சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain: Conservatives and Labour step up witch-hunt against immigrants

பிரித்தானியா: கன்சர்வேட்டிவ்களும் தொழிற் கட்சியினரும் குடியேறுவோருக்கு எதிரான சூனிய வேட்டையை முடுக்கிவிடுகின்றனர்.

By Paul Mitchell
1 April 2013

use this version to print | Send feedback

கடந்த வாரம் ஐக்கிய இராச்சியத்தின் பிரதம மந்திரியான டேவிட் காமெரோன் குடியேற்றம் குறித்து ஒரு முக்கிய உரை நிகழ்த்தி, பிரித்தானிய அரசியலில் சமீபத்தில் ஆதிக்கம் கொண்டுள்ள குடியேறும் தொழிலாளர்களுக்கு எதிரான தீய சூனிய வேட்டைக்கு மேலும் தூண்டுதல் கொடுத்தார்.

கன்சர்வேட்டிவ்-லிபரல் டெமக்ராட் கூட்டாட்சி அரசாங்கம் பிரித்தானியாவின் நற்பெயரான, குடியேறுவோரிடம் மிருதுவாகப் போதல் என்பதை முடிவிற்கு கொண்டுவரும் வகையில் அரச நலன்களுக்கு அவர்கள் அணுகும் உரிமைகளைக் குறைத்தல், தேசிய சுகாதார சேவை (NHS) சிகிச்சையை குறைத்தல், சமூக வீடுகள் அளிப்பதை நிறுத்துதல் ஆகியவை இதில் இடம் பெறும். குடியேற்றத் துறை மந்திரி மார்க் ஹார்ப்பர் உலகின் கடுமையான விதிகளில் நம்முடையதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம் என்றார்.

பிரித்தானியாவிலிருக்கும் விதிகள் ஏற்கனவே உலகில் இருக்கும் கடுமையான விதிகளுள் ஒன்றாகும். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே இருக்கும் நாடுளில் இருந்து பயிற்சி அற்ற தொழிலாளர்கள் குடியேறுவது என்பது கிட்டத்தட்ட இல்லை; ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளில் இருந்து 10,000 பயிற்சி பெற்ற தொழிலாளர்கள்தான் வருகின்றனர்அரசாங்கம் 2010ல் சுமத்தியுள்ள வரம்பில் பாதி ஆகும் இது.

ஐக்கிய இராச்சியத்திற்கு கடந்த சில ஆண்டுகளில் வரும் 2 மில்லியன் நிகரக் குடியேறுவோரின் பெரும்பகுதியினர் 2004ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள். அந்நாட்டு மக்கள் மேற்கத்தைய உறுதிமொழிகளான ஒரு பொன்னான எதிர்காலம் ஸ்ராலினிச சரிவிற்குப் பின் வரும்  என்பதை நம்பி, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்ததின் நன்மையைப் பயன்படுத்தி கண்டத்தில் மற்ற இடங்களில் வேலை தேட முற்பட்டனர். இந்த பெரும் வெளியேற்றம் அந்நாடுகளின் ஆளும் உயரடுக்குகளின் நடவடிக்கைகளால் ஊக்கம் பெற்றது, செல்வந்தர்களுக்கு வரிகளை குறைத்தது, சந்தைகளைக் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்த்தியது, நலன்புரி அமைப்பு முறையை அழித்தது என ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்துக் கோரிக்கைகளுக்கும் அவர்கள் இணங்கியிருந்தனர். இவற்றை ஒட்டி வேலையின்மை அதிகரித்தது, வேலைகளே அற்ற தன்மையும் அதிகரித்தது, பொருளாதாரப் பாதுகாப்பற்ற தன்மையும் அதிகரித்தது.

அடுத்த ஆண்டு, பல்கேரியா மற்றும் ருமேனியக் குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தடையின்றிப் பணிபுரியத் தகுதி பெறுவர்; ஆனால் ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ் இன்னும் பிற ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் இந்த வழிவகையைத் தவிர்க்க முற்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இரு வறிய நாடுகளான பல்கேரியாவும் ருமேனியாவும் அவற்றின் மக்களில் பாதிப்பேர் வறிய நிலை என்ற இடரில் உள்ளனர்.

அடுத்த ஆண்டு 400,000 ருமேனியர்களும் பல்கேரியர்களும் பிரித்தானியாவிற்கு வருவர் என்று கூறப்படுவது கடந்த மாதம் ஈஸ்ட்லே உப தேர்தலின்போது ஐரோப்பிய எதிர்ப்பு மற்றும் குடியேற்ற எதிர்ப்புப் பிரச்சாரங்கள் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியின் (UKIP) பிரச்சாரத்தில் மையக் கருத்தாக இருந்ததன.

தன்னுடைய உரையில் காமெரோன் இந்த ஐரோப்பிய குடியேறிய தொழிலாளர்கள் மீது தன் பார்வையை படரவிட்டு, அவர்களை சுற்றுலாவில் பயன் பெறுவோர் என்று குற்றம் சாட்டினார். ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியில் (European Economic Area -EEA)   — 26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் நோர்வே, லிச்டெனஸ்டின், ஐஸ்லாந்து —  இருந்து தொழிலாளர்கள் உரிமையை முடிவிற்கு கொண்டுவர அரசாங்கம் ஏற்பாடு செய்யும் என்றும் அறிவித்தார். அவர்களுக்கு வேலை தேடுவோர் படி (JSA) மற்றும் பிற நலன்கள் ஆறு மாதங்களுக்குப் பின்னர் கிடைக்காது, அதற்குள் அவர்கள் உண்மையான வாய்ப்பான வேலை பெறுதலைப் பெறாவிட்டால், அதற்கென அவர்கள் முயல்வதை நிரூபிக்காவிட்டால் எதுவும் பெறமுடியாது. உண்மையில் வெறும் 13,000 ஐரோப்பிய ஒன்றிய குடியேறிய தொழிலாளர்களே JSA உரிமைகளைக் கோரியுள்ளனர்.

இதன்பின் காமெரோன் குடியேறியவர்களை மலிவான பொது வீடுகள் என்னும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதாக தாக்கினார். எதுவும் கொடுக்காமல் ஏதேனும் பெறவேண்டும் என்னும் கலாச்சாரம் சமூக வீடுகளில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும், ஒரு புதிய உள்ளூர் வசிப்போர் சோதனை நடத்தப்பட்டு புதிய குடியேறும் தொழிலாளர்கள் ஐந்து ஆண்டுகாலம் அப்பகுதியில் வசித்திருந்தால் ஒழிய சமூக வீடுகளுக்கு காத்திருக்கும் பட்டியலில் சேர்க்காமல் செய்யப்படும் என்றார்.

அரசாங்கத்தின் வீடுகளுக்கான மந்திரி மார்க் பிரிஸ்க் சமீபத்தில், அண்மையில் இங்கிலாந்திற்கு வந்துள்ள பெரும்பாலான அயல்நாட்டினர் சமூக வீடுகள் ஒதுக்கப்படத் தகுதி பெற்றவர்கள் அல்லர். பரந்த முறையில் கூறுகையில், ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி பிரஜைகள் வேலையில் இருந்தால்தான், பொருளாதாரத் தன்னிறைவு பெற்றிருந்தால்தான், அல்லது ஐக்கிய இராச்சியத்தில் நிரந்தர வசிக்கும் உரிமை பெற்றிருந்தால்தான் (ஐக்கிய இராச்சியத்தில் சட்டபூர்வமாக ஐந்து ஆண்டுகள் வசித்தபின்) தகுதி பெறமுடியும். மற்ற அயல்நாட்டினர் சமூக வீடுகளுக்கு உரிமை கொடுக்கப்பட்டிருந்தால் அல்லது ஐக்கிய இராச்சியத்தில் பொது நிதி பெற வாய்ப்பு இருந்தால்தான் தகுதி பெறுவர் (உதாரணமாக அகதிகள் அல்லது மனிதாபிமான பாதுகாப்புத் தகுதி கொடுக்கப்பட்டவர்கள்.)

சுற்றுலாச் சுகாதாரம் என்பது குறித்தும் காமெரோன் தாக்கினார்; இலவசமான சுகாதாரப் பாதுகாப்பு சில வருவோர்கள், சுற்றுலாக்காரர்கள் மற்றும் தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு அதிகம் வழங்கப்பட மாட்டாதுகடைசிப் பிரிவில் முன்பு விலக்கு பெற்றவர்கள் உள்ளனர்; இது தவிர காப்பீட்டுத் திட்டத்திற்கு முன்கூட்டிய பணம் கட்டியிருக்க வேண்டும். NHS இவர்களிடம் இருந்து கட்டணத்தை வசூலிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். ஆனால் சுகாதாரத் துறையின் சொந்தப் புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டு அயல்நாட்டினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக 33 மில்லியன் பவுண்டுகள் கட்டணம் செலுத்தினர் எனக் காட்டுகின்றன.

சட்டபூர்வமற்ற குடியேறுவோரை வேலைக்கு வைத்திருப்போர் மீது அபராதங்கள் இருமடங்காக 20,000 பவுண்டுகள் வரை சுமத்தப்படும் என்றும் காமரோன் அறிவித்தார். அதைப்போல் வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு வீட்டை வாடகைக்கு விட்டால் அபராதம் கட்ட வேண்டும். சட்டவிரோத குடியேறியவர்கள் என வரும்போது நாம் அந்த சிவப்புக் கம்பளத்தைச் சுருட்டி வைத்துவிட்டு, வெளியேற வழிகாட்டுவோம் என்று பிரதம மந்திரி கூறினார்.

ஆங்கிலம் கற்பதில் தோல்வி அடையும் குடியேறுபவர்களுக்கு, வேலையற்ற நிலை நலன்கள் பெறும் உரிமை மறுக்கப்படும், அரசப் பள்ளிகளில் குடியேறுவோர் குழந்தைகள் சேருவதில் புதிய விதிகள் ஆகியவையும் மற்ற நடவடிக்கைகளில் அடங்கியுள்ளன.

குடியேற்ற முறைக்கு எதிரான காமெரோனுடைய தாக்குதல், தொழிற் கட்சி தலைவர் எட் மில்லிபாண்ட் கூறியுள்ள இதேபோன்ற கருத்துக்களை தொடர்ந்து வந்துள்ளது; எட் மில்பண்ட், தன்னுடைய டோரியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு தேசம் என்பது தொழிற் கட்சிக்கான பார்வை என்று இந்த ஆண்டு முன்னதாக விவரித்திருந்தபோது அத்தகைய கருத்துக்களை கூறியிருந்தார். அதே நேரத்தில் தேசிய அடையாளம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தபோது அவரே குறிப்பிட்ட கட்டுப்பாடற்ற குடியேற்ற அளவுகள் குறித்து விமர்சித்தார். கடந்த தொழிற் கட்சி அரசாங்கத்திற்காக அவர் மன்னிப்புக் கோரினார் அது குடியேற்றம் தொடர்பாக சரியாகச் செயல்படவில்லை, 2004ல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த தொழிலாளர்கள் மீது இடைக்கால கட்டுப்பாடுகளைச் சுமத்தவில்லை என்றார்.

தொழிற் கட்சியானது ருமேனியா, பல்கேரியா ஆகியவற்றில் இருந்து வரும் குடியேறுபவர்கள் மீது மிக அதிக கட்டுப்பாடுகள் தேவை என்று வலியுறுத்துகிறது. இது பிரித்தானிய வேலைகள் பிரித்தானியத் தொழிலாளர்களுக்கே என்ற கோரிக்கையின் கீழ் உள்ளது; மேலும் அக்கட்சி புதிய குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து குடியேறுபவர்களுக்கு, வேலையற்றோர் நலன்களைப் பெறுபவர்களுக்கு, குழந்தை நல உரிமைகள் அகற்றப்படுதல், ஆங்கிலப் பயன்பாட்டைச் செயல்படுத்துவது ஆகியவை உள்ளன. மில்லிபாண்ட் எழுப்பியுள்ள இதே கருத்துக்கள் தேசியவாதம், குடியேற்ற எதிர்ப்பு பேரினவாதம், தடையற்ற சந்தைக்கு ஆதரவு, மற்றும் பிரித்தானியாவின் பொதுநல அரசில் எஞ்சியிருக்கும் நலன்களுக்கு விரோதப் போக்கு ஆகியவை 2009ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட நீல தொழிற் கட்சிப் பிரிவின் மையத்தில், கொடி, நம்பிக்கை, குடும்பம் என்ற தளத்தில் உள்ளன.

காமெரோன் தன் உரையை நிகழ்த்தும் நேரத்திலேயே, லிபரல் டெமக்ராட் துணைப் பிரதம மந்திரி நிக் கிளெக் தன்னுடைய கட்சி, குடியேறுவோருக்கான பொது மன்னிப்பில் ஈடுபாடு என்ற தேர்தல் அறிக்கை உறுதிப்பாட்டை கைவிடுகிறது என தெரிவித்தார். அதிக ஆபத்து உடைய நாடுகளில் இருந்து வரும் பார்வையாளர்களிடம் இருந்து பாரபட்சமான முறையில் 1000 பவுண்டுகள் பத்திரம் பெறப்பட வேண்டும் என்றும் அழைப்புவிட்டுள்ளார்.

டெய்லி டெலிகிராப்பில் எழுதிய தொழிற் கட்சியின் பிராங்க் பீல்ட் மற்றும் கன்சர்வேடிவ் நிகோலஸ் சோம்ஸ் இன்னும் அதிக தடைகள ஐரோப்பிய குடியேறுவோர் மீது சுமத்தப்பட வேண்டும் என்றும், இது பிரித்தானியாவின் இளம் வேலையற்றோருக்கு உதவும் என்றும் கூறியுள்ளனர். இரு கட்சியின் குடியேற்றக் குழுவின் சமநிலை கூட்டுத் தலைவர்கள் நம் உள்கட்டமானத்தின் மீது அழுத்தத்தை அதிகரிப்பது ஒரு புறம் இருக்க, ஒரு மில்லியன் 18-24 வயதிலானவர்கள் வேலையின்மையில் இருக்கையில், குடியேறுவோரை அனுமதிப்பதை தொடர்வது அறிவிற்குப் பொருந்தாதது என்று வாதிட்டுள்ளனர்.

குடியேறுவோர் எதிர்ப்பு, தேசியவாத ஜனரஞ்சக உரைகள் UKIP போன்றவற்றால் கூறப்படுபவை, பிரதான கட்சிகளாலும் எடுத்துக் கொள்ளப்பட்டு வேலையின்மை, வறுமை, வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் இவற்றிற்கு எதிரான பெருகும் சமூகச் சீற்றத்தை பிற்போக்குத்தனத் திசையில் திருப்பவும், ஆளும் உயரடுக்கு 1930களுக்குப் பின் மிக ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துகையில் எதிர்கொள்ளும் குற்றச்சாட்டுக்களைத் திசைதிருப்பவும் பயன்படுத்தப்படுகின்றன.

குறைந்த ஊதியங்களும் வாழ்க்கைத் தரங்களும் கன்சர்வேடிவ்-லிபரல் டெமக்ராடிக் கூட்டணி சுமத்தியுள்ள மிருகத்தன வெட்டுக்களின் விளைவு ஆகும்; இது தொழிற் கட்சி தொடக்கிய 1 டிரில்லியன்+ பிணைஎடுப்பு வங்கிகளுக்காக வந்ததைத் தொடர்ந்து வந்துள்ளது. இதன்பின் இடைவிடா ஊதிய வெட்டுக்கள், பொதுநல வெட்டுக்கள், வேலையின்மையில் உயர்வு மற்றும் மாபெரும் வீடுகள் நெருக்கடி ஆகியவை வந்துள்ளன; கிட்டத்தட்ட 1.8 மில்லியன் குடும்பங்கள் இங்கிலாந்தின் உள்ளூர் அதிகாரத்தின் வீடுகள் காத்திருக்கும் பட்டியல்களில் உள்ளன.

குடியேறுபவர்களை அரக்கத்தனமாக சித்தரிப்பதை தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். பெருவணிகத்தின் பிரித்து ஆளும் கொள்கை முயற்சிகள் இருந்தபோதிலும்கூட, குடியேறும் தொழிலாளர்களின் பாதுகாப்பு ஆளும் உயரடுக்கின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான கிளர்ச்சியின் மையத்தில் இருத்தப்பட வேண்டும்.