சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French President Hollande pledges austerity, war in prime time TV interview

பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் சிக்கனம் மற்றும் போருக்கு தொலைக் காட்சி முக்கியநேரப் பேட்டியில் உறுதிமொழி அளிக்கிறார்

By Alex Lantier
29 March 2013

use this version to print | Send feedback

பிரான்ஸ் 2 தொலைக் காட்சியில் நேற்றிரவு ஒரு மணி நேரம் கொடுத்த பேட்டியில், பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் அவருடைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் சீற்றம் பெருகியுள்ள நிலையில் அவருடைய கொள்கைகளை அடிக்கோடிட்டுக் காட்ட முற்பட்டார்.

ஹாலண்ட் உடைய பேட்டி, தன்னுடைய சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் அதன் போர்களையும் சமூநலச் செலவு வெட்டுக்களையும் மக்கள் கருத்துக்களை மீறித் தொடரும் என்று ஆளும் வர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது.

10 மாதங்களுக்கு முன் பதவிக்கு வந்ததில் இருந்து, ஹாலண்ட் பல பில்லியன் யூரோக்களை வரவு-செலவு திட்ட வெட்டுக்களிலும், கார்த்தொழிலில் பரந்த பணிநீக்கங்களையும் சுமத்தியுள்ளார், இதில் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் இசைவுடன் ஒல்நே ஆலை சமீபத்தில் மூட உடன்பட்டதும், மாலிப் படையெடுப்பும் அடங்கும். பிரான்சின் பொருளாதாரம் தேக்கநிலையில் உள்ளதோடு வேலையின்மை 10% ஐயும் கடந்து விட்டது.

ஹாலண்டிற்கு ஆதரவுக் கணிப்புக்கள் 30% எனக் குறைந்துவிட்டன, அத்தகைய கணிப்புக்கள் ஆரம்பித்ததில் இருந்து பிரெஞ்சு ஜனாதிபதிகளுக்கு கிடைத்ததில் இது மிகவும் குறைவானது ஆகும், ஏனெனில் ஹாலண்ட் PS வாக்காளர்களிடையே கூட ஆதரவை இழக்கிறார். 30% இளைஞர்களும் 32% கை உழைப்பு தொழிலாளர்களும்தான் அவருடைய நிர்வாகத்திற்கு இப்பொழுது ஒப்புதல் கொடுக்கின்றனர்.

ஹாலண்டின் உரையை செய்தி ஊடகத்துடன் விவாதிக்கும் PS அதிகாரிகள் நிலைமையை “அவ்வளவு நன்றாக இல்லை” என விவரித்தனர். ஹாலண்டின் ஒரு ஆலோசகர் Le Monde இடம் “நிலைமை பற்றி ஒரு தெளிவான பார்வையை அவர் கொடுக்க வேண்டும்; அதே நேரத்தில் அனைத்தும் தவறாக உள்ளன என்ற உணர்வைத் தவிர்க்கவும் முற்பட வேண்டும்.”

ஹாலண்ட் பிரான்ஸ் 2 பேட்டியில், ஓய்வூதியங்கள், சமூகநலத் திட்டங்களில் கூடுதல் தாக்குதல்கள் பற்றிக் குறிப்புக் காட்டினார், மாலி, சிரியப் போர்கள் விரிவடையும் என்றார். அத்துடன் இணைந்தவகையில் தொழிலாள வர்க்கத்தை பிரிக்கும் நோக்கத்தை கொண்ட முஸ்லிம்களின் ஜனாநாயக உரிமைகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மீதான தாக்குதல்களும் இருந்தன.

“என்னுடைய முன்னுரிமை வேலைகள், நான் செல்லும் திசை, வளர்ச்சி பற்றியது ஆகும்; தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதில் முதலாளிகள் முகங்கொடுக்கும் விதிகள் “எளிமைப்படுத்தப்பட வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்தார். தொழிலாளர் சட்டங்கள், கடந்த ஆண்டு உடன்பாட்டின்படி கட்டுப்பாட்டில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதற்கு பாராட்டுத் தெரிவித்தார், அது பணிநீக்கம், குறைவூதிய வேலை ஆகியவற்றிற்கு வசதியளித்தது.

அவருடைய பேச்சு பெரிதும் பொருளாதாரம் பற்றிக் குவிப்புக் காட்டினாலும், அவர் இந்த மாதம் ஐரோப்பிய பொருளாதார வாழ்வின் முக்கிய நிகழ்வான, ஹாலண்ட் அரசாங்கத்தின் ஆதரவுடன் சைப்ரஸ் மீது ஐரோப்பிய ஒன்றியம் சுமத்தியுள்ள பிணை எடுப்பு பற்றி ஏதும் கூறவில்லை. இதற்குக் காரணம் சைப்ரஸ் பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் நேர்மையான சித்தரிப்பு எதுவும் ஐரோப்பிய முதலாளித்துவம் வேலைகள், பொருளாதார வளர்ச்சிகள் தேவை என்பதின் பொய்யை வெடிக்கச் செய்துவிடும். உண்மையில் அவர்களுடைய கொள்கை நிதிய மூலதனத்தின் போட்டியிடும் பிரிவுகளிடையே இரக்கமற்ற வகையில் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை தீவிரப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது.

ஐரோப்பிய ஒன்றியம் சைப்ரஸின் வங்கித் துறையில் வெட்டு எனப் பரந்த முறையில் எதிர்பார்க்கப்படும் பிணை எடுப்பைச் சுமத்துகிறது: இது வேலையின்மையை இருமடங்காக்கும், தீவின் பொருளாதாரத்தை 10 முதல் 25% வரை அழித்துவிடும்.

தன்னுடைய பேட்டியில் ஹாலண்ட் பிரான்சில் நிறைய சமூகநல வெட்டுக்களை கோடிட்டுக் காட்டினார், இவை தொழிலாளர்களின் வாங்கு சக்தியை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்பதுடன் பரந்த பொருளாதாரத் திறனையும் குறைத்துவிடும்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட புதிய ஓய்வூதிய வெட்டுக்கள் குறித்தும் ஹாலண்ட் அடையாளம் காட்டினார். “நீண்டநாள் நம் வாழ்நாள் எதிர்பார்ப்பும் அதிகரிக்கின்றன. அப்படியானால் அதிக காலம் வருமானத்திற்கு உழைப்பதும் தேவையாகிறது. இது சமூகப் பங்காளிகளுடன் (அதாது தொழிற்சங்கங்கள், வணிகக் குழுக்களுடன் பேச்சுக்களில் முக்கிய இடம் பெறும்). ... இதன் அளவுத்தன்மைகள் குறித்தும், அனைத்து அளவுத்தன்மைகள் பற்றியும், கொடுக்கப்பட்ட பணங்கள், வாழ்க்கைச் செலவு சரி செய்யப்பட்டவை மற்றும் வருமானத்திற்கு உழைக்கும் காலத்தை நீட்டித்தல் ஆகியவை பற்றியும் விவாதம் இருக்கும்.”

அதிக வருமானமுடைய குடும்பங்களுக்கு செலுத்திய பணத்தை குறைத்தல் மூலம், குடும்பங்களுக்கு சமூகப் பாதுகாப்பு நிதி அளிப்பதில் 2 பில்லியன் யூரோக்களை வெட்டுவது குறித்தும் அவர் கருத்தை முன்வைத்தார். ஆளும் வர்க்கத்தை பொறுத்தவரை இத்திட்டங்களை, வறுமைத் திட்டங்களாக நோக்கி திருப்புவதில் இது ஒரு படியாகும்; இது மத்தியதர வர்க்கங்களில் அதன் ஆதரவைக் குறைக்கும், முழு அழிப்பிற்கும் வழி செய்யும்.

இத்தகைய அறிவிப்புக்கள் PS அரசாங்கத்தின் பிற்போக்குத்தன தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அதேபோல் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) -அதாவது போலி இடது போக்குகள் வாக்காளர்கள் மீது நடத்திய மோசடியை- தன்மையையும் அம்பலப்படுத்துகிறது. அவைதான் ஹாலண்டிற்கு வாக்களிக்குமாறு கோரின. கன்சர்வேடிவ் வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில், ஹாலண்ட் தெரு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு வேலைநிறுத்தம் மூலம் கோரப்படும் இடது சாரிக் கொள்கைகளை செயல்படுத்த ஆர்வம் காட்டுவார் என இச்சக்திகள் கூறின.

உண்மையில், ஹாலண்ட் உறுதியான முறையில் பெரு வணிகத்தின் நலன்களுக்காக, தொழிலாள வர்க்கத்தின் அடிப்படைப் பொருளாதார நலன்களுக்கு எதிராக சிக்கனக் கொள்கைகளை தொடர்கிறார். போலி இடது சக்திகளை பொறுத்தவரை, அவை ஹாலண்டின் சமூகத் தாக்குதல்களுக்கு எதிராக எதிர்ப்புக்களைக்கூட அமைக்க முயலவில்லை. உண்மையில் அவை அவற்றிற்கு ஆதரவு கொடுப்பதுடன் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினூடாக இத்தாக்குதல்கள் இயற்றப்படவும் உதவுகின்றன.

ஹாலண்ட் பேச்சின் மற்ற பகுதிகள், ஜனநாயக உரிமைகளை தாக்குவது, தீவிரப்படுத்துவது மற்றும் பிரான்சின் ஆபிரிக்கா, மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய போர்கள் பற்றியும் இருந்தது.

பிரான்சிற்குள் உள்ள முஸ்லிம்கள் மீது இன்னும் கூடுதல் தாக்குதல்களுக்கும் ஹாலண்ட் அடையாளம் காட்டினார், உட்குறிப்பாக ஒரு நீதிமன்றத் தீர்ப்பு, குழந்தை பாதுகாப்பு மையத்தில் ஒரு தொழிலாளரை முஸ்லிம் தலையங்கி அணிந்ததற்காக பணிநீக்கம் செய்ததை ஏற்காதது குறித்துக் குறைகூறிய வகையில். “சட்டம் தலையிட வேண்டும் என நான் நினைக்கிறேன்.” என்றார் அவர்.

2004 பிற்போக்குத்தன சட்டம் பொதுப்பள்ளிகளில் தலையங்கிகளை அணிவதை தடை செய்வது, குழந்தை பாதுகாப்பு மையங்களுக்கும் விரிவாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். “குழந்தை பருவ பொது சேவை எனப்படுவதும், பொதுச் செலவில் இருக்கும் குழந்தை பாதுகாப்பு மையங்கள்; இவற்றில் பள்ளிகளில் இருப்பது போன்ற ஒரே தன்மைதான் இருக்க வேண்டும்.”

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு உரிமை கொடுக்கும் அவர் முன்வைக்கும் சட்டம் பற்றிய வலதுசாரி எதிர்ப்புக்களுக்கு இடையே, ஹாலண்ட் வலது கருத்தை கோழைத்தனமாக ஏற்பதையும் அடையாளம் காட்டினார். அவருடைய சட்டவரைவு மருத்துவ உதவியுடன் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு வம்சவிருத்தி உரிமையை உத்தரவாதம் அளிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், அதற்கு எதிரான எந்த நீதிமன்றத் தீர்ப்பிற்கும் தான் உட்படுவதாகக் கூறினார்; மேலும் தான் பதவியில் இருக்கும் வரை வாடகை தாய்கள் மீது தடையையும் தக்க வைப்பதாக உறுதியளித்தார்.

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் வெளிநாட்டு போர்களைத் தொடர்வதாகவும் ஹாலண்ட் உறுதியளித்தார். செலவுக்குறைப்புக்கள் இப்போர்களைப் பாதிக்கும் என்னும் ஆளும் வட்டங்களின் அச்சங்களை முகங்கொடுக்கையில், அவர் 2013 ல் இருந்து 2014 ல் இராணுவச் செலவு ஒன்றும் குறைந்துவிடாது என்றார்.

இதற்கு முதல்நாள், பிரதம மந்திரி Marc Ayrault, பிரான்ஸ் தன் அணுவாயுத மற்றும் வெளிநாடுகளில் தலையிடும் திறனை பராமரித்துக் கொள்ளும் என்றார். “தீவிரமாக ஆராயப்படாத பேரழிவு காட்சிகள் வருமோ என பயப்படுவதை நாம் நிறுத்திக் கொள்ளுவோம்; குறிப்பாக குடியரசின் ஜனாதிபதி, நான், பாதுகாப்பு மந்திரி ஆகியோர் தீவிரமாக ஆராயவில்லையோ என நினைக்க வேண்டாம்.... மாலியில் பிரான்ஸ் செய்வது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அதை அது செய்ய முடியும்.” என்றார் அவர்.

மாலிப் போர் பற்றிப் பேசுகையில், பிரான்ஸ் “மீட்பு மற்றும் விடுதலை அடைவிக்கும்” நாடு என்று இழிந்த முறையில் கூறிய ஹாலண்ட், சகேலில் காலவரையற்ற புதிய காலனித்துவ தலையீட்டுக் கொள்கையை கோடிட்டுக் காட்டினார். பிரெஞ்சுப் படை மாலியில் 2,000 துருப்புக்களை ஜூலை வரையில் வைத்திருக்கும்; டிசம்பரில் மாலியில் இன்னும் 1,000 துருப்புக்கள் இருக்கும் என்றார். மாலியைச் சுற்றி பிரான்ஸ் எப்பொழுதும் துருப்புக்களை நிலைநிறுத்தும் என்றார் அவர்.

சிரியாவைப் பற்றிக் கூறுகையில், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிரான அமெரிக்க தலைமையில் நடக்கும் பினாமி போரில் ஐரோப்பிய உந்துதல் நாடுகளில் பிரான்ஸும் ஒன்றாகும் என்ற ஹாலண்ட், எதிர் சக்திகளுக்கு நேரடியாக ஆயுதம் கொடுக்க வேண்டும் என்னும் கோரிக்கைகளை வலியுறுத்தினார். சிரிய எதிர்ப்பு, பெரும்பாலும் அல்குவேடா தொடர்புடைய குழுக்களான அல்நுஸ்ரா முன்னணி மற்றும் பிற வலதுசாரி இஸ்லாமிய சக்திகளைக் கொண்டிருந்தாலும், ஆயுதங்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளை அடையும் என்ற ஆபத்தை ஹாலண்ட் உதறித்தள்ளினார்.