சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கிழக்கு ஐரோப்பா

Eastern European auto industry in crisis

கிழக்கு ஐரோப்பிய கார்த் தயாரிப்புத் தொழிற்துறை நெருக்கடியில்

By Markus Salzmann 
10 April 2013

use this version to print | Send feedback

ஐரோப்பிய கார்த் தயாரிப்புத் தொழிற்துறையின் நெருக்கடி, கிழக்கு ஐரோப்பாவை முழு பலத்தோடு தாக்கியுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் முதலாளித்துவ மீட்சிக்கூடாக இந்த அரசுகளில் இருந்துவந்த குறைந்த ஊதியங்கள், இன்று போதுமான குறைந்த ஊதியங்களாக கருதப்படவில்லை, அதனால் கார்த் தயாரிப்பு நிறுவனங்கள் பெருகிய முறையில் வட ஆபிரிக்காவிற்கு உற்பத்தியை நகர்த்துகின்றன.

பிரான்சின் கார்த் தயாரிப்பு நிறுவனம் ரெனோல்ட்டின் ருமேனியத் துணை நிறுவனமான டாசியா, மொரோக்கோவில் டான்ஜியர்ஸில் உற்பத்தி பகுதி ஒன்றை நிறுவியுள்ளது; அங்கு 400,000 வாகனங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றது. டாசியா இப்பொழுது ரெனோல்ட்டின் மிக இலாபம் தரும் பகுதியாக இருந்தாலும், இந்த இடமாற்றம் ருமேனியாவில் வேலை இழப்புக்களை ஏற்படுத்தவில்லை; இது நாட்டின் தென்பகுதியில் பிடெஸ்டியின் உற்பத்தியின் அளவைக் குறைக்கும் முதல் நடவடிக்கையாகும்.

வட ஆபிரிக்காவிற்கு இடமாற்றம் என்பது நன்கு திட்டமிடப்பட்டது. ஜனவரி மாத இறுதியில் ரெனோல்ட் ஒரு கூட்டு முயற்சி உடன்பாட்டை முடித்தது; அதன்படி மேற்கு அல்ஜீரிய சிறுநகரான ஓரானில் ஆலை ஒன்று கட்டமைக்கப்படும்; அதில் 75,000 வாகனங்கள் ஆண்டு ஒன்றிற்கு 2014ல் இருந்து ஐரோப்பியச் சந்தைக்காகத் தயாரிக்கப்படும். ஆலையைக் கட்டமைப்பதற்கான உடன்பாடு டிசம்பர் மாதம் பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் விஜயத்தின்போது அல்ஜீரிய ஜனாதிபதி Abdelaziz Bouteflika  உடன் முடிவு செய்யப்பட்டது.

GM-Opel உடைய போலந்தில் இருக்கும் Gleiwitz ஆலையில், உற்பத்தி வெட்டுக்களும் வேலை நீக்கங்களும் வரும் என்னும் அச்சங்கள் உள்ளன. நிறுவனத்தின் ஜேர்மனிய போஹும் நகர உற்பத்தி ஆலை தற்பொழுது மூடப்பட்டிருக்கையில், கவலைகள் Gleiwitz ஆலையில் வேலை வெட்டுக்கள் குறித்து அதிகரித்துள்ளன; இங்கு 2,500  தொழிலாளர்கள் Astra, Cabriolet Cascada மாதிரிகளைத் தயாரிக்கின்றனர். ஆலையின் மேலாளர் Andrzej Korpak கடந்த ஆண்டு இறுதியில் செய்தி ஊடகத்திடம் வரவிருக்கும் காலத்தில் தொழிலாளர்கள் எண்ணிக்கையைத் தக்க வைத்தல், பரந்த வேலை நீக்கங்களை தடுத்தல் என்பதற்கு அனைத்தும் செய்யப்படும் என்றார். ஆனால் ஒருவேளை உற்பத்தி எண்ணிக்கை சுருக்கம் அடைந்தால் அதற்கான பொறுப்பு தொழிலாளர்கள் மீது “சுமத்தப்படும்” என்று அவர் அப்பட்டமாகக் கூறினார்.

2009ம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி தோன்றி ஓராண்டிற்குப் பின், கிழக்கு ஐரோப்பா முழுவதும் பல இடங்களில் வேலை நீக்கங்கள் தொடங்கின. ரெனோல்ட்-டாசியா, போர்ட், KIA போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்த விற்பனையை ஈடுகட்டுவதற்கு குறைந்த வேலை நேரம், ஊதிய வெட்டுக்கள், வேலை நீக்கங்கள் ஆகியவற்றை மேற்கொண்டன. இது இப் பிராந்தியத்தில் ஒரு மாற்றத்தைக் குறித்தது; ஏனெனில் இங்கு இருந்த குறைவூதிய மட்டங்கள், மேற்கத்தைய ஐரோப்பிய சந்தைக்கு அருகாமையில் இருத்தல் ஆகியவை இதை முறையாக ஐரோப்பிய கார்த் தயாரிப்புத் தொழிற்துறைக்கு மையமாக, முதலாளித்துவ மீட்சிக்கு பின்னர் விரிவாக்கம் செய்ய உதவியது.

போலந்து, ருமேனியாவுடன், செக் குடியரசு மற்றும் சுலோவாக்கியாவும் குறிப்பிடத்தக்க வகையில் பாதிக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு நான்காவது காரும் இப்பொழுது இந்நாடுகளில் தயாரிக்கப்படுகின்றன. முன்னாள் செக்கோஸ்லாவாக்கியாவின்  இரு நாடுகளில் மட்டும் 2 மில்லியன் வாகனங்கள் 2012ல் உற்பத்தி செய்யப்பட்டன. செக் குடியரசு  மற்றும் சுலோவாக்கியாவில் VW, KIA, Hyuandai, Toyota, PSA/Peugeot Citroen  ஆகிய நிறுவனங்கள் கணிசமான இலாபம் ஈட்டும் ஆலைகளைக் கொண்டுள்ளன; அங்கு ஊதியங்கள் மேற்கு ஐரோப்பாவுடன் ஒப்பிடுகையில்  20 முதல் 60 சதவிகிதம் வரை குறைவாகும்.

ஜேர்மனிய கார்த் தயாரிப்பு நிறுவனமான BMW யும் சுலோவாக்கியாவில் ஆலை ஒன்றைத் திறக்க திட்டமிட்டுள்ளது. KIA, PSA/Peugeot Citroen ஆகியவை ஏற்கனவே தலா 3,000 தொழிலாளர்களை நியமித்துள்ளது; VW உடைய பிராடிஸ்லாவா ஆலை 7,000 தொழிலாளர்களைக் கொண்டது. இதில் கார்த் தயாரிப்புத் துறையில் அவர்களுக்கான உப விநியோகஸ்தர்களும்  அடங்குவர்.

சுலோவாக்கியாவும் சற்று குறைந்த தன்மையில் செக் குடியரசும், கார் தொழிலைப் பெரிதும் நம்பியுள்ளன. “கிழக்கின் டெட்ரோயிட்” என்று தன்னைத் தானே பல ஆண்டுகளாக அறிவித்துக்கொண்ட இப்பகுதி பல ஆண்டுகளாக அதன் குறைவூதியம், ஜேர்மனி, ஆஸ்திரியாவிற்கு அது அருகே உள்ள நிலை, அந்நாட்டின் குறைந்த வரிகள் ஆகியவற்றிற்கு விளம்பரமாக உள்ளது. தற்பொழுது கார்த் தயாரிப்புத் தொழிற்துறை சுலோவாக்கிய ஏற்றுமதிகளில் 25% கொண்டுள்ளது, நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதியையும் கொண்டுள்ளது.

1990களில், ஐரோப்பிய ஒன்றியம், உள்நாட்டுத் தொழிற்துறை மூடலுக்கு குறிவைத்தது. கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நிறுவனங்களும் மேற்கு ஐரோப்பாவின் நிறுவனங்களால் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கான அடித்தளம் பல முன்னாள் பொது நிறுவனங்கள் தனியார்மயம் ஆக்கப்பட்டதும் மூடப்பட்டதும்தான். ஐரோப்பிய நிறுவனங்கள் பின் இப் பிராந்தியத்தை “விரிவாக்கப்பட்ட தொழிற்சாலையாக” பயன்படுத்தின; இங்கு தொழிலாளர்களின் குறைந்த ஊதியங்களை ஒட்டி தொழிற்துறைகளை அவர்கள் தொடக்க முடியும்.

கிழக்கு ஐரோப்பிய அரசியல் தலைவர்களுடைய ஒத்துழைப்புடன் இது நடந்தது. அவர்களில் பலரும் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தில் இருந்து வெளிப்பட்டவர்கள். முன்பு செக் தொழில்துறையின் மையத்தானமாக இருந்த ஸ்கோடா ஆலை, VW இடம் அப்பொழுது அரச தலைவராக இருந்த Vaclav Klaus ஆல் ஒப்படைக்கப்பட்டது. எடுத்துக் கொண்ட சில ஆண்டுகளுக்குப் பின், VW  ஆலை அதன் இலாபங்களை 90% அதிகரித்துக் கொண்டது; அதே நேரத்தில் தொழிலாளர் தொகுப்பு ஊதியத்தில் கணிசமான ஏற்றத்தைக் காணவில்லை, மிக மோசமான நிலையின் கீழ்த்தான் உழைக்க வேண்டியிருந்தது.

ஆனால் இத்தகைய ஏற்ற நாட்கள் இப்பொழுது முடிந்துவிட்டன. KIA தான் 2013ல் 290,000 வாகனங்களை மட்டும் உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது; இது 2012 உடன் ஒப்பிடும்போது 2,000 வாகனங்கள் குறைவாகும். அதிக திறனை அகற்றும் முறையில், ரெனோல்ட்/PSA  உடைய சுலோவாக்கியாவிலுள்ள ட்ரன்வா ஆலை 2012ல் பணி நேரம் 30 நாட்களால் குறைக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் சுலோவாக்கிய ஜனாதிபதி ரோபர்ட் பிக்கோ பாரிசுக்கு அரச  பயணத்தின்போது ட்ரன்வா பெரும் வேலை நீக்கங்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

2008 ஆண்டு பொருளாதார நெருக்கடி தூண்டியதால் ஏற்பட்ட முதல் விற்பனைச் சரிவை VW ஆனது சுலோவாக்கியா வேலை நேரத்தில் வெட்டுக்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தல் ஆகியவற்றின் மூலம் முகங்கொடுத்தது. ஜனவரி 2009ல் தொழிலாளர் குழு வளைந்து கொடுக்கும் வேலை முறை மாதிரிக்கு ஒப்புக் கொண்டது—இதன்படி தொழிலாளர்கள் எப்பொழுது தங்கள் விடுமுறையை எடுத்துக்கொள்ளலாம் என்ற முடிவு எடுக்கக் கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லாமல் போனது.

“கிழக்கின் டெட்ரோயிட்டில்” இத்தகைய போக்கின் வளர்ச்சிகள் உற்பத்திப் புள்ளிவிவரங்களிலும் அப்பட்டமாக உள்ளது. 2010ல் கார்த் தொழிற்துறையில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கை 70,000 தொழிலாளர்கள் என்று இருந்தது; இவர்கள் சுமார் 500,000 வாகனங்களைத் தயாரித்தனர். 2012ல் இதே எண்ணிக்கையான தொழிலாளர்கள் 900,000 வாகனங்களை தயாரித்தனர். இப்படி சுரண்டுவது தீவிரப்படுத்தப்பட்டது, நேரடியாக வேலையின்மை அதிகரிப்புடன் தொடர்புபட்டதாகும்; சுலோவாக்கியாவில் தற்பொழுது வேலையின்மை 14 சதவிகிதம் என்று உள்ளது.