சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

Washington pressures Iraq over alleged arms shipments to Syria

சிரியாவிற்கு ஆயுதங்கள் அனுப்பப்படுவதாகக் கூறப்படுவது தொடர்பாக ஈராக்கின் மீது வாஷிங்டன் அழுத்தம் கொடுக்கிறது

By Bill Van Auken
21 September 2012
use this version to print | Send feedback

சிரியாவிற்கு ஈராக்கிய வான்வழியே ஈரானிய ஆயுதங்கள் அனுப்பப்படுவதில் ஈராக்கிற்கும் உடந்தை இருப்பதாக அமெரிக்காவால் பதவியில் இருத்தப்பட்ட ஈராக்கிய ஆட்சியின் மீதான அழுத்தங்களை ஒபாமா நிர்வாகம் தீவிரமாக்கியுள்ளது. ஈராக்கிய பிரதம மந்திரி நூர் அல்-மலிகியின் அரசாங்கத்தை அச்சுறுத்தும் முயற்சி, சிரியாவை மூச்சுத்திணறச் செய்யும் அமெரிக்காவின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். இதில் புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் எனப்படுவோருக்கு கொடுக்கப்படும் ஆதரவு அதிகரிக்கப்பட்டுள்ளது ஆகியவை அடங்கும். இவை ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியைக் கவிழ்க்கும் செயலாகும்.

புதன் அன்று செனட்டர் ஜோன் கெர்ரி, செனட்டின் வெளியுறவுகள் குழுவின் ஜனநாயகக் கட்சித் தலைவர் மலிக்கியின் அரசாங்கம் அமெரிக்க கோரிக்கைகளுக்கு கீழ்ப்படியாவிட்டாலோ, சிரியாவிற்கு ஈரான் வான்வழியே அனுப்பும் பொருட்களை நிறுத்தாவிட்டாலோ, ஈராக்கிற்கு உதவியை நிறுத்திவிடும் என்று அச்சுறுத்தினார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பெயரிடப்படாத மேற்கு உளவுத்துறை நிறுவனம் கசியவிட்டுள்ள கட்டுரை ஒன்றைத் தளமாகக் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டதுடன் கெர்ரியின் அச்சுறுத்தல் ஒரே நேரத்தில் வந்துள்ளது; மேலை உளவுத்துறை நிறுவனம் ஈரானிய விமானங்கள் சிரியாவிற்கு இராணுவ நபர்களுடனும் ஏராளமான ஆயுதங்களுடனும் ஈராக்கிய வான்வழியே செல்வதாகக் குறிப்பிட்டுள்ளது. டமாஸ்கஸ் அரசாங்கத்திற்கு ஈராக் வழியே தரைமூலம் டிரக்குகளை அனுப்பும் வகையிலும் ஈரான் தொடர்ந்து உதவுகிறது என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.

அத்தகைய பொருட்கள் வழங்குவதன் அளவு பொதுவாக பகிரங்கமாக ஒப்புக் கொள்வதைவிட மிக அதிகமும் மற்றும் திட்டமிட்டமுறையில் நடத்தப்படுகிறது. இதற்குக் காரணம் மூத்த ஈராக்கிய, ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே உள்ள உடன்பாடுதான், என்று உளவுத்துறை அறிக்கை குற்றம் சாட்டுகிறது என்று ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

ஈராக்கிய அரசாங்கம் ஈரானில் இருந்து மனிதாபிமானப் பொருட்களை தவிர வேறு எதையும் அனுமதிக்கவில்லை என்று கூறியுள்ளது. மேலும் மோதலில் ஈடுபட்டுள்ள எத்தரப்பினருக்கும் ஆயுதங்கள் வழங்குவதை தான் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளது.

பாக்தாத்திற்கு அடுத்த அமெரிக்கத் தூதராக ரோபர்ட் பீக்ரோப்ட் நியமனம் குறித்த வெளியுறவுகள் குழு கூட்டத்தின் பின்னணியில் கெர்ரியின் அச்சுறுத்தல் வந்துள்ளது. தற்பொழுது ஈராக்கில் துணைப் பணிக்குழுத் தலைவராக இருக்கும் பீக்ரோப்ட் தானும் பிற அமெரிக்க அதிகாரிகளும் மலிக்கி அரசாங்கம் ஈரானிய வான்வழிப் பயணங்களை நிறுத்தக் கோரியிருப்பதாக சாட்சியம் அளித்தார்.

ஒருவேளை நம் உதவி சிலவற்றை அல்லது நம் ஆதரவின் தொடர்ச்சியை பொருத்தமான பிரதிபலிப்புடன் வேறுவகையில் வழங்க வேண்டும் என்றார் கெர்ரி. நாம் ஜனநாயகத்தைக் கட்டமைக்க விரும்புகிறோம், அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம், அமெரிக்க உயிர்களை இந்த நிலைப்பாட்டிற்காக நிறுத்தியுள்ளோம், அந்நாட்டிற்குப் பணம் கொடுக்கிறோம், அவர்களோ இவ்வளவு வெளிப்படையாக நம் நலன்களுக்கு எதிராக உழைக்கின்றனர். என்றார்.

இக்கருத்துக்கள் அமெரிக்க ஆளும் பிரிவினரில் ஈராக்கில் அமெரிக்கப் போர், ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் இருந்து விளைந்த சங்கடத்தை ஒட்டிய கசப்புணர்வு, சீற்றம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. இவை ஒன்றும் ஜனநாயகத்தைக் கட்டமைக்கவோ, ஈராக்கிய மக்களுக்கு ஆதரவு கொடுக்கவோ நடத்தப்படவில்லை. பாரசீக வளைகுடாவில் இருக்கும் பரந்த எரிசக்தி இருப்புக்கள் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்குத்தான் நடத்தப்பட்டன.

நாட்டைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் அமெரிக்க முயற்சிகள் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஈராக்கிய உயிர்களை பலிகொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கொடூரத்தின் ஒரு பகுதி பிரித்து ஆளும் மூலோபாயத்தின் விளைவு ஆகும். அது ஷியாக்களை சுன்னிக்களுக்கு எதிராக ஒரு பயங்கர குறுங்குழுவாத உள்நாட்டுப்போரில் ஈடுபட வைத்தது.

ஷியா கட்சிகளால் முக்கியமாக ஆதிக்கம் செலுத்தப்படும் மலிக்கி ஆட்சி இப்பொழுது சிரியாவிலும் இதே வழிவகை கட்டவிழ்த்து விடப்படுகிறது என்று அஞ்சுகிறது. அங்கு வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் குறுங்குழுவாத சுன்னி கிளர்ச்சிப் படையினருக்கு அசாத்தை கவிழ்க்கும் முயற்சிக்கு ஆதரவு கொடுக்கின்றன. அசாத்தோ ஒரு மதசார்பற்ற ஆட்சிக்கு தலைமை தாங்குகிறார். அது ஷியைட் பிரிவின் ஒரு கிளையான அலவைட் சிறுபான்மையின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது.

சுன்னி இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுததாரிகளின் பயங்கரவாத தாக்குதல் பெருகியுள்ளதை ஈராக் காண்கிறது. சிரிய எல்லையில் அதன் இணைப்பாளர்கள் கொடுக்கும் ஆதரவினால் அது கூடுதல் தைரியத்தைப் பெற்றுள்ளது. அசாத் அகற்றப்படுவதும் சிரியாவில் சுன்னி ஆட்சி வருவதும் ஈராக்கிற்குள்ளேயே உள்நாட்டுப் போரை ஏற்படுத்தலாம் என்று அரசாங்கம் அஞ்சுகிறது.

சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக ஏகாதிபத்திய ஆதரவுடைய போர் பிராந்தியத்திலும் மூளலாம் என்பது சிரிய-துருக்கி எல்லையில் பெருகிய முறையில் வெளிப்படையாகிறது. அங்கு கிளர்ச்சியாளர்கள் சமீபத்திய நாட்களில் எல்லைச் சாவடிகளை தாக்கி வடக்கு சிரியாவின் கிராமப்புறப் பகுதிகள் பலவற்றில் தங்கள் கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளனர்.

அசாத் எதிர்ப்பு கிளர்ச்சியாளர்களுக்கும் சிரிய இராணுவத்திற்கும் இடையே இப்பகுதிகளில் தொடர்ந்து மோதல்கள் உள்ளன என்ற நிலையில், எல்லை கடத்தலை கட்டுப்படுத்துவது என்பது ஆயுதங்கள், பணம், வெளிநாட்டுப் போராளிகளை சிரியாவிற்குள் அனுப்புவதை வசதியாக்கும். இவை துருக்கிய, சவுதி அரேபிய, கட்டாரிய அரசாங்கங்களின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் நடாத்தப்படுகின்றன. CIA  முகவர்கள் இச்செயற்பாடுகளை மேற்பார்வையிடுகின்றனர்.

வடக்கு சிரியப் பகுதிகளில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாடு என்பது சிரிய மண்ணில் ஒரு வகை மனிதாபிமானப் பாதுகாப்புப் பகுதி அமைப்பதற்கு அரங்கை அமைக்கிறது. இதனை துருக்கிய அரசாங்கமும் ஆதரிக்கின்றது. இது இன்னும் நேரடியான ஏகாதிபத்தியத் தலையீட்டை தொடக்கும் இடமாகிவிடும்.

ஆனால் இந்த நோக்கங்களில் சிக்கலை ஏற்படுத்துவது துருக்கிக்குள்ளேயே சிரியத் தலையீடு பற்றிய நெருக்கடி ஆகும். துருக்கிய மக்கள் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகத் திரும்பிவிட்டனர் என்பதற்கான அடையாளங்கள் பெருகியுள்ளன. அரசாங்கத்தின் கொள்கைகள் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களின் கருவியாகத்தான் உதவும் என்ற பரவலான கருத்து உள்ளது.

தென்கிழக்குத் துருக்கி மாநிலமான ஹடேயின் தலைநகரான அன்டாக்யா, ஞாயிறன்று கிட்டத்தட்ட 5,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் தெருக்களுக்கு வந்து சிரியத் தலையீட்டில் துருக்கியின் பங்கு முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரியதைக் கண்டது. முஸ்லிம்கள் நண்பர்கள், எங்களுக்குப் போர் தேவையில்லை, சமாதானம் வேண்டும் என்ற கோஷங்களை முழக்கிய வண்ணம், ஆர்ப்பாட்டம் பெருகிய முறையில் எல்லை கடந்த வணிகம் முறிந்துள்ளது மற்றும் கிட்டத்தட்ட 80,000 சிரிய அகதிகள் எல்லையை ஒட்டியுள்ள முகாம்களில் இருத்தப்பட்டுள்ளது குறித்து எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 2,000 பொலிஸ் கலகப்பிரிவுப் படையினர் நகரத்திற்குள் ஆர்ப்பாட்டத்தை கண்ணீர்ப்புகை, நீர்பீச்சுதல் மூலமாகக் கலைப்பதற்குக் கொண்டுவரப்பட்டனர்.

சிரியத் தலையீட்டிற்கு துருக்கிய மக்களின் விரோதத்திற்கு எரியூட்டுவது துருக்கிய பாதுகாப்புப் படைகளுக்கும் குர்திஸ் குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியின் (PKK) பிரிவினைவாத கெரில்லாக்களுக்கும் இடையே நடக்கும் தீவிர மோதல்களும் ஆகும்.

நாட்டின் தென்கிழக்கு மலைப்பகுதி 1990களுக்குப் பின்னர் காணப்படாத மிகக் கடுமையான போர்களைக் காண்கிறது. செப்டம்பர் 18ம் திகதி இராணுவப் பிரிவு ஒன்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் 10 துருக்கிய படையினரின் இறப்பை ஏற்படுத்தியது. ஒரு கண்ணிவெடி மினிபஸ் ஒன்றைத் தகர்த்து எட்டு பொலிசாரைக் கொன்ற இரண்டு நாட்களுள் இத்தாக்குதல் வந்தது. அதற்கு முந்திய தினம் அதேபோன்ற வெடித்தாக்குதல் நான்கு படையினரை கொன்றது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அரசாங்கம் போர் ஜெட் விமானங்கள், தாக்கும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை குர்திஸ் பகுதிகளில் குண்டுவீச அனுப்பியது. பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகான் சமீபத்தில் இராணுவம் 500 குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியின் போராளிகளை பெப்ருவரி முதல் கொன்றுவிட்டதாகக் கூறினார்.

எர்டோகான் அரசாங்கம் உள்நாட்டுச் செய்தி ஊடகத்தை குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியின் போராளிகள் மீது நடத்தும் தாக்குதல் குறித்த தகவலைக் குறைக்குமாறு கூறினார் என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது. எதிர்த்தரப்பு Cumhurriyet செய்தித்தாளில் வந்துள்ள கேலிப்படம் ஒன்றை அது மேற்கோளிட்டுள்ளது. அதில் பிரதம மந்திரி ஒரு வெற்றுச் செய்தித்தாளை படிப்பதுபோலவும், செய்தியோ, ஆய்வோ ஏதும் இல்லை, இதைத்தான் நான் விரும்பினேன். என்று கூறுவது போல் காட்டப்பட்டுள்ளது.

துருக்கிக்குள் இத்தகைய உள்நாட்டுப் மோதல் சிரியத் தலையீட்டுடன் பிணைந்துள்ளது என்ற உணர்வு பரந்திருக்கிறது. அதேபோல் அங்காராவிற்கும் அதன் அண்டை நாடுகளான சிரியா, ஈராக், ஈரான் அனைத்திலுமே கணிசமான குர்திஸ் மக்கள் இருக்கும் இடங்களிலும் உறவுகள் சீர்குலைந்துள்ளன. குறிப்பாக சிரியாவில், மேற்கத்தைய ஆதரவு உடைய எழுச்சியாளர்கள் சிரிய இராணுவத்தை வடக்கில் அதிகம் மக்கள் இல்லாத இடங்களைக் கைவிடச் செய்துள்ளது. அவை குர்திஸ் போராளிகளால் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றுள் சில குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவை.

எல்லைப் பகுதியில் கிளர்ச்சியாளர் தாக்குதல் என்பது சுதந்திர சிரிய இராணுவம் (FSA) என அழைக்கப்படுவதின் பிரிவுகளை இந்த குர்திஸ் கட்டுப்பாட்டு மாவட்டங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது. இதையொட்டி ஆயுதமேந்திய மோதல்கள் ஏற்பட்டுள்ளன; இவற்றில் சுதந்திர சிரிய இராணுவம் பெரும் இழப்புகளைக் சந்தித்தது.

புதன் அன்று ஒபாமா நிர்வாகம் சிரிய மோதல் தொடர்பாக புதிய பொருளாதாரத் தடைகளைச் சுமத்தியது. இதில் லேலரஸ்ஸில் மற்றும் ஈரானில் இருக்கும் நிறுவனங்கள் இலக்கு கொள்ளப்பட்டுள்ளன. இவை அசாத் அரசாங்கத்திற்கு ஆயுதங்களையும் தொடர்புத்துறைக் கருவிகளையும் வழங்கியுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் கிளர்ச்சியாளர்களுக்கு இதே வகை விநியோகங்களைத்தான் கொடுத்து வருகின்றன.

சிரியாவின் பொருளாதாரத்தை முடக்கி அதன் இராணுவத்திற்கு வரும் பொருட்களைத் தடுக்கும் நோக்கம் கொண்ட தொடர்ச்சியான ஒருதலைப்பட்ச அமெரிக்க நடவடிக்கைகளில் இவை சமீபத்தியவைதான்.

இதற்கிடையில், தொடர்ச்சியான அறிக்கைகள் சிரியப் புரட்சியில் சுன்னி இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் மற்றும் அல் குவைதாவுடன் பிணைப்புக்கள் உடைய வெளிநாட்டுப் போராளிகளின் மேலாதிக்கப் பங்கு அதிகரித்துள்ளது குறித்து எச்சரிக்கைகள் வந்துள்ளது பற்றி உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு திங்களன்று ஓர் அறிக்கையை சிரிய அரசாங்கத்தின் அடக்குமுறையைக் கண்டித்து வெளியிட்டது. ஆனால் சிரியாவில் வெளிநாட்டு இஸ்லாமியப் போராளிகள் பெருகிய, ஆபத்தான முறையில் அதிகரித்துள்ளது குறித்தும் மேற்கோளிட்டுள்ளது. இவை அரசாங்க எதிர்ப்பு போராளிகளை இன்னும் தீவிர நிலைப்பாடுகளுக்கு தள்ளுகின்றன, இவைதான் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு என்றும் கூறியுள்ளது.

Swedish Institutite for International Affairs சிரிய உள்நாட்டுப்போர் இஸ்லாமியமயமாதல் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்போரின் குறுங்குழுவாத தன்மை ஜிகாத்திகளுக்குத்தான் நலன்களை அளிக்கும். அவர்களுடைய வகைப்பட்ட வன்முறையான சுன்னி சோவனிசத்திற்கான கோரிக்கையைத்தான் தோற்றுவிக்கும் என்று அது கூறுகிறது. மேலும், இரண்டாவது காரணி பிராந்திய அரசாங்கங்களிடம் இருந்து வரும் வெளிநாட்டு உதவி, அரசாங்கம் சாரா அமைப்புக்களில் இருந்துவரும் உதவி ஆகியவையாகும். இவை பொருத்தமில்லாத விகிதத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களுக்கு பலத்தை கொடுக்கின்றன என்றும் எழுதியுள்ளது.