சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Moscow calls Obama’s human rights bluff

ஒபாமாவின் மனித உரிமைகள் பற்றிய ஏமாற்றுத்தனத்தை மாஸ்கோ அம்பலப்படுத்துகிறது

Bill Van Auken
16 April 2013

use this version to print | Send feedback

தான் செய்த குற்றத்திற்கு மற்றவர்களை குற்றம்சாட்டுவதுபோல் தான், ஒபாமா நிர்வாகமானது மாஸ்கோ மீது அது மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளமை இருக்கிறது.

Magnitsky என்றழைக்கப்படும் நாட்டிற்குள் புகமுடியாத நபர்கள் என்ற ஒரு பட்டியல் கடந்த வெள்ளியன்று வாஷிங்டனினால் விநியோகிக்கப்பட்டதற்கு பிரதிபலிப்பாக, கடந்த இரண்டு சதாப்தங்களாக அமெரிக்க அரசாங்கத்தில் உயர் பதவியிலிருக்கும் பல உயர்தர குற்றவாளிகளில் மிகச் சிலர் உள்ளடக்கப்பட்டுள்ள அதனுடைய சொந்தக் கறுப்பு பட்டியலை விளாடிமிர் புட்டின் அரசாங்கம் வெளியிட்டது முழுமையாக பொருத்தமாக இருக்கின்றது.

மாக்நிட்ஸ்கி பட்டியல் உருவாக்கப்பட்டதில் சிறிய வஞ்சப்புகழ்ச்சியும் இல்லை, இப்பட்டியலுக்கு முன்னர் அதிகம் அறியப்படாத ஒரு கணக்காளர் மற்றும் கணக்காய்வாளர் ஹெர்மிடேஜ் மூலதன நிறுவனத்திற்கு உழைத்து பின் ரஷ்ய சிறை ஒன்றில் இறந்தவரின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பில் பிரௌடர் முன்னாள் அமெரிக்க ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எர்ல் பிரௌடரின் பேரன் ஆவார்.

ரஷ்ய அதிகாரிகள், பிரௌடர் சட்டவிரோதமாக கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர் பெறுமதியான பங்குகளை முன்னாள் அரசிற்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸ்புரோமிடம் இருந்து வாங்க முற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடானது, மாக்நிட்ஸ்கி கண்டறியப்படாத பணப்புரட்டு, ஊழலுக்கு ரஷ்ய அதிகாரிகளால் குற்றவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, பின்னர் அவர் சிறையில் இறந்ததற்கும் வழிவகுத்தது என்பதாகும்.

மாக்நிட்ஸ்கி இறப்பானது இக்கதையில் இழந்துவிட்ட உண்மை, அவர் கைதுசெய்யப்பட்டபோது, அவர் ஒரு நிதிய நிறுவனத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார், அது அதனுடைய தொடர்பு மற்றும் ரஷ்ய தன்னலக் குழுவினருடனான செயற்பாடுகளுடன் உலகில் மிகவும் அதிக இலாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்தது என்பதாகும். இந்த இழிந்த செல்வச் செழிப்பும் குற்றம் சார்ந்த சமூக அடுக்காக இருக்கும் குழுவின் சொத்துக்கள் முற்றிலும் அரச சொத்துக்களைத் திருடியதில் இருந்து வந்தவைகள். இதற்கு வாஷிங்டனின் முழு ஆதரவும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவ அமைப்புமுறை மீட்பின் போது இருந்தது.

மாக்நிட்ஸ்கி மரணத்தின் சூழ்நிலை எப்படி இருந்தாலும் சிறையில் மருத்தவ வசதி போதாததால் இறந்தார் அல்லது அடிபட்டு இறந்தார் எனக் கூறப்படுகிறது அமெரிக்க தலையீடு முற்றிலும் இழிந்த இரட்டை முகம் உடையதாகும். அதன் நலன்களுக்குப் பொருந்தும்போது, வாஷிங்டன் வேறுபுறம் பார்த்துக் கொண்டு அதன் ஆதரவை இதைவிடப் பெரிய குற்றங்களுக்குக் கொடுத்துள்ளது. அப்படித்தான் 1993ம் ஆண்டு போரிஸ் யெல்ட்சின் ரஷ்ய வெள்ளை மாளிகையை, நாட்டின் பாராளுமன்றத்தின் மீது குண்டுபோட்டபோது நடந்தது; அதில் 1,000 பேருக்கும் மேல் இறந்து போயினர்.

மனித உரிமைகளைப் பற்றிப் பேசும் வழிவகை வாஷிங்டனின் நலன்களுக்கு புவி-மூலோபாய போட்டியை எதிர்கொள்ளும்போது உதவினால், பயன்படுத்தப்படுகிறது. எப்படிப்பார்த்தாலும், அவருடைய விவகாரத்தில் அமெரிக்கா குற்றம் சாட்டுவது அமெரிக்காவிலேயே அன்றாட நிகழ்வாக நடக்கிறது. உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குச் சிறையில் அமெரிக்க மக்கள் உள்ளனர்; ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 7,000 இறப்புக்கள் காவலில் இருக்கும்போது பதிவாகின்றன. இவற்றுள் பல மருத்துவப் புறக்கணிப்பு மற்றும் நேரடி மிருகத்தனத் தாக்குதல் ஆகியவற்றால் விளைந்தவைகள்.

தன்னுடைய கறுப்புப் பட்டியலை வெளியிடும்போது, மாஸ்கோ இரண்டு முன்னாள் அமெரிக்க அதிகாரிகளான அமெரிக்கத் துணை ஜனாதிபதி டிக் ஷேனேயின் தலைமை அலுவலராக இருந்த டேவிட் ஆடிங்டன் மற்றும் அமெரிக்கத் தலைமை வக்கீலின் சட்ட ஆலோசகர்கள் அலுவலகத்தில் ஒரு முன்னாள் உதவியாளரான ஜோன் யூ இருவரையும் அதில் சேர்த்துள்ளது. இருவரும் போர்க் குற்றம் புரிந்தவர்களாகக் குற்றம் சாட்டப்பட்டனர்; அமெரிக்கச் சிறை முகாமான குவாண்டநாமோ பே மற்றும் உலகெங்கிலுமுள்ள அமெரிக்க இராணுவ மற்றும் CIA உடைய இரகசியச் சிறைகளில் கைதிகளை சித்திரவதை செய்ததற்கு சட்டபூர்வ நியாயப்பாட்டை அளித்ததாகக் கூறப்பட்டது.

ரஷ்ய பட்டியலில் இருக்கும் மற்ற இருவரான ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் ஜேப்ரி மில்லர் (குவாண்டநாமோ குடா முகாமில் தளபதியாக இருந்தவர் மற்றும் ஈராக்கில் அபு காரிப்பில் இருந்தவர்), மற்றும் ரேர் அட்மைரல் ஜெப்ரி ஹார்பிசன் (அவரும் குவாண்டநாமோவில் தளபதியாக இருந்தவர், பின் கூட்டுப் படைகள் தலைவருக்கு ரஷ்யா தொடர்பான அரசியல், இராணுவ விவகாரங்களுக்கு ஆலோசகராக இருந்தவர்) ஆவார்.

குவாண்டநாமோ என்னும் பெயரிலேயே சித்திரவதை மற்றும் குற்றத்தன்மை வெளிப்படுவது உலகெங்கிலும் இப்பொழுதும் தொடர்கிறது. கடந்த சனி்க்கிழமையன்று இராணுவக் காவலர்கள் வன்முறையைப் பயன்படுத்தி, ரப்பர் தோட்டாக்களால் சுடுவது உட்பட, பொது வீட்டு வசதியில் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காவல் கைதிகளை கட்டாயப்படுத்தினர்; அவர்கள் பல ஆண்டுகளாக தனிச்சிறையில் வாடுகின்றனர்.

பெப்ருவரி 10ல் தொடங்கிய பட்டினிப் போராட்ட வேலைநிறுத்தம், அன்றாட மிருகத்தனம் மற்றும் கொடூர அநியாயம் 11 ஆண்டுகளாகச் சிறையில் உள்ளவர்களுக்கு நிகழ்த்தப்படுவதை எதிர்த்து நடந்ததாகும்; இவர்களை வெளியே விடுதலை செய்வது ஒருபுறம் இருக்க, இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் கூட முன்வைக்கப்படவில்லை. உடல்ரீதியான வன்முறை மற்றும் கட்டாயப்படுத்தப்பட்டு உணவளித்தல் ஆகியவை போராட்டத்தை முறியடிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

2002ல் இருந்து குவாண்டநாமோ குடாவில் இருக்கும் யேமனி நாட்டைச் சேர்ந்த சமிர் நஜி அல் ஹசன் மக்பெல், தன்னுடைய விதியைத் தன் வக்கீல்களிடம் தொலைப்பேசி மூலம் தெரிவித்தார். இதன் பொருளுரை திங்களன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நாளும் எட்டு இராணுவப் பொலிசார் அடங்கிய குழு ஒன்று கலகப் பிரிவு சீருடை அணிந்து அவருடைய சிறை அறைக்குள் நுழைந்து, அவருடைய கைகள், கால்கள் மற்றும் தலையையும் ஒரு நாற்காலியோடு சேர்த்துக் கட்டுவர், அதையொட்டி மூக்கின் மூலம் குழாய் அவருடைய வயிற்றுக்குச் செலுத்தப்படுகிறது, எப்படி பெரும் வேதனையை இது தருகிறது என்பது கூறப்பட்டுள்ளது.

நிலைமை இப்பொழுது இன்னும் பெருந்திகைப்பாகி விட்டது. காவலிலுள்ள அனைவரும் இங்கு பெரும் துயரில் உள்ளனர் குறைந்தப்பட்சம் 40 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் உள்ளனர். மக்கள் ஒவ்வொரு நாளும் களைப்பில் மயக்கம் போட்டு விழுகின்றனர். நான் இரத்த வாந்தி எடுத்தேன்.

எங்கள் சிறை வாழ்விற்கு முடிவு தெரியவில்லை. எங்களுக்கு உணவை மறுத்து ஒவ்வொரு நாளும் இறப்பு என்னும் கொடுமையை எதிர்கொள்வதைத்தான் நாங்கள் விருப்பத் தேர்வாக கொண்டுள்ளோம்.

காவலில் இருந்த 9 பேராவது குறைந்தப்பட்சம் குவாண்டநாமோ குடாவில் இறந்துவிட்டனர்; அவர்களுள் சிலர் சித்திரவதையின் நேரடி விளைவினால் மரணம் அடைந்தனர்; மற்றவர்கள் தற்கொலைக்கு தூண்டிவிடப்பட்டனர். இந்த எண்ணிக்கை இப்பொழுது இன்னும் உயரும்போல் தோன்றுகிறது.

2008ல் பராக் ஒபாமா ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் தான் பதவிக்கு வந்து ஓராண்டிற்குள் குவாண்டநாமே குடாவை மூடுவதாக உறுதியளித்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரும், அது இன்னும் திறந்துதான் உள்ளது, அதன் குற்றம் சார்ந்த நடவடிக்கைகள் அமெரிக்கச் சட்டத்தின் நெறிகளாகிவிட்டன.

குவாண்டநாமோவில் இப்பொழுது நடைபெறும் செயல்கள் ஒபாமா நிர்வாகம் எப்படி புஷ் காலத்தில் நடந்த அனைத்துக் குற்றங்களையும், தொடர்கிறது, ஆழப்படுத்துகிறது, ஆக்கிரோஷப் போரில் இருந்து சித்திரவதை வரை, மற்றும் பரந்த அளவில் டிரோன் படுகொலைத் திட்டம் நடத்தப்படுகிறது, அது அமெரிக்கக் குடிமக்கள் மீதும் விரிவாக்கம் பெறுகிறது என்பதின் அடையாளமாக உள்ளன.

நூரெம்பேர்க்கில் நாஜித் தலைமையின் விசாரணைகளின் போது இயற்றப்பட்ட கொள்கைகள் இன்று நிலைநிறுத்தப்பட்டால், ரஷ்யாவின் கறுப்புப் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளவர்கள், மற்றும் அவர்களுடைய உயரதிகாரிகள் (இராஜதந்திர நெறிகளையொட்டி நீக்கப்பட்டவர்கள்) – புஷ், ஷேனே, ரம்ஸ்பெல்ட், ரைஸ், பவல், டெனெட் ஆகியோர்கள்தங்கள் குற்றங்களுக்காக கூண்டில் ஏறவேண்டும். மாறாக இக்குற்றங்களுக்கு தண்டனை கொடுக்கப்படாததால், குற்றங்கள் தொடர்கின்றன.

இச்சூழலில் ஒபாமா நிர்வாகம் ரஷ்ய ஆட்சி மீது மனித உரிமைகள் பிரச்சினை குறித்துத் தீர்ப்புக் கூற முற்படுவது, சற்றும் குறைவற்ற பாசாங்குத்தனம்தான்.

முழு நிகழ்வும் வாஷிங்டனின் மனித உரிமைக் கொள்கை என்பதின் இதயத்தானத்தில் உள்ள ஊழல், மோசடி ஆகியவற்றை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் தேர்ந்தெடுக்கப்படும் முறையில் ஆக்கிரமிப்புப் போர்களை நியாயப்படுத்தவும், அமெரிக்காவின் புவி- மூலோபாய விழைவுகளுக்குத் தடை எனக்காணப்படுபவற்றின் உறுதிப்பாட்டை குலைக்கவும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட வங்கிகள், பெருநிறுவனங்கள் ஆகியவற்றின் நலன்களை முன்னேற்றவும் பயன்படுத்தப்படுகின்றன.