சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

A tale of two cities

இரு நகரங்களின் ஒரு கதை

Barry Grey
23 April 2013

use this version to print | Send feedback

ஏப்ரல் 15 போஸ்டன் குண்டுத் தாக்குதல்கள் அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் தொடர்ந்து மேலாதிக்கம் செலுத்துகின்றன. நகரத்தின் வருடாந்த தொலைதூர ஓட்டப்பந்தியத்தின் நிறைவுக் கோட்டுக்கு அருகே இரு வெடிப்புக்கள் மூன்று பேரைக் கொன்று 170 பேருக்கும் மேலானவர்களை -பலரை கடுமையாக— காயப்படுத்தின.

ஆனால் இன்னும் கொடூரமான, அழிவுதரும் வெடிப்பு, ஏப்ரல் 17 அன்று கிராமப்புற சிறு நகரான மேற்கு டெக்சாஸின், மேற்கு உர நிறுவன ஆலை வெடிப்பு, கிட்டத்தட்ட செய்திகளில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. 14 பேரைக் கொன்று, 200பேரை காயப்படுத்தி, சிலரை கடுமையாக காயப்படுத்திய அந்த நிகழ்வு, நடக்கத்தயாராக காத்திருக்கும் ஒரு தொழில்துறை விபத்து என அனைத்து தோற்றப்பாடுகளிலும் இருந்தது. இது கிட்டத்தட்ட ஐந்து தொகுதி குடியிருப்பு பகுதியை ஆலைக்கு அருகே தரைமட்டமாக்கிவிட்டது, 50 வீடுகள் இடிபாடுகளுக்கு உள்ளாயின, ஒரு குடியிருப்புக் கட்டடத்தை சிதைத்து, நடுத்தரப்பள்ளி ஒன்றையும் மருத்துவ விடுதி ஒன்றையும் கடுமையாக சேதப்படுத்திவிட்டது.

போஸ்டன் பெருநகரப் பகுதியில் நடைமுறையில் முற்றுகை நிலைமை சுமத்தப்பட்டுள்ளதற்கு போலிக் காரணம் —ஒரு அமெரிக்க நகரத்தை இராணுவ-பொலிஸ் முன்னோடியில்லாத வகையில பூட்டி வைத்துள்ளது— மக்களைக் காப்பாற்றவதற்கு எனக் கூறுப்படுவதாகும். ஆனால ஆயிரக்கணக்கான துருப்புக்களையும் பொலிசையும் திரட்டியிருப்பது, கவசக் கார்கள், கறுப்பு பருந்து ஹெலிகாப்டர்கள் திரட்டு, அனைத்தும் ஒரு 19 வயது இளைஞரைப் பிடிப்பதற்கு என்பதை வினாவிற்கு உட்படுத்துவதற்கு பதிலாக, செய்தி ஊடகம் அதனால் முடிந்த அளவு அச்சத்தை தூண்ட அனைத்தையும் செய்கிறது, வீட்டிற்கு வீடு சட்டவிரோத, ஆணையில்லாத சோதனைகளுக்கு வரவேற்பு கொடுக்கும் முறையில் பொலிஸ் அரச ஆட்சியைப் பெருமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது,.

போஸ்டன் போஸ்டன் நெடுந்துதூர ஓட்டப் போட்டி குண்டுத்தாக்குதல் ஒரு குற்றச் செயல், அதற்குப் பொறுப்பானவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் கொண்டுவந்து நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் அத்தகைய அக்கறை அரசியல் மற்றும் செய்தி ஊடகத்தில் மேற்கு டெக்சாஸ் பகுதியைக் கிழித்த வெடிப்பிற்குப் பொறுப்பானவர்களையும் நீதி முன் நிறுத்த வேண்டும் என்பது காட்டப்படவில்லை. அப்பெரும் சோகம், கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் 4 மில்லியன் தொழிலாளரகள் பணியில் காயமுறுதல், 2011ல், 4,600 பேருக்கு மேல் பணித் தொடர்புடைய காயங்களால் இறத்தல், என்ற ஒரு நாட்டில் மற்றொரு தொழில்துறை விபத்து என்றுதான் ஏற்கனவே கருதப்படுகிறது.

செவ்வாயன்று வெள்ளை மாளிகை, உர ஆலை வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவுப் பிரார்த்தனையில், டெக்சாசில் வாக்கோ அருகே உள்ள பைலர் பல்கலைக்கழகத்தில் வியாழனன்று ஒபாமா உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரம் வசதியானது; ஏனெனில் ஜனாதிபதி ஏற்கனவே டல்லாசில் புதன்கிழமை மாலை நிதி திரட்டும் கூட்டத்தில் பங்கு பெறத் திட்டமிடப்பட்டுள்ளது; வியாழனன்று டல்லாசில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் நூலகச் சமர்ப்பண விழாவிலும் கலந்து கொள்கிறார்.

பாதுகாப்பு, சுகாதார கட்டுப்பாடுகளை புறக்கணிக்கும் நிறுவனங்களால் ஏற்படும் தொழிலாளர் இறப்புக்கள், காயமுறுதல் பற்றி செய்தி ஊடகம் மற்றும் அரசியல்வாதிகளின் பொருட்படுத்தாத்தன்மையும், அரசாங்க நிறுவனங்கள், வளங்கள் கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் விருப்பம் இல்லாத தன்மையும், போஸ்டன் மக்களிடம் அவர்கள் கொண்டுள்ளதாகக் கூறப்படும் அக்கறையில் இருக்கும் மோசடித்தன்மையைத்தான் உயர்த்திக் காட்டுகிறது.

மேற்கு, டெக்சாஸ் ஆலை வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலைக் கண்ணீர் விடுவதற்குப் பைலரில் ஒபாமா தோன்றும் அன்றே, அவர் வெள்ளை மாளிகையில் தனக்கு முன்பு இருந்த ஒரு நபரைக் கௌரவப்படுத்த, கூட்டாட்சிப் பாதுகாப்பு, சுகாதார நிறுவனங்களை குப்பையில் போட்டு, “தன்னார்வ சுய தேவைப்பூர்த்தி கொள்கையை நிறுவிய, அதாவது வெளிப்படையாகவே முதலாளிகள் கட்டுப்பாட்டை மீற, அதையொட்டி தங்கள் ஊழியர்களின் உயிர்களுக்கும் உறுப்புக்களுக்கும் என்ன ஆபத்து நேர்ந்தாலும் பரவாயில்லை என்று அழைப்பிதழ் கொடுத்த ஒரு நபரைக் கௌரவப்படுத்துவார்.

பெருநிறுவன இலாபத் தயாரிப்பு நலன்களுக்காக, பல தசாப்தங்களாக இரு கட்சிக் கொள்கைகளாக இருக்கும் பணிநேர ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புச் செயற்பாடு இவற்றை குறைமதிப்பீடு செய்தல் என்பதை ஒபாமாவும் தொடர்கிறார். அவருடைய புதிய வரவு-செலவுத் திட்டத்தில், பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம் (OSHA) ஆகியவற்றை செயல்படுத்தி வந்த உதவித் திட்டங்களில் வெட்டுக்களைக் கோருகிறது. இதையும்விட மார்ச் மாதம் தனிமைப்படுத்தும் வெட்டுக்கள் என்று ஒபாமாவால் கையெழுத்திடப்பட்ட சட்டத்தின் விளைவாக அந்நிறுவனத்தின் வரவு-செலவுத் திட்டம் 8 வீதம் குறைக்கப்படுகிறது,.

OSHA மற்றும் பிற கூட்டாட்சி நிறுவனங்கள், இரசாயன பாதுகாப்பு குழு போன்றவை, மிக மோசமான முறையில் பணியாளர்கள் இன்றி உள்ளன. OSHA விற்கும் மாநில நிறுவனங்களுக்கும் இடையே 130 மில்லியன் அமெரிக்க தொழிலாளர்களின் பாதுகாப்பை செயல்படுத்துவதற்கு பொறுப்புக் கொண்ட 2,200 பரிசோதகர்கள் மட்டுமே உள்ளனர். 1977ம் ஆண்டு OSHA ஒவ்வொரு மில்லியன் தொழிலாளர்களுக்கும் 37 பரிசோதகர்களைக் கொண்டிருந்தது. இன்று அது 22 பரிசோதகர்களைத்தான் கொண்டிருக்கிறது, இது 40%க்கும் மேலான குறைப்பாகும். இதன் விளைவாக OSHA அநேகமாக பணியிடங்களை முறையாக ஆய்வு செய்வதை கிட்டத்தட்ட கைவிட்டுவிட்டது என்றே கூறலாம்.

மேற்கு உர ஆலை போன்ற, குறித்த நேரத்தில் வெடிக்கும் சாத்தியமுடைய ஆலைகள், பாதுகாப்பு விதிகளை வாடிக்கையாக மீறுகின்றன; ஒன்று அவை ஆய்விற்கு உடபடுத்தப்படுவதில்லை, அல்லது எப்பொழுதாவது கடிந்து கொள்ளப்பட்டு பெயரளவு அபராதம் விதிக்கப்படுகிறது. பரந்து இருக்கும் உரச் சேமிப்பு நிலையம் மற்றும் சில்லறை விற்பனை நிலையம் ஆகியவை 540,000 பவுண்டுகள் வெடிக்கும் தன்மையுடைய அம்மோனியம் நைட்ரேட்டைக் கொண்டுள்ளன; இந்தப் பொருளைத்தான் டிமோதி மக் விக் 1995ம் ஆண்டு கூட்டாட்சிக் கட்டிடம் ஒன்றை வெடிவைத்து தகர்க்கும்போது பயன்படுத்தினார். அதாவது, உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை மேற்பார்வையில் இருப்பதாகக் கூறப்படும் அளவை விட 1,350 மடங்கு அதிகம். இந்த ஆலையில் 110,000 ஆயிரம் பவுண்டுகள் பற்றி எரியக்கூடிய அன்ஹ்ட்ரஸ் அம்மோனியாவும் கிடங்கில் உள்ளன.

கடந்த தசாப்தத்தில், இந்த ஆலை பாதுகாப்பு மீறல்களுக்கும் மற்றும் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்த்தற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கே தானியங்கி செயல்பட்டு அனைத்தையும் மூடும்முறை இங்கு இல்லை; தீ தடுப்புச்சுவர்கள் இல்லை; அவசரகால மேலாண்மைத் திட்டங்கள் இல்லை. கடைசி முறையாக OSHA  இதை 1985ம் ஆண்டு ஆய்வு செய்தது; அப்பொழுது ஆலையில் அது “கடுமையான மீறல்களை கண்டு, உரிமையாளர்கள் மீது 30 டாலர்கள் அபராதமும் விதித்தது.

கிட்டத்தட்ட இத்தகைய 6,000 உர சில்லறை விற்பனை மையங்கள் நாடு முழுவதும் உள்ளன என்று ஒரு வணிக அமைப்பான Fertilizer Institute கூறுகிறது.

அரசாங்கத்திற்கும் செய்தி ஊடகத்திற்கும், போஸ்டன் மற்றும் மேற்கு டெக்சாஸ் நிகழ்வுகளுக்கிடையே உள்ள வேறுபட்ட மனப்பாங்கில் மிகப் பரந்த பொருளாதார, அரசியல் காரணங்கள் உள்ளன. பொருளாதார ரீதியாக அரசானது, தனியார் உடைமை முறையை பாதுகாத்து, தொழில்துறையின்மீது அதன் கட்டுப்பாட்டையும் கொண்டு, முதலாளிகளின் “உரிமைகள் பற்றி எத்தகைய குறுக்கீட்டு நடவடிக்கைகளையும் எதிர்த்தல், பணிநிலை பற்றிய அவர்கள் ஆணைகள், அதிக இலாபங்கள் குறித்த அவர்களின் “உரிமைகள் ஆகியவற்றையும் காப்பதற்கு தம்மை அர்பணித்துக் கொள்கின்றது.

அரசியல் அளவில் ஆளும் வர்க்கம் அச்சத்தையும் கவலையையும் விதைத்து மக்களை வழிதடுமாறச் செய்யவும், அவர்களுடைய கவனத்தை தொழிலாள வர்க்க வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதலில் இருந்து திசைதிருப்பவும் ஒரு செயற்பட்டியலை தொடர்கிறது; இத்தாக்குதல்கள் “பயங்கரவாதத்தின் மீதான போர் என்பதின் கீழ் நடத்தப்படுகிறது.

பெருகும் சமூக அதிருப்தி மற்றும் ஆபத்தான உலக நிதியச் சந்தைகளின் நிலையற்ற தன்மை, இவை மற்றொரு நிதியச் சரிவை தூண்டக்கூடும், அதையொட்டி வெகுஜன சமூகப் போராட்டங்கள் வெடிக்கலாம் என்னும் அச்சத்தால் அது அலைக்கழிக்கப்படுகிறது. அத்தகைய நிகழ்வுகளுக்கான தயாரிப்புக்கள்தான் சர்வாதிகார வகை ஆட்சித் திட்டங்களுக்காக நடைபெறுவது, அவைதான் போஸ்டனில் கடந்த வாரம பரிசோதிக்கப்பட்டன.