையும் வாஷிங்டன் அதிகாரத்தில் வைத்திருக்க முனைந்தது பற்றி அவர் குறிப்பிடவில்லை. 

அங்காடி விற்பனையாளர் முகமது பௌஸ்ஸி 2010 டிசம்பரில் தனக்குதானே தீவைத்து தற்கொலைசெய்து, சமூக சமத்துவமின்மைக்கும் மற்றும் ஒடுக்குமுறையான ஆட்சியை நடத்திய ஜனாதிபதி ஜின் எல் அபிடின் பென் அலிக்கு எதிராக பரந்துபட்ட எழுச்சியை தூண்டிவிட்ட அரபு வசந்தம் என்றழைக்கப்படுவது ஆரம்பித்த துனிசியாவின் தலைநகரான துனிஸில் வெள்ளிக்கிழமை கூர்மையான மோதல்கள் ஏற்பட்டன.

துனிஸில் அமெரிக்க தூதரகத்தைத் தாக்கிய ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல் படையினருக்குமிடையில் நடந்த மோதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்த இரண்டு நபர்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது. அந்தப்பிராந்தியத்தின் ஏனைய இடங்களைப்போல், அவர்களுடைய மசூதிகளிலிருந்து நேரடியாக தூதரகத்தை நோக்கி வந்த முஸ்லீம்களும் மற்றும் தொழிலாள வர்க்க குடியிருப்பு பகுதிகளிலிருந்து ஏராளமான இளைஞர்களும் இந்த  ஆர்ப்பாட்டக்காரர்களில் அடங்கியிருந்தனர்.

ஏராளமான நாடுகளில் ஆர்ப்பாட்டக்காரர்களால் எடுக்கப்பட்ட கோஷங்களில் ஒன்றான, ”ஒபாமா ஒபாமா, நாங்கள் எல்லாம் ஒசாமா என்று கொல்லப்பட்ட அல் குவைய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை குறிப்புக் காட்டி துனிசியர்கள் குரலெழுப்பினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரகத்தின் சுவர்களை தாண்டிப் போய் அதிகமான வாகனங்கள் நிறுத்தி வைத்திருந்த இடத்தில் தீயினை மூட்டிவிட்டதுடன், அமெரிக்க கொடியை கீழே இறக்கிவைத்துவிட்டு முஸ்லீம்களின் அடையாள சின்னத்தை தாங்கிய கறுப்பு கொடிகளை மாட்டிவிட்டார்கள். ”எங்கேயும் கடவுள் இல்லை ஆனால் அல்லாவும் முகம்மதுவும் அவரின் தூதுவர்கள் என்றவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரகத்திலிருந்து நெடுஞ்சாலையை கடந்து அமெரிக்க மாணவர்களுக்கான பள்ளியை சூறையாடியும் தீ கொளுந்துவிட்டு எரிய வைத்தும் தாக்கினார்கள்.

அமெரிக்க காவல் அதிகாரிகள் அமெரிக்க தூதரை தூதரகத்திலிருந்து அப்புறப்படுத்தியபோது காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு கண்ணீர் புகை குண்டுகளை எறிந்ததுடன், துப்பாக்கிகளாலும் சுட்டனர்.

யேமனிலும் வாஷிங்டனுக்கு எதிரான மக்களின் விரோதப் போக்கை வன்முறைக் கலவரங்கள் காட்டி நின்றன. இந்த நாட்டில் அமெரிக்கா ட்ரான் ஆளில்லாவிமானக் குண்டுத்தாக்குதல் பிரச்சாரத்தை, குடும்ப மற்றும் கையாட்களை வைத்து ஆட்சிசெய்த முன்னால் சர்வாதிகாரி அலி அப்துல்லா சாலேக் இனை ஆதரித்து முன்னெடுத்திருந்தது. இவர் இளைஞர்கள், பழங்குடியினர் மற்றும் தொழிலாளர்களின் பரந்த எழுச்சியினால் ராஜினாமா செய்வதற்கு கட்டாயப்பட்டுத்தப்பட்டிருந்தவராவார். வியாழனன்று தலைநகர் சானாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் ஏற்பட்ட முற்றுகையின்போது நான்கு பேர் இறந்துள்ளார்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தூதரகத்தை நோக்கி வந்த ஆத்திரமுற்ற ஆர்ப்பாட்டக்காரரை நோக்கி போலிஸார்  துப்பாக்கியால் சுட்டதிலும், தண்ணீர் பீச்சிகளால் தாக்கியதாலும் குறைந்தது இரண்டு நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சூடானில் வெள்ளிக்கிழமை புறநகர்ப்பகுதியில் இருந்த கார்ட்தோமில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கட்டிடத்திற்கு வெளியே ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட அணிவகுப்பில் குறைந்தது மூன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு சுவர்களால் ஏறிக்குதித்து இஸ்லாமிய கறுப்புக் கொடியை பிடித்துகொண்டு ஓடிய போது கட்டிடத்தின் உள்ளிருந்த பாதுகாப்புபடையினர் அவர்களை நோக்கி சுட்டனர். இதற்கு முன்னால் அருகிலிருந்த ஜேர்மன் மற்றும் பிரிட்டன் தூதரகங்களை 5000க்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியுள்ளார்கள். ஜேர்மன் தூதகரம் நெருப்பு வைக்கப்பட்டு மோசமான பாதிப்புக்குள்ளானது. அதன் தூதுவரும் மற்றும் ஊழியர்களும் அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டனர்.

சூடானில் ஜேர்மன் அலை (Deutsche Welle) எனும் ஜேர்மன் வானொலிக்கு அளித்த நேர்காணலில் ஜேர்மன் பிரீட்ரிக் ஏபேர்ட் அறக்கட்டளையின் பிரதிநிதி ஃப்ளோரியான் டேன இந்த வன்முறை மோதல்களில் ஈடுபட்டிருந்த பெரும்பான்மையானவர்கள் மிக மோசமான பொருளாதார சமூக சூழ்நிலையில் வாழும் அதிருப்தியடைந்த மக்களாகும். அவர்கள் தமது   வெறுப்பினை எவ்வாறாவது காட்டுவது தேவை என உணர்ந்திருந்ததாக அவர் கூறியிருந்தார்.

சூடான் வெளிவிவகாரத்துறை அமைச்சர் முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்ப்பாட்ட நடாத்த  ஒரு சிறிய குழு சிறிய வலதுசாரிகளுக்கு ஜேர்மன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்யிருந்ததை பகிரங்கமாக விமர்சித்திருந்தார்.

செவ்வாய்க்கிழமையே எதிர்ப்புக்கள் ஆரம்பமாகிவிட்டிருந்த எகிப்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தின் வீதியில் பெரிய கான்கிரிட் தடைகளால் தடுப்பரண்களை அமைத்திருந்த பாதுகாப்புபடையுடன் நாள் முழுக்க மோதலில் ஈடுபட்டிருந்தனர். எகிப்திய இராணுவத்தினர் அமெரிக்க தூதரகக் கட்டிடத்தைச் சுற்றி சுவர்களைக் கட்டினர். அதிகாரபூர்வத் தகவல்களின்படி அதிப்படியான நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது குறைந்தபட்சம் 224 பேர் காயப்பட்டுள்ளார்கள்.

வடக்கு லெபனான் நகரமான திரிப்போலியில் காவல்படையுடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 2 எதிர்ப்பாளர்கள் இறந்துள்ளனர். அமெரிக்க விரைவு உணவு விடுதியை இலக்கு வைத்து நடந்ததில் அது சூறையாடப்பட்டதுடன் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது.

கணிசமான ஆர்ப்பாட்டங்கள் ஆபிரிக்காவிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவின் முஸ்லிம் நாடுகளில் நடந்துள்ளன.

* பங்களாதேசில் டாக்காவின் வீதிகளில் 10000 இற்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொடிகளை எரித்தனர்.

* ஆப்கானிஸ்தானில் கிழக்கு நகரான ஜலாலாபாத்தில் 1000க்கு மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து ஒபாமாவின் உருவபொம்மையை எரித்து சாம்பாலாக்கினர்.

* கடந்த ஆண்டு இறுதிவரை அமெரிக்கத் துருப்புக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஈராக்கின் நகரங்களிலும் ஊர்களிலும் அமெரிக்கர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாரியளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்ற தெற்கு நகரான பாஸ்ராவில் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் தெருக்களில் அணிவகுத்து வந்து அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் கொடிகளை எரித்தார்கள்.

*நைஜீரியாவின் மத்திய நகரான பிளட்டுவில், வெள்ளிக்கிழமை நகரத்தின் மையப்பகுதியிலிருக்கும் மசூதியில் பிரார்த்தனைக்கு  பிறகு ஆயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடியிருந்தனர். ஆனால் துருப்புக்கள் துப்பாக்கி சூடுநடத்தி விரைவாக கலைத்துவிட்டனர். ” இது ஒரு அமைதியான ஆர்ப்பாட்டம் என்று மக்கள் கூறினார்கள். ஆனால் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு யாருக்கும் உரிமை இருப்பதாக  வழமைபோல் இராணுவம் நம்பமறுத்துவிட்டது.” என்று ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் கூறினார்.

* ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனீயர்கள் காஸா நகரத்திலும் ராஃபாவின் தெற்கு காஸன் நகரத்திலும்சாவு, சாவு அமெரிக்காவே சாவு சாவு இஸ்ரேலே என கோஷமிட்டனர். நூற்றுக்கணக்கான மக்கள்  ஜெருசலத்தின் அல்-அகுசா மசூதிக்கு வெளியே காவல் படையுடன் மோதலுக்குட்பட்டிருந்தனர். அவர்கள் கண்ணீர் புகை மற்றும்  கிரைனட் குண்டுகளை வீசினார்கள். பலர் காயமுற்றார்கள்.

பாகிஸ்தான், இந்தோனிசியா மற்றும் மலேசியா நாடுகளில் பாரிய  ஆர்ப்பாட்டங்கள் நடந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.