சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The terrible cost of Washington’s wars 

வாஷிங்டன் போரின் மோசமான செலவுகள்

Bill Van Auken
3 April 2013

use this version to print | Send feedback

ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க போர்களுக்கான செலவுகள் கிட்டத்தட்ட 6 டிரில்லியன் டாலர்கள் அளவிற்குச் செல்லும் என்னும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கை உலகெங்கிலும் இருக்கும் தொழிலாள வர்க்கம் ஏகாதிபத்தியத்தின் குற்றங்களுக்கு கொடுக்கும் கொடூர விலை பற்றிய மற்றொரு அறிகுறியாகும்.

ஹார்வர்டின் மூத்த பொதுக்கொள்கை விரிவுரையாளர், லிண்டா பில்ம்ஸ் பொருளாதார வல்லுனர் ஜோசப் ஸ்டிகலிட்ஸுடன் இணைந்து நடத்திய தொடர்ச்சியான ஆய்வுகளில் இது சமீபத்தியதாகும். ஒவ்வொரு தொடந்த ஆய்வும் போரின் நீண்ட காலச் செலவுகளின் மதிப்பை உயர்த்தியுள்ளது; இதற்கு முக்கிய காரணம் நூறாயிரக்கணக்கான ஈராக்கிய மற்றும் ஆப்கானிய போரின் மூத்த சிப்பாய்கள் தீவிர உடல்ரீதியான, உளரீதியான அதிர்ச்சிகளை பெற்று தாயகம் திரும்பியவர்களுக்கு பாதுகாப்பு அளித்தலும் இழப்பீடு கொடுத்தலும் என்பவற்றில் தொடர்ந்து நீடித்த உயர்வு ஏற்பட்டுள்ளதுதான்.

இந்த உணர்ச்சியற்ற எண்களுக்குப் பின்னால் மறைந்திருப்பவை முற்றிலும் மாற்றப்பட்ட வாழ்வுகள் ஆகும் போரில் காயமுற்ற 50,000 அமெரிக்க துருப்புக்கள் என்று மட்டுமின்றி, நூறாயிரக்கணக்கான PTSD எனப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்த ஒழுங்கீனத்தில் இருந்தும் பிற சுகாதார பிரச்சினைகளிலும் கஷ்டப்படுபவர்கள், படை நிலைப்பாட்டில் மூன்றில் ஒரு பகுதியினர், இது தவிர பயங்கரமான மூளைக் காயம் உற்றவர்கள் (இது கால் மில்லியன் துருப்புக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.)

துருப்பினரும் மரைன்களும் முன்னோடியில்லாத எண்ணிக்கையில் PTSD, மன அழுத்தம், கவலை இன்னும் பிற மனச் சுகாதார பிரச்சினைகள் கொண்டிருப்பதற்கு ஆயுதப்படைகளுள் மாறிவிட்ட கலாச்சாரம் காரணம் என்று பென்டகன் கூறியது: முந்தைய போர்களில் இத்தகைய பிரச்சினைகள் குறித்துப் பேசப்பட்டால் முத்திரையிடப்படும் ஒதுக்கிவைக்கப்படும் தன்மை இப்பொழுது அகன்றுவிட்டது என்றும் கூறியது.

இது ஒரு காரணம் என்றாலும், போர்களின் தன்மை முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது. பயங்கரவாதம், பேரழிவு ஆயுதங்கள் பற்றிய பொய்களின் அடிப்படையில் தொடக்கப்பட்ட ஆப்கானிய, ஈராக்கிய படையெடுப்புக்கள் நீடித்த கறைபடிந்த காலனித்துவ வகை ஆக்கிரமிப்புக்களை தொடக்கி வைத்தன; இவற்றின் நோக்கம் மக்களை முழுமையாக அடக்கி ஆளுதல், மூலோபாய வளங்களின்மீது கட்டுப்பாடு கொள்ளுதல், குறிப்பாக எண்ணெய் பற்றி என்பதாகும்.

9/11 தாக்குதலுக்கு பழிதீர்க்கவும் அல்குவேடாவுடன் போரிடவும் அனுப்பப்படுகின்றனர் என்று கூறப்பட்ட சிப்பாய்கள் தாங்கள் முற்றிலும் மாறுபட்ட முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டதை கண்டனர், இதில் குடிமக்கள் மீது கொடூரமான குற்றங்கள், முழு மக்களையும் விரோதிகள் என மாற்றும் தன்மை ஆகியவை இருந்தன.

ஹார்வர்ட் அறிக்கையில் அடங்கியுள்ள 6 டிரில்லியன் டாலர்கள் எண்ணிக்கை, இப்போர்கள் பற்றிய முழுக்கணக்கையும் எடுத்துக் கொள்ளவில்லை. அறிக்கை அமெரிக்க பொருளாதாரத்தின் மீதான பாதிப்பை மட்டுமே மதிப்பிடுகிறது. போரினால் சிதைந்துவிட்ட நாடுகளை கட்டமைக்கும் செலவுகள் என்ன ஆவது? அதுவும் 1 மில்லியன் ஈராக்கியர்களும் ஆப்கானியர்களும் தங்கள் உயிர்களை இழந்த நிலையில்? உடல் உறுப்புக்களை இழந்துவிட்ட, அல்லது தங்கள் நாட்டிலேயே அகதிகளாக மாற்றப்பட்டுவிட்ட மில்லியன் கணக்கானவர்களுக்கு உதவ பணத்திற்கு என்ன ஆவது?

சமூக உள்கட்டுமானத்தில் முழு அழிப்புச் செலவுகளில் அளவிடக் கூடியவற்றை பொறுத்தவரை நீர், மின்சாரம், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வேலை எனஆய்வு, அமெரிக்க அரசாங்கம் மறுகட்டமைப்பு திட்டங்களில் செலவழித்த பணத்தைத்தான் குறிப்பிடுகிறது; இவற்றில் ஊழல்கள், திறமையின்மை ஆகியவை உள்ளன; பல பில்லியன் டாலர்கள் வீண்டிக்கப்பட்டுவிட்டன, நெறியற்ற ஒப்பந்தக்காரர்கள், நேர்மையற்ற அரசியல் வாதிகளின் பைகளுள் சென்றன.

இதன்பின் போருக்கு நிதியளித்தல் உள்ளது. புஷ் நிர்வாக அதிகாரிகள் பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பெல்ட் போன்றோர், தொடக்ககாலத்தில் ஈராக் போர் 50 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருக்கும் என்று கூறினர் தற்போதைய மதிப்பீட்டில் நூறில் ஒரு பகுதிதான் அத்தகைய மதிப்பீடு.

இப்போர்கள் துணை ஒதுக்கீடுகள் மூலம் நிதியளிக்கப்பட்டன, இந்த வழக்கம் புஷ் காலத்தில் தொடங்கி ஒபாமா காலத்தில் வளர்ந்தது, இதில் பிந்தையவரின் ஆப்கானிய விரிவாக்கமும் அடக்கம் ஆகும். சாதாரண வரவு-செலவு திட்ட செயல்முறை வெளிக்கணக்கில் இருந்து கொடுப்பட்ட இந்த நிதிகள் அமெரிக்க மக்களுக்கு உண்மையான செலவுகள் இப்பொழுது ஒரு வீட்டிற்கு 75,000 டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளனமறைத்தே வைக்கப்பட்டுள்ளன. வருமானங்களில் இருந்து இராணுவ செயல்களுக்கு நிதி திரட்டுவதற்கு பதிலாக, அரசாங்கம் செல்வந்தர்களுக்கு வரிகளை குறைத்து, 2 டிரில்லியன் டாலர்கள் கடனை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வாங்கியது.

இப்படி போருக்கு நிதி திரட்டும் வழிவகைகள், ஜனநாயக, குடியரசுக் கட்சி இரண்டின் ஆதரவையும் பெற்றவை, மோசடி, ஒட்டுண்ணித்தனம், ஊழல் வகையில் சமூகத்தை அழித்தல் என்று அமெரிக்க நிதிய முறை அமெரிக்க முதலாளித்துவம் முழுவதிலும் படர்ந்திருந்தவற்றின் ஒரு பாகமாகும்.

இரு கட்சிகளின் அதிகாரிகளும் வேலைகள், கௌரவமான ஊதியங்கள், கல்வி, தரமான சுகாதாரப் பாதுகாப்பு, மற்றும் முக்கிய சமூகத் தேவைகளுக்கு நிதியில்லை என்று கூட்டாக குரல் கொடுக்கையில், அவர்கள் வாஷிங்டனின் போர் இயந்திரத்திற்கு மகத்தான இருப்புக்களை திரட்ட தயாராக இருந்தனர்இது அவர்களை தொழிலாள வர்க்கத்தின் மீது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுக்க வைத்தது.

பில்மஸ், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் முழு அளவு போர்களை நிறுத்தும் வாய்ப்பை உதறித்தள்ளுகிறார், ஒரு சமாதான ஈவு ஏற்படும் என்பதையும் உதறித்தள்ளுகிறார்; போர்ச் செலவுகளில் நீண்டகால பாதிப்பு ஏற்கனவே சுருங்கி வரும் பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தின் சிறு தொகை, அடிப்படை இராணுவச் செலவுகளுக்குத்தான் போதும் என்று கணித்துள்ளார். உயரும் மருத்துவ மற்றும் இழப்பீட்டுச் செலவுகளுக்கு துருப்புக்களின் அளவுகளை குறைக்கலாம், டிரோன் ஆயுதங்கள் போன்ற ஆளற்ற ஆயுதங்களில் கூடுதல் முதலீட்டிற்கு வகை செய்யலாம் என்று கூறுகிறார்.

ஒபாமா நிர்வாகம் வியத்தகு அளவில் டிரோன் போர்முறையை விரிவாக்கியுள்ளதுஏராளமான கொலைகளை தொலைக்கட்டுப்பாட்டு குண்டுத்தாக்குதல்கள் மூலம் பாதுகாப்பற்ற ஆப்கானிய, பாக்கிஸ்தானிய, யேமனிய, சோமாலிய மக்களிடையேயும் மற்ற இடங்களிலும் நடத்தியிருப்பதுடன், ஜனாதிபதிக்கு அமெரிக்க குடிமக்களை படுகொலை செய்ய டிரோன்களை பயன்படுத்தும் அதிகாரமும் உண்டு என அறிவித்துள்ளது. ஆனால் இந்த தந்திரோபாய மாற்றம் எவ்வகையிலும் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட போர்களை விட அதிக உயிர்களைப்பறிக்கும், அதிக செலவு ஆகும் போர்கள் தொடக்கப்போவதை நிறுத்தப்போவதில்லை.

உண்மையில், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போர்களை தொடக்கியவர்கள் அனுபவிக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்ட தன்மை, அப்பட்டமான போர்க்குற்றங்களுக்கு எவரையும் பொறுப்புக்கூறாத நிலை முதலில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ், டிக் சேனே, டொனால்ட் ரம்ஸ்பெல்ட், கொலின் பவல், கொண்டலீசா ரைஸ் மற்றும் ஜோர்ஜ் டெனட் ஆகியோர்இத்தகைய போர்கள் இன்னமும் வரும் என்பதைத்தான் காட்டுகின்றது.

ஏற்கனவே ஒபாமா நிர்வாகம் லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக போரை நடத்தியுள்ளதோடு சிரியாவில் அதேபோன்ற போருக்கு ஆதரவு கொடுக்கிறது, அதே நேரத்தில் இராணுவ ஆக்கிரோஷத்துடன் ஈரானை அச்சுறுத்துகிறது, ஆபிரிக்காவில் துருப்புக்களை நிலைகொள்ள செய்துள்ளது, ஆசியாவில் முன்னிலை என்ற பெயரில் செயற்பாடுகளைத் தொடக்கி சீனாவுடன் இராணுவ அழுத்தங்களை தொடர்ந்து அதிகரிக்கிறது.

அதேவேளை தொழிலாள வர்க்கம், ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆக்கிரமிப்பு போர்களை தொடக்குவதில் சொல்வதற்கு ஏதும் கொண்டிருக்கவில்லை, ஏற்கனவே தயாரிப்பில் இருக்கும் புதிய போர்களிலும் அதன் சொல் கேட்கப்படாது என்று இருந்தாலும், இதுதான் வேலைகள், ஊதியங்கள், அடிப்படை சமூக நலப் பணிகள் மீதான இருமடங்கு தாக்கதலின் முழுச் செலவுப் பாதிப்பையும் ஏற்கும். இதைத்தவிர போருக்கு அனுப்பப்பட்டுள்ள பல தொழிலாள வர்க்க இளைஞர்கள் கொலை மற்றும் உடல் உறுப்புக்கள் இழப்பு ஆகியவற்றையும் ஏற்க நிர்ப்பந்திக்கப்படும்.

பருத்துப்போன அமெரிக்க இராணுவ மற்றும் உளவுத்துறைக் கருவிகளினால் சுமத்தப்படும் கணக்கிலடங்கா மனித இடர்களும், வீணாகிவிட்ட பரந்த வளங்களும் இராணுவ வாதம் மற்றும் போருக்கு எதிராக உண்மையான பந்த இயக்கம் கட்டமைக்க வேண்டியதன் அவசரத் தன்மையை எடுத்துக் காட்டுகிறது. இது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன சமூக, அரசியல் இயக்கம், முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக இயக்கும் செயற்பாடுகளில்தான் அபிவிருத்தியடைய முடியும்.