சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

EU finance ministers demand more austerity at Dublin summit

ஐரோப்பிய ஒன்றிய மந்திரிகள் டப்ளின் உச்சிமாநாட்டில் மேலும் சிக்கன நடவடிக்கைகளைக் கோருகின்றனர்

By Stefan Steinberg
15 April 2013

use this version to print | Send feedback

ஐரோப்பாவின் பொருளாதார மந்தநிலை இந்த ஆண்டு இரண்டாம் பாதியிலும் தொடரும் எனக் குறிக்கும் தகவல்களுக்கு இடையே, கடந்த வார இறுதியில் டப்ளினில் கூடிய ஐரோப்பிய நிதிமந்திரிகள் சமூகப், பொருளாதார நெருக்கடிகளை தீவிரப்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளை ஆழப்படுத்துவதில் உடன்பட்டுள்ளனர்.

தனித்தனிக் கூட்டங்களில், யூரோப்பகுதியிலுள்ள 17 நாடுகளின் நிதிமந்திரிகளும், 27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி மந்திரிகளும் சைப்பரஸுக்கு ஒரு கடன்பொதியை கொடுக்க, ஆரம்பத்தில் குறிப்பிட்டதையும் விட கூடுதலான வரவு-செலவுத் திட்ட கட்டுப்பாடு தேவை என வலியுறுத்தி, ஒப்புக்கொண்டனர். முக்கூட்டால் இயற்றப்பட்ட மூல உடன்பாடு, சைப்ரசின் வங்கிகளுடைய மோசமான கடன்களை சரி செய்ய 10 பில்லியன் யூரோக்களுக்கு ($13 பில்லியன்) உறுதியளித்தது. இதற்கு ஈடாக சைப்ரஸ் 7 பில்லியன் யூரோக்களை வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் மற்றும் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் மூலம் திரட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த உடன்பாடு சிறப்பாக தீவின் வங்கி முறையை வீணடிக்கிறது; சைப்ரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் கிட்டத்தட்ட 15% இந்த ஆண்டு குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்றில் முதல் தடவையாக, ஐரோப்பிய ஒன்றியம் வங்கியின் சேமிப்புக் கணக்கு வைத்திருப்போர் நிதியை பறிமுதல் செய்யுமாறு கோரியுள்ளது. 100,000 யூரோக்களுக்கு மேல் சேமிப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட தங்கள் சேமிப்புக்களில் 60% இழந்து விடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்சிமாநாட்டிற்கு சற்று முன்னதாக, ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை அடங்கிய “முக்கூட்டு” எதிர்பாராமல் குரலை உயர்த்தி, சைப்ரஸ் இன்னும 5.5 பில்லியன் யூரோக்கள் நிதியை திரட்ட வேண்டும் என்னும் ஆவணம் ஒன்றை கசியவிட்டது. இது சைப்ரஸின் வங்கி சேமிப்பு அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் கூடுதல் நச்சுக் கடன்களை சரி செய்யப் பயன்படுத்தப்படும்.

இதன் பொருள், சைப்ரஸ் கிட்டத்தட்ட முக்கூட்டு கோரும் பணத்தைவிட இருமடங்கு இன்னும் ஆழ்ந்த வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள், தங்க இருப்புக்களை விற்றல், மற்றும் தேசிய சொத்துக்களை கூடுதல் தனியார்மயமாக்குதல் ஆகியவற்றின் மூலம் நிதியை திரட்ட வேண்டும். சைப்ரஸ் பிணை எடுப்பின் மொத்தச் செலவுகள், அதன் மக்கட் தொகையாகிய அதிகபட்சம் 1 மில்லியனுக்கு, இப்பொழுது கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைக்கும் 27,000 யூரோக்கள் என ஆகிறது.

Süddeutsche Zeitung இற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், ஐரோப்பிய ஒன்றிய உட்துறை சந்தை ஆணையர் மிஷேல் பார்னியே, சைப்ரசில் வந்துள்ள உடன்பாடு கண்டம் முழுவதும் ஐரோப்பிய கொள்கைக்கு அடையாளத்தரமாக இருக்கும் என்று உறுதிப்படுத்தினார்.

Süddeutsche Zeitung இடம் பார்னியே, தான் இந்த ஜூன் மாதம் அறிமுகப்படுத்தவுள்ள சட்டத்திற்கு தயாரிப்புக்கள் நடத்தி வருவதாகவும், இது வருங்கால வங்கிப் பிணைஎடுப்புக்களில் வங்கியில் கணக்கு வைத்திருப்போரையும் ஈடுபடுத்துவதை முறைப்படுத்தும் என்றும் கூறினார். சைப்ரசை பொறுத்த வரை, 100,000 யூரோக்கள் அல்லது அதற்கு மேல் சேமிப்பு கொண்ட வாடிக்கையாளர்களின் சொத்துக்களில் பகுதி பறிக்கப்படும் என்ற வரையறுப்பு இருந்தது, ஆனால் இந்த வரையறுப்பின் வரம்பு குறைக்கப்பாடாது என்பதற்கு உத்தரவாதம் ஏதும் கிடையாது என்றார்.

ஸ்பெயினில் சிறு சேமிப்பாளர்கள், ஏற்கனவே அரசாங்கத்திற்கு சொந்தமான ஸ்பெயின் வங்கிகளில் நடத்தப்பட்ட பல மறுகட்டமைப்பு செயற்பாடுகளால், சேமிப்புக்களை இழந்துள்ளனர்.

சைப்ரஸின் பொருளாதார அழிவை திட்டமிட்டபின், டப்ளினில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அதிகாரத்துவத்தினர், கிரேக்கத்தில் சிக்கன நடவடிக்கைச் செயற்பாடுகளில் குறைவு ஏதும் இருக்காது என்றும் வலியுறுத்தினர். டப்ளினில் யூரோக்குழுவின் தலைவர் Jeroen Dijsaselbloem, கிரேக்கம் முக்கூட்டின் திட்டமான இன்னும் மகத்தான செலவுக்குறைப்புக்கள், வேலை வெட்டுக்களுக்கு தன்முயற்சிகளை விரைவுபடுத்த வேண்டும்” என்று கோரினார்.

டப்ளினில் நிதி மந்திரிகள் எடுத்த மற்றொரு முக்கிய முடிவு, முக்கூட்டுப் பிணை எடுப்புக்களில் இரண்டு மற்ற இலக்குகளான போர்த்துக்கல், அயர்லாந்து குறித்து கடன் திருப்பிக் கொடுத்தல் உடன்பாட்டில் விரிவாக்கம் செய்தது ஆகும். இரு நாடுகளிலும் ஆழ்ந்துவிட்ட பொருளாதாரப் பிரச்சினைகள், அவற்றை உரிய காலத்தில் கடன்களை திருப்பிக் கொடுக்க இயலாமல் செய்துவிட்டது என்ற உண்மையை அறிந்து இம்முடிவு எடுக்கப்பட்டது.

போர்த்துக்கீசியப் பொருளாதாரம் கடந்த ஆண்டு 6.4 சதவிகிதம் சுருங்கியது: இந்த ஆண்டு இன்னும் 2.3% சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் வேலையின்மை விகிதம் யூரோப் பகுதியில் மூன்றாவது உயரிடத்தில் 17.5% என உள்ளது; இதன் கடன் தரங்கள் (பொது மற்றும் மொத்தம்) தொடர்ந்து முக்கூட்டு சுமத்தும் அபராத வெட்டுக்களின் நேரடி விளைவாக தொடர்ந்து உயர்கின்றன.

லிஸ்பன் அரசாங்கம் சுமத்தியுள்ள காட்டுமிராண்டித்தன வெட்டுக்களுக்கு பரந்த எதிர்ப்பு உள்ளது; இரண்டு வாரங்களுக்கு முன்புதான் போர்த்துகல்லின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டு ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ள பல வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாக உள்ளன என்று அறிவித்துள்ளது. திருப்பிக் கொடுக்க வேண்டிய காலம் அதிகமாக்கப்பட்டுள்ளதற்கு ஈடாக, போர்த்துக்கல்லின் பிரதம மந்திரி Pedro Passos Coelho ஐரோப்பிய ஒன்றிய வெட்டுக்கள் திட்டத்தை முற்றிலும் சுமத்துவதாக உறுதியளித்துள்ளார்.

அயர்லாந்திலும் நிலைமை இதேபோல்தான் உள்ளது. ஒரு சமீபத்திய ஆய்வின்படி அயர்லாந்தில் மூன்றில் ஒரு பகுதி மக்கட் தொகுப்பினர் அதாவது 1.8 மில்லியன் மக்கள் “அடிப்படைக் கட்டணங்கள் செலுத்தியபின்” மாதாந்தம் 100 யூரோக்களையும் விட குறைவாகத்தான் கொண்டுள்ளனர் என்று கூறுகிறது. அனைத்து பொருளாதாரத் துறைகளிலும் வந்துள்ள ஊதிய வெட்டுக்கள், சுமத்தப்பட்ட புதிய வரிகள், மற்றும் அயர்லாந்து வங்கிப் பிணை எடுப்பிற்காக வந்துள்ள தீர்வுகள், ஆயிரக்கணக்கான வேலை இழப்புக்கள் மற்றும் வேலையின்மை 14 %க்கும் அதிகமாக உயர்தல் ஆகியவை பரந்த வறியநிலை வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்துள்ளது.

அதன் கடனைத் திருப்பிக் கொடுக்க அயர்லாந்திற்குக் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் அதன் வங்கிக் கடனைத் திருப்பிக் கொடுக்க அயர்லாந்து மக்களுக்கு இன்னும் 40 ஆண்டுகள் பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போர்த்துக்கல் “கடின பொருளாதார உள்நாட்டு நிலைமைகள் இருந்தபோதிலும் சீர்திருத்த வேகத்தைத் தொடர வேண்டும்” என்று ஐரோப்பியக் குழுவின் தலைவர் Jeroen Dijsselbloem வலியுறுத்தியுள்ளார். பின்னர் இழிந்த முறையில் அயர்லாந்து அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ள வெட்டுக்களை செயல்படுத்தியதற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். சரிசெய்யும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு அயர்லாந்து ஒரு உயிர்த்த உதாரணம், வலுவான உடைமை முறை மற்றும் சீர்திருத்தத்திற்கு உண்மையான ஈடுபாடு இருந்தால் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

டப்ளின் உச்சிமாநாட்டின் இறுதி முக்கிய விஷயமாக ஐரோப்பாவில் வரி ஓட்டைகளை எப்படிச் சமாளிப்பது என்பதாக இருந்தது. இந்த வரி ஓட்டைகள் வடக்கு ஐரோப்பிய வங்கிகளை, அவற்றின் ஐரோப்பிய மற்றும் சர்வதேச போட்டியாளர்களுக்கு எதிராக குறிப்பாக ஜேர்மனியின் கரங்களை வலுப்படுத்துகின்றன. ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் சிக்கன நடவடிக்கை கொள்கைகளை வலியுறுத்துவதில் தலைமைப் பங்கை கொண்டுள்ளது.

அயர்லாந்து, போர்த்துக்கல் ஆகியவற்றில் கடன்களை திருப்பிக் கொடுக்கும் காலம் நீட்டி வைத்திருப்பதின் முக்கிய நோக்கம் இரண்டாம் பிணை எடுப்பிற்கு விண்ணப்பிப்பதை தடுப்பதுதான். சைப்ரசிற்கு அடுத்த படியாக பிணை எடுப்பிற்கான இலக்கு சுலோவேனியாவாகும், அங்கு வங்கிகள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பகுதிக்கு சமானமான கடனில் மூழ்கியுள்ளன.

உச்சிமாநாட்டில் ஐரோப்பிய பொருளாதார, நிதிப்பிரிவு ஆணையர் Oli Rehn, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களை போதுமான அளவு வேகத்துடன் செய்யாது இருப்பதற்கு இத்தாலியையும் பிரான்சையும் விமர்சித்தார்.