சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The brutal face of neocolonialism in Afghanistan

ஆப்கானிஸ்தானில் நவ-காலனித்துவத்தின் கொடூர முகம்

Bill Van Auken
10 April 2013

use this version to print | Send feedback

சனிக்கிழமை அன்று ஆப்கானிஸ்தானின் தெற்கு மாநிலமான ஜாபூலில் ஒரு தாலிபன் கார் குண்டுத் தாக்குதலில் மூன்று சிப்பாய்கள் உட்பட ஐந்து அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதில் ஒருவரான 25 வயது வெளியுறவுப்பணி அதிகாரி ஆன் ஸ்மெடிங்காப்பிற்கு துக்கம் தெரிவிக்கையில் தொடர்ச்சியான பல பகிரங்க அறிக்கைகளை அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி வெளியிட்டார்.

இத்தனை இளம் வயதில் ஒருவர் இறந்துவிட்டது பெரும் சோகம்தான்; அவ்வகையில்தான் கிட்டத்தட்ட 2,220 அமெரிக்கத் துருப்புக்கள் 11 ஆண்டுகளாக நடக்கும் போர், ஆக்கிரமிப்பில் இறந்துள்ளனர். ஆயினும் கெர்ரியின் கருத்துக்கள், துயரத்தில் வாடும் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் ஆறுதல்படுத்தும் நோக்கத்தை அதிகம் கொண்டிராமல் இந்த இளம் பெண்ணின் உயிர் இழப்பை, போரை நியாயப்படுத்தி பாதுகாப்பதாக இருந்தது.

இந்த மரணம் “உலகிற்கு இரண்டு வெவ்வேறு மதிப்பீட்டு தொகுப்புக்களுக்கு இடையே உள்ள அப்பட்டமான வேறுபாட்டை உலகம் காண்பதற்கு” அளித்துள்ளது என்றார். ஒருபுறம், “ஒரு தைரியமான அமெரிக்கர்.... தான் இதுவரை பார்க்காத மாணவர்களின் உள்ளூர் மொழியில் எழுதப்பட்டிருக்கும் நூல்களைக் கற்கும் ஒளியை அதிகப்படுத்த உறுதி கொண்டவர், ஆனால் அவர்களுக்கு உதவும் கட்டாயத்தை உணர்ந்தவர்”, மறுபுறமோ “கோழைத்தனம் நிரம்பிய பயங்கரவாதிகள், சற்றும் முன்பின் தெரியாதவர்களுக்கு இருளையும் மரணத்தையும் கொடுக்க உறுதி கொண்டவர்கள்” இருந்தனர் என்றார்.

ஆன் ஸ்மெடிங்காப் தன் உயிரை இழந்த அன்றே, அமெரிக்க வான்வழித் தாக்குதல் ஒன்று குறைந்தப்பட்சம18 பேரைக் கொன்றது; இதில் 11 குழந்தைகள், ஒரு சில மாத வயதில் இருந்து எட்டு வயதுவரை இருந்தனர். ஆறு பெண்கள் மிக மோசமாகக் காயமுற்றனர். இந்த இளம் உயிர்கள் இறந்துபட்டது குறித்தோ, அவர்களுக்காக துயரப்படும் பெற்றோர்களுக்கோ, ஒரு பரிவுணர்வான சொல்லைக் கூட கெர்ரி கூறவில்லை. அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் 11 குழந்தைகள் இறந்தது பற்றிய செய்திகள், அமெரிக்க தூரக அலுவலர் மரணத்திற்கு கொடுக்கப்பட்ட தகவல்களில் நூறில் ஒரு பங்கைக் கூட கொள்ளவில்லை; அது எப்பொழுதும் போல் ஆப்கானிய உயிர்களை இகழ்வுடன்தான் கருதுகிறது.

புதிய அமெரிக்க வெளிவிவகாரச் செயலரும், முன்னாள் மாசச்சுசட்ஸ் ஜனநாயக செனட்டரும் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை, வியட்நாம் போரை பகிரங்கமாக கண்டித்த இளம் சாதனையாளர் என்று தொடங்கினார் என்பதை நினைவுபடுத்திக் கொள்வது சிறந்தது ஆகும். இப்பொழுது செனட்டில் பெரும் செல்வந்தராக உள்ள கெர்ரி, புதிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களுக்கு வெள்ளைப் பூச்சு கொடுத்து வளர்த்தல், தான் ஒருகாலத்தில் அம்பலப்படுத்த முற்பட்ட அதே கொடூரங்களை மூடிமறைத்தல் ஆகியவற்றிற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.

அமெரிக்கர்கள் சுயநலமில்லாமல் ஒளியையும் “வருங்காலத்தையும்” ஆப்கானிஸ்தானியர்களுக்கு கொண்டு வருபவர்களை பற்றிய வனப்புரையும், வாஷிங்டனை எதிர்ப்பவர்களை கோழைகள், பயங்கரவாதிகள் மற்றும் இருண்ட சக்திகள் என்று கூறுவதும் காலனித்துவ முறைபோலவே பழமையானதுதான். அல்ஜீரியா, இந்தோசீனாவில் பிரான்சும் இந்தியா, ஆபிரிக்க, இன்னபிற இடங்களில் பிரித்தானியாவும் மற்றும் 19ம் நூற்றாண்டின் கடைசி மூன்று தசாப்தங்களில் பூமியில் மேற்பரப்பில் கால் பங்கிற்கும்மேல் மொத்தமாக வெற்றிகொண்ட ஐரோப்பிய சக்திகள் அனைத்தும்– தங்களுடைய நாகரிகமயப்படுத்தும், மனிதாபிமான கோட்பாடுகள் என அறிவித்துக் கொண்டு இந்நாடுகளை கொள்ளையடித்து அவர்களுடைய மக்களை படுகொலை செய்கையில் ஒரே மாதிரியான சொல்லாட்சியைத்தான் பயன்படுத்தின.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான ஆப்கானிஸ்தானின் நீடித்த மோதல் இப்பொழுது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நடக்கிறது; அதன் உச்சக்கட்டமாக கடந்த 11 ஆண்டுகளாக நீடித்த நேரடி அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பு, மற்றும் அரை-காலனித்துவ கட்டுப்பாட்டை, அமெரிக்காவால் இருத்தப்பட்ட அதன் ஊழல் மிகுந்த அரசாங்கத்தின் மீது செலுத்துகிறது. எத்தகைய “ஒளி”, “வருங்காலம்” ஆப்கானிய மக்களுக்கு இவை கொண்டுவந்துள்ளன?

1979 ல் ஜனநாயகக் கட்சி நிர்வாகத்தின் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் காலத்தில் இருந்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு குற்றம் சார்ந்த கொள்கையை தொடக்கியது, இது காபூலில் சோவியத் ஆதரவைக் கொண்ட ஆட்சியை உறுதிகுலைக்கும் நோக்கத்தை கொண்டிருந்தது; அதையொட்டி சோவியத் இராணுவத் தலையீட்டைத் தூண்டியது. இதன் நோக்கம், அப்போதைய அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் Zbigniew Brzezinski விளக்கியது போல், “சோவியத் யூனியனுக்கு ஒரு வியட்நாம் போரை அளித்தல்” ஆகும். அக்கொள்கை வெற்றி என நிரூபணம் ஆயிற்று; ஆனால் ஆப்கானிய மக்கள் இதன் இணைச் சேதத்திற்கு ஆளாகினர். வாஷிங்டனின் திரிபு உத்திகள் உள்நாட்டுப் போர் ஒன்றைக்கட்டவிழ்த்தன; அது இன்றுவரை தொடர்கிறது, மில்லியன் கணக்கான ஆப்கானிய உயிர்களை காவுகொண்டுள்ளது.

CIA, ஆயுதங்கள், ஆலோசகர்கள், நிதியை உட்செலுத்தி வெளிநாட்டு மற்றும் ஆப்கானிய வலதுசாரி இஸ்லாமியவாத சக்திகளுடன் வாஷிங்டன் இணைந்து செயல்பட்டது; அதில் சௌதி மில்லியனர் ஒசாமா பின் லேடனும் அடங்குவார்; அவருடைய பெயர் பெரும்பாலான அமெரிக்கர்களால் செப்டம்பர் 11, 2001க்குப் பின்னர்தான் அறியப்பட்டது, பிற தாலிபன் நிறுவனர்கள் மற்றும் அமெரிக்க படைகள் இன்று ஆப்கானிஸ்தானில் எதிர்த்துப் போரிடும் குடிப்படை குழுக்களுடைய பெயர்களும் பின்னர்தான் அறியப்பட்டது.

அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆண்டுகளை பொறுத்தவரை, வாஷிங்டன் ஆப்கானிஸ்தானின் “மறு கட்டமைப்பிற்காக” 100 பில்லியன் டாலர்களை கொட்டியுள்ளது; ஆனால் அரசாங்க தணிக்கையாளர்கள் இப்பணத்தில் 10 %க்குத்தான் கணக்கை பார்க்க முடிகிறது. பெரும்பகுதி ஊழல் மிகுந்த ஒப்பந்தக்காரர்கள், ஒத்துழைப்பாளர்கள் மற்றும் கர்சாயில் இருந்து கீழ்வரை அரசியல்வாதிகளுக்கு செல்கிறது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வாஷிங்டனின் அறிவுறுத்தலின் கீழ் இருக்கையில், ஆப்கானிஸ்தானின் நிலைமை எப்பொழுதும் போல், ஏன் அதைக்காட்டிலும் அதிகமாகத்தான் பெருந்திகைப்பில் உள்ளது. ஆயுட்கால எதிர்பார்ப்பு ஆண்களுக்கு 44.5 என்றும் பெண்களுக்கு 44 என்றும் உள்ளது. குழந்தை பேற்றின்போது இறப்பு விகிதம் உலகிலேயே மிகஅதிகம் (100,000 உயிருடன் பிறக்கும் குழந்தைகளுக்கு 1,600 பேர் இறப்பு); ஐந்து வயதிற்குள் இருக்கும் குழந்தைகளில் பாதிக்கும் மேலானவை ஊட்டச் சத்து அதிகம் இன்றி உள்ளனர்.

வறுமையில் இருக்கும் மூன்று ஆப்கானியர்களில் ஒருவர் வாழ்வின் குறைந்த தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய இயலாமல் உள்ளார்; மக்கள் தொகையில் சுமார் 40% என வேலையின்மையில் உள்ளனர். ஆப்கானியர்களில் 65% மன அழுத்த ஒழுங்கீனங்கள் பிற உளயநோய்களால், முடிவற்ற போரின் விளைவால் எழுந்தவற்றால் அவதிப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த பெரும் அழிவை மேற்பார்வையிடுபவர்கள் அமெரிக்க ஆயுதங்களால் அதிகாரத்தில் இருந்தப்பட்டுள்ள குண்டர்களும் போர்ப்பிரபுக்களும் ஆவர்; இவர்கள் வெளிநாடுகளின் உதவி மற்றும் ஆப்கானிஸ்தானின் அபின் வணிகத்தாலும் இலாபங்களைப் பெறுகின்றனர்; அபின் வணிகம் உலகிற்குக் விநியோகிப்பதில் 90% த்தை அளிக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒன்றும் பயங்கரவாதத்துடன் போரிடவோ அல்லது ஆப்கானிய மக்களுக்கு ஒளியை கொண்டுவருவதற்கோ ஆப்கானிஸ்தானில் இருக்கவில்லை; அந்த போலிக்காரணம், வாஷிங்டன் லிபியாவிலும் சிரியாவிலும் ஆட்சி மாற்றத்திற்காக நடத்தும் போர்களில் அல்குவேடா தொடர்புடைய போராளிகளுடன் இணைந்த நிலையில் முற்றிலும் வெடித்து அம்பலமாகியுள்ளது. மத்திய கிழக்கு மற்றும்  ஆபிரிக்கா போல் அது அங்கு தலையிட்டதற்குக் காரணம், வாஷிங்டனின் மேலாதிக்கம் அதன் ஐரோப்பிய, ஆசிய போட்டி நாடுகளுக்கு எதிராககுறிப்பாக சீனாவிற்கு எதிராகஉலகின் புவி மூலோபாய மற்றும் எரிசக்தி வளம் கொழிக்கும் பகுதிகள் மீது கொள்வதற்குத்தான்.

ஒபாமா நிர்வாகம், அமெரிக்கத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு நீங்க முறையான காலக்கெடுவாக 2014 இறுதியை அறிவித்திருந்தாலும், ஜனாதிபதி ஹமித் கர்சாய் ஆட்சியுடன் ஆயிரக்கணக்கான துருப்புக்கள் மற்றும் தளங்களை ஆப்கானிஸ்தானில் காலவரையின்றி வைத்துக் கொள்ள பேச்சுக்களை நடத்தி வருகிறது. அப்படைகளில் சிறப்புச் செயற்பாடுகள் கமாண்டோக்கள் தொடர்ந்து அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்ப்பவர்களை வேட்டையாடுவோர் இருப்பர். தவிர பயிற்சியாளர்களும் ஆலோசகர்களும், ஆப்கானிய கைப்பாவைச் சக்திகளுக்கு இயக்கம் கொடுக்கவும் இருப்பர். இதைத்தவிர அமெரிக்க வான்வழிச் சக்தி, கடந்த சனிக்கிழமை குனார்  மாநிலத்தில் 11 குழந்தைகளைக் கொன்ற குண்டுத்தாக்குதலை நடத்தியதைப் போல், தொடரும்.

வாஷிங்டன், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவற்றிற்கு எதிரான ஒரு தளமாக பென்டகனின் வார்த்தைகளில் காஸ்பியன் பள்ளத்தாக்கு சக்தி திட்டம் அதன் பரந்த எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் ரஷ்யா, சீனாவிற்கு எதிராகப் பெறப்படும் வரை ஆப்கானிஸ்தானை தளமாகக் கொள்ளும். இந்த மூலோபாயத்திற்குள் இருப்பதுதான் இன்னும் பரந்த, அதிக பேரழிவு தரக்கூடிய உலக மோதல் ஆகும்.

ஆப்கானிஸ்தான் மக்களினதும் உலகெங்கிலும் இருக்கும் உழைக்கும் மக்களினதும் எதிர்காலத்திற்கான போராட்டம் என்பது போர் மற்றும் நவகாலனித்துவ முறைக்கு எதிராக உண்மையான இயக்கம் புதுப்பிக்கப்படுவதில்தான் தங்கியுள்ளது, இவற்றிற்கு மூலமாக, முதலாளித்துவ இலாப முறைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அணிதிரள்வை அடிப்படையாக கொள்ள வேண்டும்.