சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Texas plant explosion highlights gutting of health and safety rules

டெக்சாஸ் ஆலை வெடிப்பு சுகாதாரப், பாதுகாப்பு விதிகளை அகற்றிய விளைவுகளை உயர்த்திக் காட்டுகிறது

Andre Damon
20 April 2013

use this version to print | Send feedback

வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, மேற்கு டெக்சாஸ் நகரில் ஓர் உர நிறுவனத்தின் சேமிப்புப் பகிர்வு கிடங்கில் புதனன்று ஏற்பட்ட வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டு, 200 பேர் காயமுற்று, இன்னும் 60 பேர் பற்றிய தகவல் தெரியவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

மிகவும் வெடிப்புத் தன்மை வாய்ந்த பொருட்களான அன்ஹைட்ரஸ் அம்மோனியா மற்றும் அம்மோனியம் நைட்ரேட்டை கிடங்கில் வைத்திருந்த ஆலையில் ஏற்பட்ட வெடிப்பை சிறுநகர் வாழ் மக்கள் ஒரு குண்டுத் தாக்குதலுடன் ஒப்பிட்டனர். இந்த வெடிப்பு ரிக்டர் அளவுகோலில் 2.1 ஐப் பதிவு செய்தது, நகரைச் சுற்றி ஒரு பெரும் புகை மண்டலத்தைக் கிளப்பியது. கிட்டத்தட்ட இரண்டு மைல் சுற்றளவில் உள்ள ஜன்னல்களை தகர்த்து, 40 மைல்களுக்கும் அப்பால் இச்சத்தம் கேட்டது.

கிட்டத்தட்ட 75 வீடுகளை வெடிப்பு தரைமட்டம் ஆக்கிவிட்டது, 50 பிரிவுகள் கொண்ட அடுக்குக் கட்டிடம் ஒன்றை அழித்தது, ஒரு பள்ளியையும் சேதப்படுத்தியது. நகரத்தின் தன்னார்வ தீயணைக்கும் துறையின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயப்பட்டுள்ளனர் அல்லது அவர்களை பற்றித் தகவல் தெரியவில்லை.

பேரழிவை ஏற்படுத்தியது எது என்பது பற்றி விவரங்கள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்னும் நிலையில், பகிரங்கமாக வெளிவந்துள்ள சில குறிப்புக்கள் கடுமையான கட்டுப்பாட்டு மற்றும் பகுதி ஆய்வுகளில் தோல்விதான் பெரும் சோகத்திற்குக் காணம் என்று சுட்டிக்காட்டுகின்றன. இந்த உர ஆலை, ஒரு பள்ளி, பூங்கா, அடுக்கவீடுகள் வளாகம் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றிற்கு அருகே இருந்தது. அப்பகுதியில் வாழும் ஒருவர் அந்த இடத்தில் “டாங்கிகள் மற்றும் குழிகளின்” நிழலில் விளையாடியதை நினைவு கூர்ந்தார். ஆலைக்கு அருகே உள்ள நடுத்தரப் பள்ளி, பெப்ருவரி மாதம் ஒரு நாள் ஆலை தீயால் மூடப்பட்டது.

ஆலையில் சேமிப்புக் கிடங்கில் உள்ள பொருட்களின் ஆபத்துத் தன்மை, வீடுகள் பொது வசதிகள் ஆகியவற்றிற்கு அருகே அது இருந்தபோதிலும்கூட, சுகாதார மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் மிக மட்டான முறையில் பொறுப்பற்று இருந்தனர். மேற்கு உர நிறுவனம் ஒரு விதிவிலக்க அல்ல, மாறாக பல தசாப்தங்களாக கட்டுப்பாடுகள் அற்ற நிலை, தனியார் நிறுவனங்களை அரசாங்கம் மேற்பார்வையிடுவது அகற்றப்பட்டமை என்பவற்றின் விதியாகத்தான் உள்ளது—இந்த வழிவகை ஒபாமா நிர்வாகத்தில் வேகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தொழில்துறை விபத்துக்கள், மலைக்க வைக்கும் அளவிற்கு சாதாரண நிகழ்வுகள் ஆகும். கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் 4 மில்லியன் தொழிலாளர்கள் காயப்படுகின்றனர்—நாள் ஒன்றிற்கு 11,000. அமெரிக்காவில் 2011ம் ஆண்டில் 4,600 தொழிலாளர்கள் பணியிடக் காயங்களை ஒட்டி இறந்துள்ளனர்—வாரத்திற்கு 90 பேர் அல்லது ஒரு நாளைக்கு 13 என்ற முறையில்.

வெள்ளியன்று நியூ யோர்க் டைம்ஸ், வேலைப் பாதுகாப்பு, சுகாதார நிர்வாகத்தின் சான்றுகள் (OSHA) தொடர்பாக இந்த ஆலை கடைசியாக ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது 28 ஆண்டுகளுக்கு முன்பு எனக் காட்டுகின்றன. OAHA ஐந்து மிகத்தீவிர மீறல்களையும் கண்டறிந்துள்ளது, அவை “முறையற்ற வகையில் சேமிக்கப்படல், அன்ஹைட்ரஸ் அமோனியா கையாளப்பட்ட விதம், தொழிலாளர்களுக்கு முறையற்ற வகையில் சுவாசப் பாதுகாப்பு” ஆகியவை இவற்றில் உள்ளது என்று செய்தித்தாள் தகவல் கொடுத்துள்ளது. இதற்காக நிறுவனத்திற்கு 30 டாலர் அபராதம் போடப்பட்டது.

இந்த ஆலையில், தானியங்கி முறையில் மூடப்படும் முறையோ, தீ தடுப்பு சுவர்களோ, அவசரகால மேலாண்மை திட்டங்களோ இல்லை. சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனத்தில் சமீபத்தில் பதிவாகியுள்ளபடி, இந்த ஆலையை நடத்துபவர்கள் ஒரு தீ அல்லது வெடிப்பு குறித்த இடர்கள் ஏதும் இல்லை என்று கூறியுள்ளனர். அறிக்கையின்படி மிக மோசமான சம்பவம் என்னவெனில், அமோனியா வாயு பத்து நிமிடம் வெளியிடப்படுவதுதான் என்றும் அது பாதுகாப்பு ரீதியாக ஒரு மிகவும் குறைந்த தீங்கானவை என்றும் கூறப்பட்டது.

மேற்கு உர ஆலை, சில நேரம் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீறல்களுக்காக மேற்கோளிடப்பட்டுள்ளது அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது; ஆனால் எத்தகைய தீவிர நடவடிக்கைகளும் நிறுவனம் பிரச்சினைகளை தீர்க்க கட்டாயப்படுத்த எடுக்கப்படவில்லை.

வியாழன் அன்று FBI அதிகாரிகள் ஆலை வெடிப்பில் “குற்ற நடவடிக்கை பற்றிக் குறிப்பு ஏதும் இல்லை” என்றனர். ஆனால் ஒரு தொழில்துறை விபத்தைத் தவிர வேறு எதற்கேனும் வாய்ப்பு என்பதையும் தள்ளிவிடுவதற்கு இல்லை—நிகழ்வின் இடம், நேரம் இவற்றைக் காணும்போது.

மேற்கு, டெக்சாஸ் சிறுநகரம் வாகோவிற்கு 20மைல் வடக்கே உள்ளது; அங்கு ஏப்ரல் 19, 1993ல் FBI தாக்குதல் ஒன்று ஒரு மத வளாகத்தின் மீது நடத்தி, தீயை ஏற்படுத்தி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 76 பேரைக் கொன்றது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஏப்ரல் 19, 1995ல் டிமோதி மக்வீ, ஓகலஹோமா நகர குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 168 பேர் கொலையுண்டனர்; இது வாகோ முற்றுகைக்குப் பதிலடி ஆகும். மேற்கு டெக்சாஸ் வெடிப்பு இந்த நிகழ்வுகளின் ஆண்டு நிறைவு தினங்களுக்கு இரண்டு நாட்களுக்குள் நடைபெற்றது.

மேற்கு டெக்ஸாஸ் வெடிப்பு, அமெரிக்கத் தொழில்துறைப் பேரழிவுகள் சங்கிலியில் சமீபத்தியதாகும். கீழே கடந்த தசாப்தத்தில் நடந்த அத்தகைய நிகழ்வுகளின் ஒரு பகுதிப் பட்டியலை காணலாம்:

·       மார்ச் 23, 2005 ல் ஒரு பெரிய வெடிப்பு BP யின் டெக்சாஸ் நகர சுத்திகர ஆலையை தகர்த்து 15 தொழிலாளர்களை கொன்று 170 பேருக்கும் மேலானவர்களைக் காயப்படுத்தியது.

·      ஜனவரி 2, 2006ல் மேற்கு வர்ஜீனியா சாகோவில் 12 சுரங்கத் தொழிலாளர்கள், ஒரு சுரங்க வெடிப்பு, சரிவை அடுத்து இறந்து போயினர். பேரழிவிற்கு இரண்டு வாரங்கள் முன்பு ஒரு கூட்டாட்சி சுரங்க ஆய்வாளர், நிலக்கரிக் குப்பைத் தொகுப்பைக் கண்டபின், “நடத்துபவர் அவருடைய நிலக்கரிச் சுரங்கத்தில் உள்ள சுரங்கத் தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பைப் பெரிதும் புறக்கணித்துள்ளார்” என்று முடிவுரை கூறியுள்ளார்.

·      பெப்ருவரி 7, 2008ல் ஜோர்ஜியா மாநிலம் வென்ட்வோர்த் சர்க்கரை சுத்திகர ஆலை வெடிப்பில் 14 பேர் இறந்து போயினர்; இது எரியக்கூடிய சர்க்கரை குப்பைக் குவியலை ஆலை நிர்வாகி ஆலைக்குள் அனுமதித்ததை தொடர்ந்து ஏற்பட்டது.

·       ஏப்ரல் 5, 2010 அன்று மேற்கு வர்ஜீனியா ராலேப் பிரிவிலுள்ள மேலைப் பெரிய சுரங்கத்தில் நடந்த பேரழிவு நிகழ்வில் 29 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்து போயினர். ஒரு கட்டுப்பாட்டு விசாரணை, இப்பேரழிவு சுரங்க முதலாளியின் பங்கில் பெரும் புறக்கணிப்பினால் ஏற்பட்டது என்ற முடிவிற்கு வந்தாலும், நிறுவனத்தின்மீது $10 மில்லியன் மட்டுமே அபராதம் விதித்தது. ஒரே ஒரு கீழ்மட்ட மேற்பார்வையாளர் குற்றம் செய்ததாகக் கண்டறியப்பட்டது.

·      ஏப்ரல் 20, 2011 அன்று மெக்சிகோ வளைகுடாவில் Deepwater Horizon எண்ணெய் எடுக்கும் இடத்தில் ஒரு வெடிப்பை அடுத்து 11 தொழிலாளர்கள் இறந்துபோயினர், இது BP மற்றும் Transocean உடைய புறக்கணிப்பு நிறைந்த முடிவுகளால் ஏற்பட்டது, இது மிகப் பெரிய எண்ணெய்க் கசிவை ஏற்படுத்தி, அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய சுற்றுச்சூழல் பேரழிவையும் விளைவித்தது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நிகழ்வுகளும் பணியிடப் பாதுகாப்பு விதிகளில் பெரும் மீறல்களில் தொடர்பைக் கொண்டிருந்தன; கட்டப்பாட்டு அதிகாரிகள் ஒன்றில் விசாரணை நடத்த ஆதாரமின்றி இருந்தனர், அல்லது வேண்டுமென்றே கவனிக்கவில்லை.

OSHA விற்கும் மாநில நிறுவனங்களுக்குமாக மொத்தம் 2,200 ஆய்வாளர்கள்தான் அமெரிக்காவில் இருக்கும் 130 மில்லியன் தொழிலாளர்களின் பாதுகாப்பை செயல்படுத்தும் பொறுப்பிற்கு உள்ளனர். இது 59,000 தொழிலாளர்களுக்கு 1 ஆய்வாளர் என்ற பொருளைத்தரும். ஊழியர் வெட்டுக்கள் கடுமை என்ற நிலையில் OSHA வாடிக்கையான ஆய்வுகளைக் கைவிட்டு, எங்கு “உயிரிழப்பு உள்ளதோ, பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனரோ அல்லது எங்கு ஒரு தொழிலாளி முறையான புகாரைப் பதிவு செய்கிறாரோ, அங்கு மட்டும் ஆய்வு நடத்துகிறது” என்று OSHA வின் உதவிச் செயலர் டேவிட் மைக்கேல்ஸ் காங்கிரசில் 2011ல் தெரிவித்தார்.

1977ம் ஆண்டு OSHA ஒவ்வொரு மில்லியன் தொழிலாளர்களுக்கும் 37 பரிசோதகர்களை கொண்டிருந்தது என்றும் இப்பொழுது அந்த எண்ணிக்கை 22 என உள்ளது என்றும் மைக்கேல்ஸ் சேர்த்துக் கொண்டார். “தனிமைப்படுத்தும்” வரவு-செலவுத் திட்ட வெட்டுக்கள் என்று மார்ச் மாதம் செயலுக்கு வந்ததுடன் பணியிடக் கட்டுப்பாடுகள் இன்னும் பலவீனமாகிவிடும்.

2007ல் தொடங்கிய மந்த நிலை, பணி நிலைமகள் அரிப்பை இன்னும் எரியூட்டியுள்ளது; முதலாளிகள் பணிநீக்கங்கள் என்னும் அச்சுறுத்தல்களை பயன்படுத்தி, தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற நிலைமைகள் குறித்துப் பேசுவதை தடுக்கின்றனர், அதே நேரத்தில் ஏற்கனவே வேலை வெட்டுக்களால் குறைந்த எண்ணிக்கையுடைய தொழிலாளர் தொகுப்பை அதிக வேலையும் செய்யக் கட்டளையிடுகின்றனர்.

அமெரிக்க பணியிடங்களில் பேரழிவுகள், இறப்புக்கள் என்று அடிக்கடி நிகழும் அனைத்து சமூகப் பிரச்சினைகளும், உற்பத்தி சாதனங்களில் தனியார் உடமையை கொண்டிருப்பதாலும், நிதிய-பெருநிறுவன உயரடுக்கின் கரங்களில் செல்வம் குவிய செய்யத் தாழ்த்தப்படுவதிலும் வேர்களைக் கொண்டுள்ளன. இந்த உயரடுக்குத்தான், அதன் இரு பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட கட்சிகள் மூலம் அரசியல் வாழ்விலும் ஏகபோக உரிமையை கொண்டுள்ளது, அவை பணியிடத்தில் சர்வாதிகாரக் கட்டுப்பாடு, முதலாளிகளின் “உரிமை” என்று நிலைநிறுத்துகின்றன.

வேண்டுமென்றே வேலையில் இருக்கும் தொழிலாளர்களை கொலை செய்வது, உடல் உறுப்புக்களை இழக்கச் செய்வது மற்றும் சுற்றுச்சூழலை நச்சுப்படுத்துவது ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே வழிவகை, உண்மையான தொழில்துறை ஜனநாயகத்தை நிறுவுதல், உற்பத்தி மீது தொழிலாளர்கள் கட்டப்பாடு கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம்தான் இயலும். இது தொழிலாள வர்க்கத்தின் பரந்த இயக்கத்தின் மூலம்தான் சாதிக்கப்பட முடியும். அது ஒரு சோசலிச முன்னோக்கை கொண்டிருக்க வேண்டும். பெரிய நிறுவனங்களும் நிதிய நிறுவனங்களும் தேசியமயமாக்கப்பட்டு, பொது உடைமையில் இருத்தப்பட்டு, பொருளாதார வாழ்வு தனியார் இலாபம் என்று இல்லாமல் சமூகத் தேவையை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும்.