சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Cyprus faces deep recession, high unemployment after bank bailout

வங்கிப் பிணை எடுப்பிற்குப்பின் சைப்ரஸ் ஆழ்ந்த மந்தநிலை, உயர் வேலையின்மைக்கு முகங்கொடுக்கிறது

By Julie Hyland
27 March 2013

use this version to print | Send feedback

ஐரோப்பிய அதிகாரிகள் அரச திவால் நிலையை தடுக்க கொடுத்துள்ள 10 பில்லியன் யூரோக்களுக்கு ஈடாக ($12.9 பில்லியன்) சுமத்தியுள்ள நிபந்தனைகளை எதிர்த்து செவ்வாயன்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் சைப்பிரஸ் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர். மத்தியதரைக்கடல் தீவு, நிதிய நெருக்கடிக்குள் ஆழ்ந்துள்ளது, இதன் உழைக்கும் மக்கள் பொருளாதாரச் சரிவு மற்றும் வறுமையை எதிர்நோக்கியுள்ளனர்.

ஏராளமான பணி நீக்கங்கள் வரும் என அஞ்சிய வங்கி ஊழியர்கள் தலைநகர் நிகோசியாவில் மத்திய வங்கியின் தலைமையகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்; பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புக்களில் இருந்து வெளியேறி ஜனாதிபதி அரண்மனைக்கு முன் கூடினர். முக்கூட்டே வீட்டிற்குத் திரும்பிச் செல், எங்கள் பணத்தைத் திருடியவர்கள், கொடுக்க வேண்டும், சிறைக்குச் செல்ல வேண்டும்என்ற கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்னும் முக்கூட்டுடன் சைப்ரஸின் அரசாங்கம் திங்களன்று ஓர் உடன்பாட்டை அடைந்தது.

அதன் விதிகளின்படி நாட்டின் நிதியத் துறை மிகப் பெரிய மறுகட்டுமானத்தை அடைய வேண்டும்; நாட்டின் இரண்டாம் பெரிய வங்கி லைக்கி மூடப்பட்டு, அதன் ஐரோப்பிய மத்திய வங்கிக்குக் கொடுக்க வேண்டிய கடன்கள் பாங்க் ஆப் சைப்ரஸிற்கு மாற்றப்பட்டன. இதைத்தவிர, சைப்ரஸ் வங்கி சேமிப்புக்கள் மீது தீர்வை திணித்து 5.8 பில்லியன் யூரோக்களை திரட்ட வேண்டும் என்னும் கட்டளையும் உள்ளது.

ஆரம்பத்தில் சைப்ரஸ் அரசாங்கம் அனைத்து வங்கிக் கணக்குகளின்மீதும், பெரியவை, சிறியவை அனைத்தின்மீதும், தீர்வு ஒன்று விதிக்க வேண்டும் எனக் கூறியது. அதன் நோக்கம் செல்வம் படைத்த சேமிப்பாளர்களைக் காக்க வேண்டும்குறிப்பாக ரஷ்ய, பிரித்தானியர்களை; அவர்கள் தீவின் வரிப் புகலிட அந்தஸ்த்தினால் ஈர்க்கப்பட்டனர்; இது அதன் நிதியத் துறையை, அதன் முழுப் பொருளாதாரத்தின் அளவைப் போல் எட்டு மடங்கு அதிகரிக்கச் செய்தது.

வங்கிச் சேமிப்புக்கள் 100,000 யூரோவிற்குக்கீழே இருப்பவற்றிற்குக் கொடுக்கப்பட்ட உத்தரவாதங்களை இத் தீர்வு முறித்தது. சீற்றம் நிறைந்த எதிர்ப்புக்களுக்கு இடையே, பாராளுமன்றம் அதற்கு எதிராக வாக்களித்தது.

செவ்வாயன்று சைப்ரஸின் மத்திய வங்கி, பாராளுமன்றத்தில் வாக்கு கூட இல்லாமல், பொதுமக்கள் கருத்தை மீறி சுமத்தியுள்ள புதிய உடன்பாட்டின்படி சைப்ரஸின் மத்திய வங்கி, பாங்க் ஆப் சைப்ரஸில் உள்ள  100,000 யூரோக்களுக்கு மேற்பட்ட சேமிப்புக்கள் மீது 40% தீர்வைச் சுமத்தியுள்ளது. இதைத்தவிர லைக்கியில் உள்ள 4.2பில்லியன் யூரோக்கள் சேமிப்பு அழிக்கப்பட்டுவிட்டது. இத்துடன் மூலதனக் கட்டுப்பாடுகளும் வரவிருக்கின்றன; அதில் பணம் திரும்பப் பெறுவதில் வாராந்திரக் கட்டுப்பாடுகளும், யூரோக்கள் ஏற்றுமதிக்கு தடையும் உள்ளன.

திங்கள் மாலை தொலைக்காட்சியில் பேசிய ஜனாதிபதி நிகோஸ் அனஸ்டாசியடெஸ் இந்த உடன்பாடுஅரசு திவால் ஆவதைத் தவிர்த்துள்ளதுஎன்று கூறி இதையொட்டி நாடுஇயல்பான நிலைக்குத் திரும்பும்என்றார்.

சைப்ரஸ் திவால் என்னும் ஆபத்து நிச்சயமாக பின் சென்றுவிட்டது, பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு வந்திருக்க கூடிய பெரும் துன்பம் தவிர்க்கப்பட்டுவிட்டதுஎன்றார் அவர்.

உண்மையில் மறுகட்டுமான திட்டம் வங்கித்துறையில் ஆயிரக்கணக்கான வேலைகள் இழப்பு, தனியார்மயமாக்கல், கிரேக்கத்தை பேரழிவிற்கு உட்படுத்திய நடவடிக்கைகளுக்கு சமமாக இருக்கும் கடுமையான சிக்கனம் ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது.

பிபிசி இன் ராபேர்ட் பெஸ்டன் கருத்துப்படி, சைப்ரஸை மீட்பது அதன் மக்களுக்கு அவ்வாறு தோன்றாது.” “ஒரு பொருளாதாரம் கடன் கிடைக்காமல் அவதியுற்றதைப்போல் இருந்தது, எனவே விரைவில் அதன் குடிமக்களுக்கு பெரும் வேதனை தரும் வகையில் சுருங்கிவிடும், கடல் கடந்த வங்கிமுறை என்னும் முக்கிய தொழில்துறை மூடப்படுகிறது.

Fitch கடன் தரம் அளிக்கும் நிறுவனம் சைப்ரஸைஎதிர்மறைத் தோற்றம்என வைத்துள்ளது; சைப்ரஸின் வங்கி முறை தோல்வியின் அதிர்ச்சி தரும் விளைவு உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஆழ்ந்த எதிர்மறையான தாக்கங்களை கொடுக்கும்; பொது நிதியங்களுக்கு இடர்களை உயர்த்தும்என்று கூறியுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 20% சுருக்கம் அடையும் என்று பகுப்பாய்வாளர்கள் கணித்துள்ளனர். தற்பொழுது 14% என இருக்கும் வேலையின்மை மக்களில் கால் பகுதிக்கும் மேலானவர்கள் என விரிவடையும் என்று கணிக்கப்படுகிறது.

சைப்ரஸின் பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவரான நிக்கோலஸ் பாப்பாடோபோலௌஸ்,நாம் ஆழ்ந்த மந்த நிலை, உயர் வேலையின்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என அப்பட்டமாக ஒப்புக் கொண்டார்.

முழுக் கண்டத்தையும் நிதிய மூலதனத்தின் சார்பில் ஒரு சிக்கன மண்டலமாக மாற்றியுள்ள ஐரோப்பிய முதலாளித்துவம் இப்பொழுது மற்றொரு பாதுகாப்பற்ற நாட்டைக் கொள்ளையடிக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியம், சைப்ரசில் இன்னும் அதிக வங்கிச் சேமிப்புக்களில் இலக்கு வைக்க தயாராக இருந்தது; ஏனெனில் இது முக்கியமாக நடுத்தர சேமிப்பாளர்களை பாதிப்பதோடு, தீவின்மீது உள்ள ரஷ்ய செல்வாக்கையும் வலுவிழக்கச் செய்யும். சைப்ரஸில் இருந்து ரஷ்ய முதலீட்டாளர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டால், ஐரோப்பாவின் முக்கிய வங்கிகளும் அவர்களை நாடும் வாய்ப்பு வரும் என நினைத்தனர்.

எனவேதான் நிதியச் சந்தைகள், திங்கள் உடன்பாடு பற்றிய தகவல் கிடைத்தவுடன் முதலில் உயர்வு அடைந்தன. ஆனால் வங்கித் தீர்வுகள் யூரோப்பகுதிக்கு ஒரு இடையூறு ஆகலாம் என்ற கவலை படர்ந்த உடன் பின்னோக்கித் திரும்பியது.

யூரோ குழு தலைவர் ஜேரோன் ஜேசெல்ப்ளூமுடைய அறிக்கையில், அவர் சைப்ரஸ் வங்கிப்பிணை எடுப்பு வருங்காலத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று கூறியதை தொடர்ந்து ஏற்பட்டது. அவருடைய கருத்துக்கள் சர்வதேச சந்தைகளை அதிர வைத்ததால், ஜேசெல்ப்ளூம் கருத்தில் இருந்து பின்வாங்க முயன்று, சைப்ரஸ்அசாதாரண சவால்கள் கொண்ட குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்என்று கூறினார்.

ஆயினும்கூட சைப்ரியட்டின் வங்கிகள், பங்குச் சந்தைகள் திறப்பது இன்னும் குறைந்தப்பட்சம் 2 நாட்களுக்கு, மார்ச் 28 வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளன.

வங்கி வைப்பு பணத்தைப் பறித்து பிணையெடுப்பு நிதிகளுக்கு அளிப்பது என்பது ஐரோப்பாவில் ஒரு புதிய, ஒருவேளை உறுதிகுலைக்கும் முன்னோடியாகலாம்என்று ஸ்ட்ராட்போர் புகார் கூறியுள்ளது.

வைப்பு பணத்தை பறிப்பது, மூலதனத்தின் சுதந்திர இயக்கத்தை மட்டுப்படுத்தல் என்பதின் பொருள் ஐரோப்பிய ஒன்றியம்அதை உத்தியோகபூர்வ கொள்கை எனச் செய்துள்ளது; சில சூழ்நிலையில் உறுப்பு நாடுகள் சேமிப்பாளர்களின் சொத்துக்களை எடுத்துக் கொண்டு நிதியநிறுவனங்களை உறுதிப்படுத்த ஊக்கமும் கொடுக்கிறது.

நிகோசியாவில் ரஷ்ய சேமிப்புக்கள் பறித்தெடுக்கப்படலாம் என்றால், ஏன் லுக்சம்பேர்க்கில் இருக்கும் அமெரிக்க சேமிப்புக்களை பறித்தெடுக்கக்கூடாது?என அது கேட்டுள்ளது.

இத்தகைய அச்சங்கள் ஸ்பெயின் அரசாங்கம் ஐந்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 50% வரை இழப்புக்களை முதலீட்டாளர்கள் மீது சுமத்தக்கூடும் என்ற தகவல்களால் வலுவுற்றுள்ளன. இதைத்தவிர, ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் செவ்வாயன்று பெரிய காப்பீடு அற்ற சேமிப்பாளர்கள் வருங்கால வங்கி மீட்புகளில்பணயம் ஆகலாம், இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவரைவு தயாராகிறது என்று கூறினார்.

பல ரஷ்ய நிதியப்பிரபுக்களும், தன்னலக்குழுப் பிரபுக்களும் அறிக்கைகளை வெளியிட்டு சைப்ரசில் செல்வம் படைத்த முதலீட்டாளர்கள் பிணை எடுப்பினால் பாதிக்கப்பட மாட்டார்கள்இதில் முக்கியமாக நடுத்தர முதலீட்டாளர்களும் சைப்ரிய மக்களும்தான் பாதிக்கப்படுவர் என்று கூறியுள்ளனர்.

மாஸ்கோவில் உள்ள அர்பாட் முதலீட்டுப் பணிகள் நிறுவனத்தின் அலெக்சாந்தர் ஓர்லோவ், சைப்ரியாத் தீர்வின் உண்மையான பாதிப்பாளர்கள், முடிவெடுக்கும் கருவிகளின் உயர்மட்டத்தில் இல்லைஎன்றார்.

20 பில்லியன் யூரோக்கள்பெரும்பாலும் ரஷ்ய பணம்ஏற்கனவே சைப்ரஸ் வங்கிகளால் கடந்த ஆண்டு திரும்பப் பெறப்பட்டுவிட்டன என்ற ஓர்லோவ், முன்பு அரசாங்கம் கடனாக அளித்த 2.5 பில்லியன் யூரோக்கள் எவருக்குப்பொருந்துமோ அவர்களுக்கு தங்கள் பணத்தை எடுத்துக் கொள்ள அவகாசம் கொடுத்திருக்கலாம்என்றார்.

பெரும் செல்வந்தர்கள்மீது மூதலனக் கட்டுப்பாடுகளின் திறைமை குறித்துப் பேசுகையில், இண்டிபென்டென்ட் மற்றும் லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்டின் உரிமையாளர், சில திட்டங்கள் செயல்படுத்தப்படலாம்... இப்படித்தான் சைப்ரஸ் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்ததுஎன்றார்.

சைப்ரஸ் ஒரு நிதிசெல்லும்பாதையில் அதிகார வரம்பை, லிதுவேனியா, லாட்வியா, பெலைஸ், ஸ்விட்சர்லாந்து, எல்லா இடங்களிலும் கொண்டிருந்ததுஎன்ற அவர்பல வழிகள் [மூலதனக்கட்டுப்பாடுகளைத் தவிர்க்க] உள்ளன என்றும் அவர்கள் கணக்குகளை பிரித்துக் கொள்வர்என்றும் கூறினார்.

இதற்கிடையில் பிரித்தானியாவின் சான்ஸ்லர் ஜோர்ஜ் ஓஸ்போர்ன் தான் தீவிற்கு 13 மில்லியன் யூரோக்களை அனுப்பு ஒப்புதல் கொடுத்துள்ளதாகவும், இது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆயுதப்படைகளுக்கு நெருக்கடி நிதியாகஇருக்கும் என்றும் கருவூலம் சைப்ரிய அதிகாரிகளுடன் இணைந்து லைக்கியின் பிரித்தானிய கிளைகளில் இருக்கும் வாடிக்கையாளர்களைசைப்ரஸ் தீர்மான வழிவகையில் அகப்பட்டுவிடாமல்காப்பாற்றச் செயல்பட்டு வருவதாகவும்கூறினார்.