சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The European Union’s looting of Cyprus

ஐரோப்பிய ஒன்றியம் சைப்ரஸைக் கொள்ளயடிக்கிறது

Julie Hyland
29 March 2013

use this version to print | Send feedback

ஐரோப்பிய ஒன்றியம் சைப்ரஸ் மீது சுமத்தியுள்ள பிணை எடுப்பு, நாட்டின் வங்கிகளை அழித்து தொழிலாள வர்க்கத்தை வறிய நிலைக்குத் தள்ளும் நோக்கத்தைக் கொண்ட அரசியல் ரீதியாக குற்றவியல் நிதி சூறையாடல் கொள்ளை ஆகும்.

அரச திவாலைத் தவிர்த்தல் என்னும் பெயரில் ஒரு மில்லியன் மக்கள் வாழும் ஒரு சிறிய மத்தியதரைக்கடல் தீவு ஏற்கனவே கிரேக்கத்தின் மீது திணிக்கப்பட்ட அதிர்ச்சி வைத்திய முறையை போன்றதற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

10 பில்லியன் யூரோக்கள் கடன் என்று ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியின் ஆணையின் பேரில் வழங்கப்படுவதின் விதிகளில் லைக்கி வங்கிசைப்ரஸின் இரண்டாவது மிகப் பெரிய வங்கிமூடப்படவேண்டும் என்பதும் அடங்கியுள்ளது; இதன் கடன்கள் ஐரோப்பிய மத்திய வங்கிக்குக் கொடுக்க வேண்டியவை சைப்ரஸ் மத்திய வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளன; அதுவும் முக்கிய மறுகட்டமைப்பை எதிர்நோக்குகிறது. இன்னும் 5.8 பில்லியன் யூரோக்கள் 40% அதற்கும் கூடுதலாக 100,000 யூரோக்களுக்கு மேலாக வங்கிச் சேமிப்புக்களை வைத்திருப்போர் மற்றும் பத்திரங்கள் வைத்திருப்போர் மீது கடுமையான அபராதங்கள் விதிப்பதின் மூலம் திரட்டப்படும்.

அவசரகால மூலதனக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன; இதில் வெளிநாட்டுக்கு மாற்றுதல் தடுக்கப்படுதல், பணம் திரும்பப் பெறுவதில் 300 யூரோக்கள் வரம்பு, நாட்டை விட்டு எவரும் 1,000 யூரோக்களுக்கு மேல் வங்கிப் பணமாக எடுத்துச் செல்வதற்குத் தடை ஆகியவை அடங்கும். பிரித்தானிய பாதுகாப்பு நிறுவனம் G4S தீவின் வங்கிகளை பாதுகாக்கிறது: இது 12 நாட்களுக்குப் பின் நேற்று அவை இறுதியாக திறக்கப்பட்டபோது “அமைதியை” உறுதிப்படுத்துவதற்காகும்.

இந்த நடவடிக்கைகள், ஜேர்மனிய சான்ஸ்லர் வலியுறுத்தியுள்ள சைப்ரஸ் “அதன் தற்போதைய வணிக மாதிரி மடிந்துவிட்டது” என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்கு இயைந்து உள்ளன. நாட்டின் நிதியத்துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல் 8 மடங்காக இருத்தல் என்பது பொருளாதாரச் சரிவைக் குறிக்கிறது.

சைப்ரஸ் அரசாங்கம் அதன் திட்டமான 6.7 சதவிகித வசூலிப்பை வங்கிச் சேமிப்புக்கள் 100,000 யூரோக்களுக்கு கீழ் இருப்பதின் மேல் சுமத்துவதில் இருந்து பின்வாங்க நேர்ந்தது என்னும் உண்மையைச் சிறிதும் குறைக்கவில்லை. இவ்வகையில் காப்பாற்றப்பட்டதாகக் கருதப்பட்டவர்கள் வேறுவகையில் திணறடிக்கப்படுவார்கள்.

ஐரோப்பிய ஒன்றியச் சிக்கன நடவடிக்கைகள், முந்தைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டதை ஒட்டி ஏற்பட்ட வேலையின்மை இப்பொழுது 15% என்று உள்ளது; தற்போதைய நெருக்கடிக்கும் முன்பு இது அறக்கட்டளைகளின் உணவு வங்கிகளை பாப்ஹோஸ், லிமசோல் மற்றும் நிகோசியாவில் திறக்க வகை செய்துவிட்டது.

இது, நிலைமையை வியத்தகு அளவில் மோசமாக்கும். “நிகோசியா இப்பொழுது சாதாரண யூரோப் பகுதி மீட்சி நிலைகளை எதிர்கொள்கிறது – தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்கள், நிதியக் கட்டுப்பாடு, தனியார்மயமாக்கல்கள். ஓய்வூதிய மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு சீர்திருத்தம்” என்று மேற்கொள்வதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் திருப்தியுடன் குறிப்பிட்டுள்ளது.

கிரேக்கம், அயர்லாந்து, ஸ்பெயின் மற்றவற்றின் ஐரோப்பிய ஒன்றிய பிணை எடுப்புபோல் இல்லாமல், செய்தி ஊடகம் வெளிப்படையாகவே ஐரோப்பிய ஒன்றியம் சைப்ரஸுக்கு கொடுத்துள்ள மருந்து, நோயாளியையே கொல்லும் என்று ஒப்புக்கொண்டுள்ளது. எங்கெல்லாம் சிக்கனமும் ஊதிய வெட்டுக்களும், பொருளாதாரத்தை மீட்கும் என்ற பொய் தொடர்ந்து கூறப்படுகிறது.

இந்தக் கடன், பரந்த வேலை இழப்புக்கள், ஊதிய வெட்டுக்கள், சுகாதாரம், கல்வி மற்றும் சமூகநலச் செலவுகள் ஆகியவை அகற்றப்படுதல், முக்கிய பணிகளைத் தனியார்மயமாக்குதல், தீவின் இயற்கையான மற்றும் எரிசக்தி ஆதாரங்கள் உலக அளவிலான பெரிய எரிசக்தி நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படல் ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது.

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 25% சரியும், வேலையின்மை இருமடங்கு அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. யூரோப் பகுதி முழுவதும் ஒரு மந்த நிலையில் மூழ்கும்; அதுவும் சைப்ரஸில் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் விரிவாகும். இவற்றின் விளைவு சமூக மற்றும் பொருளாதாரப் பேரழிவு ஆகும்.

சைப்ரியட் மக்களை பைனான்சியல் டைம்ஸ் குறைகூறி எழுதியுள்ளது: “... பொருளாதாரத்தை கடல் கடந்த வங்கிக்கு மாற்றுதல் என்பது தலைவர்கள் உடைய உடந்தை மற்றும் தன் சக்திக்கு மீறி வாழும் மக்கள் உடன்பாட்டின் பேரிலும் செயல்படுத்தப்பட்டது.”

ஏதோ சைப்ரசில் இருக்கும் தொழிலாளர்கள் தீவு ஒரு வங்கித்துறை மையமாக விளங்க வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டதுபோல்.

உண்மையில், நிதியத் தன்னலக்குழு எல்லா இடங்களிலும் பொருட்படுத்தா தன்மையுடன் செயல்படுகிறது; அரசாங்கத்தின் கொள்கைகளை தன் நலனுக்கு ஏற்ப ஆணையிடுகிறது. இதன் விளைவு எல்லா இடங்களிலும் ஒட்டுண்ணித்தனம் மற்றும் பெரும் ஊழல்களும்தான். சமீபத்தில் லைபர் விகிதத் திரித்தல் பற்றிய ஊழல்களில், HSBC இன்னும் பிற வங்கிகள் போதைப்பொருள் நிதியை பணச்சலவை செய்தது, பரந்த முறையில் JPMorgan Chase மோசடி என்று (பலவற்றுள் சில மட்டுமே)
இது உச்சக்கட்டத்தைக் காண்கிறது.

பேர்லின், பாரிஸ், லண்டன் மற்றும் பிரஸ்ஸல்ஸிலிருந்து சைப்ரியட் “பிணை எடுப்பிற்கு” –ரஷ்யாவின் தன்னலக் குழுக்கள், வரி ஏய்ப்பவர்களை இலக்கு கொண்டிருப்பதாகக் கூறப்படும் இழிந்த பிரச்சாரத்தை, நிலைமை மாறும், ஏன் ஒரு வகை சொத்து அபகரிப்பு எனக் கூறப்படுவதையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும்.

ஜேர்மனியின் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க ஆதரவுடன் சைப்ரஸ் நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தி ஒரு நலிந்த போட்டியாளரை அழிக்கவும் உலக நிதியச் சந்தைகளில் தங்கள் கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்கவும் செயல்படுகிறது. ரஷ்ய தன்னலக் குழுக்கள் மற்றும் வரி ஏய்ப்பவர்கள், பிணை எடுப்பு நெருக்கடி தாக்குவதற்கு முந்தைய வாரங்களில் சைப்பிரஸில் இருந்து தங்கள் பணத்தை மாற்றி நலன்களை பெறுபவரிடம் ஐரோப்பிய, அமெரிக்க வங்கிகள் பயனடைய விரும்புகின்றன.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகரப் போராட்டம்தான் சைப்ரஸ், ஐரோப்பா, உலகப் பொருளாதாரத்தை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் போராடுவதின் மூலம்தான்— நிதியப் பிரபுத்துவம் அபகரிக்கப்பட முடியும். முக்கிய ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் முன்பு சைப்ரிய வங்கிகளில் வைத்திருந்த பணத்தை அபகரிக்கும் நடவடிக்கைகள் மிகச்சக்தி வாய்ந்த நிதிய மூலதனத்தின் மிகச் சக்தி வாய்ந்த பிரிவுகளின் நலன்களுக்காக அதிகம் மறைக்கப்படாத திருட்டிற்குத்தான் ஒப்பாகும்.

ஜேர்மனியின் Süddeutsche Zeitung அப்பட்டமாக ஒப்புக்கொண்டது போல், “யூரோப் பகுதி நீண்டகாலமாக, ஒன்றுக்கொன்று உறுதியளிக்கும் பெருகிய வளம் மற்றும் சகோதரத்துவ நிலைப்பாட்டை நிறுத்திவிட்டது. இது தன்னைத் தான் தப்பிப் பிழைக்க தேவைக்காக ஒவ்வொருவரும் மல்யுத்தவீரர் போல் சண்டை போடும் நிலைக்கு மாற்றிக் கொண்டுவிட்டது.”

ஐரோப்பாவில் நடக்கும் காட்டுமிராண்டித்தன தாக்குதலை, ஒரு தேசிய தளத்தில் தோற்கடிக்கப்பட முடியாது. கிரேக்கம், இத்தாலி இன்னும் பல இடங்களில் இருப்பதுபோல், சைப்ரசின் முதலாளித்துவமும் முற்றிலும் பிற்போக்குத்தனப் பங்கைத்தான் முழுமையாக செய்துள்ளது. முக்கூட்டின் திட்டங்களுக்கு இதன் மாற்றீடு ஓய்வூதிய நிதிகள், சிறு சேமிப்பாளர்களின் நிதிகளைத் திருடி பெரும் செல்வந்தர்களை காத்தல், தீவின் வரிப்புகலிட அந்தஸ்த்தை காத்தல் என்றுதான் உள்ளது.

இந்நிகழ்வுகள் உலகைப் பற்றியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஜனநாயக, மனிதத்தன்மை உடைய, முற்போக்கான தீர்வு என்பது முதலாளித்துவத்தின் கீழ் உறுதியாக முடியாது என்பதை அடிக்கோடிட்டு தெளிவாக்குகின்றன.

சைப்ரஸில் சுமத்தப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு, கொள்கையளவில் தேவையான எதிர்ப்பு தொழிலாள வர்க்கத்தின் நலன்களை தளமாகக் கொண்டிருக்க வேண்டுமே ஒழிய, போரிடும் ஏகாதிபத்தியக் கொள்ளைக் குழுக்கள் எவற்றின் நலனுக்காகவும் அல்ல. முதலாளித்துவம் தன் வர்க்க நலன்களை சுமத்த சர்வதேச வடிவமைப்புக்களை கொண்டிருப்பது போல், தொழிலாள வர்க்கமும் தன் வடிவமைப்பை வளர்த்தல் வேண்டும்.

இதன் பொருள் ஐக்கிய சோசலிச ஐரோப்பிய அரசுகளுக்காக போராட வேண்டும் என்பதுதான். கண்டம் முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட புரட்சிகர தாக்குதல், மற்றும் முழு முதலாளித்துவத்தின் செல்வத்தையும் பறித்தல் ஆகியவற்றின் மூலம்தான் ஐரோப்பிய பொருளாதாரம் அழிவதை தடுத்து நிறுத்த முடியும்.